Saturday, 9 July 2022

சூரியன் வழிபடும் சிவன் கோவில்...

சூரியன் வழிபடும் சிவன் கோவில்

ஒவ்வொரு ஆண்டும் ரத சப்தமி அன்று சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளி வீசுகிறது. இத்தகைய அதிசயம் அம்ருதாபுரா அம்ருதேஸ்வரா கோவிலில் தான் நிகழ்கிறது. இது கர்நாடக மாநிலம், சிக்கமகளூரு மாவட்டம் தரிகெரேயில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து உள்ளது.

கி.பி.1196-ம் ஆண்டு ஒய்சாலா மன்னர் அமித்தையாவால் அழகிய சிற்பக்கலையுடன் இக்கோவில் கட்டப்பட்டது. கிழக்கு முகம் நோக்கி அமைந்துள்ள இந்த கோவிலின் நடுவில் சிவன் சன்னதியும், வலதுபக்கம் விஷ்ணு சன்னதியும், இடதுபக்கம் பிரம்மன் சன்னதியும் உள்ளது. கோவில் கருவறையில் குடிகொண்டிருக்கும் சிவன் சிலை மிகவும் பிரசித்திப்பெற்றது ஆகும்.

அதாவது அக்னி சிவன் எனப்படும் இந்த சிவன் சிலை மும்மூர்த்திகளின் சக்தி அடங்கியது என கூறப்படுகிறது. இந்த சிவன் சிலையானது நேபாளத்தில் உள்ள கன்டக்கி நதியில் இருந்து கொண்டு வரப்பட்டு, சங்கராந்தி (பொங்கல்) அன்று பிரதிஷ்டை செய்யப்பட்டு அம்ருதேஸ்வரா என்று பெயர் சூட்டப்பட்டது என்று தலவரலாறு கூறுகிறது.

விதவிதமான விநாயகரும்.. விரத வழிபாட்டு பலன்களும்...


மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து விரதம் இருந்து வழிபட்டு வந்தால், சகல சவுபாக்கியமும் கிடைக்கும்.

குங்குமத்தில் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கினால், செவ்வாய் தோஷம் அகலும்.

புற்று மண்ணினால் பிள்ளையார் செய்து வைத்து விரதம் இருந்து வழிபாடு செய்தால், விவசாயம் செழிக்கும்.

வெல்லத்தால் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கினால், உடலின் உள்ளேயும், வெளியேயும் உள்ள கட்டிகள் (கொப்பளம்) கரையும்.

உப்பு கொண்டு பிள்ளையார் பிடித்து வைத்து விரதம் இருந்து வழிபட்டால், எதிரிகளின் தொல்லை நீங்கும்.

வெள்ளை எருக்கம் இலையில் பிள்ளையார் உருவத்தை வரைந்து வைத்து வணங்கினால், பில்லி மற்றும் சூனியம் போன்ற தீவினைகள் அகலும்.

விபூதி கொண்டு பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கி வந்தால், வெப்பத்தால் ஏற்படும் நோய்கள் தீரும்.

சந்தனத்தால் பிள்ளையார் செய்து வைத்து விரதம் இருந்து வழிபட்டால் புத்திர பேறு கிடைக்கும்.

சாணத்தில் பிள்ளையார் செய்து வழிபட்டால் சகல தோஷமும் விலகி, வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெற வழிவகுக்கும்.

வாழைப்பழத்தில் பிள்ளையார் செய்து வழிபட்டால் வம்ச விருத்தி உண்டாகும்.

வெண்ணெயில் பிள்ளையார் செய்து வழிபட்டால் கடன் தொல்லை நீங்கும்.

மகாபாரதத்தின் முக்கிய கதாபாத்திரங்கள்

  மகாபாரதம் ஏராளமான கதாபாத்திரங்களைக் கொண்ட ஒரு காவியம் . சில முக்கிய கதாபாத்திரங்கள் இங்கே :   கிருஷ்ணா - பாண்டவ இளவரசர் அர்...