*திருப்பதி பெருமாளுக்கு* எத்தனை வகை அலங்காரம், ஆடை,ஆபரணம்,பிரசாதம் தெரிந்து கொள்வோம்.....
*தெய்வச் சிலைகள் பொதுவாக கருங்கல்லில் செதுக்கப்பட்டிருக்கும்.* எங்காவது ஒரிடத்திலாவது சிற்பியின் உளி பட்ட இடம் தெரியும். ஆனால், இப்படி எவ்விதமான அடையாளத்தையும் வெங்கடாஜபதி சிலையில் காணமுடியாது. அது மட்டுமல்ல! சிலையில் வடிக்கப் பட்டுள்ள நெற்றிச் சுட்டி, காதணிகள், புருவங்கள், நாகாபரணங்கள் எல்லாம் *பாலீஷ் போட்ட நகைபோல பளபளப்பாக மின்னுகின்றன...*
*திருமலை 3000 அடி உயரத்தில் உள்ள குளிர்பிரதேசம்.* இருந்தாலும், அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீரால் அபிஷேகம் செய்யும் போதும்,
*பெருமாளுக்கு வியர்த்துவிடும்.* பீதாம்பரத்தால் அந்த வியர்வையை ஒற்றி எடுப்பார்கள்.
ஏனெனில், ஏழுமலையான் சிலை எப்போதும் *110 டிகிரி பாரன்ஹுட்* வெப்பத்திலேயே இருக்கும் இது ஒரு அதிசயம் தானே! ஒவ்வொரு வியாழக் கிழமையும், ஏழுமலையானுக்கு அபிஷேகம் செய்வதற்கு முன்னதாக நகைகளைக் களைவர்.
*அப்போது ஏழுமலையானின்* ஆபரணங்கள் சூடாகக் கொதிப்பதை உணர்கின்றனர்.
*இங்குள்ள மடைப்பள்ளி மிகவும் பெரியது.*
இங்கு லட்டு, பொங்கல், தயிர்சாதம், புளிச்சாதம், வடை, முறுக்கு, ஜிலேபி, அதிரசம், போளி, அப்பம், பாயாசம், தோசை, ரவாகேசரி, பாதாம்கேசரி, முந்திரிப்பருப்பு கேசரி ஆகியவை தினமும் தயாராகின்றன. *இதில் லட்டு புகழ்பெற்ற முதலிடம் பெற்று விளங்குகிறது.*
*ஏழுமலையானுக்கு ஒருபுதிய மண்சட்டியிலேயே பிரசாதம் படைப்பர்.* தயிர்சாதம் தவிர வேறு எந்த நைவேத்யமும், கர்ப்பகிரகத்திற்கு முன்னுள்ளகுலசேகரப்படியைத் தாண்டுவதில்லை. *இந்த மண்சட்டியும், தயிர்சாதமும் பிரசாதமாக கிடைப்பதை வாழ்வில் மிகப்பெரிய பாக்கியமாகப் பக்தர்கள் கருதுகின்றனர்...*
*பெருமாளுக்கு உடுப்பு மிகவும் பிரத்யேகமாகத் தயாரிக்கப்படுகிறது.*
ஒரு முழம் நீளமும், ஆறு கிலோ எடையும் கொண்ட பட்டுப்புடவை பீதாம்பரமே இவருக்குரிய ஆடையாகத் திகழ்கிறது. இதை பெருமாளுக்கு சாத்த அலுவலகத்தில் 12 ஆயிரத்து 500 ரூபாய் செலுத்த வேண்டும்.
*இந்த ஆடைக்கு மேல்சாத்து வஸ்திரம் என்று பெயர்.* வெள்ளியன்று மட்டுமே இதை அணிவிக்க முடியும்.
பணம் செலுத்தியவர்கள் வஸ்திரம் சாத்த 3 வருடங்கள் காத்திருக்க வேண்டும்.
*உள்சாத்து வஸ்திரம் என்ற ஆடையையும்* பெருமாளுக்கு அணிவிப்பர்.
இதற்குரிய கட்டணம் 20 ஆயிரம் ரூபாய். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 15 வஸ்திரங்கள் சாத்துவதற்கு அனுமதிக்கிறார்கள்.
பணம் செலுத்தியபின் இதை அணிவிக்க 10 வருடங்கள் காத்திருக்கவேண்டும்.
*பக்தர்கள் சமர்ப்பிக்கும்* வஸ்திரங்கள் தவிர, அரசாங்கம் சமர்ப்பிக்கும் வஸ்திரங்களை ஆண்டுக்கு இரண்டு முறை *பெருமாளுக்கு அணிவிக்கின்றனர்.*
*ஏழுமலையானின் அபிஷேகத்திற்கு* *எங்கிருந்து பொருட்கள் வருகிறது* *தெரியுமா ?*
*ஸ்பெயினில் இருந்து குங்குமப்பூ,*
நேபாளத்தில் இருந்து கஸ்தூரி,
சீனாவில் இருந்து புனுகு,
பாரீசில் இருந்து வாசனைத் திரவியங்கள் வருகின்றன.
ஒரு தங்கத் தாம்பாளத்தில் சந்தனத்தோடு கரைக்கப்பட்டு அபிஷேகம் செய்யப்படும். 51 வட்டில் பால் அபிஷேகம் செய்தபின், கஸ்தூரியும், புனுகும் சாத்துவர்.
*தினமும் காலை 4.30- 5.30 மணிக்குள் அபிஷேகம் நடக்கும்.* அபிஷேகத்திற்கு ஆகும் செலவு ஒரு லட்சம்.
பணம் செலுத்தியவர்கள் 3 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டும்.
*பெருமாளுக்குரிய ரோஜாப்பூக்கள் ஐரோப்பாவில் உள்ள* ஆம்ஸ்டர்டாமில் இருந்து விமானத்தில் கொண்டு வரப்படுகின்றன.
*ஒரு ரோஜாப்பூவின் விலை ரூ.80. பக்தர்களின் செலவிலேயே இந்தப் பூக்கள் வந்து சேர்கின்றன....*
*சீனாவில் இருந்து கற்பூரம்,*
*அகில், சந்தனம், அம்பர், தக்கோலம், லவங்கம், குங்குமம், தமாலம்,* நிரியாசம் போன்ற வாசனைப்பொருட்கள் கொண்டு வரப்படுகின்றன.
*ஏழுமலையானின் நகைகளின்* மதிப்பு பல ஆயிரம் கோடி ரூபாய்.
இவருடைய நகைகளை வைத்துக் கொள்ள *இடமும் இல்லை.*
*சாத்துவதற்கு நேரமும் இல்லை.*
*ஏழுமலையான் சாத்தியிருக்கும்* சாளக்கிராம தங்கமாலை 12 கிலோ எடை கொண்டது.
*இதை 3 அர்ச்சகர்கள் சேர்ந்து தான்* சாத்தமுடியும். சூரிய கடாரியின் எடை 5 கிலோ. ஒற்றைக்கல் நீலம் மட்டும் 100 கோடி மதிப்பு கொண்டது.
*உலகிலேயே இதைப்போன்ற நீலக்கல் வேறு கிடையாது.*
*பல்லவர்கள்*, *சோழர்கள்,* *பாண்டியர்கள்*, *விஜயநகர மன்னர்கள்* பெருமாளுக்கு காணிக்கைகளைச் செலுத்தியுள்ளனர். ராஜேந்திரச்சோழன், கிருஷ்ண தேவராயர், அச்சுதராயர் ஆகியோருடைய *திருப்பணிகள் கல்வெட்டு மற்றும் செப்பேடுகளில் பொறிக்கப்பட்டுள்ளன...*
*மராட்டிய மன்னர் ராகோஜி போன்ஸ்லே* மிகப்பெரிய எமரால்ட் பச்சைக்கல்லை பெருமாளுக்கு காணிக்கையாக்கியுள்ளார்.
இப்பதக்கம் இவருடைய பெயரிலேயே அழைக்கப்பட்டு வருகிறது.
இக்கோயிலில் பலதிருப்பணிகள் செய்த கிருஷ்ணதேவராயர் தனது மனைவியுடன் நிற்கும் சிலை கோயிலில் உள்ளது. கோயிலுக்குள் வரிசையில் செல்லும் போது இதைக் காணலாம்.
அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்வதற்கான வெள்ளி வெங்கடாஜபதி விக்ரகம் *966ம் ஆண்டில் செய்யப்பட்டதாகும்.*
*பல்லவ மன்னன்* சக்திவிடங்கனின் மனைவி காடவன் பெருந்தேவி இந்த விக்ரகத்திற்குரிய நகைகள் தந்துள்ளார்.
*வெள்ளிக்கிழமைகளிலும்,*
*மார்கழி மாதத்திலும் பெருமாளுக்கு வில்வார்ச்சனை செய்யப்படுகிறது...*
*மகா சிவராத்திரியில்* ÷க்ஷத்ரபாலிகா என்ற உற்சவம் நடைபெறும். அன்று உற்சவர் வைர விபூதி நெற்றிப்பட்டை அணிந்து திருவீதியுலா எழுந்தருள்வார். தாளப்பாக்கம் அன்னமய்யா ஏழுமலையானையே பரப்பிரம்மமாகவும், சிவாம்சமாகவும், சக்தி அம்சமாகவும் பாடிய பாடல்கள் சிறப்பானவை.
*அபிஷேகத்தின் போது ஏழுமலையான் தன்னுடைய மூன்றாவது கண்ணைத் திறக்கிறார் என்றொரு ஐதீகம் உள்ளது.*
திருமலை திருப்பதி கோயில் ஸ்தலவிருட்சம் *புளியமரம்.*
சாத்வீக கோலத்தில் இருந்தாலும் தெய்வீக கோலங்களில் ஆயுதம் இடம் பெற்றிருக்கும். ஆனால், திருமலையில் ஏழுமலையான் எவ்விதமான ஆயுதமும் பிடிக்காமல் *நிராயுதபாணியாக சேவை சாதிக்கிறார்.*
*ஆங்கிலேயர்களில்* சர்தாமஸ் மன்றோ, கர்னல் ஜியோ ஸ்டிராட்டன், லெவெல்லியன் என்ற வீரர் ஆகியோர் பெருமாளின் பக்தர்களாக இருந்ததோடு பல நேர்த்திக்கடன்களைச் செலுத்தியுள்ளனர். இதில் இன்று வரை பெருமாளுக்கு மன்றோ தளிகை என்றொரு ஒரு நிவேதனம் ஆங்கிலேயர் பெயரால் அளிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
*திருப்பதி அலமேல்மங்கைக்குரிய* ஆடைகத்வால் என்னும் ஊரில் பருத்தியில் தயாரிக்கப்படுகிறது.
செஞ்சு இனத்தைச் சேர்ந்த நெசவாளர்கள் இதை பயபக்தியுடன் நெய்கிறார்கள். தாயாரின் திருமேனியில் படும் இந்த *ஆடையை நெய்யும் போது மூன்றுவேளை குளிப்பதும், மாமிசம் உண்ணாமல் இருப்பதும் ஆகிய* நடைமுறைகளைத் தவறாமல் பின்பற்றுகின்றனர்.
*ஏழுமலையான் அபிஷேக நீர் குழாய் மூலம் இங்குள்ள புஷ்கரணியிலேயே (கோயிலை ஒட்டிய தெப்பக்குளம்) மீண்டும் கலக்கிறது.* ஏழுமலையானின் திருமேனியில் பட்டதால் அந்நீரின் புனிதத்தன்மையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது...
*1180 கல்வெட்டுகள் இங்கு உள்ளன.*
*இதில் 1130 கல்வெட்டுகள் தமிழ்*
மொழியிலும்,
*50 கல்வெட்டுகள் தெலுங்கு*
மற்றும் *கன்னடமொழியிலும்* அமைந்துள்ளன.
இந்த தகவல்கள் திருமலை திருப்பதி கோயில் ஏடுகளில் இருந்து எடுக்கப்பட்டவை.
No comments:
Post a Comment