Monday, 25 May 2020

சங்கு, சக்கரத்துடன் காட்சிதரும் அபூர்வ ஆஞ்சநேயர்

சாதாரணமாக ஆஞ்சநேயர் இரு கரம் கூப்பியவாரே அனைத்து கோவில்களிலும் காட்சி தருவார், ஆனால் சோளிங்கரில் ஆஞ்சநேயர் கையில் சங்கு சக்கரத்துடன் காட்சி தருவது அபூர்வமாக இருக்கிறது. 

காஞ்சி வரதராஜப்பெருமாள் கோவிலுக்கும், திருப்பதி வெங்கடேசபெருமாள் கோவிலுக்கும் நடுவில் அமைந்திருப்பது சோளிங்கர். 
இங்குள்ள யோக நரசிம்மப்பெருமாளை சில நிமிடங்கள் தரிசனம் செய்த விஸ்வாமித்திரருக்கு `பிரம்ம ரிஷி’ என்னும் பட்டம் கிடைத்தது. 

இதை அறிந்த வாமதேவர், வசிஷ்டர், காஷ்யபர், அத்திரி, ஜமதக்னி, கவுதமர், பரத்வாஜர் ஆகியோர் யோக நரசிம்மரை தரிக்க தவம் இருந்தனர். ஆனால் காலன், கேயன் என்ற அரக்கர்கள் அவர்களுக்கு பல இன்னல்களை அளித்துவந்தனர். 

இந்த அரக்கர்களிடமிருந்து தங்களைக் காக்கும்படி பெருமாளை வேண்டினர் முனிவர்கள். 

பெருமாளும் ஆஞ்சநேயரிடம் அரக்கர்களை அழிக்கும்படி கூறினார்,
பெருமாளிடமிருந்து சங்கு, சக்கரத்தை பெற்ற ஆஞ்சநேரயர், 
காலன் மற்றும் கேயன் ஆகிய அரக்கர்களை வென்று அந்த ரிஷிகளைக் காப்பாற்றினார். 

*இந் நிகழ்வால் இன்றும் சோளிங்கரில் உள்ள ஆஞ்சநேயர் தன் கையில் சங்கு, சக்கரத்துடன் காட்சி தருகிறார்...*

*"ஸ்ரீ ராமபக்த ஆஞ்சநேயர் சுவாமிக்கு ஜெய்"*

No comments:

Post a Comment

மகாபாரதத்தின் முக்கிய கதாபாத்திரங்கள்

  மகாபாரதம் ஏராளமான கதாபாத்திரங்களைக் கொண்ட ஒரு காவியம் . சில முக்கிய கதாபாத்திரங்கள் இங்கே :   கிருஷ்ணா - பாண்டவ இளவரசர் அர்...