Thursday, 11 June 2020

ஓம் நமசிவாய , ஓம் சிவாய நமஹ

ஓம் நமசிவாய , ஓம் சிவாய நமஹ

 இரண்டுக்கும் என்ன வித்தியாசம்? 

எதை எப்போ சொல்லணும்? 

 "ஓம் நமசிவாய" மற்றும் "ஓம் சிவாய நம" ஆகிய இரண்டு மந்திரங்களும் மகாதேவர், சிவபெருமானைக் குறிக்கும் ஒரு மந்திரம் ஆகும். இந்த இரண்டு மந்திரங்களும் ஒரே மாதிரி தோன்றினாலும் இதில் பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை என்று நினைத்தாலும், ஓம் நமசிவாய மற்றும் ஓம் சிவாய நம என்ற இரண்டு மந்திரகளுக்கும் அதன் பொருளில் ஒரு சிறிய வேறுபாடு உண்டு. பொதுவாக "நம" என்ற சொல் கடவுளின் பெயருக்கு பின்னால் குறிப்பிடப்படும். குறிப்பாக, இறைவனை நாம் நேரடியாகக் குறிப்பிடும்போது இவ்வாறு பயன்படுத்துவோம். 

 உதாரணத்திற்கு, நாம் ஸ்ரீ ராமரைக் குறிக்கும்போது "ஓம் ராமாய நம" என்று வழிபடுவோம். சிவ மந்திரங்கள் இந்த இரண்டு மந்திரங்களுக்கும் ஒரே விதமான பொருள் என்று சிலர் நம்புகின்றனர். இவை இரண்டுமே சிவபெருமானை வணங்கும் மந்திரம் ஆகும். கடவுளை ஈர்ப்பதற்கு வெறும் பெயர் கொண்டு அழைப்பதை விட பாடல் பாடுவது சிறப்பானதாக இருக்கும். அதனால் அடிப்படையில், "ஓம் சிவாய நம" என்பது நேரடியாக அவரை அழைப்பது போன்றதாகும். "ஓம் நமசிவாய" என்பது ஒரு கவிதை வடிவம் ஆகும். வேதங்களின்படி, ஒவ்வொரு மந்திரத்திற்கும் ஒரு தனித்துவமான தாளம் உண்டு என்பதை நாம் உணர்ந்திருக்கலாம். இருப்பினும், "ஓம் சிவாய நம" மற்றும் "ஓம் நமசிவாய" என்ற மந்திரங்களின் உண்மையான விளக்கம் பற்றி மேலும் தெரிந்து கொள்வோம்.   

 ஓம் நமசிவாய - ஸ்துல பஞ்சாக்ஷரம் உலக நோக்கங்களை அடைவதற்காக இந்த ஓம் நமசிவாய என்ற மந்திரம் ஜெபிக்கப்படுகிறது. ஓம் சிவாய நம - சூக்ஷம பஞ்சாக்ஷரம் ஓம் சிவாய நம என்ற மந்திரம் உலகத்தில் இருந்து விடுதலை பெற்று மோக்ஷத்தை அடைய ஜெபிக்கும் மந்திரமாகும். வள்ளலார் ஸ்வாமிகள் கூறுவது என்னவென்றால், ஒரு நபர் புனிதமான விபூதியை நெற்றியில் அணிந்து கொண்டவுடன், அவர் "சிவாய நம" என்று ஜெபிக்க வேண்டும். இந்த மந்திரம் அந்த பக்தருக்கு நல்ல பேச்சு, நல்ல நட்பு, நல்ல குணம் மற்றும் மோக்ஷம் ஆகியவற்றை வழங்குகிறது. 

விஷ்ணு இரணியனை கொல்வதற்காக ஏன் நரசிம்ம அவதாரம் எடுக்க வேண்டும்? அதான் டுவிஸ்ட்... விளக்கம் இந்த மந்திரத்தின் ஒவ்வொரு எழுத்தும் ஒவ்வொன்றைக் குறிப்பிடுகிறது. "ந" என்ற எழுத்து பெருமையைக் குறிக்கிறது, "ம" என்ற எழுத்து மனதில் உள்ள அழுக்குகளைக் குறிக்கிறது, "சி" என்ற எழுத்து சிவபெருமானைக் குறிக்கிறது, "வா" என்ற எழுத்து சக்தி தேவியைக் குறிக்கிறது மற்றும் "ய" என்ற எழுத்து ஆத்மாவைக் குறிக்கிறது. அதனால், நாம் "சிவாய நம" என்று கூறும்போது, ஆத்மாவைக் குறிக்கும் "ய" என்ற எழுத்து மத்தியில் உள்ளது. இதன் ஒரு பக்கத்தில் பெருமை மற்றும் மனதின் அழுக்கு ஆகியவை "நம" என்னும் எழுத்தில் அடங்குகிறது. "ய" என்ற எழுத்தின் மறுபக்கம் சிவபெருமான் மற்றும் சக்தி தேவி ஆகியோரைக் குறிக்கும்.

 என்ன பலன் உண்டாகும்? 

"சிவா" என்ற எழுத்துக்கள் உள்ளன. எனவே, நாம் என்ன செய்யப்போகிறோம் என்பதை தீர்மானிக்கும் கட்டம் இது. நமக்கு சலனம் உண்டாக்கும் பக்கம் திரும்பப் போகிறோமா அல்லது இறைவன் பக்கம் திரும்பப் போகிறோமா? "ய" என்ற எழுத்து "வா" என்ற எழுத்துக்கு அடுத்து உள்ளது. அதாவது, சக்தி தேவி, சிவபெருமானை விட கருணை மிக்கவள். தவறிழைக்கும் குழந்தை தனது தந்தையை நெருங்க அஞ்சும். அதனால் முதலில் தனது தாயிடம் சென்று மன்னிப்பு கேட்கிறது, தனது குழந்தையை கடுமையாக தண்டிக்க வேண்டாம் என்று தந்தையிடம் தாய் சிபாரிசு செய்கிறாள். 

அதே போல், சிவபெருமானின் கோபம் பக்தனை நேரடியாக தாக்காமல் இருக்க பார்வதி தேவி உறுதி செய்கிறாள். நமக்காக அவர் .

#ஓம் நமசிவாய .....!!!

வசம்பு

பொதுவாகவே வசம்புக்கு பணத்தை ஈர்க்கும் சக்தி இருக்கின்றது. இதற்கு காரணம், இந்த வசம்பில் எந்த ஒரு கெட்ட சக்தியும் அண்டாமல் இருப்பது தான். இந்த வசம்பை நம்முடைய முன்னேற்றத்திற்கு எப்படி பயன்படுத்தலாம் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.’பரிகாரம் செய்வதற்கெல்லாம் எனக்கு நேரமில்லை!’ என்று சொல்லுபவர்கள், இந்த வசம்பில் ஒரு சிறு துண்டை வாங்கி உங்கள் பர்ஸில் வைத்துக்கொண்டால் கூட, உங்கள் பர்ஸில் இருக்கும் பணத்திற்கு பிரச்சினை வராது. பர்ஸில் இருக்கும் பணம், செலவு ஆனாலும் திரும்பவும் வருமானம் சீக்கிரமே வரும்.

சரி. நீங்கள் பஸ்ஸில் வைப்பதற்கு வசம்பை வாங்கினாலும், பரிகாரம் செய்வதற்கு வசம்பை வாங்கினாலும் சரி. முதலில் பேரம் பேசாதீர்கள். பேரம் பேசாமல் கேட்கும் விலையை கொடுத்து விட்டு, வசம்பை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். இதை உங்களுடைய பூஜை அறையில் தான் வைக்க வேண்டும். கட்டாயம் தீட்டு படக்கூடாது.

காலையில் நீங்கள் எழுந்து குளித்து முடித்துவிட்டு, ஒரு மண் அகல் விளக்கில், சிறிது பசு நெய் ஊற்றி, தீபம் ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். ஏற்றி வைத்திருக்கும் தீபச்சுடரில், இந்த வசம்பை காட்டினாலே, லேசாக அந்த வசம்பு கருப்பு நிறமாக மாறும். அதன் பின்பு அந்த விளக்கில் இருக்கும் நெய்யை சிறிதளவு, உங்கள் கை மோதிர விரலில் தொட்டு, வசம்பின் இருக்கும் கரு நிறத்தை தொட்டால், கருப்பு விரலில் ஒட்டிக் கொள்ளும். லேசாக ஒட்டியிருக்கும் அந்த கருப்பு மையை உங்களது உச்சந்தலையில் லேசாக வைத்துக் கொள்ள வேண்டும். நெற்றியிலும் லேசாக வைத்துக் கொள்ள வேண்டும்.

இப்படி இந்த பரிகாரத்தை செய்து விட்டு, நீங்கள் எந்த ஒரு செயலுக்கு சென்றாலும், அதில் பல மடங்கு அதிகமான வெற்றி கிடைக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. தொழில் தொடங்குவதாக இருந்தாலும் சரி. கடனை வசூலிக்க சென்றாலும் சரி. எப்படிப்பட்ட பிரச்சனையாக இருந்தாலும் சரி சுலபமாக ஒரு தீர்வு கிடைக்கும். ஒரு நல்ல காரியத்திற்கு கிளம்பும் போது கூட, இப்படி இந்த மையை இட்டுக் கொண்டு கிளம்பும் பட்சத்தில், அந்த காரியம் சுபமாக முடிந்து விடும் என்பதில் சந்தேகமே இல்லை.

பல பெரிய பெரிய பணக்காரர்கள், தொழில் வசியம், தன வசியம், முக வசியம், ஜன வசியம் செய்வது இந்த வசம்பை வைத்துத்தான். வசதி படைத்தவர்கள் பெரிய பெரிய சாஸ்திரம் தெரிந்தவர்களை வைத்து, செய்யக்கூடிய பலர் வசிய வித்தைகள், மூலம் கிடைக்கப்படும் அதே சக்தி, இந்த வசம்பு மையை நெற்றியில் இட்டுக் கொண்டால் கிடைக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

தினம்தோறும் இப்படி தொடர்ந்து செய்து வரும் பட்சத்தில் நீங்கள் எல்லோராலும் விரும்பத்தக்க மனிதராக மாறி விடுவீர்கள். யாருக்காவது உதவி என்று தேவைப்பட்டால் கூட, உங்களை வந்து அழைப்பார்கள். நீங்கள் உடன் சென்றால், அந்த காரியம் வெற்றி அடைகிறது என்ற நம்பிக்கையும் உண்டாகும் அளவிற்கு உங்களது வசீகரம் மாறும்.

இப்படி எல்லாம் சொன்னால் கண்டிப்பா நம்பமாட்டீர்கள். 48 நாட்கள் செய்து பாருங்கள்! அடுத்தவர்கள் உங்களிடம் பழகும் முறையும் மாறிவிடும். நீங்கள் அடுத்தவர்களிடம் பழகும் முறையும் மாறிவிடும். தொட்டதெல்லாம் வெற்றி அடைந்து, பணவரவு அதிகரித்துக் கொண்டே வந்தால் யாருக்குத்தான் அழகு கூடாது? இந்த வசம்பை இப்படி நெற்றியில் வைத்துக் கொள்வதன் மூலம் எந்த ஒரு பிரச்சனையும் வராது. குழந்தைகளுக்குக்கூட சிறுவயதில், மைக்கு பதிலாக, இந்த வசந்த குழைத்து நெற்றியில் வைப்பார்கள். காத்து, கருப்பு அண்டாது என்பதற்காக!

சிவனடியார்

1)பன்றிக்கறியை படைத்து, தன் அன்பை வெளிக்காட்டிய ஒருவர்தான் நாயன்மார் ஆனார்.

2)பிடித்த மீன்களில் உயர்ந்த மீனை சிவனுக்கு தந்தே ஒருவர் நாயனார் ஆனார். (மீனவர் குளத்தில் பிறந்தவர் மீன் சாப்பிடாமலா இருந்திருப்பார்!!!!!)

3)மாட்டின் தோலை உறித்து வாத்திய கருவிகளை கோயிலுக்கு இனாமாக வழங்கியே, நந்தனார் நாயன்மார் ஆனார்.

4)சிவனடியார்களின் உடைகளை துவைத்து கொடுத்தே, ஒருவர் நாயன்மார் ஆனார்.

5)சிவனடியார்களுக்கு அமுது படைத்தே, ஒருவர் நாயன்மார் ஆனார்.

6)சிவனடியார்களுக்கு ஆடைகள் தந்துதவியே, ஒருவர் சிவனடி சேர்ந்தார்.

7)சிவபெருமான் புகழை பாடியே, ஒருவர் நாயன்மார் ஆனார்.

8)குங்கிலிய தூபம் போட்டே, ஒருவர் நாயன்மார் ஆனார்.

9)ஈசனை தவறாக பேசுபவர் நாவை வெட்டியே, ஒருவர் நாயன்மார் ஆனார்.

10)ஈசனுக்கு பூ பரித்து போட்டே, ஒருவர் நாயன்மார் ஆனார்.ஆக…… சிவனடியார் என்பர் இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற எந்த கட்டுப்பாடும் நிபந்தனையும் கிடையாது.

ஈசனை நினைத்து எந்த செயல் செய்தாலும், அது சிவதொண்டே.அன்பர்கள் எப்படி இருந்தாலும், ஈசன்மேல் அன்பாக இருந்தால்—-அவரே சிவனடியார்.

எதைவேண்டுமானாலும் செய்யுங்கள்….ஈசனை நினைந்து செய்யுங்கள். சிவபெருமானை நினைந்து செய்யும் எல்லா செயலும் சிவனுக்கு ரொம்ப பிடிக்கும்.

சிவனடியார் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று நால்வர் பெருமக்களோ நாயன்மார்களோ சொல்லவே இல்லை.ஆக….. சிவனடியார் என்பவர் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று சொல்லும் தகுதி, நம்மில் யாருக்குமே கிடையாது.

சிவத்தை நினைந்து செய்யும் ஒவ்வொரு செயலும் வழிபாடுதான். வாழ்வையே வழிபாடாக்கிய ஒவ்வொருவரும் சிவனடியார்தான்.வாழ்தலே வழிபாடு. நமச்சிவாயசொல்லுக சொல்லைப் பிறிதோர்ச்சொல் அச்சொல்லைவெல்லும் சொல்இன்மை யறிந்து.

27 வகையான மனக் கஷ்டங்களும் அவற்றை போக்கும் எளிமையான பரிகார முறைகளும்

1.வெள்ளிக்கிழமைகளில் நவகிரக சுக்கிரனுக்கு அகல் விளக்கில்கற்கண்டு போட்டு ,அதில் நெய் தீபம் ஏற்றி வழிபட,கணவன்- மனைவி கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

2.இரண்டு சர்ப்பங்கள் இணைந்தது போல் இருக்கும் நாகராஜா சிலைக்கு, வெள்ளிக்கிழமை காலை [10.30-12.00 ]இராகு காலத்தில், மஞ்சள் குங்குமம் வைத்து, செவ்வரளிப் பூ சாற்றி, அபிசேகம் செய்து, . நெய்தீபம் ஏற்றி ,தம்பதிகள் பெயருக்கு அர்ச்சனை செய்தால்தம்பதிகள்

3.ஒற்றுமையாக,அன்னியோன்யமாக வாழ்வார்கள். குடும்பத்தில் தாங்க முடியாத கஷ்டங்கள் வந்தால், மன அமைதி குறைந்தால் , அருகில் உள்ள ஆலயங்களில் தீபம் ஏற்றி வழிபடுவது ரிஷிகள் சொல்லிய பரிகாரம்.

4.கொடிய கடன் தொல்லைகளுக்கு ஸ்ரீ யோக நரசிம்மரையும்,மற்ற கடன் தொல்லைகளுக்கு ஸ்ரீ லட்சுமி நரசிம்மரையும்வழிபடுவது நல்ல பரிகாரம் ஆகும்.

5.ஸ்ரீநரசிம்மரின் எந்த திருக்கோலத்தை தரிசித்தாலும் கடன் தொல்லைகள், பில்லி, சூனியம், ஏவல்,திருஷ்டி ,திருமண தடை விலகி நன்மை பெறலாம்.

6.ஆலய திரி சூலத்தில் குங்குமம் இட்டு, எலுமிச்சை பழம் குத்தி வழிபட, திருஷ்டி, செய்வினை தோஷம் நீங்கும்.

7.வெள்ளெருக்கு விநாயகரை வீட்டு அறைகளில் கைக்கு எட்டாத உயரத்தில் வைத்து இருந்தால்,ஏதும் பூதகண சேஷ்டைகள் இருந்தால் நின்று விடும்.

8.சக்கரத்தாழ்வார் சந்நிதியில் நெய்தீபம் ஏற்றி12 முறை, 48 நாட்கள் சுற்றி வழிபட தொழில், வழக்குசாதகமாதல், பில்லி, சூனியம்,ஏவல்நீங்கும்.21செவ்வாய்கிழமைகளில் நெய்தீபம் ஏற்றிவழிபட கொடுத்த கடன் வசூல் ஆகும்.

9.கொடுத்த கடன் வசூல் ஆக பைரவர் சந்நிதியில் தொடர்ந்து 8 செவ்வாய் கிழமைகளில் நெய்தீபம் ஏற்றி சகஸ்ர நாம அர்ச்சனை செய்ய வேண்டும்.

10.ஜாதகப்படிசனிபகவானின்பாதிப்புகுறைய,திங்கட்கிழமை களில் சிவபெருமானுக்கு,பால் அபிசேகம் செய்து, அர்ச்சனை செய்ய வேண்டும். சனிக் கிழமைகளில் சனி பகவான் சந்நிதியில்தேங்காய் உடைத்து, இரண்டு மூடிகளிலும்நல்லெண்ணெய் ஊற்றி, எள்ளு முடிச்சு தீபம் ஏற்றவும்.சிவன் கோவிலில் கால பைரவரையும்,விஷ்ணு கோவிலில் சக்கரத்தாழ்வாரை யும்வழிபட செய்வினை தோஷம் நெருங்காது.

11.‎சிவன்‬ கோவில் வன்னி மரம், வில்வ மரத்தை 21 முறை வலம் வந்து நமது குறைகளைக் கூற,நல்ல பலன் கிடைக்கும். தீர்ப்புகள் சாதகம் ஆகும். இம்மரங்களுக்கு நாம் கூறுவதை கேட்கும் சக்தி உள்ள தாக ஒரு ஐதீகம் உண்டு.

12.பிரதோஷகாலத்தில், ரிஷபா ரூட மூர்த்தியாய்,மகேசனை தேவியுடன் வழிபடுவோர் 1000 அஸ்வமேத யாகங்களை செய்த பலனை பெறுவார்கள். அதிலும் ஈசானிய மூலையில் ஈஸ்வரனுக்கு காட்டப் படும் தீபாரதனையை பார்த்தால்எல்லா நோய்களும், வறுமையும் நீங்கும்.

13.மாதாமாதம் உத்திர நட்சத்திரத்தன்று சிவனுக்கு தொடர்ந்து 11 மாதங்கள் பால் அபிசேகம் செய்தால், விரைவில் திருமணம் நடை பெறும்.

14.கலியுகத்தில் காரிய சித்திக்கு துர்க்கை வழிபாடு அதுவும் இராகு காலத்தில்,செய்வது சிறந்தது. இராகு காலத்தில் கடைசி 1/2 மணி நேரமான அமிர்தகடிகை நேரமே சிறப்பான பரிகார நேரம்.நெய்விளக்கு ஏற்றவும் உகந்த நேரம். ஞாயிற்றுகிழமை மாலை 4.30-6.00 மணிக்குள் துர்க்கை க்கு விளக்கு ஏற்றி வழிபட நாம் வேண்டிய பிராத்தனை கள் நிறைவேறும்.

15.வெள்ளிக்கிழமை காலை 10.30-12.00 இராகு காலத்தில் துர்க்கைக்கு தாமரை தண்டு திரி போட்டு நெய்விளக்கு ஏற்றி வழிபட,தெய்வ குற்றம்,குடும்ப சாபம் நீங்கும். ஹஸ்த நட்சத்திரத்தன்று துர்க்கைக்குசிகப்பு பட்டு துணி சாற்றி, சிகப்பு தாமரையை பாதத்தில் வைத்து 27 எண்ணிக்கை கொண்ட எலுமிச்சை பழ மாலை சாற்றி, குங்கும அர்ச்சனை செய்து, அந்த குங்குமத்தை நெற்றியில் வைத்து வர உடனே திருமணம் நடை பெறும்.

16.சங்கடஹரசதுர்த்தியில் விநாயகருக்கு அருகம் புல் மாலைசாற்றி,அர்ச்சனை செய்து வழிபட ,சங்கடங்கள் தீரும். சங்கடஹரசதுர்த்தியில் விநாயகருக்கு எருக்கம் திரி போட்டு விளக்கு ஏற்றி வழிபடபிள்ளைகள் கல்வியில் முன்னேறுவார்கள்.

17.இரெட்டைப் பிள்ளையாருக்கு ரோகிணி நட்சத்திரத்தன்று சந்தனக் காப்பு செய்து வழிபடகடன் பிரச்சனை தீரும்.

18.செவ்வாய்க்கு அதிபதியான முருகப் பெருமானுக்கு செவ்வாய் தோறும் நெய்விளக்கு ஏற்றி வழிபடமூன்று மாதத்தில் வேலை கிடைக்கும்.

19.விபத்துகளில் இருந்து தப்பிக்க அவிட்ட நட்சத்திரத்தன்று முருகனுக்கு வேலில் எலுமிச்சை சொருகி அர்ச்சனை செய்யவும்.

20.ருத்ராட்சம், சாளக்கிராமம், துளசி,வில்வம் உள்ள இடத்தில் இருந்து சுமார் 10கி.மி தூரத்திற்கு செய்வினை அணுகாது.

21.பஞ்சகவ்ய கலவையை வாரம் ஒரு முறை வீடுகளில் தெளிக்க ,தோஷம், தீட்டு நீங்கி, லஷ்மி கடாக்ஷ்சம் கிடைக்கும்.பால், தயிர், கோமூத்திரம், சாணம் கலந்தது பஞ்சகவ்ய கலவை.

22.புத்திர பாக்கியம் இல்லாதோர் 6 தேய்பிறை அஷ்டமிகளி ல் காலபைரவருக்கு சகஸ்ர நாம அர்ச்சனை செய்தால் விரைவில் புத்திர பாக்கியம் கிட்டும்.

23.வியாழக்கிழமைகளில் ஒரு நேரம் விரதம் இருந்து மாலையில் ஆலய தட்சணா மூர்த்திக்கு தொடர்ந்து நெய்விளக்கு ஏற்றி வர ,விரதம் ஏற்ற 192 நாட்களில் கருத்தரிப்பு ஏற்படும் வாய்ப்பு உண்டு.

24.பெருமாள் கோவிலில் உள்ள கருடாழ்வார் சந்நிதியை சுற்றி வந்து நெய்விளக்கு ஏற்றி வழிபடசர்ப்ப தோஷம், கால சர்ப்ப தோஷம் நீங்கும்.

25.வறுமையில் இருப்பவருக்கு தானம் கொடுத்தல், பூஜை நடக்காமலிருக்கும் கோவில்களில் பூஜை நடக்க உதவுதல்,அனாதைப் பிணங்களின் தகனத்திற்கு உதவுதல்- ஆகிய மூன்றும் செய்தால் அசுவமேத யாகம் செய்ததற்குச் சமம்.

26.தொழில் தடை, கணவன்- மனைவிக்கு கருத்து வேறுபாடு நீங்க, வாழ்வில் நலம் பெற, வெளிநாட்டு வேலை முயற்சி வெற்றி பெற, -என்று நல்ல காரியங்கள் நடைபெற பெளர்ணமி தோறும் நடைபெறும் சத்திய நாராயணா பூஜையில் கலந்து கொள்வது நற்பலன் களைத் தரும்.

27.எத்தகைய கிரக தோசமானாலும் தினமும் சுந்தர காண்டத்தில் ஒரு அத்தியாயம் பாராயணம் செய்வது மிக, மிக நன்மை தரும். வாழை தண்டு திரியினால் வீட்டில் தீபம் ஏற்றினால் குலதெய்வ குற்றமும், குலதெய்வ சாபமும் நீங்கும்...

நமக்கு துன்பம் கொடுத்தோரை பழி வாங்க வேண்டுமா ???


“நினைத்துப் பார்த்தால் நெஞ்சு கொதிக்கிறது சாமீ. எத்தனை பேர் என்னை கேலி செய்திருக்கிறார்கள்?, எத்தனை பேர் வசை பாடியிருக்கிறார்கள்?, எத்தனை பேர் என் முதுகில் குத்தியிருக்கிறார்கள்? அவர்கள் ஒவ்வொருவரையும் பழி
வாங்காமல் ஓயமாட்டேன்” என்று
அந்த சாமியார் முன் வந்து பொருமினான் ஒரு சீடன்.

“ஏதாவது மந்திரம், கிந்திரம் இருந்தா சொல்லுங்க சாமி” என்றான்.

சாமி யோசித்தார்......

“சரி… ஒன்று செய்யலாம்” என்று கோணிப்பையை சீடன் கையில் கொடுத்தார் சாமி.

“நீ யாரையெல்லாம் பழி வாங்கவேண்டும் என நினைக்கிறாயோ, அவர்கள் பெயரை ஒரு உருளைக்கிழங்கில் செதுக்கி இந்த கோணிப்பையில் போட்டுக்கொண்டே வா” என்றார்.

“ஆனால் இரண்டு நிபந்தனைகள்” என்று தொடர்ந்தார்…. “ஒரு உருளைக்கிழங்கில் இரண்டு மூன்று பெயர்களை செதுக்கக்கூடாது. ஒவ்வொரு பெயரையும் தனித்தனியாய் செதுக்க வேண்டும்”.

“சரி… அப்புறம்?”.....

“நீ எங்கெல்லாம் போகிறாயோ அங்கெல்லாம் இந்த கோணியை தூக்கி கொண்டு போகவேண்டும்”..

“ப்பூ, இவ்வளவுதானா? நான் என்னமோ பெரிசா ஏதோ சொல்லப்போறீங்கன்னு நினைச்சேன்”.... என்று சீடன் எழுந்து போனான்.

அன்றிலிருந்து யார் மீதெல்லாம் ஆத்திரமோ, யார் யாரை பழிவாங்க வேண்டும் என்று நினைப்பு வருகிறதோ, அப்போதெல்லாம் ஒரு உருளைக்கிழங்கை எடுத்து பெயரை செதுக்கி கோணிப்பையில் போட்டுக்கொண்டே வந்தான். ஆரம்பத்தில் கோணியை தூக்கி கொண்டு திரிவது ஒன்று பெரிய சிரமமாய் தெரியவில்லை.

ஆனால் நாளாக ..... நாளாக, அது சுமையாக தோன்றியது. இன்னும் கொஞ்சநாள் போனதும் தூக்குவதே சிரமமாகிவிட்டது. இதனிடையே சில நாட்களுக்கு பின் அந்த உரித்த உருளைக்கிழங்குகளிலிருந்து வாசனை வர ஆரம்பித்தது. நாள் போக போக அது சகிக்க முடியாத அழுகிய நாற்றமாக வீச ஆரம்பித்தது.

அவன் மூட்டையை தூக்கி கொண்டு வந்தாலே, எல்லோரும் நெருங்கிய நண்பர்கள், கட்டிய மனைவி, பெற்ற பிள்ளைகள் என எல்லோரும் ஓட ஆரம்பித்தார்கள். அவனிடம் பேசவோ, அவன் சொல்வதை யாரும் காதுகொடுத்து கேட்கவோ கூட தயாராக இல்லை.

சீடன் மறுபடியும் சாமியிடம் வந்தான்...
“என்ன சாமி இப்படிப் பண்ணிட்டீங்களே..?” என்றான்.

“என்ன புரிந்தது?” என்றார் சாமி.

“பழி வாங்கும் குரோத உணர்வை சேகரித்துக்கொண்டே வந்தால் அது சுமையாகிவிடும். துர்நாற்றம் வீசும். யாரும் பக்கத்தில் வரமாட்டார்கள். அதை எனக்கு விளக்கத்தானே இப்படி செய்தீர்கள்?” என்றான் சீடன்.

“ம்… சரி. ஆனால் நீ இன்னும் முழுக்கிணற்றை தாண்டவில்லை” என்றார் சாமி.

“புரியலையே…?”...

“உன் பிரச்னை சுமை கூடி போச்சே என்பதும் நாற்றமடிக்கிறதே என்பதும் தான் என நீ நினைக்கிறாய், இல்லையா?”....

“ஆமாம்”....

“சரி… அந்த உருளைக்கிழங்குகளை அவ்வப்போது கொட்டி அந்த கோணியை காலி செய்து கொண்டே வந்தால் இந்த சுமைப் பிரச்னை, நாற்றப் பிரச்சனை தீர்ந்துவிடும் என்று நினைக்கிறாய் இல்லையா?”...

“ஆமாம்.”.....

“மகனே, பிரச்சனை உருளைக்கிழங்கில் இல்லை. கோணிப்பை. ?... கோணி இருப்பதால் தானே அதில்
உருளைகிழங்கை சேர்க்க ஆரம்பித்தாய்?, எனவே, உனக்கு சுமையில்லாமல் இருக்க வேண்டுமானால், அந்த சுமை நாற்றமெடுக்காமல் இருக்க
வேண்டுமானால் 
◇கோணியை முதலில் தூக்கி எறி.....
◇உனக்கு துன்பம் இழைத்தவர்கள் தண்டனை பெற்றே தீருவார்கள்.. 
◇நீ உன் வேலையில் கவனம் செலுத்தி உன் கடமையை சரியாக செய்து வா.”..என்றார்..

ஆம், அன்பர்களே..

♡கைவிடவேண்டியது பழி வாங்கும் நினைப்பை மட்டுமல்ல, பழி வாங்கும் எண்ணத்தையும்,உணர்வையும் கூடத்தான்...

♡"மறக்க வேண்டியவைகளை மறக்காமல் நினைத்திருப்பதும்........
மறக்க வேண்டாதவகைகளை மறந்து விடுவதும்தான் ". இந்த உலகத்தின் இன்றைய துன்பங்களுக்கு எல்லாம் காரணம்.◇

எட்டு திசைகளிலும் விளக்கு ஏற்றுவதனால் என்ன பயன்


*🔯இந்து சமயத்தில் தீபம் ஏற்றுதல் என்பது  இறைவழிபாட்டில் முக்கியமான பங்கு வகிக்கின்றது.*

தீபங்களை நாம் ஏற்றுவதால் தெய்வங்கள் நம் கர்ம வினைகளை நீக்கி கோரிய பலன்களை தருகின்றன.

எட்டு திசைகளில் தீபங்களை ஏற்றுவதனால் என்ன பயன் என்பதை பார்ப்போம்.

*🔯கிழக்கு திசை*

இத்திசையை நோக்கி தீபம் ஏற்றினால் வாழ்வின் துன்பங்கள் நீங்கும். கிரக தோசம் நீங்கி லட்சுமி கடாட்சம் கிட்டும். வீடு இல்லாதவர்கள் வீடு வாங்குவார்கள்.

*🔯மேற்கு திசை*

இத்திசையில் தீபம் ஏற்ற பணத்தால் வந்த பகைமை வளராமல் தீரும். கடன் தொல்லை நீங்கும்.

*🔯வடக்குத் திசை*

இத்திசையில் தீபம் ஏற்றினால் நல்ல காரியங்களில் வெற்றி பெறலாம். மாங்கல்யத்தைப் பேணி மதிக்காத பாவம் நீங்கும். திருமணம் கைகூடும்.

*🔯தெற்கு திசை*

வீட்டில் இத்திசை நோக்கி தீபம் ஏற்றக் கூடாது. மரண பயம் உண்டாக்கும். வீட்டில் யாராவது இறந்து விட்டால் வசதி இல்லதவர்கள் கோவிலில் தெற்கு நோக்கி தீபம் ஏற்றி இறந்தவர்களுக்கு நல்ல அனுகிரகத்தைப் பெற்றுத் தரலாம்.

*🔯தென்கிழக்கு திசை*

இத்திசையை நோக்கி தீபம் ஏற்றினால் குழந்தைகளுக்கு புத்தி கூர்மை உண்டாகும். குழந்தைகள் படிப்பில் கெட்டியாக விளங்குவர். இதற்கு தென்கிழக்கு திசையில் தீபம் ஏற்றி அதன் புகையை குழந்தைக்கு நெற்றியில் இடவேண்டும்.

*🔯தென்மேற்கு திசை*

இத்திசையில் தீபம் ஏற்ற பெண்கள் மற்றும் ஆண்களுக்கு வரும் துன்பம், கலகம் ஆகியன நீங்கும். திருமணத் தடங்கல்கள் நீங்கும்.

*🔯வடகிழக்கு திசை*

இத்திசை நோக்கி தீபம் ஏற்றினால் வீட்டின் தலைவர்  உண்மையான கொடையாளியாக மாறுவார். அவரும் அவர்தம் பிள்ளைகளும் தம்மையும் அறியாமல் தானம் செய்வர்.

*🔯வடமேற்கு திசை*

இத்திசை நோக்கி தீபம் ஏற்றினால் சகோதர சகோதரி ஒற்றுமை நிலவும். குடும்பச் சண்டைகள் நீங்கும்.

கடவுள் இருக்கிறாரா ?

ஒரு கஸ்டமர் முடி வெட்டிக்கவும் தன்னோட மீசையை ட்ரிம் பண்ணிக்கவும் ஒரு சலூன் கடைக்குப் போனாரு. அங்க இருந்த முடி திருத்துபவர் அவரோட பேசிக்கிட்டே தன்னோட வேலையையும் பார்க்கறாரு. அப்ப அவங்க பேச்சு கடவுள் இருக்கிறாரா அப்படிங்கற சப்ஜெக்ட்குள்ள போச்சு.

அப்ப அந்த முடி திருத்துபவர், “கடவுள் இருக்கிறார்னு சொல்றத நான் நம்பவில்லை..”

“ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?”

“சரி நீங்க இப்ப நம்ம தெருவுல நடந்து பாருங்க அப்ப உங்களுக்கே தெரியும் கடவுள் இல்லைனு.

கடவுள் இருந்திருந்தா ஏன் இத்தனை அனாதைக் குழந்தைகள்? ஏன் இத்தனை நோயாளிகள்? கடவுள் இருந்திருந்தால் நோயும் இருக்காது வலியும் இருக்காது. கடவுள் அன்பு செலுத்துவதாக இருந்தால் எதற்காக இதனை அனுமதிக்க வேண்டும்?”

இதற்கு பதில் சொன்னால் அது பெரிய வாக்குவாதத்திற்கு வழி வகுக்கும் என்று அந்த கஸ்டமர் பதில் எதுவும் சொல்லாமல் கடையை விட்டு வெளியேறுகிறார்.

அவர் கடையை விட்டு வெளியே வந்த சமயத்தில் மிக நீளமான தாடியுடனும் நீளமான, அழுக்கான தலை முடியுடனும் ஒருவன் வருவதைப் பார்த்துவிட்டு மீண்டும் கடைக்குள் சென்று அந்த முடி திருத்துபவரிடம்,

“உங்களுக்கு ஒன்று தெரியுமா? முடி திருத்துபவர் கூட இந்த உலகத்தில் இல்லை”

அதிர்ச்சியான முடி திருத்துபவர், “அது எப்படி சொல்வீர்கள்? நான் இங்குதான் உள்ளேன். உங்களுக்காக உங்களை அழகுபடுத்துவதற்காக நான் இருக்கிறேன்.”

“இல்லை………..அப்படி முடி திருத்துபவர் என்பவர் இருந்திருந்தால் இப்படி நீளமான முடியுடனும் ட்ரிம் செய்யப்படாத தாடியுடனும் இவனைப் போல ஒருவன் இந்த ஊரில் இருக்க மாட்டான்.”

“அஹ் முடி திருத்துபவர் நாங்கள் இருக்கிறோம். ஆனால் எங்களிடம் வராமல் ஒருவன் இருந்தால் இப்படித்தான் இருப்பான். அதற்கு நாங்கள் எப்படி பொறுப்பாக முடியும்?”

“மிகச் சரியாகச் சொன்னீர்கள். அதே போலத்தான் கடவுள் என்பவர் இருக்கிறார். மக்கள் அவனைச் சரணடையாமல் கடவுள் இல்லை என்று சொன்னால் என்ன அர்த்தம்?”

இந்தக் கேள்வியில் முடி திருத்துபவர் வாயடைத்துப் போனார்.

வேலிப்பருத்தி

மூலிகையின் பெயர் -: வேலிப்பருத்தி.

தாவரப்பெயர் -: DAEMIA EXTENSA.

தாவரக்குடும்பம் -: ASCLEPIADACEAE

வேறு பெயர்கள்-: உத்தம கன்னிகை மற்றும் உத்தாமணி.

பயன் தரும் பாகம் -: இலை,வேர் முதலியன.

மனிதனுக்கான மருத்துவத்தை இலைகளில் வைத்திருக்கிறது, இயற்கை... 

இந்த உண்மையை சித்தர்கள் உணர்ந்து கொண்டதால்தான் சித்த மருத்துவம் உருவானது. ஆங்கில மருந்துகளுக்கெல்லாம் அடிப்படையாக இருந்தவை சித்தர்களின் ஆராய்ச்சிகள்தான்.
 
இன்றைக்கும் பல்வேறு ஆங்கில மருந்துகள் தயாரிப்பில் மூலிகைச்சாறுகள் சேர்க்கப்படுகின்றன.

தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வேலியோரங்களில் படர்ந்து கிடக்கும் அற்புதமான மூலிகைதான் வேலிப்பருத்தி... 

இதய வடிவ இலைகள், இரட்டைக் காய்கள், முட்டை வடிவ விதைகளுக்குள் பட்டு போன்ற பஞ்சுகள் கொண்ட வேலிப்பருத்திக்கு, 'உத்தாமணி’ என்ற பெயரும் இருக்கிறது. 

சித்த மருத்துவத்தில் பெரும்பாலும் உத்தாமணி என்றே குறிப்பிடுகிறார்கள்.

இயற்கை வளங்கள் அனைத்தையும் அழித்த மனிதன் காற்றைக்கூட விட்டு வைக்கவில்லை. 

கழிவுகளுக்குக் காற்றை காவு கொடுத்துவிட்டு, ஆக்சிஜன் பார்லர்களில் காசு கொடுத்து சுத்தக் காற்று சுவாசிக்கும் நிலை வந்தே விட்டது. 

சென்னை போன்ற பெருநகரங்களில் வீட்டைவிட்டு வெளியே வரும் மனிதர்கள், முகத்தை முழுவதும் மூடிக் கொண்டுதான் பயணிக்கிறார்கள். அந்தளவுக்கு மாசடைந்து கிடக்கிறது, காற்று. அதையும் மீறி பலருக்கு ஆஸ்துமா போன்ற சுவாச நோய்கள்.

மூச்சிரைப்பைப் போக்கும் கற்பக மிளகு!

சுவாசக் கோளாறை சரி செய்வதற்கு, எளிமையான தீர்வு வேலிப்பருத்தி. இதன் இலையை எடுத்து சுத்தம் செய்து இடித்து சாறு எடுத்து, தினமும் ஒரு தேக்கரண்டி குடித்து வந்தால்... ஆஸ்துமா, அலறியடித்துக் கொண்டு ஓடிவிடும். 

இச்சாறை லேசாக சூடாக்கி, ஆற வைத்து தினமும் ஒரு தேக்கரண்டி வீதம் ஒரு மண்டலம் (48 நாட்கள்) குடித்து வந்தால் சுவாச, காச நோய்கள் காணாமல் போய்விடும். இதன் இலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து, தினமும் காலை நேரத்தில் ஒரு தேக்கரண்டி எடுத்து தேன் கலந்து உண்டு வந்தால், வாயுவால் உண்டாகும் நோய்கள், கைகால் குடைச்சல், இளைப்பு, இருமல், கோழைக்கட்டு நீங்கும். 

ஒரு குவளையில் கொஞ்சம் மிளகை இட்டு அவை மூழ்கும் அளவுக்கு வேலிப் பருத்தி இலைச்சாறை ஊற்றி, ஊற வைத்து எடுத்து வெயிலில் ஏழு நாட்கள் காய வைத்தால்... அதன் பெயர் 'கற்பக மிளகு’. 'கற்பக மிளகை, தினமும் ஒரு மிளகு வீதம் உட்கொண்டால் மூச்சிரைப்பு நோய் முற்றிலும் குணமாகும் என்கிறது, சித்த மருத்துவம்.

உடல் வலுப்பெற!

ஊட்டச்சத்து பானங்கள் குடிக்கும் குழந்தைகள் வேண்டுமானால், 'நான் வளர்கிறேனே மம்மி’ என விளம்பரங்களில் காட்டப்படுவது போல வேகமாக வளரலாம். 

ஆனால், உணவுக்கே வழியில்லாத குழந்தை கள் ஊட்டச்சத்துக்கு எங்கு போவார்கள்? ஏழை வீட்டுப் பிள்ளைகள், மார்புக்கூடு முன்தள்ளி நோஞ்சானாகவே வளர்கின்றன. இன்னும் சில குழந்தைகள் என்னதான் ஊட்டச்சத்து கொடுத்தாலும் நோஞ்சானாகவே இருப்பார்கள். 

அப்படிப்பட்ட குழந்தைகள் உடல் வலுப்பெற உதவுகிறது, வேலிப்பருத்தி. இதன் இலையை நிழலில் உலர்த்தி, பொடி செய்துகொண்டு அதில் ஒரு தேக்கரண்டி, சீரகப்பொடி, அருகம்புல் பொடி ஆகியவற்றில் தலா ஒரு தேக்கரண்டி எடுத்து கஷாயம் செய்து... 

பனங்கற்கண்டு சேர்த்து குழந்தைகளுக்குக் கொடுத்து வந்தால் நோஞ்சான் தன்மை நீங்கி, உடல் வலுப்பெறும்.

ரத்த அழுத்தத்தைக் குறைக்கும்!

நாளைய இந்தியாவை வழி நடத்த வேண்டிய இளைஞர்கள், இருபத்தைந்து வயதிலேயே ரத்த அழுத்தம் ஏறிக் கிடக்கிறார்கள். 'பி.பி’ எனச் சுருக்கமாகச் சொல்லப்படும் 'பிளட் பிரஷர்’ உள்ளவர் களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. 

இதற்கு ஆங்கில மருத்துவத்தில் மாத்திரைகள் உண்டு. ஆனால், காலம் முழுவதும் விழுங்கிக் கொண்டே இருக்கவேண்டும். இடையில் நிறுத்தினால், மீண்டும் ரத்த அழுத்தம் எகிறிவிடும். 'இதற்கு வேறு வழியே இல்லையா?’ என கேட்பவர்களுக்கு நிரந்தரத் தீர்வாக இருக்கிறது வேலிப்பருத்தி.

வேலிப்பருத்தி இலைகள் ஆறினை எடுத்து சுத்தம் செய்து, அப்போது கறந்த ஆடு அல்லது மாட்டுப் பாலில் அரை டம்ளர் எடுத்துக் கொள்ள வேண்டும். 

கறந்த பால் கிடைக்காத பட்சத்தில் கொதிக்க வைத்த பாலை அரை டம்ளர் எடுத்துக் கொள்ளலாம். பாலில் இலையைப் போட்டு நன்றாக அரைத்து, 'பிரம்ம முகூர்த்த வேளை’ எனப்படும் அதிகாலை 4.30 மணி முதல் 6.00 மணிக்குள் அருந்த வேண்டும். இப்படி, தொடர்ந்து 48 நாட்கள் செய்துவந்தால்... 

ரத்தத்தில் கலந்துள்ள பித்தநீர் குறைந்து ரத்த அழுத்தம் குறையும். எவ்விதமான பக்கவிளைவுகளும் இல்லாமல் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் இந்த மருந்து, உடல் அசதியைப் போக்கி நரம்புகளைப் புத்துணர்வு பெறச் செய்யும் ஆற்றல் வாய்ந்தது.

வயதுக்கு வர வைக்கும் வேலிப்பருத்தி!

வேலிப்பருத்தி இலைச்சாறு, சுக்கு, பெருங்காயம் ஆகியவற்றை பொடி செய்து, காய்ச்சி இளஞ்சூட்டில் பற்று போட்டால்... வாத வலி, வீக்கம் குறையும். யானைக்கால் நோய் தொடக்க நிலையில் இருந்தால் விரைவில் குணமாகும். 

காணாக்கடி, அரிப்பு, தடிப்பு, கீழ்வாதம், முடக்குவாதம், இடுப்புவலி ஆகியவற்றுக்கு வேலிப்பருத்தி இலைச்சாறை வதக்கி, துணியில் கட்டி ஒத்தடம் கொடுத்தால் குணமாகும். குறிப்பிட்ட வயது வந்த பிறகும், பெண்கள் ருதுவாகாமல் இருந்தால், ஆறு வேலிப்பருத்தி இலை, மூன்று மிளகு ஆகியவற்றை மை போல அரைத்து, 10 தினங்கள் தொடர்ந்து உண்டு வந்தால் நிச்சயம் பலன் கொடுக்கும். 

வேலிப்பருத்தி இலைச்சாறு, தேன் இரண்டை யும் கலந்து தினமும் ஒரு தேக்கரண்டி குடித்து வந்தால்... பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வயிற்று வலி தீரும் என்கிறார்கள், சித்தர்கள்.

இத்தனை பயன்பாடு மிகுந்த வேலிப் பருத்தியை இனியாவது பயன்படுத்தி, நோயற்ற வாழ்வு வாழ்வோம்...

வாத நோய்க்கு மருந்து!

வேலிப்பருத்தியின் மருத்துவ குணங்களைப் பற்றி பேசிய ராமநாதபுரத்தைச் சேர்ந்த சித்த மருத்துவர் காளிமுத்து, ''வேலி ஓரங்களில் படர்ந்து, மனிதனின் வலிகளைக் குறைக்கும் அற்புதமான மூலிகை வேலிப்பருத்தி. 

இது மிகச் சிறந்த வலிநிவாரணியாகவும், கிருமிநாசினியாகவும், சிறுநீர்ப் பெருக்கியாகவும் பயன் படுகிறது. வேலிப்பருத்தி இலையைப் பறித்து, அரைத்து, துணியில் கட்டி, சூடாக உள்ள தோசைக்கல்லில்BB துணியை வைத்து எடுத்து ஒத்தடம் கொடுத்தால் ரத்தகட்டு, முழங்கால் வலி, வாதநோய் குறையும்'' என்றார்..

இது நெஞ்சிலே இருக்கின்ற கோழையை அகற்றி வாந்தியை உண்டாக்குவதோடு புழுக்களைக் கொல்லும் தன்மையுடையது.
இதன் இலையை இடித்துப் பிழிந்த சாற்றை ஒரு தேக்கரண்டி வீதம் அருந்தி வர ஆஸ்த்துமாவுக்கும் பாம்புக் கடிகளுக்கும் குணம் ஏற்படும்.

நாள்பட்ட புண்களுக்கு இதன் இலையை அரைத்துக் கட்டி வந்தால் புண்கள் எளிதில் ஆறும்.

பெண்களுக்கு மாதவிலக்கின் போது உண்டாகும் வயிற்று வலிக்கு வேலிப் பருத்தி இலைச்சாற்றைத் தேனுடன் கலந்து அருந்தி வர குணம் தரும்.

குழந்தைகளுக்கு வயிற்றில் புழுத் தொந்தரவு அதிகமாக இருந்தால் இதன் இலையைக் குடிநீரிட்டு ஒரு பாலாடை அளவு கொடுத்து வர புழுக்கள் வெளியாகும்.

கால் வீக்கங்களுக்கும், உடம்பில் அடிபட்ட வீக்கங்களுக்கும், இதன் இலைச் சாற்றையும், சுண்ணாம்பையும் கலந்து பூசி வர அவை குணமாகும்.

இதன் இலைச்சாற்றுடன் தேன் கலந்து அருந்தி வர இருமல் தணியும்.

இதன் இலையை நன்கு அரைத்து எடுத்த விழுதை நகச்சுற்று, கண்ட மாலை இவைகளுக்குப் பற்றிட்டுவர நல்ல குணம் தரும்.

காணாக்கடி, அரிப்பு, தடிப்புக்கு இதன் இலைச்சாறு தடவலாம்.
இலையை வதக்கித் துணியில் கட்டி ஒத்தடம் கொடுக்கக் கீல் வாதம், முடக்கு வாதம், வாதக் கடைச்சல், இடுப்புவலி மிதலியன குணமாகும்.

இலைச்சாற்றுடன் சுக்கு, பெருங்காயம்,பொடித்துக் காயச்சி இளஞ்சீட்டில் பற்றிட வாத வலி, வீக்கம் குணமாகும், யானைக்கால் நோய்தொடக்க நிலையில் இருந்தால் 40,50 நாள்களில் குணமாக்கலாம்.

இதன் வேரை உலர்த்தித் தூள் செய்து 2 முதல் 4 சிட்டிகை வரை பாலில் கொடுக்க குழந்தைகளின் வாயுத் தொல்லைகள் நீங்கிப் பேதியாகும், பூச்சி, கிருமிகள் சாகும்.

இதன் இலைச்சாற்றில் 7முறை மிளகை ஊறவைத்து வெய்யிலில் உலர்த்தித் தூள் செய்து 2 முதல் 4 அரிசி எடை பால் அல்லது தேனில் கொடுக்கக் குழந்தைகளின் செரியாமை, வாந்தி, மந்தம், மாந்த இழப்பு, கை,கால் சில்லிட்டுப் போதல், சுரம் முதலிய சகல குழந்தை வியாதிகளுக்கும் கொடுக்கலாம்.

5 கிராம் வேரைப் பாலில் அரைத்துக் கலக்கி வடிகட்டிக் காலை மட்டும் 3 நாள் கொடுக்க நஞ்சுக் கடி, கரப்பான், கிரந்தி, சூலை, பிடிப்பு, வாயு முதலியவை போகும்.

உந்தாமணி, பொடுதலை, நுணா,நொச்சி ஆகியவற்றின் இலைகளைவகைக்கு 1 பிடி வதக்கிப் பிழிந்த சாறு 10 மி.லி. கொடுக்கச் சளியோடு கூடிய மாந்தம் தீரும்.

தக்க வயதடைந்தும் பெண் ருதுவாகாவிட்டால் வேலிப்பருத்தி இலைகள் ஆறு எண்ணம் எடுத்துச் சுத்தப்படுத்தி மூன்று மிளகு சேர்த்து அம்மியில் மைபோல் அரைத்து கழற்சிக்காய் அளவு பத்து தினங்கள் தொடர்ந்து உடகொண்டு வர ருதுவாகாத பெண்கள் ருது ஆவார்கள்.

'ஆலித் தெழுந்தநோ யத்தனையும் தீருமேவேலிப் பருத்தியதன் மெல்லிலையால்-வேலொத்துக்கண்டிக்கும் வாதஞ்சன்னி தோஷ மும்போமுண்டிக்கும் வாசனையா மோது'

'உத்தா மணியிலையா லும்வயிற்றுக் குன்மமொடுகுத்தாம் வலியும் குளிரும்போம்-பற்றிதுதியதன்று சொறிசிரங்குந் தொல்லுலகில் நாளும்புதியன் மூலின் புகல்.'

- சித்த மருத்துவம்...

ஆரோக்ய வாழ்வுக்கு பாரம்பரிய மூலிகை மருத்துவ முறை அவசியம் என்பதை அனைவருக்கும் பகிர்ந்து ஆரோக்ய பாரதத்தை உருவாக்குவோம்.....!

திருச்சிற்றம்பலம்! எனக் கூறுவதால் என்ன பயன்?


*🔯இரு சிவனடியார்கள் சந்தித்துக் கொண்டால் திருச்சிற்றம்பலம் எனச் சொல்லிவிட்டே பேசத் தொடங்குவர்.*

சித்+அம்பலம் = சித்தம்பலம் என்பதே சிற்றம்பலம் என்றானது.

 அடியவரின் மனமாகிய அம்பலத்தில் ஆடும் இறைவனே சிவபெருமான். 

அம்பலம் = வெளி ஆகாயம். நமது இதயத்தில் ஒரு சிறு இடத்தில் கட்டைவிரல் அளவில் ஆன்மா இருப்பதாக வேதங்கள் கூறுகின்றன.

மனிதனின் உள்ளம் பெருக்கோயில்! நமது உடம்பே ஆலயம்.

#திருச்சிற்றம்பலம் என்பது நம்முள் இருக்கும் ஆன்மாவே. 

நமது ஜீவனே (உயிர்) சிவம்; உடலே சிவன் குடியிருக்கும் ஆலயம். 

இதை உணர்ந்த சைவப் பெரியோர்கள் ஒருவருக்கொருவர் சந்திக்கும் பொழுது “#திருச்சிற்றம்பலம்” என்று ஒருவர் கூற, அதற்கு மற்றவர் #தில்லையம்பலம் என்று கூறுவார்.

இதன் பொருள் “உன்னுள் இருக்கும் உன் ஆன்மா நிறைவு பெறட்டும்” என்பதாகும். 

*🔯நம்மைப் பார்த்து யாராவது “திருச்சிற்றம்பலம்” என்று சொன்னால் “உன் ஆன்மா நிறைவு பெறட்டும்” என வாழ்த்துகிறார்! என்று தெரிந்துக் கொள்வோம்.* 

*🔯உடனே பதிலுக்கு நாமும் “தில்லையம்பலம்” எனக் கூற வேண்டும்.* 

அத்துடன் தில்லையம்பலத்தில் கோயில் கொண்ட ஆனந்தக்கூத்தனை மனதால் தரிசிக்க வேண்டும். 

உருவத்தில் தினமும் அருவமாக உன் 
ஆன்மா கரைய வேண்டும் என்றால், 
#தில்லைக்குப்போக முக்தி கிடைக்கும்! 
எனப் பொருள்.

இதனை உணர்த்தவே திருச்சிற்றம்பலத்தில் நடராஜ பெருமான், மனித ரூபத்தில் ஆனந்தக் கூத்தாடுகிறார். 

மனித உடலே கோயில் தான்! அதிலுறையும் உயிரே சிவம் என்பதைத் தில்லையம்பலம் உணர்த்துகிறது. 

#நடராசப்பெருமானின் விமானக் கூரையில் 21,600 பொன் ஏடுகளை 72,000 ஆணிகளால் அடித்துப் பொருத்தியிருக்கிறார்கள் .

மனிதன் நாள்தோறும் 21, 000 தடவை மூச்சுவிடுவதையும் , அவன் உடலில் 72,000 நரம்புகள் உள்ளதையும் குறிக்கவே அப்படிச் செய்திருக்கிறார்கள் .

மனித உடலும் கோயில்தான் என்பதை உணர்த்துவதே சிதம்பர ரகசியம் .!

#சிதம்பரகசியம் என்றால் வேறுஒன்றுமில்லை,எல்லாம் மனக் கண்ணால் பார்க்கவேண்டியது .

திரை ரகசியம் . திரை விலகினால் ஒளி தெரியும் . மாயை விலகினால் ஞானம் பிறக்கும்

#திருச்சிற்றம்பலம் என்று சொல்ல சொல்ல நாம் அறியாமல் பார்க்கும் பேசும் செய்யும் அனைத்து பாவச்செயல்களும் நீங்கி நம் ஆன்மாவிற்கு புண்ணியம் சேர்க்கிறோம்.

அப்போது அறியாமையால் ஏற்படும் தவறு எவ்வளவு என்பது நமக்கு தெரியாது

அதனால் நாம் திருச்சிற்றம்பலம் என்று நித்தமும் எவ்வளவு முறை சொன்னாலும் போதாதல்லவா?

மேலும் திருச்சிற்றம்பலத்தை தரிசிக்க வாய்ப்பு கிடைக்காமலும் உணராமலும் பலர் வாழ்வு முடிந்து விடுகிறது.

ஆனால் #திருச்சிற்றம்பலம் என்று சொல்லி சொல்லியாவது அடுத்த பிறவியிலாவது சிவகதி அடைய வேண்டும் என்பதற்காக ஒருரகசியமந்திரமாக
இதைஇறைவனே திருச்சிற்றம்பலமுடை
யான் என்று தன்பெயரை குறிப்பிட்டான்.

எனவே திருச்சிற்றம்பலம் என்று சொல்லச் சொல்ல, நம்மை அறியாது செய்யும் பாபங்கள் எல்லாம் நீங்கி, நமது ஆன்மா புண்ணியம் பெறும். 

எனவே தினமும் “திருச்சிற்றம்பலம்” என இயன்றவரை அடிக்கடி சொல்ல வேண்டும்.

#திருச்சிற்றம்பலம்.

உங்கள் ஜாதகத்தில் உண்டாகும் எப்படிப்பட்ட தோஷங்களையும் நீக்கும் ரகசியம்

நம்முடைய முன்னோர்கள் பசுவிற்கு கீரை, பழங்கள் உள்ளிட்டவற்றை கொடுத்தால் கொடுப்பதால், நாம் செய்த பாவங்கள் அழியும் என்று கூறியுள்ளனர். அந்த வகையில் எந்தெந்த விலங்குகளுக்கு நாம் உணவு அளித்தால் கிரகப் பிரச்சனைகள் தீரும் என்பதை இங்கு பார்ப்போம்.

சூரியன் :-

சூரிய பகவானின் கிரகப் பிரச்சனைகள் உங்கள் ஜாதகத்தில் இருந்தால், குதிரைக்கு உணவளிப்பதன் மூலம் அந்த பிரச்சனை தீரும்.

வியாழன் :-

உங்கள் ஜாதகத்தில் குருபகவானால் பிரச்சனைகள் இருந்தால் திருமணம் மற்றும் கல்வி பாதிக்கப்படும். அதை நிவர்த்தி செய்ய மாடுகளுக்கு தீவனம் அல்லது யானைக்கு உணவு அளிக்கலாம்.

சந்திரன் :-

சந்திர பகவானின் பார்வை உங்கள் ஜாதகத்தில் உக்கிரமாக இருந்தால், அதை சரிசெய்ய நீர் வாழ் உயிரினங்களுக்கு உணவு வழங்கலாம். அதாவது மீன், ஆமை உள்ளிட்ட நீர் வாழ் உயிரினங்களுக்கு உணவு வழங்கலாம்.

செவ்வாய் :-

செவ்வாய் கிரகம் திருமண விஷயத்தில் முக்கியமான தடையாக பார்க்கப்படுகின்றது. நாம் ஆடு அல்லது செம்மறி ஆட்டுக்கு உணவு கொடுப்பதன் மூலம் நம் கெட்ட வினைகள் குறைகின்றது. மேலும், குரங்குகளுக்கு தானியங்களையும் அளிக்கலாம்.

புதன் :-

உங்கள் ஜாதகத்தில் புதன் அதிபதியாக இருக்கும் பட்சத்தில் அவர் மிகச்சிறந்த பேச்சாளராக இருப்பார். புதன் திசை பிரச்சனையாக உள்ளவர்கள், கிளிகளுக்கு உணவு வைப்பது சிறந்தது. அப்படி இல்லையெனில், தங்கள் வீட்டின் மேல் கூரையில் பறவைகளுக்கு உணவுகள் மற்றும் தண்ணீர் வைக்கலாம்.

சுக்கிரன் :-

செல்வத்தை அளிக்கக்கூடிய கிரகம் சுக்கிரன். இந்த கிரகம் நல்ல முறையில் வலுப்பெற புறா உள்ளிட்ட பறவைகளுக்கு தானியங்களை உணவாக கொடுக்கலாம்.

சனி :-

நாம் அனைவரும் மிகவும் பயப்படும் ஒரு கிரகம் சனி. சனி பகவானின் அருளைப் பெற கருப்பு நிற விலங்குகள், பறவைகளுக்கு உணவளிக்கலாம். உதாரணமாக எருமை, கருப்பு நிற நாய், காகம் உள்ளிட்டவை.

ராகு - கேது :-

ராகு - கேது உங்கள் ஜாதகத்தில் வலுப்பெற நாய்களுக்கு ரொட்டி கொடுப்பதும், எறும்புகளுக்கு சர்க்கரை, மாவுப்பொருட்களை உணவாக கொடுப்பதும் நல்ல பலன்களைத் தரும்.

விஷ்ணு சஹஸ்ரநாமம் சொல்வதால் ஏற்படும் நன்மைகள்

மகாபாரதத்தின் இறுதிக்கட்டம். பீஷ்மர் அம்புப் படுக்கையில் மரணத்தை எதிர்நோக்கிப் படுத்திருக்கிறார். கர்ணனும் வஞ்சனையால் கொல்லப்படுகிறான்.

குந்திதேவி கர்ணனை மகனே என்றழைத்து துக்கம் அனுஷ்டிக்கிறாள். கர்ணனுடைய மனைவியும் அவன் உடல்மேல் விழுந்து கதறுகிறாள். இவர்களோடு இன்னொரு பெண்மணியும் கர்ணனுக்காக அழுதாள். அதைக் கண்ட தருமபுத்திரர் கிருஷ்ணனைப் பார்த்து, “”இவள் யார்? இவள் ஏன் அழுகிறாள்?” என்று கேட்டார். அதற்கு கிருஷ்ணர், “”இவள் தர்ம தேவதை. இனி உலகில் தர்மமே இருக்கப் போவதில்லை.

தர்மம் செய்வதற்கென்றே பிறந்தவன் கர்ணன். அவனே போய்விட்ட பிறகு பூமியில் எனக்கென்ன வேலை என்று உலகை விட்டுப்போகிறாள் அவள்” என்றார். தர்மபுத்திரரைப்பயம் சூழ்ந்து கொண்டது.

காரணம்- பாண்டவர்களுடைய பேரனான ஜெனமேஜெயன் ஆளும்போது இந்த நாட்டில் தர்மம் இருக்காதா என்கிற பயம்தான் அது. “”தர்மம் மீண்டும் செழிக்க வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்?” என்று பரந்தாமனை தர்மர் கேட்க, பரந்தாமனோ “”அம்புப் படுக்கையில் படுத்திருக்கும்பீஷ்மரைக் கேள்; அவர் சொல்வார்” என்றார்.

பீஷ்மரும் தர்மதேவதை உலகை விட்டுச் சென்றதால் ஏற்படப் போகும் அவலங்களைச் சொல்கிறார்:”

“இனி உலகம் செழிப்புற்று விளங்காது.
தேசங் கள் ஒவ்வொன்றும் அநியாயமாகச் சண்டையிட்டு அழியும்.
அரசர்கள் நீதிமான்களாக இருக்க மாட்டார்கள்.
அவர்களிடம் பணிபுரியும் அமைச்சர்கள் முதல் பணியாட்கள் வரை ஊழல் செய்து, மக்களை வாட்டி தவறான வழியில் தனம் சேர்ப்பார்கள்.
அரசனிடம் நல்லவற்றிற்கு நீதி கிடைக்காது.
குருமார்கள் தங்கள் சீடர்களுக்கு ஒழுங்காகப் பாடம் சொல்லிக் கொடுக்க மாட்டார்கள்;
சீடர் களும் ஒழுங்காகப் படிக்க மாட்டார்கள்.
படித்தவன் சூதும் வாதும் செய்வான்.
மழை பொழியாது;
நிலங்கள் விளைச்சலைக் கொடுக்காது;
பஞ்சமும் பட்டினியும் தலைவிரித்தாடும்.
கணவன்மார்கள் தங்கள் மனைவியைச் சரிவர காப்பாற்ற மாட்டார்கள்; மனைவிமார்களும் பதிவிரதையாக இருக்க மாட்டார்கள்.
அவர்களின் குழந்தைகள் தவறான வழியில் நடக்கும்… ”

இப்படி பீஷ்மர் சொல்லச் சொல்ல பாண்டவர்கள் பயந்தார்கள். இதிலிருந்து தங்கள் சந்ததியினர் தப்பிப்பது எப்படி என்று கேட்டார் கள். “

“அதை ஸ்ரீ கிருஷ்ணனே சொல்லுவார்” என்று பீஷ்மர் கை காட்ட, கிருஷ்ணனோ, “”நீங்கள் பிதாமகர். நான் சொல்லுவதைவிட உங்கள் நாவிலிருந்தே நல்ல வார்த்தைகள் புறப்படட்டும்” என்று சொன்னார்.

அப்போது புறப் பட்டவைதான் ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ர நாமம்.

அதாவது, எம்பெருமான் ஸ்ரீமந் நாராயணனை ஆயிரம் பெயர் சொல்லி அர்ச்சித்து அவன் மனம் குளிர வேண்டினால் தர்மம் மீண்டும் தழைக்கும் என்பதுதான் விஷ்ணு சஹஸ்ர நாமத்தின் மகிமை.பகவானுக்கு ஆயிரம் பெயர்கள் உண்டா என்று நாம் வியப்படையலாம்.

சாதாரண மனிதனாகிய நமக்கே பாலசுப்பிரமணியன் என்று பெயர் வைத்தால், பாலா, பாலு,சுப்பிரமணி, சுப்பி, மணி, மணியன் என்று பல பெயர்களால்அழைக்கும்போது, பகவானுக்கு ஆயிரம் பெயர் கள் இருக்காதா என்ன?

இந்த ஆயிரம் பெயர் களைச் சொல்லி, பகவானை வேண்டினால் கொஞ்சமாவது தர்மம் பிழைக்கும் என்பது பீஷ்மர் வாக்கு.

உடனே பார்வதிதேவிக்குச் சந்தேகம் வந்து விட்டது. அவள் சர்வேஸ்வரனான தன் கணவனைப் பார்த்து, “”சுவாமி, இது எப்படி சாத்தியமாகும்? ஆயிரம் நாமங்கள் சொல்லி அதனால் தர்மம் தழைக்கும் என்றால், அந்த நாமங்களை பண்டி தர்களால் சொல்ல முடியலாம்; படித்தவர்களால் சொல்ல முடியலாம். ஆனால் படிக்காத ஒருவன் தர்மம் தழைக்க வேண்டும் என்பதற்காக ஆயிரம் பெயர்களை நினைவில் வைத்துக் கொண்டு சொல்ல முடியுமா?” என்று கேட்டாள்

.ஈஸ்வரன் புன்னகைத்தார்.””தேவி… நீ சொல்வது சரிதான். ஏதுமறியாத ஒருவன் ஆயிரம் பெயர் சொல்லி திருமாலை வேண்டுவது நடக்காத காரியம்தான். ஆனால் அதற்கும் ஓர் வழி உண்டு.

“ஸ்ரீராம ராம ராமேதி
ரமே ராமே மனோரமே
ஸஹஸ்த்ர நாம தந்துல்யம்
ராம நாம வரானனே”

இப்படி மூன்று முறை சொன்னால் போதும். சஹஸ்ர நாமம் சொன்ன பலனை அடையலாம்” என்று பார்வதிதேவியின்
சந்தேகத்தை நிவர்த்தி செய்தார் ஈஸ்வரன்.

சரி; இப்படிச் சொல்வதால் நமக்கு என்ன பலன் கிடைக்கும்? என்று கேட்கலாம். மரா… மரா… மரா… என்று சொல்லியே ராமநாமத்தை உச்சரித்த வேடனும் திருடனுமாக இருந்தவனே வால்மீகி மகரிஷியாக உயரவில்லையா? அது தான் ஸ்ரீராம நாம மகிமை.

மேலும் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை யார் வேண்டுமானாலும் சொல்லலாம். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று அனைவரும், அனைத்து இனத்தைச் சேர்ந்தவர்களும்சொல்லலாம். முழு மனதோடு பகவானைச் சரணாகதி அடைந்தால்பலன்களை அவன் தருவான்.

பேய், பிசாசுகள் அண்டாது. வியாதிகள் அணுகாது.
வைத்தியர்கள் கைவிட்ட தீராத நோயும் தீரும்.
சுகப்பிரசவம் சரியாக நேரும்.
நோயாளிகளின் காதருகே அவர்கள் மனம் கேட்கும்படியாக சஹஸ்ர நாமப் பாராயணம் செய்வது மிக மிக உத்தமம்.
மேலும் தர்மங்களும் தழைக்கும்.

ஸ்ரீஆதிசங்கர பகவத் பாதர், ஸ்ரீராமானுஜர், ஸ்ரீதேசிகன், ஸ்ரீமத்வாச்சாரியார், ஸ்ரீராகவேந்திரசுவாமிகள் போன்ற மகான்கள் ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ர நாமத்திற்கு மிக அருமையான பாஷ்யங் கள் (பதவுரை- பொழிப்புரை) எழுதியிருக்கிறார்கள்.

இதிலிருந்தே இதனுடைய பெருமையை அறியலாம். சமஸ்கிருத மொழியைச் சரியாக உச்சரித்துச் சொல்ல வேண்டும்.இல்லையேல் பாரத ரத்தினமாய் விளங்கிய எம்.எஸ். சுப்பு லட்சுமி அவர்கள் இசைத்த ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ர நாம ஒலிநாடாவையோ குறுந்தகட்டையோ தினமும் காலையில் நமது வீடுகளில் ஒலிக்கச் செய்வதன் மூலம் நாம் சகல சௌபாக்கியங்களுடன் வாழலாம்.

பலருடைய வாழ்விலும் இப்படிக் கேட்டு நன்மைகள் விளைந்திருக்கின்றன.

“பரித்ராணாய ஸாதுநாம் விநாசாய ச துஷ்க்ருதாம் !!தர்ம ஸம்ஸ்தாபனார்த்தாய ஸம்பவாமி யுகே யுகே !!

அனைவரும் விஷ்ணு சகஸ்ரநாமத்தை பாராயணம்செய்து விஷ்ணுவின் அருளை பெறுவோமாக!

சந்திர பலம் உள்ள நாட்கள்

🌼எடுத்த காரியம் வெற்றியுடன் அமைத்துதரும் நட்சத்திரங்களுக்கு உகந்த, நட்சத்திர நாட்கள்

🌼நம் ராசி, நட்சத்திரத்துக்கு உகந்த நேரங்களை பெரும்பாலோர் பார்ப்பதில்லை. இதனால் மேற்கொள்கின்ற முயற்சிகள் தோல்வி அடையும். அந்த காலத்தில் பெரியவர்கள் நாள் செய்யாததை நல்லோர் செய்யார் என்பார்கள். நற்செயல்களை நல்ல நாள் நட்சத்திரத்தில் ஆரம்பித்தால் ஜெயம் உண்டாகும் என்பதற்காக இது சொல்லப்பட்டது. அதன்படி நமக்கு நன்மை செய்கின்ற நட்சத்திரங்கள் வரும் நாளில் முக்கியமான விஷயங்களை ஆரம்பிக்கலாம். 

🌼நல்ல விஷயங்கள் பேசலாம். ஒப்பந்தங்களில் கையெழுத்திடலாம். வெளிநாடு செல்வதற்கான முயற்சிகளில் ஈடுபடலாம். வங்கி கணக்கு தொடங்கலாம். கம்ப்யூட்டர், செல்போன் போன்ற சாதனங்கள் வாங்கலாம். 

🌼பரிகார பூஜைகள் செய்யலாம். வேலைக்கான முயற்சிகளை தொடங்கலாம். இப்படி செய்வதால் அந்த நட்சத்திர தாரபலம், சந்திர பலம் காரணமாக நம் முயற்சிகளுடன், அதிர்ஷ்டமும் சேர்வதால் காரிய வெற்றி, அனுகூலம் உண்டாகிறது. 

🌼நாடி செல்லும் காரியங்கள் கை கூடிவர உங்கள் நட்சத்திரங்களுக்கு நன்மை தரும் நட்சத்திரங்கள்: 

🌼அஸ்வினி: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பரணி, ரோகிணி, திருவாதிரை, பூசம், பூரம், அஸ்தம், சுவாதி, பூராடம், திருவோணம், சதயம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும். 

🌼பரணி: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கிருத்திகை, மிருகசீரிஷம், புனர்பூசம், ஆயில்யம், உத்திரம், சித்திரை, விசாகம், உத்திராடம், அவிட்டம், பூரட்டாதி, ரேவதி. ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும். 

🌼கிருத்திகை: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ரோகிணி, திருவாதிரை, பூசம், மகம், ஹஸ்தம், சுவாதி, அனுஷம், திருவோணம், சதயம், உத்திரட்டாதி, அஸ்வினி. ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும். 

🌼ரோகிணி: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மிருகசீரிஷம், புனர்பூசம், ஆயில்யம், பூரம், சித்திரை, விசாகம், கேட்டை, அவிட்டம், பூரட்டாதி, ரேவதி, பரணி. ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும். 

🌼மிருகசீரிஷம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருவாதிரை, பூசம், அசுவினி, கிருத்திகை. ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும். 

🌼திருவாதிரை: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புனர்பூசம், ஆயில்யம், பூரம், அஸ்தம், விசாகம், கேட்டை, பூராடம், பூரட்டாதி, ரேவதி, பரணி, ரோகிணி. ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும். 

🌼புனர்பூசம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பூசம், மகம், உத்திரம், சித்திரை, அனுஷம், மூலம், உத்திராடம், உத்திரட்டாதி, அஸ்வினி, கிருத்திகை, மிருகசீரிஷம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும். 

🌼பூசம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆயில்யம், பூரம், அஸ்தம், சுவாதி, கேட்டை, பூராடம், திருவோணம், ரேவதி, பரணி, ரோகிணி, திருவாதிரை. ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும். 

🌼ஆயில்யம் : நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மகம், உத்திரம், சித்திரை, விசாகம், மூலம், உத்திராடம், அவிட்டம், அசுவினி, கிருத்திகை, மிருகசீரிஷம், புனர்பூசம். 

🌼மகம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பூரம், அஸ்தம், சுவாதி, அனுஷம், பூராடம், திருவோணம், சதயம், பரணி, ரோகிணி, திருவாதிரை, பூசம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும். 

🌼பூரம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உத்திரம், சித்திரை, விசாகம், கேட்டை, உத்திராடம், அவிட்டம், பூரட்டாதி, கிருத்திகை, மிருகசீரிஷம், புனர்பூசம், ஆயில்யம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும். 

🌼உத்திரம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அஸ்தம், சுவாதி, அனுஷம், மூலம், திருவோணம், சதயம், உத்திரட்டாதி, ரோகிணி, திருவாதிரை, பூசம், மகம்.ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும். 

🌼அஸ்தம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சித்திரை, விசாகம், கேட்டை, பூராடம், அவிட்டம், பூரட்டாதி, ரேவதி, மிருகசீரிஷம், புனர்பூசம், ஆயிணீல்யம், பூரம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும். 

🌼சித்திரை: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சுவாதி, அனுஷம், மூலம், உத்திராடம், சதயம், உத்திரட்டாதி, அஸ்வினி, திருவாதிரை, பூசம், மகம், உத்திரம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும். 

🌼சுவாதி: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் விசாகம், கேட்டை, பூராடம், திருவோணம், பூரட்டாதி, ரேவதி, பரணி, புனர்பூசம், ஆயில்யம், பூரம், அஸ்தம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும். 

🌼விசாகம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அனுஷம், மூலம், உத்திராடம், அவிட்டம், உத்திரட்டாதி, அஸ்வினி, கிருத்திகை, பூசம், மகம், உத்திரம், சித்திரை. ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும். 

🌼அனுஷம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கேட்டை, பூராடம், திருவோணம், சதயம், ரேவதி, பரணி, ரோகிணி, ஆயில்யம், பூரம், அஸ்தம், சுவாதி. ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும். 

🌼கேட்டை: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மூலம், உத்திராடம், அவிட்டம், பூரட்டாதி, அஸ்வினி, கிருத்திகை, மிருகசீரிஷம், பூசம், மகம், உத்திரம், சித்திரை, விசாகம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும். 

🌼மூலம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பூராடம், திருவோணம், சதயம், உத்திரட்டாதி, பரணி, ரோகிணி, திருவாதிரை, பூரம், அஸ்தம், சுவாதி, அனுஷம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும். 

🌼பூராடம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உத்திராடம், அவிட்டம், பூரட்டாதி, ரேவதி, கிருத்திகை, மிருகசீரிஷம், புனர்பூசம், உத்திரம், சித்திரை, விசாகம், கேட்டை. ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும். 

🌼உத்திராடம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருவோணம், சதயம், உத்திரட்டாதி, அஸ்வினி, மிருகசீரிஷம், திருவாதிரை, பூசம், அஸ்தம், சுவாதி, அனுஷம், மூலம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும். 

🌼திருவோணம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அவிட்டம், பூரட்டாதி, ரேவதி, பரணி, திருவாதிரை, புனர்பூசம், ஆயில்யம், சித்திரை, விசாகம், கேட்டை, பூராடம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும். 

🌼அவிட்டம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சதயம், உத்திரட்டாதி, அஸ்வினி, கிருத்திகை, புனர்பூசம், பூசம், மகம், சுவாதி, அனுஷம், மூலம், உத்திராடம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும். 

🌼சதயம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பூரட்டாதி, ரேவதி, பரணி, ரோகிணி, பூசம், ஆயில்யம், பூரம், விசாகம், கேட்டை, பூராடம், திருவோணம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும். 

🌼பூரட்டாதி: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உத்திரட்டாதி, அஸ்வினி, கிருத்திகை, மிருகசீரிஷம், ஆயில்யம், மகம், உத்திரம், அனுஷம், மூலம், உத்திராடம், அவிட்டம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும். 

🌼உத்திரட்டாதி: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ரேவதி, பரணி, ரோகிணி, திருவாதிரை, மகம், பூரம், அஸ்தம், கேட்டை, பூராடம், திருவோணம், சதயம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும். 

🌼ரேவதி: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அஸ்வினி, கிருத்திகை, மிருகசீரிஷம், புனர்பூசம், பூரம், உத்திரம், சித்திரை, மூலம், உத்திராடம், அவிட்டம், பூரட்டா ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும். 

🌼மேற்கண்டவாறு அந்த அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்களுக்கு சாதகமான நட்சத்திரத்தன்று செய்யும் அனைத்து செயல்களும் ஜெயமாகும்.🌼.

தடைகளை நீக்கும் துர்க்கை காயத்ரி மந்திரம்

இந்த மந்திரத்தை கூறுவதன் பயனாக எதையும் சாதிக்கும் மன உறுதி பிறக்கும். எதிரிகளை வெல்லும் சக்தி கிடைக்கும். தடைகள் நீங்கி எதிலும் வெற்றி உண்டாகும்.

*ஓம் காத்யாயனய வித்மஹே*
*கன்யாகுமாரி தீமஹி*
*தன்னோ துர்கிப்ரசோதயாத்*

 
*🔯பொது பொருள்:*

 காத்யாயனய மகரிஷிக்கு மகளாய் பிறந்தவளே, என்றும் இளம் குமரியாய் விளங்குபவளே உங்களை வணங்குவதன் பயனாக என் மனதை தெளிவுபடுத்தி என் அறிவை மேம்படுத்தி பல நற்பலன்களை எனக்கு அளிக்க உங்கள் பாதம் பணிகிறேன்.

இந்த மந்திரத்தை தினமும் 108 முறை கூறுவது சிறந்தது. தினமும் கூற முடியாதவர்கள் செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் கூறலாம். ராகு காலம் துர்க்கையை வழிபட உகந்த நேரம் என்பதால் இந்த மந்திரத்தை ராகு காலத்திலும் கூறலாம்.

 இந்த மந்திரத்தை கூறுவதன் பயனாக எதையும் சாதிக்கும் மன உறுதி பிறக்கும். எதிரிகளை வெல்லும் சக்தி கிடைக்கும். தடைகள் நீங்கி எதிலும் வெற்றி .

பணவரவை அதிகரிக்கும் குபேர மூல மந்திரம்

குபேரன்

குபேர காயத்ரி மந்திரத்தை 108 அல்லது 1008 முறை துதித்து வருவதால் நீங்கள் விரும்பிய பணவரவு அதிகரிக்கும். செல்வம் பெருகும்.

*ஒம்ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் லஷ்மி குபேராய நம*

குபேரனுக்குரிய வடதிசையை பார்த்தவாறு அமர்ந்து, இந்த மூல மந்திரத்தை 108 அல்லது 1008 முறை துதிக்க வேண்டும்.

 இதை ஒவ்வொரு வெள்ளியன்றும் செய்து வர உங்களுக்கு வீண் செலவுகள் ஏற்படாது.

 
குபேர வழிபாடு செய்ய நினைப்பவர்கள் செப்புத் தகட்டில் செய்யப்பட்ட குபேர எந்திரத்தை வாங்கி வந்து வெள்ளிக்கிழமைகளில் குபேர எந்திரத்தின் நான்கு முனைகளிலும் மஞ்சள், சந்தனம் மற்றும் குங்குமம் இட்டு, பூக்கள் சாற்றி, எந்திரத்திற்கு முன்பாக ஒரு தட்டில் சிறிது மஞ்சள் அட்சதை அரிசியை வைத்து தூபங்கள் கொளுத்தி, குபேர காயத்ரி மந்திரத்தை 108 அல்லது 1008 முறை துதித்து வருவதால் நீங்கள் விரும்பிய பணவரவு அதிகரிக்கும். செல்வம் பெருகும்.

எளிய பரிகாரம்

பண புழக்கம் அதிகரிக்க
பணவசியம் ஏற்பட, பணப்புழக்கம் அதிகரிக்க பணப்பெட்டியில் பச்சை துணியில் சிறிது பச்சை கற்பூரம்,ஏலக்காய்,சிறிது சோம்பு மூன்றையும் சேர்த்து முடிச்சு கட்டி வைக்கவும். பணப்புழக்கம் அதிகரிப்பதை தாங்களே காணலாம்.ஒன்றொன்றும் சிறிதளவு போதுமானது.

இழந்தவை அனைத்தையும் திரும்ப பெற தெய்வீக பரிகாரம்
27 மிளகுகளை ஒரு புதிய வெள்ளை துணியில் கட்டி அகல் விளக்கில் நல்லெண்ணை ஊற்றி கால பைரவருக்கு விளக்கேற்றிவர நாம் நினைத்தது நடக்கும் இழந்த அனைத்தும் திரும்ப வரும். வளர்பிறை / தேய்பிறை அஷ்டமியில் செய்தால் உடனடி பலன்

சகலமும் வசியமாக பழங்கால முறை
சுத்தமான கோரோசனையை வெள்ளி,ஞாயிறு அன்று தேனுடன் கலந்தும், திங்கள் வியாழன் நேய்யுடன் கலந்தும், செவ்வாய் புதன் பாலுடன் கலந்தும் மையாக இட்டு செல்ல அனைத்தும் வசியமாகும்.வேண்டிய காரியம் சித்திக்கும்

வேலை கிடைக்க மிக எளிய பரிகாரம்
(1) காலை குளித்ததும் சிறுது கல் உப்பு எடுத்து தலையை வலது புறமாய் 24 முறை சுற்றி பின்பு அதை வாசலில் எறிந்து விட்டு, மீண்டும் வீட்டில் வந்து சிறுது கல் உப்பை பேப்பரில் எடுத்து தங்களின் பர்சில் வைத்திருக்கவும். இது ஒரே ஒரு முறை செய்ய வேண்டிய பரிகாரம். வேலை கிடைத்ததும் அந்த உப்பை தூர எறிந்து விடலாம்.
வேறு முறை : புள்ளிகள் இல்லாத ஒரு எலுமிச்சை எடுத்து 13 முறை தலையை சுற்றி பின்பு அதை 4 துண்டாக வெட்டி நான்கு தெருக்கள் இணையும் இடத்தில் திக்கிற்கு ஒன்றாக எறிந்து விடவும். இது தொடர்ந்து முதல் நாள் செய்த அதே நேரத்தில் 7 நாட்கள் செய்ய வேண்டும். இது வேலை இல்லாதவரின் எதிர் மறை சக்திகளை அழித்து தடைகள் நீங்க வழி செய்யும்.

பணவரவு

காலை எழுந்து பல் துலக்கியதும் வெறும் வயிற்றில், ஒரு டம்பளர் நீரை கையில் எடுத்து கொண்டு வட கிழக்கு திசை நோக்கி, நாவை வாயின் மேல் புறம் படுமாறு மடக்கி வைத்து கொண்டு வாய் மூடி, மனதினுள்       "ஏராளம் தனம் தான்யம் தாராளம் தாராளம்"  என்ற மந்திரத்தை 6 முறை ஜெபித்து பின் கண்கள் மூடிய நிலையில் வாய் திறந்து நீரில் ஊதவும். பின் அந்த நீரை குடித்து விடவும்.
கர்ம வினை சார்ந்து உடனடி மற்றும் சற்று தாமதமாக மாற்றம் நிகழும்.இதை செய்த அன்றைய நாள் முழுதும் எதிர்பார்த்த, எதிர்பாராத பணவரவு, நற்செய்திகள் மற்றும் உயர்வுகள் கொடுக்கும் சக்தி வாய்ந்த முறை இது. அனுதினமும் தேவைகள் உள்ள வரை செய்து வரலாம்.

தந்திர யோகம்

மனிதனின் உழைப்பு, உணவு, உறக்கம், இன்பம், பாசம், பந்தம் இவற்றிற்கு அப்பாற்பட்ட ஆசைகள் பல உள்ளன. அதில் ஆன்மிகத்தை நாடுவோர் முக்தி நிலை பெற வேண்டும் என்ற தணியாத ஆசையும் ஒன்றாகும்.

இந்த முக்தியை மரணமில்லா பெருவாழ்வு, தன்னை அறியும் ஞானநிலை, தன்னுள் உறைந்து இருக்கும் இறைவனை உணர்ந்த ஆனந்த நிலை, இப்பிறவியை விலக்கிய நிலை என வெவ்வேறு பெயர்களாலும் உணரப்பட்டது.

ஆக முக்தி பெற வேண்டி முயற்சி தேவை என்பதை உணர்ந்த மனிதன் அதைப்பெற என்னென்ன வழி என கண்டுணர்ந்தான்.

அவ்வழிகள் யாதெனில் 
பக்தி மார்க்கம், 
ஞான மார்க்கம், 
கர்ம மார்க்கம், 
யோக மார்க்கம், 
தந்திர யோக மார்க்கம், 
என ஐந்து பிரிவுகளில் எதையாவது ஒன்றை பற்றி முயற்சித்தால் முக்தியை அடையலாம் என கண்டுபிடித்தனர்.

பக்திமார்க்கம்
**************
பக்திமார்க்கம் என்னும் வழியாகப்பட்டது அனைத்தும் அவன் செயல். என் தலைவன் இறைவனே அவனே கதி என்று நீங்கா பக்தியோடு இறைவனின் பாத கமலமே கதி என்று இருந்து இறையருளை பெற்று முக்தி நிலை அடையும் மார்க்கம் பக்தி மார்க்கமாகும். அடுத்து

ஞானமார்க்கம் 
***************
அறிவு, புத்தி, சித்தி ஆகியவற்றின் துணைகொண்டு முக்திநிலையை அடைய முயல்வதே ஞானமார்க்கமாகும்.

கர்ம மார்க்கம் 
**************
கடமையைச் செய் பலனை எதிர்பார்க்காதே என்று பகவத் கீதையில் பகவான் அர்ஜுனனுக்கு அறிவுரை கூறியிருப்பார். இது சாதாரண மனிதர்களுக்காக கூறப்பட்டதாகும். கர்ம மார்க்கத்திற்கு விசேஷ பயிற்சி எதுவும் தேவையில்லை. தனக்கு விதிக்கப்பட்ட கடமைகளையும், பொறுப்புகளையும் முழுமையாகச் செய்துவிடும் மனிதனின் ஆத்மா படிப்படியாக பண்பட்டு உயர்நிலையை அடைந்து முக்தி பெற கடைபிடிக்கப்படுபதே கர்ம மார்க்கமாகும். 

யோக மார்க்கம் அறிக 
**********************
அஷ்டாங்க யோகத்தில் தீவிரமாக ஈடுபடக்கூடிய ஒருவரால் சில பிறவிகளிலேயே முக்திநிலையை அடைந்துவிட முடியும். ஆனால் இதற்கு கடுமையான பயிற்சிகள் அவசியமாகும். இந்த பயிற்சிகளால் உச்சநிலை பெறும்போது முக்திநிலையை அடைய முடியும். 

தந்திர மார்க்கம்
****************
தந்திரம் என்பது கடினமான ஒரு செயலை மதி நுட்பத்தால் எளிமையாக விரைவாக செய்து முடிப்பதைத் தான் தந்திரம் எனப் பொருள்படும். முன்பு பார்த்த முக்தி அடைய பயன்படுத்தும் மார்க்கங்களில் முக்தி அடைய சில பிறவிகள் தேவைப்படலாம். ஆனால் தந்திர மார்க்கத்தை அணுகுவதால் இதே பிறவியிலேயே முக்தி அடைய முடியும்.

புறத்தேடலில் உழன்றுகொண்டிருக்கும் மனிதனை அகத்தேடலுக்கு திருப்பிவிடும் மார்க்கமே தந்திர மார்க்கமாகும். மிக எளிய தந்திர வழிகளை கையாள்வதன் மூலம் குறுகிய காலத்திலேயே முக்திநிலையை பெற முடியும். மேற்கண்ட எதாவது ஒரு மார்க்கத்தில்தான் மனிதன் தெரிந்தோ தெரியாமலோ கடைபிடித்து வாழ்கிறான். இதில் எந்த மார்க்கம் சிறந்தது என்றால் தந்திர மார்க்கமேயாகும்.

ஒரு குளத்தை புதிதாக வெட்ட 500 பேர் ஒன்றுகூடி குளம் வெட்டி ஒரு வருடத்தில் முடிக்கும் பணியை இயந்திரத்தைக் கொண்டு ஒரு மாதத்திலேயே முடிக்கலாம். இது தந்திரத்தின் பயனால் கிடைத்த சுமூக வெற்றியாகும். அதேபோல்தான் மனித பிறவியின் முக்தியின் வெற்றி ரகசியத்தையும் தந்திரயோகத்தை கையாள்வதன் மூலம் விரைந்து அடையலாம்.

ஒவ்வொரு யுகங்களை மனிதன் கடந்து வரும்போது அவன் அனுபவத்தில் படிப்படியாக வளர்ச்சியடைந்து கண்டுணரப்பட்டதே இந்த மார்க்கங்களாகும். இதில் மனிதன் இறுதியாக கையாண்டு கொண்டிருப்பது தந்திரயோக மார்க்கமேயாகும்.

மனிதனின் ஆயுள் நிர்ணயமில்லாதது . இருக்கும்போதே வெற்றியை நெருங்க வேண்டுமானால் தந்திர மார்க்கமே அதற்கு உதவுகிறது. தந்திரயோகம் என்பது மற்ற மார்க்கங்களின் கூட்டு கலவையும் இருக்கும் . மற்ற மார்க்கங்களின் வெற்றி முறைகளின் எளிதை எடுத்து பயன்கொள்ள வேண்டும்.

இன்னும் கூடுதலாக தந்திர மார்க்கத்தில் சில யோகங்களை கடைபிடித்தனர். அவை மந்திரயோகம், ஹட யோகம், ராஜயோகம், லய யோகம், குண்டலினி யோகம் ஆகும். இந்த ஐந்து யோக வழிமுறைகளில் சில சக்தி வாய்ந்த வழிமுறைகளை மட்டும் தேர்ந்தெடுத்து அவற்றை மேலும் எளிமையாக்கி அவற்றிற்கு மேலும் வலுவூட்டி உருவாக்கப்பட்ட ஒருநிறைவான மார்க்கமே தந்திர யோக மார்க்கமாகும்.

இதில் பெரும்பங்கு குண்டலினி யோக வித்தைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது . இதனுடன் பிற்காலத்தில சேர்க்கப்பட்டதே சக்கர யோகமாகும். இதனுடன் மந்திர யோகத்தையும் இணைந்து பயன்படுத்தினர். எனினும் ஒவ்வொரு நிலையிலும் தந்திரத்தை கையாளும் போதுதான் வெற்றியை உறுதிசெய்ய முடிகிறது..

யோகம் என்றால் சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் ஒருங்கிணைத்தல் என்பதாகும். உதாரணமாக ஒன்றை அறியுங்கள்.

மனிதன் என்பவன் பல கூறுகளால் ஒருங்கிணைக்கப்பட்டவன் எனவே மனிதனும் யோகம்தான். ஆன்மா, உயிர்சக்தி, புலன்கள், பிராணன், புத்தி, சித்தம், மனம், பருஉடல் இவை அனைத்தும் சேர்ந்த கலவையே மனிதன். இவை உதாரணத்திற்கு சொல்லப்பட்டது. ஒவ்வொரு கலையிலும் பல நுணுக்கங்கள் உள்ளன. அவைகளை மதி நுட்பத்தால் கண்டு வகை பிரித்து பயன்கொள்ள வேண்டும். இதற்கும் யோகம் என்றுதான் சுருங்க சொல்ல வேண்டும்.

ஒரு வழிபாடு முறையால் வெற்றி காண சில தடங்களை முறையாக நுட்பமாக கையாள வேண்டும். வழிமுறை, செயல்பாடு, குவிந்த கவனம், தியானம், ஆற்றல், துறவு, சமாதி, பலன், நன்மை என பிரித்து பார்த்தால் ஒவ்வொன்றிற்கும் பல அர்த்தங்கள் வகைகள், தன்மைகள் யாவும் உண்டு என்றாலும் இவைகளை ஒருங்கிணைத்து வழிபாடுயோகம் என்று சுருங்கக் கூறலாம். இந்த நுணுக்கங்களை அறிந்து கையாண்ட விதத்திற்கு தந்திர மார்க்கம் என்று சுருங்க பெயர் வைத்தனர்.

பின்னால் வந்தவர்கள் அவரவர் அனுபவத்தில் கண்ட சக்திகளை கொண்டு பிரிவுடன் தெய்வ மார்க்கத்தை கையாண்டனர். ஆனால் அடிப்படையில் தந்திரத்தை கையாண்ட வெற்றிபெறும் விதம் மட்டும் பொதுவாக இருந்தது . அனைத்து பிரிவிலும் கையாண்டவிதம் தந்திர மார்க்கம் தான்.

குறிப்பாக சைவம், வைணவம், சாக்தம், பௌத்தம், இஸ்லாமியம் என மதக்கோட்பாடுகள் பிரிந்தன என்றாலும் இவைகளிலும் காலப்போக்கில் பல பிரிவுகளை பின்னால் வந்தவர்கள் உருவாக்கிவிட்டாலும் எல்லாவற்றிலுமே தந்திர கையாடலே தலைசிறந்த முறையாக அவரவர் மதிநுட்பப்படி கடைபிடித்தனர்.

இவைகள் காலப்போக்கில் மறைந்துவிடக்கூடாது என்பதற்காக குரு பரம்பரை உருவானது. இந்த குருமார்களின் வழிமுறையை ஏற்ற சீடர்களின் வட்டம் விரிவடைந்து பல மார்க்கங்களை குழுகுழுவாக உருவாக்கி அதில் பல பிரிவுகள் பேதங்கள் குழப்பங்கள் உண்டாகிவிட்டன. இதனால் சரியான நுட்ப முறைகள் அங்கொன்றும் இங்கொன்றும் சிதறி போயின. குழம்பி கலந்தும் போய்விட்டன.

இதன்பின்னால் வந்தவர்கள் பிரிவை கட்டாயமாக்க வேண்டிய சூழலில் வாழ்ந்தனர். ஒருவர் சைவம் இன்னொருவர் அசைவ முறை பின்பற்றும்போது பிரிவு கட்டாயமானது . இதன்பின்பு அவரவர் வெற்றி முறைகளுக்கு ஒரு பெயரை சூட்டி, பெயரை மட்டும் வெளியிட்டு மூலத்தை ரகசியமென குரு சிஷ்ய பரம்பரைக்கு மட்டும் தெரியும் வண்ணம் உருவாக்கி கலைகள் பின்னப்பட்டுவிட்டன.

இதன்பின்னர்தான் மனிதனை வகைப்படுத்தினர். அடுத்தாற் போல் சாதி பேதம் உருவாக அதுவே வழி செய்தது . பின்பு ஒரு சாரருக்கு மட்டுமே இந்த கலை வரும் என தவறான செய்தியை பரப்பி தன்னை மட்டும் உயர்த்திக்கொண்டனர். இதனால் பலமுறைகள் மாறின.

தட்சிணமுறை, வாமாசார முறை, வேதாந்தம் சித்தாந்தம், சடங்குககள், ஆகமங்கள், நியமங்கள் அதிலும் பல பரிவுகள் என அந்தந்த பிரிவினரின் ஏட்டிக்குப்போட்டியான கண்டுபிடிப்புகள் சிலதும், சில உண்மையான வழிமுறைகளும் சேர்த்து இன்று குழப்பமான ஆன்மீகம் உலாவ காரணமாகிவிட்டது .
மெய்யன்பர்களே மனித வளர்ச்சி எப்படி பரிணாம வளர்ச்சி கண்டதோ படிப்படியாக அதைப்போல ஆன்மீகமும் வளர்ந்ததுதான் என்பதை அறிக.

ஒரு காலத்தில் நல்லவர்கள் நிறைய பேர் இருந்தார்கள். இன்றைக்கு நல்லவர்கள் சிலபேர்தான் இருக்கிறார்கள். அதைப்போல கலைகளும் நல்லது சரியானது என சில கலைகள் தான் உள்ளது. எல்லாவற்றிற்கும் மனமும் ஒழுக்கமும் தர்மமும் கடமையும் ஆதார சக்திகளாலும் ஆன்மீக உலகம் எவ்வளவு குழம்பிப்போய் இருந்தாலும் மேற்சொன்னதை சரியாக பயன்படுத்தினால் வெற்றி எளிது, அதுவே தந்திரமாகும்.

தந்திர யோக மார்க்கத்தை கடைபிடிக்க பல வழிமுறைகள் உண்டு. அதை தந்திர யோக குறியீடுகள் என்று கூறுவர். யந்திரம், மந்திரம், தர்மநெறி, ஒழுக்கம், விரதம், தீர்த்த தலங்கள், புனிதம், கடவுள், வர்ணபேதம், சூத்திரங்கள், வளர்ச்சி, சடங்குகள், படைப்பு, தியானம், வழிபாடு, கர்மங்கள், சாதனை, புனஸ்கரணம், அழிவு, ஆக்கல், ஞானதெளிவு, தர்மநெறி கடைபிடித்தல் என்று பல்வேறு வகையான வழிமுறைகளை கடைபிடிப்பதன் மூலம் முக்தி நிலை அல்லது இப்பிறவியின் வெற்றி நிலையை பெறலாம். இதை வகைப்படுத்தி நுட்பமான முறைகளை இதில் பிழையில்லாமல் கையாண்டு வெற்றி காண்பதே தந்திர யோகமாகும்.

இங்கு  பல விஷயங்கள் கொடுத்திருக்கிறேன். யாவும் தந்திர யோகத்தின் நுட்ப வழிமுறைகளேயாகும். தந்திர யோகத்தின் வெற்றி மன ஈடுபாட்டில்தான் உள்ளது என்பதை மறவாதீர்கள்.

இயற்க்கையை எதிர்க்காமலும், தர்மத்தை மீறாமலும் , எதிரியின் பலகீனத்தை பயன்படுத்தி நம் புத்தியை மேம்படுத்தி வெல்வதோ, அல்லது பயன் பெருவதோ தந்திரக்கலையாகும் .

அறிவை அறிவால் வெல்ல முடியாத போது சூழ்நிலையை சாதகமாக்கி வெல்ல முயல வேண்டும். இதுவும் தந்திரகலையாகும் .

நம்மால் முடிக்கமுடியாத செயலை அதை முடிக்கும் தகுதியானவரை தேர்ந்தெடுத்து ஏவி செயல் படுத்துவதும் தந்திர கலையாகும் .

மெய்யால் முடியாததை தெய்வத்தாலும் தெய்வத்தால் முடியாததை மெய்யாலும் முடிக்க முயல வேண்டும் இதுவும் தந்திர கலையாகும் .

தந்திரம் என்பது ஏமாற்றுவது அல்ல அது ஒரு ரகசிய பிரயோகம் .ரகசியமாக இருந்தால் தான் எதிரியை எதிர்க்காமல் வெல்ல முடியும் .எதிர்ப்பை பகையாகாமல் பலனை நம் வசமாக்க முயல்வதும் தந்திரக்கலையாகும் .

எதிரியை நேருக்கு நேர் சந்தித்து வெற்றிகொள்வது வீரம். எதிரியை நண்பனாக்கி அன்பால் வெற்றிகொள்வது தந்திரமாகும் .

உழைத்து பணம் சேர்ப்பது விவேகம் . உழைத்த பணத்தையும் உழைக்க வைத்து சம்பாதிப்பது தந்திர அறிவாகும் .

நீங்கள் உங்களுடைய உழைப்பையும் பலத்தையும் நம்புவது அறிவு, இதன்கூடவே வெற்றி பெற்றவனின் வழித்தடத்தை அறிந்து முன்னுக்கு வர முயல்வது தந்திரம் .

முன்னோர்கள் நமக்கு கொடுத்துச்சென்றுள்ள புரானங்கள் , இதிகாசங்கள் யாவும் சாமான்யருக்கு கதையாக தோன்றுகிறது இதில் பல திருத்தங்களை கவிஞர்களும் தன் பங்கிற்க்கு செய்து வைத்து விட்டு சென்றுள்ளார்கள். ஒருவிஷயத்தை நன்றாக கவனம் வையுங்கள் சாதாரனமாக பார்க்கும் கேட்கும் படிக்கும் நிகழ்வுகளை நிகழ்வுகளாகவே பார்ப்பது சராசரி அறிவாகும். ஆனால் அதன் உள்நுழைந்து காரணங்களை தேடுவது பகுத்தறிவாகும். ஆனால் இதையும் கடந்து நடந்த நிகழ்வுகள் யாவும் வாழ்க்கை சூத்திரங்கள் என்றும் நம் வழிகாட்டி மரங்கள் என்றும் யார் எடுத்து கையாழ்கிறாறோ அவரே ஞான அறிவு பெற்றவராவர் .

மகாபாரதத்தை கேட்கும் போது சூது வாதம், வீரம், வேதனை, வெற்றி, பாசம், பிரிவு என்ற சம்பவங்களையே உணர்வோடு பார்த்து சலிப்பும், ஆர்வமும் கொள்கிறோம் . நம்மவர்களுக்கு  உணர்வுகளின் தாக்கம் உணர்ச்சிகளின் தாக்கம் அதிகம் உள்ளதால் எல்லாவற்றையுமே தன் வாழ்க்கை சம்பவங்களோடு ஒற்றுமை படுத்தி உணர்ச்சி வசப்பட்டே பழகிவிட்டது. ஆனால் அதை கடந்து மகாபாரதத்தை ஆய்வு செய்தால், அதுவும் உணர்ச்சிவசப்படாமல் ஆய்வு செய்தால் பல அரிய தந்திர ரகசியங்கள் கிடைக்கும் .

மகாபாரதத்தில் பாண்டவர்களுக்காக ஸ்ரீகிருஷ்னரும், கௌரவர்களுக்காக சகுனியும் வெற்றிக்கு கையான்டது முழுக்க தந்திரம் தான். தந்திரத்தை கையாள்பவன் உணர்ச்சிவசப்படுதலோ, கோபப்படுதலோ கூடாது. எதையும் எளிதில் நம்புதலும் கூடாது. இதை கடைசி நேரத்தில் சகுனியால் கடைபிடிக்க முடியாமல் போனாது. இதுதான் கௌரவர்கள் வீழ்ச்சிக்கு அடித்தளம் போட்டது. ஸ்ரீகிருஷ்னன் எதையும் மறக்கவில்லை கூடவே புன்னகையும் ஒரு தந்திரம் தான் என்பதை வெளிப்படுத்தி உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி வெற்றியை பாண்டவருக்கு பெற்றுத்தந்தார். தர்மமும் வெற்றியின் தந்திரம் தான் என்பதை உலகிற்க்கு காட்டியவர் ஸ்ரீகிருஷ்னர். அதர்மமும் வெற்றியின் தந்திரம் தான் என்பதை உலகிற்க்கு காட்டியவர் சகுனி . 

ஆக தந்திரம் நல்லவனுக்கும் பலன் கொடுக்கும் கெட்டவனுக்கும் பலன் கொடுக்கும். தந்திரத்திற்க்கு எந்த பாகுபாடும் இல்லை. ஆனால் எதை விதைக்கிறோமோ அதைத்தான் அருவடை செய்வோம். இதை மனதில் வைத்து தந்திரத்தை கையாள வேண்டும். கெட்டவருக்கு சகுனி போன்ற ஒருவர்தான் துணைக்கு தந்திரமாக வந்து இருதியில் தோல்வியை பெற்று தருவர். ஆனால் நல்லவனுக்கு ஸ்ரீகிருஷ்னரை போல தெய்வமே துனையாக வந்து இறுதி வரை உடனிருந்து வெற்றியை பெற்றுத்தரும். இதை மறவாதீர்கள் .

மூலிகையை பயன்படுத்துவது, யந்திரம், முத்திரை, ஆசனம், ஆசனவிரிப்பு, ஆடையின்வண்ணங்கள் , விருட்சங்கள், மந்திரம், தீட்சை, முகூர்த்தம், பட்சி, ஓரை பார்த்தல் , அஞ்சனம் இடுதல், எதிரியின் உடமையை கையாழுதல், அஷ்டகர்ம முறைகள், பலவித மலர்கள், யாகங்கள் செய்தல், மனதை அடக்குதல், உலோகம், நவரத்னம், பரிகாரமுறைகள், சமர்பணம் செய்தல், வணக்கம் செய்தல், முயற்ச்சித்தல் இன்னும் பல்வேறு செயல்களிலும் தந்திரங்கள் மறைந்துள்ளது . காரணகாரியம் இல்லாமல் முன்னோர்கள் எதையும் சொல்லிச்செல்லவில்லை எல்லாம் தந்திரமே .

தந்திரம் என்பது புத்தி யோசனை செயல் விவேகம் இவைகளோடு பின்னிபினைந்தது ஆகும். தந்திரம் என்பது எதிரியின் வலயில் இருந்து தப்பிப்பது மட்டுமன்று, எதிரியை தன் வலையில் விழவைப்பதும் தந்திரமாகும். ஆயிரம் பேரை எதிர்த்து சண்டை இடுவதை விட எதிரி கூட்டத்தின் தலைவன் ஒருவனை பிடித்து விட்டால் மற்றவரை போரிடாமலேயே வென்று விடலாம். இதுதான் தந்திரம் .

வலிமையும் வலிமையும் மோதிக்கொள்வதை விட விட்டுக்கொடுத்து போவதே தந்திரமாகும். எதிரியோடு மோதுவதை விட எதிரியை தன்வசப்படுத்த முயல்வதே தந்திரமாகும்.

நமக்கு தந்திரத்தை பற்றி எதுவுமே தெரிந்திருக்கவேண்டிய அவசியமில்லை. அன்பு, உண்மை, தன்னம்பிக்கை, தர்மம் , விடாமுயற்ச்சி, புரிந்து செயல்படுதல், ஊக்கம் இவைகளை மட்டுமாவது பின்பற்றுங்கள் கூடவே ரகசியத்தை கடைபிடியுங்கள், மற்றவர் நம் மேல் அன்பாய் இருக்க என்ன அனுகுமுறை அவசியமோ அதை கடைபிடியுங்கள் போதும். இறை சக்தி உங்களை நாடிவர இதுவே போதும். இந்த அனுகுமுறையும் தந்திரக்கலைதான்.

-பைரவ கல்பம் என்னும் தந்திர யோக நூலில் இருந்து.....

கடும் கஷ்டம் அனுபவிக்கிறீர்களா...???கடவுள் உங்களை கை விடமாட்டார்.

நம்மில் பலருக்கு, மனிதில் எப்போதும் ஒரு கேள்வி இருந்து கொண்டே இருக்கும். ‘நமக்கு மட்டும், கடவுள் ஏன் இவ்வளவு கஷ்டம் கொடுக்கிறான்.

அடுத்தவர்கள் நிம்மதியாக வாழ்கிறார்களே’ என புலம்புவர். இதே போன்ற எண்ணம், மஹாபாரத்தில், பாண்டவர்களுக்கும் ஏற்பட்டது.

குருஷேத்திர யுத்தம் முடிந்துவிட்டது. பிதாமகர் பீஷ்மர், அம்பு படுக்கையில் படுத்திருந்தார். தை மாத ரத சப்தமி நாளில் இறப்பதற்காக காத்திருந்தார்.

ஒருநாள், தருமன் உட்பட பாண்டவர்கள், பீஷ்மரை சந்தித்தனர்.

நலம் விசாரித்த பீஷ்மர், ‘உங்கள் லட்சியம் நிறைவேறிவிட்டதா' என, கேட்டார்.

இதற்கு தருமன் சிரித்தான். ‘தாத்தா! நாங்கள் தருமத்தின் பாதையில் தானே நின்றோம். எங்களுக்கு உள்ள பங்கை தரமறுத்து, துரியோதனன் துன்புறுத்தினான். தருமம் வெல்ல, நாங்கள் அடைந்த கஷ்டங்கள், துயரங்கள் உங்களுக்கு தெரியாதா?

அவ்வளவு கஷ்டங்கள் அடைய, நாங்கள் செய்த தவறு என்ன. தவறு செய்த துரியோதனன், கடைசி வரையில் மகிழ்ச்சியாக தானே இருந்தான்’ என, கேட்டான் தருமன்.

மற்ற நான்கு பேரும், ‘ஆமாம் தாத்தா, நல்ல வழியில் நடந்தால், கஷ்டங்கள் அனுபவிக்கதான் வேண்டுமா‘ என, கேட்டனர். பீஷ்மர் சிரித்துவிட்டு, பதில் அளித்தார்.

'பேரக்குழந்தைகளே! நீங்கள் வாழ்வில் சொல்ல முடியாத கஷ்டங்களை அனுபவித்துவிட்டு தான், இன்று வெற்றி பெற்றுள்ளீர்கள்.

இதை நான் மறுக்கவில்லை.

ஆனால், இவ்வளவு கஷ்டங்கள் வந்த போதும், நீங்கள் நிம்மதியை இழக்கவில்லை. அதர்ம பாதையில் செல்லவில்லை. கஷ்டங்கள் ஏற்பட்டிருக்கலாம். ஆனால், நீங்கள் மகிழ்ச்சியை இழந்தீர்களா?

13 ஆண்டு வனவாசம் இருந்த போது கூட, நீங்கள் மகிழ்ச்சியாக தான் இருந்தீர்கள்.

ஆனால், துரியோதனன் எந்த கஷ்டத்தையும் அனுபவிக்கவில்லை. ஆனால், அவன் நிம்மதியாக இருந்தானா?

எந்நேரமும் உங்களை பற்றியே நினைத்துக் கொண்டு, உள்ளூர பயந்து கொண்டிருந்தான்.

உங்களுக்கு தீமை செய்வதில் தான், அவனது முழு எண்ணமும் சிந்தனையும் இருந்தன.

துரியோதனனால், உங்களுக்கு துன்பம் ஏற்பட்ட போதேல்லாம், உங்களை கிருஷ்ண பரமாத்மா காப்பாற்றினான்.

நல்ல எண்ணங்களுடன் நீங்கள் இருந்ததால், உங்கள் பக்கம் கடைசி வரை, இறைவன் இருந்தான்.

ஆனால், துரியோதனன் பக்கம் அவன் ஒரு போதும் இல்லை.

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பது, அவர்களின் திறமையை வெளிப்படுத்ததான்.

பல கஷ்டங்களை அனுபவித்த போதும், நீங்கள் தருமத்தின் பாதையைவிட்டு அகலாமல் இருந்ததால், பெரும் பெயரும் புகழும் பெற்றுள்ளீர்கள்.

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்,

கெட்டவர்களுக்கு ஆண்டவன் அள்ளி தருவான், ஆனால், கைவிட்டுவிடுவான் என, கூறி முடித்தார் பீஷ்மர்.

உண்மைதான், ஆண்டவன் நமக்கு கஷ்டம் கொடுக்கிறான் என்றால், அவன் நம்மை கைவிடமாட்டான் என்ற நம்பிக்கை இருந்தால் போதும், மனதில் எந்த சந்தேகமும் வராது.

கஷ்டம் கொடுத்த இறைவனுக்கு அதிலிருந்து நம்மை காப்பாற்றவும் தெரியும்!!

நீ எவ்வளவு பாவம் வேண்டும் என்றாலும் செய்து கொண்டு இரு...பகவான் நரசிம்மர் உன்னை ஒன்றும் செய்யமாட்டார்...

ஆனா நீ  என்றைக்கு உன் ஆட்டத்தை போதும் என்று இனி ஓய்வு எடுப்போம் என்று ஒதுங்கும் போது தான் பகவான் நரசிம்மர் அவருடைய உக்ரரூபத்தை ஆரம்பிப்பார்....

நவ துர்க்கை காயத்ரி மந்திரங்கள்

🌷வனதுர்கா. .  

ஓம் உத்திஷ்ட புருஷ்யைச வித்மஹே

மகாசக்த்யைச தீமஹி

தந்நோ வனதுர்கா: ப்ரசோதயாத்||

🌷ஆஸுரி துர்கா. .  

ஓம் மகா காம்பீர்யைச வித்மஹே

சத்ரு பக்ஷிண்யைச தீமஹி

தந்நோ ஆஸுரிதுர்கா: ப்ரசோதயாத்||

🌷திருஷ்டி துர்கா. .  

ஓம் ஹ்ரீம் தும் திருஷ்டிநாசின்யைச வித்மஹே

தும் ஹ்ரீம் ஓம் துஷ்ட நாஷின்யைச தீமஹி

தந்நோ திருஷ்டிதுர்கா: ப்ரசோதயாத்||

🌷ஜாதவேதோ துர்கா. .  

ஓம் மஹாதேவ்யைச வித்மஹே

வந்நி ரூபாயைச தீமஹி

தந்நோ ஜாதவேதோ: ப்ரசோதயாத்||

🌷ஜய துர்கா. .  

ஓம் ஹ்ரீம் லவநாராயைச வித்மஹே

தும் ஹ்ரீம் ஓம் பயநாசின்யைச தீமஹி

தந்நோ ஜயதுர்கா: ப்ரசோதயாத்||

🌷சந்தான துர்கா. .  

ஓம் காத்யாயண்யைச வித்மஹே

கர்பரக்ஷிண்யைச தீமஹி

தந்நோ சந்தானதுர்கா: ப்ரசோதயாத்||

🌷சபரி துர்கா. .  

ஓம் காத்யாயண்யைச வித்மஹே

கால ராத்ர்யைச தீமஹி

தந்நோ சபரி துர்கா ப்ரசோதயாத்||

🌷சாந்தி துர்கா. .  

ஓம் மஹாதேவ்யைச வித்மஹே

ஜயவரதாயைச தீமஹி

தந்நோ சாந்திதுர்கா: ப்ரசோதயாத்||

🌷சூலினி துர்கா. .  

ஓம் ஹ்ரீம் தும் ஜ்வாலாமாலினி வித்மஹே

தும் ஹ்ரீம் ஓம் மஹாசூலினிச தீமஹி

ஓம் ஹ்ரீம் தும் தந்நோ துர்கா: ப்ரசோதயாத்||

எந்த கோவிலுக்கு சென்றால் என்ன பலன்கள் கிடைக்கும்

*பரிகாரத் தலங்கள் ஆயுள் பலம் வேண்டுதல்..* 

1.அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில்,திருக்கடையூர்,
2.அருள்மிகு எமனேஸ்வரமுடையார் திருக்கோவில், எமனேஸ்வரம், பரமக்குடி
3.அருள்மிகு காலகாலேஸ்வரர் திருக்கோவில், கோவில்பாளையம்,
4.அருள்மிகு சித்திரகுப்தசுவாமி திருக்கோவில், காஞ்சிபுரம்,
5.அருள்மிகு தண்டீஸ்வரர் திருக்கோவில், வேளச்சேரி,
6.அருள்மிகு ஞீலிவனேஸ்வரர் திருக்கோவில். திருப்பைஞ்ஞீலி.
7.அருள்மிகு வாஞ்சிநாதசுவாமி திருக்கோவில், வாஞ்சியம்,

*ஆரோக்கியத்துடன் வாழ..*

1.அருள்மிகு தன்வந்திரி திருக்கோவில், ராமநாதபுரம், கோவை.
2.அருள்மிகு பவஒளஷதீஸ்வரர் திருக்கோவில்,திருத்துறைப்பூண்டி.
3.அருள்மிகு பிரசன்னவெங்கடேச பெருமாள் திருக்கோவில், குணசீலம்.
4.அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோவில், திருவான்மியூர்.
5.அருள்மிகு மகா மாரியம்மன் திருக்கோவில், வலங்கைமான்.
6.அருள்மிகு வைத்தியநாதசுவாமி திருக்கோவில், மடவார்விளாகம், ஸ்ரீவில்லிபுத்தூர்.
7.அருள்மிகு வைத்தியநாதசுவாமி திருக்கோவில், வைத்தீஸ்வரகோவில்.

*எதிரி பயம் நீங்க..*

1.அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவில், மேல்மலையனூர்.
 *2.அருள்மிகு அங்காளபரமேஸ்வரி அம்மன் திருக்கோவில், கல்மண்டபம் இராயபுரம் ,சென்னை.* 
3.அருள்மிகு காலபைரவர் திருக்கோவில், கல்லுக்குறிக்கி. கிருஷ்ணகிரி.
4.அருள்மிகு காளமேகப்பெருமாள் திருக்கோவில், திருமோகூர்.
5.அருள்மிகு காளிகாம்பாள் திருக்கோவில், தம்புசெட்டித்தெரு, சென்னை.
6.அருள்மிகு தட்சிணகாசி உன்மத்த காலபைரவர் திருக்கோவில்,அதியமான்கோட்டை.
7.அருள்மிகு தில்லைகாளியம்மன் திருக்கோவில், சிதம்பரம்.
8.அருள்மிகு பிரத்யங்கராதேவி திருக்கோவில், அய்யாவாடி. கும்பகோணம்.
9.அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோவில், ஆணைமலை.
10.அருள்மிகு முனியப்பன் திருக்கோவில், பி.அக்ரஹாரம், தர்மபுரி.
11.அருள்மிகு ரேணுகாம்பாள் திருக்கோவில், படவேடு.
12.அருள்மிகு வெட்டுடையார் காளியம்மன் திருக்கோவில், கொல்லங்குடி

*கடன் பிரச்சனைகள் தீர..*

1.அருள்மிகு அன்னமலை தண்டாயுதபாணி திருக்கோவில், மஞ்சூர், ஊட்டி
2.அருள்மிகு கருமாரியம்மன் திருக்கோவில், திருவேற்காடு.
3.அருள்மிகு சாரபரமேஸ்வரர் திருக்கோவில், திருச்சேறை, கும்பகோணம்.
4.அருள்மிகு சிவலோகதியாகர், நல்லூர்பெருமணம், ஆச்சாள்புரம், சீர்காழி.
5.அருள்மிகு திருமலை-திருப்பதி ஸ்ரீநிவாசபெருமாள் திருக்கோவில், திருமலை.

*கல்வி வளம் பெருக…*

1.அருள்மிகு கரிவரதராஜ பெருமாள் திருக்கோவில், மாதவரம்.
2.அருள்மிகு தேவநாதசுவாமி திருக்கோவில், திருவஹிந்தீபுரம், கடலூர்.
3.அருள்மிகு மகாசரஸ்வதி அம்மன், கூத்தனூர். பூந்தோட்டம்.
4.அருள்மிகு வரதராஜபெருமாள் திருக்கோவில், செட்டிபுண்ணியம்.

*குழந்தைப்பேறு அடைய…*

1.அருள்மிகு ஏகம்பரநாதர் திருக்கோவில், காஞ்சிபுரம்.
2.அருள்மிகு சங்கரராமேஸ்வரர் திருக்கோவில், தூத்துக்குடி.
3.அருள்மிகு சிவசுப்ரமண்யசுவாமி திருக்கோவில், குமாரசாமிபேட்டை, தர்மபுரி.
4.அருள்மிகு தாயுமானசுவாமி திருக்கோவில், மலைக்கோட்டை, திருச்சி.
5.அருள்மிகு பாலசுப்ரமணியசுவாமி திருக்கோவில், ஆயக்குடி, தென்காசி.
6.அருள்மிகு மயூரநாதசுவாமி திருக்கோவில், பெத்தவநல்லூர், ராஜபாளையம்.
7.அருள்மிகு முல்லைவனநாதசுவாமி திருக்கோவில், திருக்கருகாவூர்.
8.அருள்மிகு நச்சாடை தவிர்தருளியசுவாமி திருக்கோவில், தேவதானம், ராஜபாளையம்.
9.அருள்மிகு விஜயராகவபெருமாள் திருக்கோவில், திருபுட்குழி.

*குடும்பத்தில் ஒற்றுமை ஓங்க…*

1.அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோவில், வில்லிவாக்கம்.
2.அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில், திருச்செங்கோடு.
3.அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவில், முத்தனம்பாளையம்.திருப்பூர்
4.அருள்மிகு கல்யாணவிகிர்தீஸ்வரர் திருக்கோவில், வெஞ்சமாங்கூடலூர்.
5.அருள்மிகு சங்கரநாராயணசுவாமி திருக்கோவில், சங்கரன்கோவில்.
6.அருள்மிகு நவநீதசுவாமி திருக்கோவில், சிக்கல்.
7.அருள்மிகு பள்ளிக்கொண்டீஸ்வரர் திருக்கோவில், ஊத்துக்கோட்டை,சுருட்டப்பள்ளி.
8.அருள்மிகு மனிஹடா ஹெத்தையம்மன் நாகராஜா திருக்கோவில், மஞ்சக்கம்பை.
9.அருள்மிகு மாரியம்மன்,காளியம்மன் திருக்கோவில், ஊட்டி
10.அருள்மிகு லட்சுமி நரசிம்மர் திருக்கோவில், பரிக்கல்.
11.அருள்மிகு வெக்காளியம்மன் திருக்கோவில், உறையூர்
12.அருள்மிகு ஸ்தலசயனப்பெருமாள் திருக்கோவில், மாமல்லபுரம்.

*செல்வ வளம் சேர…*

1.அருள்மிகு அனந்தபத்மநாபசுவாமி திருக்கோவில், அடையாறு.
2.அருள்மிகு அஷ்டலட்சுமி திருக்கோவில், பெசண்ட்நகர், சென்னை.
3.அருள்மிகு கைலாசநாதர் திருக்கோவில், தாரமங்கலம்.
4.அருள்மிகு பக்தவச்சலப்பெருமாள் திருக்கோவில், திருநின்றவூர்.
5.அருள்மிகு மாதவப்பெருமாள் திருக்கோவில், மயிலாப்பூர்.

*திருமணத்தடைகள் நீங்க…*

1.அருள்மிகு உத்வாகநாதசுவாமி திருக்கோவில், திருமணஞ்சேரி.
2.அருள்மிகு கல்யாணபசுபதீஸ்வரர் திருக்கோவில், கரூர்.
3.அருள்மிகு கல்யாணவேங்கடரமணசுவாமி திருக்கோவில், தான்தோன்றிமலை.
4.அருள்மிகு கைலாசநாதர் திருக்கோவில், தாரமங்கலம்.
5.அருள்மிகு சென்னமல்லீஸ்வரர், சென்னகேசவபெருமாள் திருக்கோவில், பாரிமுனை.
6.அருள்மிகு பட்டீஸ்வரர் திருக்கோவில், பேரூர். கோவை.
7.அருள்மிகு நித்யகல்யாண பெருமாள் திருக்கோவில், திருவிடந்தை.
8.அருள்மிகு வரதராஜபெருமாள் திருக்கோவில், நல்லாத்தூர்.
9.அருள்மிகு வீழிநாதேஸ்வரர் திருக்கோவில், திருவீழிமழலை.

*தீவினைகள் அகன்றிட..*

1.அருள்மிகு காலபைரவர் திருக்கோவில், குண்டடம்.
2.அருள்மிகு காளிகாம்பாள் திருக்கோவில், தம்புசெட்டி தெரு, சென்னை.
3.அருள்மிகு குறுங்காலீஸ்வரர் திருக்கோவில், கோயம்பேடு.
4.அருள்மிகு சரபேஸ்வரர் திருக்கோவில், திருபுவனம்.
5.அருள்மிகு சிங்காரத்தோப்பு முனீஸ்வரர் திருக்கோவில், நடுப்பட்டி, மொரப்பூர்.
6.அருள்மிகு பண்ணாரிமாரியம்மன் திருக்கோவில், பண்ணாரி.

*நிலம், வீடு, மனை அமைந்து சங்கடங்கள் தீர…*

1.அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோவில், திருப்புகலூர்.
2.அருள்மிகு தீர்த்தகிரீஸ்வரர் திருக்கோவில், தீர்த்தமலை, அரூர்.
3.அருள்மிகு பூவராகசுவாமி திருக்கோவில், ஸ்ரீமுஷ்ணம்.
4.அருள்மிகு வராகீஸ்வரர் திருக்கோவில், தாமல். காஞ்சீபுரம்.

*நோய், நொடிகள் தீர…*

1.அருள்மிகு இருதயாலீஸ்வரர் திருக்கோவில், திருநின்றவூர்.
2.அருள்மிகு தோரணமலை முருகன் திருக்கோவில், தோரணமலை.
3.அருள்மிகு பண்ணாரிமாரியம்மன் திருக்கோவில், பண்ணாரி.
4.அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோவில், திருவான்மியூர்.
5.அருள்மிகு வீர்ராகவர் திருக்கோவில், திருவள்ளூர்.
6.அருள்மிகு வீழிநாதேஸ்வரர் திருக்கோவில், திருவீழிமழலை.
7.அருள்மிகு வைத்தியநாதசுவாமி திருக்கோவில், மடவார் விளாகம். ஸ்ரீவில்லிப்புத்தூர்.

*பெண்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண…*

1.அருள்மிகு தாயுமானசுவாமி திருக்கோவில், மலைக்கோட்டை, திருச்சி.
2.அருள்மிகு பாதாள பொன்னியம்மன் திருக்கோவில், கீழ்ப்பாக்கம், சென்னை.
3.அருள்மிகு மகாதேவர் திருக்கோவில், செங்கனூர்.கேரளா

*முன்னோர் வழிபாட்டிற்கு..*

1.அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோவில், பவானி.
2.அருள்மிகு மகுடேஸ்வரர் திருக்கோவில், கொடுமுடி.
3.அருள்மிகு வரமூர்த்தீஸ்வரர் திருக்கோவில், அரன்வாயல். கவரப்பேட்டை.
4.அருள்மிகு  வீரராகவர் திருக்கோவில், திருவள்ளூர்.
6.அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோவில், ராமேஸ்வரம்.
7.அருள்மிகு திருப்பள்ளிமுக்கூடல். குருவிராமேஸ்வரம் திருக்கோவில், திருவாரூர்
8 காசி காசி விஸ்வநாதர்
9 பாபநாசம் திருநெல்வேலி மாவட்டம்
10 அருள்மிகு  சொறிமுத்து அய்யனார் கோயில்
பாபநாசம் திருநெல்வேலி மாவட்டம்

மரங்களும் அதன் தெய்வீக சக்திகளும்


துளசி

         துளசி விஷ்ணுவின் அம்சமாகும். துளசியின் இன்னொரு பெயர் பிருந்தா, பிருந்தாவனம் உள்ள இடத்தில் கண்டிப்பாக விஷ்ணு குடியிருப்பார். அதனால் வீடுகளில் முற்றத்தில் துளசி மாடம் அமைக்கப்படுகிறது. துளசிக்கு பல மருத்துவ குணங்களும் உண்டு. இதிலிருந்து வெளிப்படும் தெய்வீக அதிர்வுகள் பல நோய்களை குணமாக்கும்.

சந்தன மரம்

  சந்தனமரம் விஷ்ணுவின் அம்சமாகும். சந்தனம் சுபகாரியங்களிலும், பூஜைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. இதிலிருந்து தெய்வீக அதிர்வுகள் வெளிபடுகின்றன. இவ்வதிர்வுகள் மன அமைதியையும், சாத்வீக குணத்தையும் கொடுக்கும்.

அத்திமரம்

                அத்தி மரம் தத்தாத்திரேயரின் அம்சமாகும். விஷ்ணுவும் இதில் குடியிருப்ப்பார். இம்மரத்திலிருந்து வெளிப்படும் அதிர்வுகள் அல்லது காந்த அலைகள் சாத்வீக குணமுடையவை. மனசாந்தியை கொடுக்கக்கூடியவை. இம்மரத்தில் அடியில் அமர்ந்து தியானம் செய்தால் எளிதாக கைகூடும்.

மாமரம்

               மாமரம் மகாலட்சுமியின் அம்சமாகும். இம்மரத்தில் இருந்து வெளிப்படும் அதிர்வுகள் சாத்வீக குணமுடையவை. இதன் காரணத்தினாலேயே எல்லாவிதமான பூஜைகளிலும் மாவிலைகள் பயன்படுத்தபடுகின்றன. சுபகாரியங்கள் செய்யும்  போது வீடுகளில் மாவிலைகள் தோரணமாக கட்டி தொங்க விடப்படுகிறது.

அரசமரம்

              அரசமரம் பிரம்மாவின் அம்சமாகும். இம்மரத்திலிருந்து வழிபாடும் அதிர்வுகள் சாத்வீக குணமுடையவை. இம்மரத்தின் கிழே தீபம் ஏற்றி வர புத்திர தோஷம் நீங்கும்.

ஆலமரம்

                 ஆலமரம் சிவனின் அம்சமாகும். இம்மரத்திலிருந்து வெளிப்படும் அதிர்வுகள் சாத்வீக குணமுடையவை. இம்மரத்தின் கிழே அமர்ந்து தியானம் செய்தால் தியானம் எளிதாக கைகூடும். அம்மரத்தின் விழுதுகள் ஆண்மை குறைவை நீக்கும் தன்மையுடையது.

மருதாணிமரம்

                 மருதாணி மரமானது லட்சுமியின் அம்சமாகும். இம்மரத்திலிருந்து வெளிப்படும் அதிர்வுகள் சாத்வீக குணமுடையவை. இம்மரத்தின் பழங்களை தூங்கும் போது தலையணைக்கு அடியில் வைத்து தூங்கினால் கேட்ட கனவுகள் வராது.

ருத்ராஷ  மரம்

                ருத்ராஷ மரம் சிவனின் அம்சமாகும். இம்மரத்திலிருந்து வெளிப்படும் அதிர்வுகள் சாத்வீக குணமுடையவை. ருத்ராஷ கோட்டையை  உடலில் அணிந்து கொண்டால் இரத்தம் சுத்தமாகும். இரத்த அழுத்தம் சீராகவும் கோபம் குறையும். மனதில் சந்தம் உண்டாகும்.

ஷர்ப்பகந்தி

                 இம்மரத்தின் அருகே பாம்புகள் வராது. இம்மரத்தின் குச்சிகள் உடலில் கட்டி கொண்டால் பாம்புகள் தீண்டாது.

நெல்லி மரம்

                   நெல்லி மரம் விஷ்ணுவின் அம்சமாகும். இம்மரத்தின் அதிர்வுகள் சாத்வீக குணமுடையவை. இம்மரத்தின் கிழே தம்பதிகளை அமரவைத்து அன்னதானம் செய்தால், அன்னதானம் செய்பவருடைய சகல பாவங்களும் நீங்கும்.

வில்வமரம்

                    வில்வமரம் சிவனின் அம்சமாகும். இம்மரத்தின் இலைகளால்  சிவனை பூஜிக்க சகல பாவங்களும் நீங்கும்.

வேப்பமரம்

                     வேப்பமரம் சக்தியின் அம்சமாகும். இம்மரத்தின் அதிர்வுகள் சாத்வீக குணமுடையவை. இம்மரத்தை சுற்றி மஞ்சள் குங்குமம் பூசி மங்கள் ஆடைகளை கட்டி மாலை சூடி மரத்தை வலம் வந்து வணங்கி வர சக்தியின் அருள் கிட்டும்.

கருவேல மரம்

                  கருவேல மரம் தீய அதிர்வுகளை வெளிபடுத்தும் இம்மரத்தின் காய் மற்றும் வேர்களை மந்திரவாதிகள் தவறான காரியங்களுக்கு பயன்படுத்துகிறார்கள். பொதுவாக பேய், பிசாசுகள் இம்மரத்தின் மீதுதான் குடியிருக்கும்.

காட்டுமரம்

                   காட்டு வேம்பு பிரம்மாவின் அம்சமாகும். ஒரு சிலர் இதை விஷ்ணும் அம்சம் என கூறுவர். இம்மரம் சாத்வீக அதிர்வுகளை வெளிபடுத்தும்.

அசோக மரம்

                     அசோக மரம் சாத்வீக அதிர்வுகளை வெளிப்படுத்தும்.

புளிய மரம்

                    புளியமரம் தீய அதிர்வுகளை வெளிபடுத்தும். புளிய மரத்தின் நிழல் நோய்களை உண்டாகும். புளிய மரங்களில் பேய், பிசாசுகள் தங்கி இருக்கும் என்பது நம்பிக்கை.

மாதுளம் மரம்

                     மாதுளை மரம் லட்சுமியின் அம்சமாகும். இம்மரத்தின் வெளிப்படும் அதிர்வுகள் சாத்வீக குணமுடையவை. இம்மரத்தின் கிழே விளகேற்றி தம்பதிகளால் வலம் வர தம்பதிகளிடையே அன்னியோன்யம் ஏற்படும்

வெள்ளெருக்கு

வெள்ளெருக்கன் செடியானது அதீதமான உயிர் சக்தி கொண்டது. எனவே அதனை பார்த்த உடனே வேரை வெட்டி எடுத்து விடாமல், மேற்கண்ட பரிகார முறைகளை கடைப்பிடிப்பது சிறப்பான பலன்களுக்கு வழிவகுக்கும்.

சூரியனுக்குரிய மூலிகையாக கருதப்படும் வெள்ளெருக்கு, சூரிய ஒளியிலுள்ள தண்ணீரை நுட்பமாக கிரகித்து வளரும் தன்மை பெற்றது. மகாபாரத காவியத்தில் வரும் பிதாமகர் பீஷ்மரின், துன்பம் நீங்க வழி காட்டிய பெருமை இதற்கு உண்டு. தான் விரும்பியபோது இறக்கும் வரத்தை பீஷ்மர் பெற்றிருந்தாலும் துரியோதனனின் பாவச்செயலை தடுக்க முடியாமல், அமைதியாக இருந்த காரணத்தால், வரமே சாபமாக மாறும் தன்மை பெற்று விட்டது. 

அம்பு படுக்கையில் இருந்த பீஷ்மர், தன் தந்தையிடம் ஆலோசித்து, அவரது உடலை எரிக்க சூரியனின் உதவியை கேட்கச் சொல்கிறார். அவ்வாறு செய்வது சாத்தியமில்லை என்ற நிலையில், சூரியனது ஆற்றலை தனக்குள் முழுவதுமாக ஈர்க்கும் சக்தி படைத்த எருக்கன்செடி இலையை கொண்டு அவரது உடலை தகிக்க வைக்கலாம் என்று வழி காட்டப்படுகிறது. உத்தராயண காலம் வரும் வரை காயத்துடன் போராடி சூரியனுக்கு உரிய ரதசப்தமி நாளில் உயிர் நீத்தார் பிஷ்மர்.

ஏழாவது நாளான சப்தமி திதி, ஏழு குதிரைகள் பூட்டிய ரதம் போன்றவை சூரியனுக்கு உரியது. அதுபோல ஏழு வித நரம்பு களால் ஆனது வெள்ளெருக்கு ஆகும். ஒவ்வொரு நாளும் சூரிய பகவான், வெள்ளெருக்கு விநாயகரை வணங்கி, தமது பணியை தொடங்குவதால் சூரியனார் கோவிலில் வெள்ளெருக்கு முக்கியத்துவம் பெறுகிறது. ரத சப்தமி நாளன்று சூரியனின் தலையில் ஒன்பது வெள்ளெருக்கு இலைகளை வைத்து, அவற்றில் தானியங்கள், முக்கனிகள், புஷ்பங்கள் ஆகியவற்றை வைத்து, அவரது பூவுலக கடமைகளை ஆற்றி வரும்படி ஈஸ்வரனால் அனுக்கிரகம் செய்யப்பட்டது. எனவே ரத சப்தமி அன்று வெள்ளெருக்கால் செய்யப்பட்ட விநாயகரை பூஜிப்பது சிறப்பாகும்.

சூரியன் உதிக்கும் சமயத்தில் குளித்து முடித்து, தனது அன்றாட கடமைகளை செய்ய தொடங்கு பவரிடம் செல்வம் சேரும் என்பது சாஸ்திரம். ரத சப்தமி எனப்படும் ‘சூரிய ஜெயந்தி’ சொல்லும் தாத்பரியமும் அதுதான். அந்த நாளில் தொடங்கும் தொழில், பணிகள் ஆகியவை சிறப்பாக விருத்தி அடைவதாகவும் ஐதீகம். அன்று செய்யப்படும் தர்மத்துக்கு பல மடங்கு புண்ணியம் கிடைக்கும். அந்த நாளில் ஆரம்பித்து தினமும் சூரியோதய நேரத்தில் குளிக்கும் பழக்கம் கொண்டவர்களுக்கு, செல்வ வளம் ஏற்படும் என்பது உறுதியாகும். ஆன்மிக பயிற்சிகள் தொடங்கவும், ரதசப்தமி உகந்த நாளாகும்.

பொதுவாக எருக்கன் செடிகளில், நீல எருக்கு, ராம எருக்கு உள்ளிட்ட ஒன்பது வகைகள் இருப்பதாக சித்த வைத்தியர்கள் கூறுகிறார்கள். 12 ஆண்டுகள் மழை பெய்யாமல் இருந்தாலும் கூட, சூரிய கதிர்களில் இருக்கும் தண்ணீரை கிரகித்து வளர்வதோடு, தக்க சமயத்தில் பூக்கள் பூத்து, காயும் காய்க்கும் அதிசய தன்மை கொண்டது எருக்கன் செடி. இதை வீட்டில் வைத்து வளர்த்து, அதன் பூக்களால் விநாயகருக்கும், சிவனுக்கும் வழிபாடுகள் செய்யலாம். வெள்ளெருக்கம் பூவானது, ‘சங்கு பஸ்பம்’ செய்வதில் முக்கிய பங்காற்றுகிறது.

சரியான முறைகளில் தயாரிக்கப்பட்ட வெள்ளெருக்கு விநாயகர் சிலைகள், பிள்ளையார்பட்டி மற்றும் ஆடுதுறை சூரியனார் கோவில் ஆகிய இடங்களில் கிடைப்பதாக செய்தி உண்டு. அவ்வாறு வெள்ளெருக்கு பிள்ளையார் கிடைக்காவிட்டால், நம்பிக்கைக்குரிய சித்த வைத்தியர் மூலம், வெள்ளெருக்கு செடியை அடையாளம் கண்டு, அதன் வேரை எடுத்து விநாயகர் செய்து கொள்ளலாம்.

பின்னர் வளர்பிறை வெள்ளிக்கிழமையன்று காலை 10.30 மணி முதல் 12 மணிக்குள் உள்ள ராகு காலத்தில், அரைத்த மஞ்சள் கலவையை அதன் மேலாக பூசி வைக்க வேண்டும். அதற்கு அடுத்த வாரம் வரும் வெள்ளிக்கிழமை காலை 10.30 மணி முதல் 12 மணிக்குள் உள்ள ராகு காலத்தில், சந்தன கலவையை அதன்மேல் தடவி, நிழலில் காய வைக்க வேண்டும். அதன் பிறகுதான் நன்மை செய்யும் கதிர் வீச்சுகள் அதிலிருந்து வெளிப்படும். பின்னர் அவரவருக்கு இஷ்டப்பட்ட பூஜைகளை செய்யலாம். வெள்ளெருக்கு பட்டை மூலம் செய்யப்பட்ட திரியை, விளக்கில் இட்டு தீபம் ஏற்றினால் சகலவித எதிர்மறைகளும் விலகி விடுவதாக ஐதீகம்.

இறைவன் உறையும் திருமேனிகளான சிலைகளுக்கு அர்ச்சனை செய்ய பயன்படுத்தப்படும் மலர்கள் பற்றி, ஆகமங்களும், ‘புஷ்ப விதி’ என்ற நூலும் பல விதிகளை குறிப்பிடுகின்றன. தோஷங் களற்ற, பூச்சி அரிக்காத, பறவை எச்சம் படாமல், விடியற்காலை நேரத்தில் பறிக்கப்பட்ட மலர்களால் இறைவனுக்கு பூஜை செய்வது விசேஷமாக சொல்லப்பட்டுள்ளது. ‘நன் மாமலர்’ என்று ஞான சம்பந்தர் குறிப்பிடும் அத்தகைய அஷ்ட புஷ்பங்களில் ஒன்றாக வெள்ளெருக்கு இருப்பது குறிப்பிடத்தக்கது.

புன்னை, சண்பகம், பாதிரி, வெள்ளெருக்கு, நந்தியாவர்தம், அரளி, நீலோத்பலம், தாமரை என்பவை அஷ்ட புஷ்பங்கள் ஆகும். சிவபெருமானின் ஜடாமுடியில் வெள்ளெருக்கு அலங்கரிப்பதை, ‘வெள்ளெருக்கு அரவம் விரவும் சடை..’ என்று அப்பர் குறிப்பிடுவார். சிறு செடியாக இருந்து, குறுவகை மரமாக வளரும் தன்மை பெற்றது வெள்ளெருக்கு. தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் தாமாகவே வளரக்கூடிய வெள்ளெருக்கு இருக்கும் இடத்தில் பாம்புகள் வருவதில்லை என்று சொல்லப்படுகிறது.

சென்னைக்கு பக்கத்தில் ஓரகடம் என்னும் ஊரில், வெள்ளெருக்கு விநாயகர் கோவில் இருக்கிறது. பொதுவாக கோவில் களில் உள்ள நந்தவனங்களில் வெள்ளெருக்கன் செடிகள் வளர்க்கப்படுவது வழக்கம். வீட்டில் இருக்கும் வெள்ளெருக்கு விநாயகருக்கு அபிஷேகம் அவசியம் இல்லை. எருக்கம்பூ, அருகம்புல், வன்னி இலை ஆகியவற்றை சூட்டுவதோடு, அத்தர், ஜவ்வாது, புணுகு போன்ற வாசனைப் பொருட்களை பூசி வழிபட்டால், வீட்டில் மகிழ்ச்சியும், மன அமைதியும் உண்டாகும்.

சிவபெருமானுக்கு விருப்பமானது எருக்கம்பூ என்று நாயன்மார்கள் சிலர் போற்றியிருக்கிறார்கள். மேலும் அது தேவ மூலிகை என்றும் சொல்லப்படுகிறது. பூமிக்கு அடியில் அரிதான பொருட்கள் அல்லது புதையல் இருக்கும் இடத்தில் வெள்ளெருக்கு செடி முளைக்கும் என சங்க கால நூல்களில் குறிப்பிடப்படுவது சுவாரசியமான செய்தியாகும். ‘வேதாளம் பாயுமே வெள்ளருக்கு பூக்குமே..’ என்ற பாடல் வரிகள் சங்க காலத்தில் பிர பலம்.

பல்வேறு தெய்வீக சக்தி படைத்த வெள்ளெருக்கு வேரை பயன்படுத்தி செய்யப்படும் சிலையானது அபூர்வ சக்தியை வெளிப்படுத்தும் ஆற்றல் படைத்தது. வெள்ளெருக்கு விநாயகர் சிலை செய்ய வெள்ளை நிற பூக்கள் கொண்ட எருக்கன்செடிதான் தேர்வு செய்யப்படும். சுமாராக ஆறு ஆண்டுகள் வளர்ந்த பிறகே, வெள்ளெருக்குச் செடியானது சிலை செய்வதற்கு உகந்ததாக மாறுகிறது. 

அதுவும் செடியின் வடக்கு பக்கமாக செல்லும் வேரை பயன்படுத்துவது வழக்கம். அதற்கு முன்னதாக வெள்ளெருக்கன் செடிக்கு ஆகம முறைப்படி ஒரு மண்டல காலம் பூஜைகள் செய்வது ஐதீகம். தீய சக்திகள் இருக்கும் வாய்ப்பு உள்ள இடத்தில் வெள்ளெருக்கு செடி வளர்ந்திருந்தால், அதன் வேரானது விநாயகர் சிலை உருவாக்க பயன்படாது. 

வெள்ளெருக்கு வேரை எடுப்பதற்கு முன்னர் வேப்பிலை, கூழாங்கல், மா இலை, வில்வ இலை ஆகியவற்றை மாலை போல் கோர்த்து, அந்த வெள்ளெருக்கு செடியை சுற்றி காப்பு கட்டப்படும். பிறகு, ஒருவாரம் கழித்த பின்னர் வெள்ளெருக்கு வேரை எடுத்து, தக்க முறையில் பதப்படுத்தி, விநாயகர் வடிவத்தை செய்ய பயன்படுத்தலாம். வெள்ளெருக்கன் செடியானது அதீதமான உயிர் சக்தி கொண்டதாக உள்ளது. எனவே அதனை பார்த்த உடனே வேரை வெட்டி எடுத்து விடாமல், மேற்கண்ட பரிகார முறைகளை கடைப்பிடிப்பது சிறப்பான பலன்களுக்கு வழிவகுக்கும்.

ஜோதிட ரீதியாக ஓரைகள்

*ஒவ்வொரு மாதமும் தினமும் அந்தந்த ஊர்களில் சூரியன் உதிக்கும் நேரம் முதல் ஒவ்வொரு மணி நேரம் வரையில் ஒவ்வொரு கிரகத்தினுடைய ஆதிபத்திய காலம் நடைபெறும். அதைத்தான் அந்த கிரகத்தின் ஆதிபத்தியம் உள்ள ஓரை என்று  சொல்வர்.*


எந்தக் கிழமையில் சூரிய உதயம் ஆகிறதோ, அந்தக் கிழமைக்கு உரிய கிரகமே சூரிய உதய முதல் ஒரு மணி நேரத்துக்கான ஓரைக்கு ஆதிபத்தியம் வகிக்கிறது. ராகுவும் கேதுவும் நிழல் கிரகங்கள் என்பதால் அவற்றுக்கு ஓரைகள் இல்லை. மாறாக ராகு  காலம் என தனிக் காலம் உண்டு.
 


*🔯சூரிய ஓரை:* விண்ணப்பம் செய்ய, அதிகாரிகளை சந்தித்தல், மருந்துண்ணல், சொத்துப் பிரிவினை செய்தல், வேலைக்கு  முயற்சித்தல், அரசு அனுமதி பெறுதல், பதவி ஏற்றிடல் ஆகியன செய்யலாம்.
 
*🔯சந்திர ஓரை:* திருமணத்துக்கு நாள் குறித்தல், பெண் பார்த்தல், ஆடை ஆபரணம் அணிதல், கல்வி கலை கற்றிட ஆரம்பித்தல்,  தொலைதூரப் பயணம் தொடங்குதல், கால்நடைகள் வாங்குதல் நலம் தரும்.
 
*🔯செவ்வாய் ஓரை:* போர்க்கருவிகள் செய்தல், வாகனங்கள் பழுது பார்த்தல், போர் தொடுத்தால், வீடு மனை நிலம் வாங்குதல், விற்றல், மருந்துண்ணல், ஏரிக்கரை அல்லது அணை கட்டுதல் செய்யலாம். சுப காரியங்களைத் தவிர்ப்பது நல்லது.

 
*🔯புதன் ஓரை:* ஜோதிட ஆராய்ச்சியில் ஈடுபடுதல், தேர்வு எழுதுதல், போட்டி பந்தயங்களில் பங்கேற்றல், கடிதத் தொடர்பு கொள்ளுதல், புதிய பொருள்களை வாங்குதல், புதிய கணக்கு ஆரம்பித்தல் செய்யலாம்.
 


*🔯குரு ஓரை:* புதிய ஆடை ஆபரணம் வாங்குதல், அணிதல், சேமிக்கத் தொடங்குதல், வர்த்தகக் கொள்முதல் செய்தல், விதை விதைத்தல், நாற்று நடுதல், குரு உபதேசம் செய்தல், பெரியோர்களை சந்தித்து ஆசி பெறல் ஆகியவற்றுக்கு ஏற்ற காலம்.
 
*🔯சுக்கிர ஓரை:* கலைகளைக் கற்கத் தொடங்குதல், திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்தல், காதல் புரிதல், மருந்துண்ணல், பொருள் சேர்த்தல், கடன் வசூல் செய்தல், புதிய ஆடை ஆபரணம் அணிதல் செய்யலாம்.
 
*🔯சனி ஓரை:* உழுதல், எருவிடுதல், இரும்பு, மின்சாதனங்களை வாங்குதல், தோப்பு துரவு (கிணறு) அமைத்தல், பயணம் செய்தல்  போன்றவை செய்யலாம்.

 
*🔯சந்திராஷ்டமம்:* நம் ஜோதிட சாஸ்திரப்படி ஒவ்வொருவருடைய ஜனன கால ஜாதகமும் சந்திரனை அடிப்படையாக வைத்தே கணக்கிடப்படுகிறது. அதாவது ஒருவர் பிறந்த போது சந்திரன் எந்த ராசியில் இருக்கிறதோ, அதுவே அவரது ஜனன ராசி என்றும்,  சந்திர லக்கினம் என்றும் கூறப்படுகிறது

இறைவழிபாடுகள்

🔯நாம் நல்வாழ்விற்காக என்னதான் இறைவழிபாடுகள் செய்தாலும் ஆலயம் சென்றாலும் நம்மையும் நம் இருப்பிடத்தையும் சுற்றியுள்ள விஷயங்களில் ரிஷிமார்கள் கூறிய தாந்த்ரீக விதிகளின் படிச் சில சிறிய மாறுதல்களைச் செய்வதன் மூலம் பெரும் நன்மைகளை அடையலாம்.*

1.வீட்டில் வாடிய செடிகள் இருந்தால் நல்லதல்ல.வீட்டின் முன்பகுதியில் வாடிய செடிகள் இருந்தால் அது செல்வவரவை,வசீகர சக்தியைப் பாதிக்கும்.
வீட்டின் பின்புறம் வாடிய செடிகள் இருந்தால் அது பேய்,பிசாசு போன்ற துர்ச்சக்திகளை ஈர்க்கும்.இது பூமி தோஷத்தை உண்டாக்கும்.எனவே இதுபோன்ற பாதிப்பு உள்ளவர்கள் வீட்டில் உள்ள வாடிய செடிகளை ஒரு செவ்வாய்க்கிழமை அன்று வேரடி மண்ணுடன் பிடுங்கி ஓடும் நீரில் அல்லது கடலில் விட்டு விட மேற்சொன்ன பாதிப்புகள் தீரும்.

2. வீட்டு வாயிற்படி அருகே அல்லது வீட்டின் முன்புறத்தில் எப்பொழுதும் நீர் தேங்க விடக் கூடாது.இது உடல் சார்ந்த பாதிப்பு, நோய்களைத் தொடர்ந்து ஏற்படுத்தும்.தவிர்க்க முடியாத பட்சத்தில் வீட்டின் வாசற்கதவில் மஞ்சளால் ஸ்வஸ்திக் வரையலாம்.இது பாதிப்பை பெருமளவில் குறைக்கும்.

3.கோவில் கொடி,கொடிமரம்,கோவில் கோபுரம் இவற்றின் நிழல் வீட்டின் மேல் படியக்கூடாது.தாந்த்ரீக நூல்கள் இது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வியாதிகளால் பாதிக்கப்பட்டுத் தொடர் சிகிச்சை பெற்றும் பலனளிக்காமல் கஷ்டப்படுவார்கள்.இது ப்ருத்வி தோஷங்களில் ஒன்று.
இதற்குப் பைரவ மந்திரம் அல்லது பைரவ காயத்ரி ஜெபித்து விபூதி அணிந்து வர நன்று .

4.சுடுகாட்டுக்கு சமீபத்தில் வீடு உள்ளவர்கள் வீட்டில் இருந்தபடி சுடுகாட்டில் பிணம் எரிவதைப் பார்க்கக்கூடாது.இது அக்னி தோஷத்தை உண்டாக்கும். இதனால் வீட்டில் உள்ள சுப தெய்வங்களை வெளியேறும்.முகத்தில் தேஜஸ் ,கவர்ச்சி குறைந்து நம்மைப் பார்ப்பவர்களிடம் வெறுப்பை உண்டுபண்ணும். வறுமை,அவமானம் உண்டாக்கும்.பேய்,பிசாசுகள் நம்மைப் பீடிக்க நாமே வழியமைத்துத் தருவதாக அமைந்து விடும்...

வெற்றிலை தீபம்

*🔯வெற்றிலை காம்பில் பார்வதிதேவியும், வெற்றிலையின் நுனியில் லட்சுமியும், நடுவில் சரஸ்வதியும் வாசம் செய்வதாய் ஐதீகம்.*

சேதாரமில்லாத புத்தம்புது வெற்றிலையினை 6 எண்ணிக்கையில் எடுத்துக்கொள்ள வேண்டும். முக்கியமாய் நுனிப்பகுதி சேதாரமில்லாமல் இருக்கக்கூடாது.
நுனியில்லாத வெற்றிலையை பூஜைக்கு எப்போதுமே பயன்படுத்த கூடாது. வெற்றிலையிலிருந்து காம்பினை கிள்ளி எடுத்துக் கொள்ளவேண்டும். காம்பில்லாத 6 வெற்றிலைகளை ஒரு பலகையின் மீதோ அல்லது ஒரு டேபிளின் மீதோ 6 வெற்றிலைகளையும் மயில் தோகை போல் விரித்து, வைத்து விடவேண்டும். அதன்மேல் ஒரு அகல் தீபத்தை வைத்து, நல்லெண்ணெய் ஊற்றி, திரி போட்டு வைக்கவும். அடுத்து கிள்ளி வைத்திருக்கும் 6 காம்புகளையும் நல்லெண்ணெய்க்குள் போட்டு, தீபத்தை ஏற்ற வேண்டும்.

ஏற்றிய தீபத்தில் எண்ணெய் சூடாகி வெற்றிலை காம்பில் இருந்து லேசான நறுமணம் வீசும். தீபத்திற்கடியில் இருக்கும் காம்பு இல்லாத வெற்றிலையில் தீபத்தின் சூடுபட்டு, வெற்றிலையிலிருந்து நறுமணம் வீசும்.

இந்த நறுமணத்தை நன்றாக உள்ளிழுத்து தீபத்தை நோக்கியவாறு ஐந்து நிமிடங்கள் உங்கள் மனதில் நினைத்திருக்கும் கோரிக்கையை வைத்து தியானம் செய்தாலே போதும். உங்களுக்கு இருக்கும் எப்படிப்பட்ட பிரச்சனையாக இருந்தாலும், விரைவில் தீர்ந்து மகிழ்ச்சி பொங்கும். நினைத்தது ஈடேறும். காரணம் வெற்றிலையில் வீற்றிருக்கும் முப்பெரும்தேவிகளின் அருட்பார்வை கிட்டும். நம் நிலை மாறும்.

திருவண்ணாமலை

🙏திருவண்ணாமலை மலையில் ஏராளமான சித்தர்கள் இருந்தார்கள். இப்போதும் கூட அங்கு பல சித்தர்கள் இருக்கிறார்கள், ஆனால் நம் கண்களுக்குத்தான் தெரிவதில்லை. பதினெட்டு சித்தர்களில் ஒருவரான இடைக்காடர் திருவண்ணாமலையில் ஜீவசமாதி அடைந்துள்ளார்.

🙏திருவிடை மருதூர், இடைக்காட்டூர் உள்பட பல இடங்களில் இடைக்காடர் ஜீவ சமாதி உள்ள போதிலும் திருவண்ணாமலையில் தான் அவரது பரிபூரண அருள் உள்ளது. திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை இவர் கோடி ஆண்டுகளுக்கு கண்டு தரிசனம் செய்துள்ளார்.

🙏திருவண்ணாமலை தலத்தில் கார்த்திகை தீபம் ஏற்றப்படும் போது அதை நேரில் கண்டு தரிசனம் செய்தாலே அளவற்ற புண்ணியம் கிடைக்கும் என்பார்கள்.

🙏கோடி தடவைக்கு மேல் கார்த்திகை தீபத்தை தரிசனம் செய்த, இடைக்காடர் பற்றி நினைத்தால், திருவண்ணாமலை ஈசனின் மகிமையைத் தெரிந்தவர் இவர் ஒருவர் தான் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். இவர் திருவண்ணாமலை பற்றிய ரகசியங்களை முழுமையாக அறிந்தவர் என்று கூறப்படுகிறது. இன்றும் பவுர்ணமி தோறும் திருவண்ணாமலையில் இடைக்காடர் கிரிவலம் வருவதாக கூறப்படுகிறது.

🙏இடைக்காடர் மட்டுமல்ல, மேலும் பல சித்தர்களும் திருவண்ணாமலையில் கிரிவலம் வந்து கொண்டு தான் இருக்கிறார்கள். கலசப்பாக்கம் அருகில் உள்ள பூண்டியில், பூண்டி சித்தரின் ஜீவசமாதி இருக்கிறது. அந்த சித்தர் பவுர்ணமி தோறும் திருவண்ணா மலையில் கிரிவலம் வருவதாக சொல்லப்படுகிறது.

🙏வாத்தியார் அய்யா ஸ்ரீமுத்து வடுகநாதர் சித்தர் என்று ஒரு சித்தர் உள்ளார். இவரது ஜீவசமாதி எங்கு இருக்கிறது என்று இதுவரை யாருக்குமே தெரியவில்லை. திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள ஸ்ரீவராகி தீர்த்தத்துக்கு தினமும் இவர் வந்து வழிபட்டு செல்வதாக கூறப்படுகிறது.

🙏சீரியா சிவம் பாக்கினி சித்தர் என்று ஒரு சித்தர் திருவண்ணாமலையில் வசித்தார். இவர் பெயரில் மலை ஒன்று அங்குள்ளது. அங்கு இந்த சித்தரின் அருள் இன்னமும் பரவி உள்ள தாக கூறப்படுகிறது.

🙏அதுபோல ஸ்ரீபெத்த நாராயண சித்தர் என்பவரும் பல நூற்றாண்டுகளாக திருவண்ணா மலையில் வாழ்கிறார். யார் கண்களுக்கும் அவர் தன்னைக் காட்டியது இல்லை.

🙏மேலும் வயிறு சார்ந்த நோய்கள் தீரும். திருவல்லத்தில் பிறந்தவர் பாம்பணையான் சித்தர், இவர் மற்ற சித்தர்கள் போல அரூபமாக கிரிவலம் வருவதில்லை. இவர் மனித வடிவம் எடுத்து கிரிவலம் வருகிறார். மார்கழி மாத பவுர்ணமியில் இவர் கிரிவலம் வருவதாக சொல்கிறார்கள். இவரது பார்வை நம் மீது பட்டாலே போதும் விஷக் கடிகளால் உண்டாகும் தோஷங்கள் நீங்கும்.

🙏ரோகிணி, திருவாதிரை, பூசம், உத்திரம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திர நாட்களில் கிரிவலம் வருபவர்களுக்கு கணதங்கணான் சித்தர் அருளால் சகல நோய்களும் தீரும். மாத சிவராத்திரி கிரிவலத்தின் போது அர்த்தஜாம பூஜை நேரத்தில் குரு ஓரையில் இவரை பார்க்கும் தரிசனம் கிடைத்தால் நமது ஆத்மா தூய்மை அடையும். இவர்களைப் போல கணக்கற்ற சித்தர் பெருமக்கள் திருவண்ணாமலையில் தினம், தினம் கிரிவலம் வந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

🙏கிரிவலம் செல்லும் போது, இந்த சித்தர் பெருமக்களை நினைத்துக் கொண்டு நடந்தால், நிச்சயம் நல்லதே நடைபெறும்.

🙏இதுபோன்று சித்தர்களும் முனிவர்களும் நிறைந்த இந்த சக்தி வாய்ந்த மலையை சுற்றும்போது, மிகவும் பய பக்தியுடன் செல்வது உகந்தது.

🙏வீணான அரட்டை, தெய்வ சிந்தனை யில்லாமல் செல்வது போன்றவற்றால் அருபமாக இருக்கும் சித்தர்களின் சாபமும் ஏற்படும் என்பதால்தால் மலையை சுற்றும்போது பேசாமல் சிவ மந்திரத்தையும், சிவ நாமத் தையும் ஜெபித்துக்கொண்டு செல்ல வலியுறுத்தப் படுகிறது.

இராமேஸ்வரம் தீர்த்தங்களும் அவற்றின் மகிமைகளும்


*இராமேஸ்வரம் தல வரலாறு:*         :  இராமன் சீதையை மீட்க இராவணனிடம் போர் புரிந்து கொன்றான். இராவணனை கொன்ற பாவத்தினை நீங்க இராமன் மணல்களால் ஆன லிங்கத்தை வைத்து பிரதிஷ்டை செய்தார். எனவே இராமனே ஈஸ்வரனை வணங்கியதால் இந்நகருக்கு *“இராம ஈஸ்வரம்”* என்று பெயர் ஆனது. மக்கள் இங்கு வந்து தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபட்டால் பாவங்கள் நீங்கும் என நம்புகின்றர்.

*22 தீர்த்தங்களும் அவற்றின் மகிமைகளும்!*

*1. மகாலெட்சுமி தீர்த்தம்*
இது கிழக்கு கோவிலின் பிரதான வாசலில் அனுமார் சன்னதிக்கு எதிரில் தெற்கு பக்கத்தில் உள்ளது. இதில் ஸ்னானம் செய்தால் சகல ஐஸ்வர்யமும் பெறலாம்.

*2. சாவித்திரி தீர்த்தம்,*
*3. காயத்ரி தீர்த்தம்,*
*4. சரஸ்வதி தீர்த்தம்*
 இம்மூன்று தீர்த்தங்களும் அனுமார் கோவிலுக்கு மேல்புறம் உள்ளது. இம்மூன்று தீர்த்ங்களில் ஸ்னானம் செய்வதால் மத சடங்குகளை விட்டவர் சந்ததியில்லாதவர் இஷ்ட சித்தி அடையலாம்.

*5. சேது மாதவ தீர்த்தம்*
 இது மூன்றாம் பிரகாரத்தின் மேற்கு பகுதியில் உள்ள தெப்பக்குளம். இதில் ஸ்ரீராபிரானால் சகல லெட்சுமி விலாசமும், சித்த சக்தியும் பெறலாம்.

*6. நள தீர்த்தம்*
மூன்றாம் பிரகாரம் மேற்கு பகுதியில் உள்ள சேது மாதவர் சன்னதிக்கு தென்புறம் உள்ளது. இதில் நீராடுவதால் சூரிய தேஜசை அடைந்து சொர்க்கலோக பதவி அடைவர்.

*7. நீல தீர்த்தம்*
 மூன்றாம் பிரகாரம் மேற்கு பகுதியில் உள்ள சேது மாதவர் சன்னதிக்கு வடபுறம் உள்ளது. இதில் நீராடுவதால் சமஸ்தயாக பலனையும் அடைந்து சொர்க்கலோக பதவி அடைவர்.

*8. கவாய தீர்த்தம்*
 இது மூன்றாம் பிரகாரம் சேது மாதவர் சன்னதியின் முன்புறம் உள்ளது. இதில் நீராடுவதால் சக்குசாயம், கோபம் மனைவலினம், தேக ஆரோக்கியம் கிடைக்கும்.

*9. கவாட்ச தீர்த்தம்*
இது மூன்றாம் பிரகாரம் சேது மாதவர் சன்னதியின் முன்புறம் கவாய தீர்த்தத்திற்கு அருகில் உள்ளது. இதில் நீராடுவதால் நரகத்திற்கு செல்ல மாட்டார்கள். மன வலிமை, தேக ஆரோக்கியம், திட சரீரம் கிடைக்கும்.

*10. கந்தமாதன தீர்த்தம்*
 சேது மாதவர் சன்னதியின் முன்பகுதியில் கவாய், கவாட்ச தீர்த்தங்களுக்கு அருகில் உள்ளது. இதில் நீராடுவதால் மகாதரித்திரம் நீங்கி ஐஸ்வர்ய சித்தியும் பெற்று பிரம்ம ஹத்தியாதிபாப நிவர்த்தி பெறுவர்.

*11. சங்கு தீர்த்தம்*
இராமநாதசுவாமி கோவில் பிரதான வாசல் உட்புறம் தெற்கு பக்கத்தில் இரண்டாம் பிரகாரத்தில் இதில் நீராடுவதால் செய்நன்றி மறந்த சாபம் நீங்கப் பெறும்.

*12. சக்கர தீர்த்தம்*
 இராமநாதசுவாமி கோவில் பிரதான வாசல் உட்புறம் உள்ள இரண்டாம்l பிரகாரத்தின் வடபுறம் உள்ள கருவூலத்தின் கீழ்புறம் உள்ளது. lஇதில் நீராடுவதால் ஊனம், குருடு, செவிடு ஆகியவை நீங்கி சௌக்கியம் அடைவர்.

*13. பிரம்மாத்திர விமோசன தீர்த்தம்*
இது இரண்டாம் பிரகாரம் வடக்கு பக்கத்தில் பைரவர் சன்னதி அருகில் உள்ளது. இதில் நீராடுவதால் பிரம்மஹத்தயாதிதோஷங்களும், பாவங்களும் நிவர்த்தியாவதடன், பில்லி சுனியமும் நீங்கும்.

*14. சூர்ய தீர்த்தம்*
இது இரண்டாம் பிரகாரத்தில் உள்ள கருவூலத்தில் மேற்கு பக்கம் அமைந்துள்ளது. இத்திர்த்தத்தில் நீராடுவதால் திரிகாலஞானமும் உண்டாவதுடன் ரோகங்கள் நிவர்த்தியாகும்.

*15. சந்திர தீர்த்தம்*
இது இரண்டாம் பிரகாரத்தில் உள்ள கருவூலத்தின் மேற்கு பக்கம் உள்ளது. இதில் நீராடுவதால் ரோக நிவர்த்தி அகலும்.

*16. கங்கா தீர்த்தம்*
*17. யமுனா தீர்த்தம்*
*18. காயத்ரிதீர்த்தம்*
இம்மூன்று தீர்தத்தங்களும் திருக்கோவில் இரண்டாம் பிரகாரத்தில் அமைந்தள்ள கருவூலத்தில் மேற்கு பக்கம் உள்ள சூரியன், சந்திரன் தீர்த்தத்திற்கு எதிரில் அமைந்துள்ளது. இவைகளில் நீராடுவதனால் பிணி, மூப்பு, சாக்காடு ஆகியவைகளும் அஞ்ஞானமும் நீங்கி முக்தி அடையலாம்.

*19. சாத்யாம்ருத தீர்த்தம்*
திருக்கோவில் அம்பாள் சன்னதியின் மூலஸ்தான நுழைவாயிலின் அருகே உள்ள அஷ்டலட்சுமி சன்னதியின் தெற்கு பக்கம் உள்ளது. இதில் நிராடினால் தேவதாகோபம் பிராம்மணசாபம் நிவர்த்தியாவதுடன், சூரியமூர்த்தி, மோட்ச பிராப்தி ஆகியவை கிடைக்கும்.

*20. சிவ தீர்த்தம்*
இந்த தீர்த்தம் சுவாமி சன்னதி நுழைவாயில் மற்றும் அம்மன் சன்னதி நுழைவாயில் ஆகியவற்றுக்கு இடையே நந்தி தேவருக்கு தென்புறம் அமைந்துள்ளது. இதில் ஸ்னானம் நீராடினால் சகல சௌபாக்கியமும் கிடைக்கும்.

*21. சர்வ தீர்த்தம்*
இந்த தீர்த்தம் முதல் பிரகாரத்தில் இராமநாதசுவாமி சன்னதி முன் உள்ளது. இதில் நிராடினால் பிறவிக்குருடு, நோயும் நரை திரையும் நீங்கி வளமடையலாம். கோவிலுக்கு வெளியே பல தீர்த்தங்கள். இவை புயலாலும், ஆக்கிரமிப்பாலும் பாதிக்கப்பட்டதால் இவற்றில் நீராட இயலாது.

*22. கோடி தீர்த்தம்*
இந்த தீர்த்தமானது இராமர் லிங்கப் பிரதிஷஙடை செய்தபோது அபிஷேகத்திற்கு நீர் தேவைப்பட்டது. அதனால் இராமர் தன் அம்பின் நுனியை பூமியில் வைத்து அழுத்தினதால் அந்த இடத்தில் பூமியைப் பிளந்து கொண்டு நீர் வந்தது. அதுவே கோடி தீர்த்தம் எனப்படுகிறது. இந்நீரானது இராமநாதசுவாமி மற்றும் எல்லா சுவாமி அம்பாள் ஆகியவர்கள் அபிஷேகத்திற்கு பயன்படுத்தப்படவதால் பக்தர்கள் இத்தீர்த்தத்தில் நேரடியாக தாங்களே தீர்தத்தை எடுத்து குளிப்பதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. இதற்கு கட்டணம் உண்டு. பக்தர்கள் இத்திர்த்தத்தில் நீராட இரண்டாம் பிரகாரம் வடபகுதியில் உள்ள பைரவர் சன்னதி முன்புறம் உள்ள கோமுக் மூலம் தீர்த்தத்தை விடுவார்கள், அதன் மூலம் நீராடலாம். கோடி தீர்த்தத்தில் நிராடியபின் இவ்வூரில் இரவு தங்கலாகாது என்பது சம்பிரதாயம்.🌹🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

மகாபாரதத்தின் முக்கிய கதாபாத்திரங்கள்

  மகாபாரதம் ஏராளமான கதாபாத்திரங்களைக் கொண்ட ஒரு காவியம் . சில முக்கிய கதாபாத்திரங்கள் இங்கே :   கிருஷ்ணா - பாண்டவ இளவரசர் அர்...