மூலிகையின் பெயர் -: வேலிப்பருத்தி.
தாவரப்பெயர் -: DAEMIA EXTENSA.
தாவரக்குடும்பம் -: ASCLEPIADACEAE
வேறு பெயர்கள்-: உத்தம கன்னிகை மற்றும் உத்தாமணி.
பயன் தரும் பாகம் -: இலை,வேர் முதலியன.
மனிதனுக்கான மருத்துவத்தை இலைகளில் வைத்திருக்கிறது, இயற்கை...
இந்த உண்மையை சித்தர்கள் உணர்ந்து கொண்டதால்தான் சித்த மருத்துவம் உருவானது. ஆங்கில மருந்துகளுக்கெல்லாம் அடிப்படையாக இருந்தவை சித்தர்களின் ஆராய்ச்சிகள்தான்.
இன்றைக்கும் பல்வேறு ஆங்கில மருந்துகள் தயாரிப்பில் மூலிகைச்சாறுகள் சேர்க்கப்படுகின்றன.
தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வேலியோரங்களில் படர்ந்து கிடக்கும் அற்புதமான மூலிகைதான் வேலிப்பருத்தி...
இதய வடிவ இலைகள், இரட்டைக் காய்கள், முட்டை வடிவ விதைகளுக்குள் பட்டு போன்ற பஞ்சுகள் கொண்ட வேலிப்பருத்திக்கு, 'உத்தாமணி’ என்ற பெயரும் இருக்கிறது.
சித்த மருத்துவத்தில் பெரும்பாலும் உத்தாமணி என்றே குறிப்பிடுகிறார்கள்.
இயற்கை வளங்கள் அனைத்தையும் அழித்த மனிதன் காற்றைக்கூட விட்டு வைக்கவில்லை.
கழிவுகளுக்குக் காற்றை காவு கொடுத்துவிட்டு, ஆக்சிஜன் பார்லர்களில் காசு கொடுத்து சுத்தக் காற்று சுவாசிக்கும் நிலை வந்தே விட்டது.
சென்னை போன்ற பெருநகரங்களில் வீட்டைவிட்டு வெளியே வரும் மனிதர்கள், முகத்தை முழுவதும் மூடிக் கொண்டுதான் பயணிக்கிறார்கள். அந்தளவுக்கு மாசடைந்து கிடக்கிறது, காற்று. அதையும் மீறி பலருக்கு ஆஸ்துமா போன்ற சுவாச நோய்கள்.
மூச்சிரைப்பைப் போக்கும் கற்பக மிளகு!
சுவாசக் கோளாறை சரி செய்வதற்கு, எளிமையான தீர்வு வேலிப்பருத்தி. இதன் இலையை எடுத்து சுத்தம் செய்து இடித்து சாறு எடுத்து, தினமும் ஒரு தேக்கரண்டி குடித்து வந்தால்... ஆஸ்துமா, அலறியடித்துக் கொண்டு ஓடிவிடும்.
இச்சாறை லேசாக சூடாக்கி, ஆற வைத்து தினமும் ஒரு தேக்கரண்டி வீதம் ஒரு மண்டலம் (48 நாட்கள்) குடித்து வந்தால் சுவாச, காச நோய்கள் காணாமல் போய்விடும். இதன் இலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து, தினமும் காலை நேரத்தில் ஒரு தேக்கரண்டி எடுத்து தேன் கலந்து உண்டு வந்தால், வாயுவால் உண்டாகும் நோய்கள், கைகால் குடைச்சல், இளைப்பு, இருமல், கோழைக்கட்டு நீங்கும்.
ஒரு குவளையில் கொஞ்சம் மிளகை இட்டு அவை மூழ்கும் அளவுக்கு வேலிப் பருத்தி இலைச்சாறை ஊற்றி, ஊற வைத்து எடுத்து வெயிலில் ஏழு நாட்கள் காய வைத்தால்... அதன் பெயர் 'கற்பக மிளகு’. 'கற்பக மிளகை, தினமும் ஒரு மிளகு வீதம் உட்கொண்டால் மூச்சிரைப்பு நோய் முற்றிலும் குணமாகும் என்கிறது, சித்த மருத்துவம்.
உடல் வலுப்பெற!
ஊட்டச்சத்து பானங்கள் குடிக்கும் குழந்தைகள் வேண்டுமானால், 'நான் வளர்கிறேனே மம்மி’ என விளம்பரங்களில் காட்டப்படுவது போல வேகமாக வளரலாம்.
ஆனால், உணவுக்கே வழியில்லாத குழந்தை கள் ஊட்டச்சத்துக்கு எங்கு போவார்கள்? ஏழை வீட்டுப் பிள்ளைகள், மார்புக்கூடு முன்தள்ளி நோஞ்சானாகவே வளர்கின்றன. இன்னும் சில குழந்தைகள் என்னதான் ஊட்டச்சத்து கொடுத்தாலும் நோஞ்சானாகவே இருப்பார்கள்.
அப்படிப்பட்ட குழந்தைகள் உடல் வலுப்பெற உதவுகிறது, வேலிப்பருத்தி. இதன் இலையை நிழலில் உலர்த்தி, பொடி செய்துகொண்டு அதில் ஒரு தேக்கரண்டி, சீரகப்பொடி, அருகம்புல் பொடி ஆகியவற்றில் தலா ஒரு தேக்கரண்டி எடுத்து கஷாயம் செய்து...
பனங்கற்கண்டு சேர்த்து குழந்தைகளுக்குக் கொடுத்து வந்தால் நோஞ்சான் தன்மை நீங்கி, உடல் வலுப்பெறும்.
ரத்த அழுத்தத்தைக் குறைக்கும்!
நாளைய இந்தியாவை வழி நடத்த வேண்டிய இளைஞர்கள், இருபத்தைந்து வயதிலேயே ரத்த அழுத்தம் ஏறிக் கிடக்கிறார்கள். 'பி.பி’ எனச் சுருக்கமாகச் சொல்லப்படும் 'பிளட் பிரஷர்’ உள்ளவர் களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இதற்கு ஆங்கில மருத்துவத்தில் மாத்திரைகள் உண்டு. ஆனால், காலம் முழுவதும் விழுங்கிக் கொண்டே இருக்கவேண்டும். இடையில் நிறுத்தினால், மீண்டும் ரத்த அழுத்தம் எகிறிவிடும். 'இதற்கு வேறு வழியே இல்லையா?’ என கேட்பவர்களுக்கு நிரந்தரத் தீர்வாக இருக்கிறது வேலிப்பருத்தி.
வேலிப்பருத்தி இலைகள் ஆறினை எடுத்து சுத்தம் செய்து, அப்போது கறந்த ஆடு அல்லது மாட்டுப் பாலில் அரை டம்ளர் எடுத்துக் கொள்ள வேண்டும்.
கறந்த பால் கிடைக்காத பட்சத்தில் கொதிக்க வைத்த பாலை அரை டம்ளர் எடுத்துக் கொள்ளலாம். பாலில் இலையைப் போட்டு நன்றாக அரைத்து, 'பிரம்ம முகூர்த்த வேளை’ எனப்படும் அதிகாலை 4.30 மணி முதல் 6.00 மணிக்குள் அருந்த வேண்டும். இப்படி, தொடர்ந்து 48 நாட்கள் செய்துவந்தால்...
ரத்தத்தில் கலந்துள்ள பித்தநீர் குறைந்து ரத்த அழுத்தம் குறையும். எவ்விதமான பக்கவிளைவுகளும் இல்லாமல் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் இந்த மருந்து, உடல் அசதியைப் போக்கி நரம்புகளைப் புத்துணர்வு பெறச் செய்யும் ஆற்றல் வாய்ந்தது.
வயதுக்கு வர வைக்கும் வேலிப்பருத்தி!
வேலிப்பருத்தி இலைச்சாறு, சுக்கு, பெருங்காயம் ஆகியவற்றை பொடி செய்து, காய்ச்சி இளஞ்சூட்டில் பற்று போட்டால்... வாத வலி, வீக்கம் குறையும். யானைக்கால் நோய் தொடக்க நிலையில் இருந்தால் விரைவில் குணமாகும்.
காணாக்கடி, அரிப்பு, தடிப்பு, கீழ்வாதம், முடக்குவாதம், இடுப்புவலி ஆகியவற்றுக்கு வேலிப்பருத்தி இலைச்சாறை வதக்கி, துணியில் கட்டி ஒத்தடம் கொடுத்தால் குணமாகும். குறிப்பிட்ட வயது வந்த பிறகும், பெண்கள் ருதுவாகாமல் இருந்தால், ஆறு வேலிப்பருத்தி இலை, மூன்று மிளகு ஆகியவற்றை மை போல அரைத்து, 10 தினங்கள் தொடர்ந்து உண்டு வந்தால் நிச்சயம் பலன் கொடுக்கும்.
வேலிப்பருத்தி இலைச்சாறு, தேன் இரண்டை யும் கலந்து தினமும் ஒரு தேக்கரண்டி குடித்து வந்தால்... பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வயிற்று வலி தீரும் என்கிறார்கள், சித்தர்கள்.
இத்தனை பயன்பாடு மிகுந்த வேலிப் பருத்தியை இனியாவது பயன்படுத்தி, நோயற்ற வாழ்வு வாழ்வோம்...
வாத நோய்க்கு மருந்து!
வேலிப்பருத்தியின் மருத்துவ குணங்களைப் பற்றி பேசிய ராமநாதபுரத்தைச் சேர்ந்த சித்த மருத்துவர் காளிமுத்து, ''வேலி ஓரங்களில் படர்ந்து, மனிதனின் வலிகளைக் குறைக்கும் அற்புதமான மூலிகை வேலிப்பருத்தி.
இது மிகச் சிறந்த வலிநிவாரணியாகவும், கிருமிநாசினியாகவும், சிறுநீர்ப் பெருக்கியாகவும் பயன் படுகிறது. வேலிப்பருத்தி இலையைப் பறித்து, அரைத்து, துணியில் கட்டி, சூடாக உள்ள தோசைக்கல்லில்BB துணியை வைத்து எடுத்து ஒத்தடம் கொடுத்தால் ரத்தகட்டு, முழங்கால் வலி, வாதநோய் குறையும்'' என்றார்..
இது நெஞ்சிலே இருக்கின்ற கோழையை அகற்றி வாந்தியை உண்டாக்குவதோடு புழுக்களைக் கொல்லும் தன்மையுடையது.
இதன் இலையை இடித்துப் பிழிந்த சாற்றை ஒரு தேக்கரண்டி வீதம் அருந்தி வர ஆஸ்த்துமாவுக்கும் பாம்புக் கடிகளுக்கும் குணம் ஏற்படும்.
நாள்பட்ட புண்களுக்கு இதன் இலையை அரைத்துக் கட்டி வந்தால் புண்கள் எளிதில் ஆறும்.
பெண்களுக்கு மாதவிலக்கின் போது உண்டாகும் வயிற்று வலிக்கு வேலிப் பருத்தி இலைச்சாற்றைத் தேனுடன் கலந்து அருந்தி வர குணம் தரும்.
குழந்தைகளுக்கு வயிற்றில் புழுத் தொந்தரவு அதிகமாக இருந்தால் இதன் இலையைக் குடிநீரிட்டு ஒரு பாலாடை அளவு கொடுத்து வர புழுக்கள் வெளியாகும்.
கால் வீக்கங்களுக்கும், உடம்பில் அடிபட்ட வீக்கங்களுக்கும், இதன் இலைச் சாற்றையும், சுண்ணாம்பையும் கலந்து பூசி வர அவை குணமாகும்.
இதன் இலைச்சாற்றுடன் தேன் கலந்து அருந்தி வர இருமல் தணியும்.
இதன் இலையை நன்கு அரைத்து எடுத்த விழுதை நகச்சுற்று, கண்ட மாலை இவைகளுக்குப் பற்றிட்டுவர நல்ல குணம் தரும்.
காணாக்கடி, அரிப்பு, தடிப்புக்கு இதன் இலைச்சாறு தடவலாம்.
இலையை வதக்கித் துணியில் கட்டி ஒத்தடம் கொடுக்கக் கீல் வாதம், முடக்கு வாதம், வாதக் கடைச்சல், இடுப்புவலி மிதலியன குணமாகும்.
இலைச்சாற்றுடன் சுக்கு, பெருங்காயம்,பொடித்துக் காயச்சி இளஞ்சீட்டில் பற்றிட வாத வலி, வீக்கம் குணமாகும், யானைக்கால் நோய்தொடக்க நிலையில் இருந்தால் 40,50 நாள்களில் குணமாக்கலாம்.
இதன் வேரை உலர்த்தித் தூள் செய்து 2 முதல் 4 சிட்டிகை வரை பாலில் கொடுக்க குழந்தைகளின் வாயுத் தொல்லைகள் நீங்கிப் பேதியாகும், பூச்சி, கிருமிகள் சாகும்.
இதன் இலைச்சாற்றில் 7முறை மிளகை ஊறவைத்து வெய்யிலில் உலர்த்தித் தூள் செய்து 2 முதல் 4 அரிசி எடை பால் அல்லது தேனில் கொடுக்கக் குழந்தைகளின் செரியாமை, வாந்தி, மந்தம், மாந்த இழப்பு, கை,கால் சில்லிட்டுப் போதல், சுரம் முதலிய சகல குழந்தை வியாதிகளுக்கும் கொடுக்கலாம்.
5 கிராம் வேரைப் பாலில் அரைத்துக் கலக்கி வடிகட்டிக் காலை மட்டும் 3 நாள் கொடுக்க நஞ்சுக் கடி, கரப்பான், கிரந்தி, சூலை, பிடிப்பு, வாயு முதலியவை போகும்.
உந்தாமணி, பொடுதலை, நுணா,நொச்சி ஆகியவற்றின் இலைகளைவகைக்கு 1 பிடி வதக்கிப் பிழிந்த சாறு 10 மி.லி. கொடுக்கச் சளியோடு கூடிய மாந்தம் தீரும்.
தக்க வயதடைந்தும் பெண் ருதுவாகாவிட்டால் வேலிப்பருத்தி இலைகள் ஆறு எண்ணம் எடுத்துச் சுத்தப்படுத்தி மூன்று மிளகு சேர்த்து அம்மியில் மைபோல் அரைத்து கழற்சிக்காய் அளவு பத்து தினங்கள் தொடர்ந்து உடகொண்டு வர ருதுவாகாத பெண்கள் ருது ஆவார்கள்.
'ஆலித் தெழுந்தநோ யத்தனையும் தீருமேவேலிப் பருத்தியதன் மெல்லிலையால்-வேலொத்துக்கண்டிக்கும் வாதஞ்சன்னி தோஷ மும்போமுண்டிக்கும் வாசனையா மோது'
'உத்தா மணியிலையா லும்வயிற்றுக் குன்மமொடுகுத்தாம் வலியும் குளிரும்போம்-பற்றிதுதியதன்று சொறிசிரங்குந் தொல்லுலகில் நாளும்புதியன் மூலின் புகல்.'
- சித்த மருத்துவம்...
ஆரோக்ய வாழ்வுக்கு பாரம்பரிய மூலிகை மருத்துவ முறை அவசியம் என்பதை அனைவருக்கும் பகிர்ந்து ஆரோக்ய பாரதத்தை உருவாக்குவோம்.....!
No comments:
Post a Comment