Thursday, 13 May 2021

சூட்சும சக்திகளும் நமது உடலும்..!


1. நமது மனம் எங்கு உள்ளது என்று தெரியுமா?      நாம் எதை நினைக்கிறோமோ அங்கு நமது மனம்  செல்கிறது; அதற்கு தூரம் தடை இல்லை.
நாம் தீயவர்களை நினைக்கும்போது நமது சூட்சும சக்தி அவர்களுடன் இணைந்து நமது வலிமை குறைகிறது. இறைவனை எண்ணும்போது சூட்சும சக்தி வலிமை பெற்று நம்மை காக்கிறது.

2. நம் உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும், சுய உணர்வு உள்ளது.

3. நிலப்பிராண சக்தி உடலுக்கு உறுதியை தருகிறது.

4. ஒவ்வொரு மனிதனுக்கும்  சூ‎ட்சும  சரீரம் உண்டு. இதுவே ஒளி உடல் எனப்படும்.

5. சுகமும் நோயும் வலியும் உணர்வும் நமது பிராண உடலால் உணரப்படுகிறது.

6. மகான்கள், சித்தர்களைச் சுற்றி ஒளி உடல் பல நூறு அடிகளுக்கு பரவி இருக்கும்.

7. பல்வேறு நோய்களின் பதிவுகள் மனோ சரீரத்தில் பதிவாகி உள்ளது.

8. சிலர் கைகளில் உள்ள பிராணசக்தி, அவர்கள் சமையல் செய்வது மூலமாக ருசியாக வெளிப்படுகிறது.

9. மருந்தின்றி மாத்திரையின்றி உடல் நோய்களை பிராணசரீரம் குணப்படுத்துகிறது.

10. மனிதனின் உள்ளுணர்வு மிகப்பெரிய வழிகாட்டி.

11. மனிதன் என்பது, அவன் உடல் மட்டுமல்ல. அவனின் சூட்சுமசக்தி காந்தசக்தி போல அவனைச் சுற்றி பாதுகாத்து வருகிறது .

12. கோவில்களில், சித்தர் சமாதிகளில் மனித ஜிவனுக்கு ஜீவ சக்தி கிடைக்கிறது.

13. மயக்கம் என்பது பௌதீக உடலுக்கும் சூட்சும உடலுக்கும் உள்ள தொடர்பின் பாதிப்பே ஆகும்.

14. சிறுவர் சிறுமியர்களின் அருகில் இருப்பது, பெரியவர்களின் உடலில் இளமை சக்தி ஓட்டம் பெறுகும்.

15. நோயாளிகளிடம் அதிகம் பேசுவதால் பிராண சக்தி விரயம் ஆகும்.

16. மனதாலும் உடலாலும், இயற்கையை விட்டு விலகும் போது, தீராத களைப்பு ஏற்படும்.

17. மனிதன் தலைகீழாக வளரும் மரம். மூளை என்ற வேர் அனைத்தும் தலையில் தான் உள்ளது.

18. நமது உடலின் உறுப்புக்கள் ஒவ்வொன்றும் ஒருவித மொழியில் நம்முடன் பேசுகிறது.

19. ஒரு மனிதனை புண்படச் செய்வது நூதனமான கொலைக்கு சமம்.

20. மனிதனை தவிர மற்ற இனங்கள் சூட்சும உணர்வு மூலமே எதையும் அணுகுகிறது.

21. நாம் விஞ்ஞான அறிவை மட்டும் பயன்படுத்தினால், மெய்ஞான அறிவை இழந்து விடுவோம்.

22. நமது வீட்டில் பஞ்ச பூத பிராணசக்தி அனைத்து அறைகளிலும் ஓடிக்கொண்டிருக்க வேண்டும்.

23. வலி என்பது உடலின் மொழி.
அதை ஒரு போதும் மாத்திரையால் அமுக்க கூடாது.

24. நிகழ்கால உணர்வுடன் இருக்க பழகுங்கள்.

25. வலியை ஏற்று கொண்டு அதன் மூலத்தை ஆராய்ச்சி செய்யுங்கள்.

26. உடலின் உறுப்புக்கள் அனைத்தும் மனதுடன் சேர்ந்து இயங்குவதே ஆரோக்கியம். மனது நோயுற்ற பின்னரே உடல்  நோயுறுகிறது.

27. விவசாய நிலத்தில் தாயின் கருவறையில் உள்ளதை போன்ற பிராணசக்தி உள்ளது.

28. நிற்கும் தண்ணீரில் பிராணசக்தி குறைவாகவும், அசையும் தண்ணீரில் அதிகமாகவும் உள்ளது.

29. நம் உடலில் எங்கெல்லாம் புதிய தண்ணீர் நுழைகிறதோ அங்கெல்லாம் காற்று பிராண சக்தி நுழைகிறது.

30. தென்றல் காற்றில் அதிக பிராணசக்தி உள்ளது.

31. அருவி நீரில் அதிக பிராணசக்தி உள்ளது.

32. கடல்நீர் நம்முடைய பாவ தீய கர்ம வினைகளை உள்வாங்க கூடிய ஆற்றல் உள்ளது.

33. உப்பு நீர் தெளித்து கழுவினால், சூட்சும தீய சக்திகள் நீங்கும்.

34. கர்ப்பம் கொண்ட பெண் தீய எண்ணம் கொண்டவர்கள் பார்வையின் முன்னே செல்ல, பேச, தொடவோ கூடாது.

35. மலர்ந்த முகத்துடன் மற்றவர்களை அணுகும் போது நமது சூட்சும சரீரத்தின் கவசம் பலம் பெறுகிறது.

36. செயல்குறைந்த உடல் உறுப்பை, அன்புடன் உணர்ந்தால் சக்தி பெற துவங்குகிறது.

37. ஒரு நாளில் சில நிமிடங்களாவது, வெட்ட வெளியில் செருப்பின்றி நடக்கவும்.

38. பிறந்த குழந்தையும், நீடித்த நோயாளியும் ஒரே அறையில் தூங்குவது நல்லதல்ல.

39.  சூ‎ரிய  ஒளியில் காயவைத்த துணி, பிராண உடலில் உள்ள பிராண ஒட்டுண்ணிகளை அழிக்கிறது.

40. மனது மாயையில் விழுகிறது. சூட்சும சரீரமோ எப்போதும் விழிப்புணர்வோடு உள்ளது.

41. மனித உடல் இறப்பதற்கு முன், அவனது பிராண சரீரம் இறக்க துவங்குகிறது.

42. தீட்சண்யமான தீய பார்வை கர்ப்ப சிதைவை ஏற்படுத்தும்.

43. நாம் பயன்படுத்தும் பொருள்களில், நமது எண்ண பதிவு ஏற்படுகிறது.

44. நாம் தும்மும் போது, அதன் அதிர்வு, தாயின் நாபிச்சக்கரத்தை சென்று தாக்குகிறது.

45. தொடர்ந்த ஒரே எண்ணம், செயல் வடிவம் பெறும்.

46. தீய எண்ணங்கள் தீய நீரை உடலில் சுரக்க செய்கிறது.

47. பிராண சக்தி இல்லா உணவு, உடலுக்கு சுமையே.

48. போதை பொருள், நரம்பு மண்டலத்தை அழிக்கும்.

49. தீயவர்களை சூழ்ந்து தீய எண்ணமும், நல்லவர்களை சூழ்ந்து நல்ல எண்ணமும் இருக்கும்.

50. தூக்கம் என்பது,
விழிப்புணர்வு அற்ற தியானம்.
தியானம்என்பது விழிப்பணர்வுடன் கூடிய தூக்கம்.

லலிதாம்பிகையின் ஒற்றை வரி மந்திரம் செய்யும் மாயாஜாலம்



லலிதாம்பிகையை மனதார வழிபட்டால், இதுவரை வீட்டில் தடைப்பட்டிருந்த மங்கல காரியங்களையெல்லாம் நடத்தித் தந்தருள்வாள். கணவன் மனைவி இடையே ஒற்றுமையையும் அன்பையும் பலப்படுத்தி அருள்வாள் லலிதாம்பிகை.

லலிதாம்பிகையை எவரொருவர் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு, அவளின் திருவடிகளைச் சரணடைந்து, வணங்கி வருகிறார்களோ... அவர்களின் அனைத்து குறைகளையும் களைந்தெடுத்து அருளுவாள். சகல செளபாக்கியங்களையும் வழங்கிக் காப்பாள்.

*ஓம் லலிதாம்பிகாய நமஹ’*

இந்த ஒற்றை வரி மந்திரத்தை தினமும் சொல்லி வாருங்கள். வெள்ளிக்கிழமைகளில் காலையும் மாலையும் சொல்லி வழிபடுங்கள். அதேபோல், வீட்டில் விளக்கேற்றுங்கள். கோயிலில் அம்பாள் சந்நிதியில் விளக்கேற்றுங்கள். விளக்கேற்றி, இந்த மந்திரத்தை 108 முறை ஜபித்து வேண்டிக் கொள்ளுங்கள்.

சகல செளபாக்கியங்களும் கிடைக்கப் பெறுவீர்கள். குறிப்பாக, பெண்கள் இந்த மந்திரத்தைச் சொல்லச் சொல்ல, பிரிந்த கணவன் விரைவில் மனம் மாறி வந்து சேருவார். குடும்பத்தில் இதுவரை இருந்த அழுகையும் கவலையும் துடைக்கப்படும் .இல்லத்தில் இருந்த தரித்திர நிலையை மாற்றி அருளுவாள் லலிதாம்பிகை..

தடை வெட்டு மந்திரம்



தடை வெட்டு மந்திரம்  இது வியாபாரம் முதல் திருமணம் வரை எதுவாக இருந்தாலும் சரி.  மாந்திரீக வேலைகள் செய்யும் போது சில தடைகள் ஏற்பட்டாலும் சரி.  எந்த காரியமாக இருந்தாலும் வெற்றியடைய முயற்சிக்கும் முறையாகும்
முதலில் வினாயகர் வெட்டு   மந்திரம் பயன் படுத்தி தேங்காய் வெட்டி பின்னரே மற்றய வெட்டு  மந்திரங்கள் உபயோகிக்க வேண்டும்.
வினாயகர்  வெட்டு மந்திரம்:
ஓம் கங் கங் கணபதி கவுரி புத்திராயா விக்கன வினாயக மூர்த்தியே உன்னோடெதிர்த்த கஜமுகா சூரணை சங்ஙரித்தால் போலே என்னோடெதிர்த்த சத்திராதிகளையும் சர்வ தடங்கள்களையும் சங்ஙரி சங்ஙரி சக்தி புத்திராயா சர்வ தடைகளையும் அறு அறு சுவாகா.

மூல மந்திரம்:
ஓம் றாங் றீங் வினையறு கங் கங் கணபதி கவுரி புத்திராயா நம.
தேங்காய் வெட்ட:
தேங்காய் எடுத்து மஞ்சல் சந்தனம் பூசி அதில் கற்பூரம் ஏற்றி 9 முறை உரு செய்து நிலத்தில் வைத்து (அட்சரத்தில்) வெட்டவும். ஒரே வெட்டாக இருக்க வேண்டும் அப்போது தேங்காய் இரண்டு பக்கமும் நிமிர்ந்து நின்றால் தடை விளகியது என்று அர்த்தம், ஒரு பக்கம் கவுந்தாலும் அல்லது இரண்டும் கவுந்தாலும் தடை இருக்கிறது என்று அர்த்தம், தடை விளகும் வரை தேங்காய் வெட்டவும்.

சிவ அபிஷேக பலன்கள்


1) அருகம்புல் ஜலத்தினால் சிவாபிஷேகம் செய்தால் நஷ்டமான  பொருட்கள் 
திரும்ப கிடைக்கும்.

2) நல்லெண்ணெய் அபிஷேகத்தினால் அபம்ருத்யு நசிக்கும்.

3) பசும்பால் அபிஷேகத்தினால் ஸகல ஸௌக்கியம் கிட்டும்.

4) தயிர் அபிஷேகத்தினால் பலம், ஆரோக்கியம், யஸஸ் கிட்டும்
.
5) பசு நெய்யினால் அபிஷேகம் செய்தால் ஐஸ்வர்ய ப்ராப்தி கிட்டும்.

6) கரும்பு ரஸத்தினால் அபிஷேகம் செய்தால் தன வ்ருத்தி கிட்டும்
.
7) மிருதுவான சர்க்கரையினால் அபிஷேகம் துக்கம் நசிக்கும்.

8) தேன் அபிஷேகத்தினால் தேஜோவ்ருத்தி கிட்டும்.

9) புஷ்ப ஜலத்தினால் அபிஷேகம் செய்தால் பூலாபம் கிட்டும்.

10) இளநீரினால் அபிஷேகம் செய்தால் சகல ஸம்பத்தும் கிட்டும்.

11) உத்திராட்ச ஜலத்தினால் அபிஷேகம் செய்தால் ஐஸ்வர்யம் கிட்டும்.

12) பஸ்மத்தினால் அபிஷேகம் செய்தால் மஹா பாபங்கள் நசிக்கும்.

13) கந்தத்தினால் (அரைத்தெடுத்த சந்தனம்) அபிஷேகம் செய்தால் புத்திர 
ப்ராப்தி கிட்டும்.

14) ஸ்வர்ண (தங்கம்) ஜலத்தினால் அபிஷேகம் செய்தால் கோரமான
தாரித்ரியம் நசிக்கும்.

15) ஸுத்த ஜலத்தினால் அபிஷேகம் செய்தால் நஷ்டமானவை திரும்ப 
கிடைக்கும்.

16) வில்வ ஜலத்தினால் அபிஷேகம் செய்தால் போகபாக்யங்கள் கிட்டும்.

17) அன்னத்தினால் அபிஷேகம் செய்தால் அதிகாரம், மோக்ஷம் மற்றும் 
தீர்க்காயுள் கிட்டும்.

18) திராட்சை ரஸத்தினால் அபிஷேகம் செய்தால் எல்லாவற்றிலும் ஜயம் 
உண்டாகும்.

19) கர்ஜூரம் (பேரிச்சம்பழம்) ரஸத்தினால் அபிஷேகம் செய்தால் ஸத்ருக்கள் 
இல்லாமல் போவர்.

20) நாவல்பழ ரஸத்தினால் அபிஷேகம் செய்தால் வைராக்கிய ஸித்தி 
கிட்டும்.

21) கஸ்தூரி ஜலத்தினால் அபிஷேகம் செய்தால் சக்ரவர்த்தி ஆகலாம்.

22) நவரத்தின ஜலத்தினால் அபிஷேகம் செய்தால் தான்யம், க்ருஹம்,
கோவ்ருத்தி கிட்டும்.

23) மாம்பழ ரஸத்தினால் அபிஷேகம் செய்தால் தீராத வியாதிகள் தீரும்.

24) மஞ்சள் நீரினால் அபிஷேகம் செய்தால் மங்களம் உண்டாகும்.

கருப்பசாமியின் 21 உடன்பிறப்புகள்


1) பெரிய கருப்பசாமி
2) சங்கிலி கருப்பசாமி
3) சந்தன கருப்பசாமி
4) காளாங்கி கருப்பசாமி
5) ஊமைக் கருப்பசாமி
6) உச்சிக் கருப்பசாமி
7) உருமண கருப்பசாமி
8) அந்தி மாடன்
9) சந்தி மாடன்
10) ஆகாய மாடன்
11) சுடலை மாடன்
12) சங்கய்யா சாமி 
13 ) சமயண சாமி
14) சோணையா சாமி 
15) சப்பாணி கருப்பசாமி
16) அக்னி வீரபத்திரன் சாமி 
17) இருளப்பன் சாமி
18) லாட சன்னியாசி சாமி
19) ராக்காயி அம்மன்
20) பேச்சி அம்மன்
21) இருளாயி அம்மன்

ஹோமங்களின் பலன்


இந்துக்களின் வழிபாட்டில் அக்னி
ஒரு முக்கிய இடம் வகுக்கிறது. 
அக்னி மிகவும் பரிசுத்தமானது.

மிக உக்ரமானது. 

இந்த இரண்டும் கலந்த மனிதப்பிறவியாக இருக்க வேண்டும் 

என்பது முன்னோர்களின் எண்ணம்.
அநீதியைக் கண்டால் அழித்து ஒழிப்பது என்பது மனிதருக்குள் இருக்க வேண்டும்.

அதேநேரம் குற்றங்கள் புரியாத குற்றங்களிலிருந்து வெகுதூரம் தள்ளி
இருக்கின்ற பரிசுத்தமாக இருக்க வேண்டும். 

இந்த குணங்களைக் கொண்ட அக்னியை வணங்குவது முன்னோர் வகுத்த வழி.
அதுமட்டுமல்ல, அக்னி இடையறாது சலனமுள்ளது. ஆனால் சலனம் இல்லாதது போலத் தோன்றும். 

உற்று அந்த சலனத்தைக் கவனித்தால் அந்த ஆட்டத்தைப் பார்க்க நம்முடைய மனதிற்குள் உள்ள ஆட்டம் மெல்ல
மெல்ல அடங்கும். 

அக்னியை முன் வைத்து தியானிப்பது, அக்னி வளர்த்து அதனுள் மனதைச் செலுத்துவது என்பது மனதை
கட்டுப்படுத்தக்கூடிய ஓர் அழகான பயிற்சி.

அக்னி என்பது ஹோமகுண்டமாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. 

குத்து விளக்கின் முத்துச்சுடர் கூட உங்கள் மனதை ஒரு முகப்படுத்திவிடும். எனக்குப் பிடித்தது எல்லாவற்றையும் நெருப்பில் போட்டு விடுகிறேன். 

எனக்குப் பிடித்தது என்று இவ்வுலகில் எதுவும் இல்லை என்று வழிபட்டால் போதும் 
அக்னி மிக எளிதாக மனதை ஒன்ற வைக்கும் சாதனம் நரம்பு மண்டலத்தைப் பலப்படுத்தும் புகை! 

நம் வீடுகளில் திருமணம், புதுமனைப்புகுவிழா, கோயில் கும்பாபிஷேகம், மழை, குழந்தைவரம், ஆரோக்கியம், செல்வவளம் போன்ற தேவைகளுக்காக யாகம் செய்வதைக் காண்கிறோம்.

அந்தக்காலத்தில், மன்னர்கள் இதை பெரும் பொருட்செலவில் செய்துள்ளனர்  ரிஷிகள் காடுகளில் ஹோமம் நடத்தியுள்ளனர். 

ஒரு தொழிற் சாலை, வர்த்தக நிறுவனம் திறக்கப்படுறதென்றால் கணபதிஹோமம் நடத்தப்படுகிறது. 

இதற்கு ஆன்மிக காரணங்கள் பல சொல்லப்பட்டாலும், அறிவியல் காரணமே பிரதானம்.

மத்தியப்பிரதேச மாநிலம் போபால் விஷவாயு பிரச்னை யின் போது, ஒரே ஒரு குடும்பம் மட்டும் எவ்வித பாதிப்பும் இல்லாமல் தப்பித்தது. 
இதற்கு காரணம், அந்த குடும்பத்தில் அடிக்கடி ஹோமம் நடத்துவதை வழக்கமாக கொண்டிருந்தது தான். 
இந்த தகவல் அப்போது பரபரப்பாக வெளி வந்தது. 
ஹோமத்தின் போது வெளிப்படும் புகை, காற்றில் பரவியுள்ள நச்சுக்கிருமிகளை முற்றிலும் அழித்து விடும் என்பது சத்தியம்.

யாகத்தில் இடும் நெய், அரிசி ஆகியவற்றால் ஏற்படும் ரசாயன மாற்றத்தால் உண்டாகும் வாயுக்கள் ரத்த அழுத்தம், ஆஸ்துமா, தலைவலி, குடல்புண் போன்ற வியாதிகளைப் போக்கும் சக்தி கொண்டது. 

நரம்பு மண்டலத்தைப் பலப்படுத்தி ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. 

அந்தக் காலத்தில் யாகசாலை பூஜை முடிந்தபிறகு, அந்த இடத்தில் அமர்ந்து மூச்சுப்பயிற்சி, தியானம் செய்யும் வழக்கம் இருந்தது. 
இதன் மூலம் உடல்நலத்தை சிறப்பாகப் பேணினர்."அந்தப் புகை பிடிச்சா தான் உடலுக்கு கேடு. 

ஹோமப்புகை நமக்கு மட்டுமல்ல! சுற்றுப்புறத்துக்கே உலகத்துக்கே நல்லது.

கோயிலில் நடக்கும் ஹோமம், யாக குண்டங்களில் உள்ள சாம்பலை சிலர் வீட்டுக்கு எடுத்துச் செல்கிறார்களே, அதை என்ன செய்வது ?

இவ்வாறு எடுத்துச் செல்லும் சாம்பலை விபூதியோடு கலந்து நெற்றியில்
இட்டுக்கொள்ள வேண்டும். 

உடல்நிலை சரியில்லாதவர்கள் தங்கள் உடம்பினில் பூசிக்கொள்ளலாம். 

கோயிலில் மட்டுமல்ல, நம் வீட்டில் செய்யும் கணபதி ஹோமம், நவகிரஹ ஹோமம்,கருட ஹோமம், சுதர்ஸன ஹோமம் உள்பட அனைத்து மங்களகரமான ஹோமங்களில் உள்ள சாம்பலை தனியாக எடுத்து அதனை நன்றாக சலித்து அதிலிருந்து கிடைக்கும்
விபூதியை தினசரி நெற்றியில் தரித்துக்கொள்வது நல்லது. 

குறிப்பாக இரவினில் உறங்கச் செல்வதற்கு முன்பாகவும், வெளியூர்
பிரயாணத்தின்போதும், முக்கியமான பணிகளுக்காகச் செல்லும்போது இந்த ஹோம பஸ்மத்தை அணிந்துகொள்வது மிகவும் நல்லது.

ஹோம குண்டங்களில் போடப்படும் காசுகளை எடுக்கலாமா..? அப்படி எடுத்துக்கொள்ளும் காசுகளை என்ன செய்ய வேண்டும்?

முதலில் ஹோமத்தின்போது காசுகளை அதில் போடலாமா, கூடாதா என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள் !!

ஹோமங்கள் பலவகைப்படுகின்றன. வைதீக முறை, ஆகம முறை, சாக்த முறை, சாந்தி பரிகார ஹோமங்கள் என்று பல பிரிவுகள் அதில் உள்ளன. 

வேதத்தின் அடிப்படையில் செய்யப்படுகின்ற ஹோமங்கள் வைதீக முறை என்று அழைக்கப்படுகிறது. 

இந்தவகை ஹோமங்களில் இறைவனை அக்னியில் ஆவாஹனம் செய்வதில்லை.

‘அக்னிம் தூதம் வ்ருணீமஹே’ என்கிறது வேதம். 

அக்னி பகவானை தூதுவனாகக் கொண்டு இந்த ஹோமங்கள் நடத்தப்படுகின்றன. 

அதாவது, எந்தக் கடவுளை நினைத்து நாம் ஹோமத்தைச் செய்கிறோமோ, நாம் கொடுக்கும் ஆஹுதியை அவரிடம் சென்று சேர்க்கும் போஸ்ட்மேன் வேலையைத்தான் அக்னி பகவான் செய்கிறார். 

இந்த முறையில் ஒரு சில குறிப்பிட்ட பொருட்களை மட்டுமே ஹோமத்தில் இட வேண்டும்.

பெரும்பாலும் சமித்து, அன்னம், ஆஜ்யம் (நெய்) ஆகியவற்றால் மட்டுமே இந்த வகையான ஹோமங்கள் செய்யப்படுகின்றன. 

ஒரு சில இடங்களில் விசேஷமாக அறுகம்புல், வெள்ளை எள், நெல் முதலானவற்றைக் கொண்டும் ஹோமங்களைச் செய்வார்கள். 

இந்த முறையில் பூர்ணாஹுதி என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கும் பட்டுத் துணியில் கொப்பரை வைத்து மூட்டை கட்டி ஹோமத்திற்குள் இடுவது இல்லை.

அதே நேரத்தில் ஆகம ரீதியாகவும், சக்தி வழிபாடு ஆன சாக்த முறைப்படியும் செய்யப்படும் ஹோமங்களில் அக்னியில் இறைவனை ஆவாஹனம் செய்வார்கள். 

இறைவனே அக்னியின் ரூபத்தில் வந்து நாம் கொடுக்கும் ஆஹுதிகளை ஏற்றுக் கொள்வதாக ஐதீகம்.

இவற்றில் வஸ்திரம், புஷ்பம், பழம் என நைவேத்யப் பொருட்கள் உள்பட அனைத்தையும் ஹோம குண்டத்தில் சமர்ப்பணம் செய்வார்கள்.

இந்த முறையிலான யாகங்களில் இறுதியில் பட்டுத்துணியில் கொப்பரை முதலானவற்றை மூட்டை கட்டி பூர்ணாஹுதியைச் செய்வார்கள். 

இந்த முறையில் ஆபரணம் சமர்ப்பயாமி என்று சொல்லும்போது நம்மால் இயன்றால் தங்கம், வெள்ளி முதலான எளிதில் உருகி பஸ்மமாகும் உலோகங்களை சமர்ப்பிக்கலாம். மாறாக எளிதில் உருகாத இரும்பு, நிக்கல் முதலான உலோகங்களை இடுவது கூடாது.

பூர்ணாஹுதியின்போது மூட்டைக்குள் இரும்பும் நிக்கலும் கலந்த இந்த சில்லரை காசுகளைப் போடுவது என்பது தவறு. 

நாம் எந்த ஒரு பொருளை யாகத்தில் செலுத்தினாலும் அது நன்றாக எரிந்து சாம்பலாக வேண்டும். 

அந்த ஹோம பஸ்மத்தினையே நாம் இறைவனின் பகவத் பிரசாதமாக நெற்றியில் இட்டுக் கொள்ள வேண்டும். 

ஒருமுறை ஆஹுதியாகக் கொடுத்த பொருளை திரும்ப எடுத்துக் கொள்வது என்பது தவறு. 

ஆக, இவ்வாறு ஹோமத்திற்குள் காசு போடுவது என்பது சமீப காலத்தில் உருவான ஒரு பழக்கமே அன்றி சாஸ்திரோக்தமாக ஏற்பட்டது அல்ல.

ஹோமத்தில் போடப்படும் காசுகளை நம் வீட்டினிலும், அலுவலகத்திலும் பணப்பெட்டியில் எடுத்து வைத்துக்கொள்வது அல்லது தரையினில் பள்ளம் வெட்டி அதற்குள் புதைத்து வைப்பது போன்ற செய்கைகள் அனைத்தும் மூட நம்பிக்கையே. 

ஒருமுறை இறைவனுக்கு ஆஹுதியாகக் கொடுத்ததை திரும்ப எடுக்கக்கூடாது என்பதால் ஹோமத்தில் இடப்பட்ட காசுகளை எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. 

இன்னமும் ஒரு படி சரியாகச் சொல்ல வேண்டும் என்றால் ஹோமத்தில் காசுகளைப் போடுவதையே தவிர்ப்பது மிக மிக நல்லது.அப்படி தெரியாமல் போட்டிருந்தாலும் அதனை எடுத்து வைத்துக் கொள்ளக் கூடாது. 

ஏனெனில், இறைவனுக்கு ஆஹுதியாக அக்னியில் அளித்ததை திரும்பவும் எடுத்துக்கொண்டதுபோல் ஆகிவிடும் நம் செயல். 

ஹோமப் பிரசாதம் என்பது அதில் இருந்து நாம் இட்டுக்கொள்ளும் ரக்ஷையும், அந்த சாம்பலுமே ஆகும். 

ஹோமகுண்டத்தில் இருந்து எடுத்து வடிகட்டிய சாம்பலை தினமும் நெற்றியில் இட்டுக்கொள்ளலாம். அதற்கு பல மடங்கு சக்தி உள்ளது.

அதனையே வாயிற்படியிக்கு மேல் மஞ்சள் துணியில் கட்டியும் வைக்கலாம்.

மகாபாரதத்தின் முக்கிய கதாபாத்திரங்கள்

  மகாபாரதம் ஏராளமான கதாபாத்திரங்களைக் கொண்ட ஒரு காவியம் . சில முக்கிய கதாபாத்திரங்கள் இங்கே :   கிருஷ்ணா - பாண்டவ இளவரசர் அர்...