Thursday, 13 May 2021

ஹோமங்களின் பலன்


இந்துக்களின் வழிபாட்டில் அக்னி
ஒரு முக்கிய இடம் வகுக்கிறது. 
அக்னி மிகவும் பரிசுத்தமானது.

மிக உக்ரமானது. 

இந்த இரண்டும் கலந்த மனிதப்பிறவியாக இருக்க வேண்டும் 

என்பது முன்னோர்களின் எண்ணம்.
அநீதியைக் கண்டால் அழித்து ஒழிப்பது என்பது மனிதருக்குள் இருக்க வேண்டும்.

அதேநேரம் குற்றங்கள் புரியாத குற்றங்களிலிருந்து வெகுதூரம் தள்ளி
இருக்கின்ற பரிசுத்தமாக இருக்க வேண்டும். 

இந்த குணங்களைக் கொண்ட அக்னியை வணங்குவது முன்னோர் வகுத்த வழி.
அதுமட்டுமல்ல, அக்னி இடையறாது சலனமுள்ளது. ஆனால் சலனம் இல்லாதது போலத் தோன்றும். 

உற்று அந்த சலனத்தைக் கவனித்தால் அந்த ஆட்டத்தைப் பார்க்க நம்முடைய மனதிற்குள் உள்ள ஆட்டம் மெல்ல
மெல்ல அடங்கும். 

அக்னியை முன் வைத்து தியானிப்பது, அக்னி வளர்த்து அதனுள் மனதைச் செலுத்துவது என்பது மனதை
கட்டுப்படுத்தக்கூடிய ஓர் அழகான பயிற்சி.

அக்னி என்பது ஹோமகுண்டமாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. 

குத்து விளக்கின் முத்துச்சுடர் கூட உங்கள் மனதை ஒரு முகப்படுத்திவிடும். எனக்குப் பிடித்தது எல்லாவற்றையும் நெருப்பில் போட்டு விடுகிறேன். 

எனக்குப் பிடித்தது என்று இவ்வுலகில் எதுவும் இல்லை என்று வழிபட்டால் போதும் 
அக்னி மிக எளிதாக மனதை ஒன்ற வைக்கும் சாதனம் நரம்பு மண்டலத்தைப் பலப்படுத்தும் புகை! 

நம் வீடுகளில் திருமணம், புதுமனைப்புகுவிழா, கோயில் கும்பாபிஷேகம், மழை, குழந்தைவரம், ஆரோக்கியம், செல்வவளம் போன்ற தேவைகளுக்காக யாகம் செய்வதைக் காண்கிறோம்.

அந்தக்காலத்தில், மன்னர்கள் இதை பெரும் பொருட்செலவில் செய்துள்ளனர்  ரிஷிகள் காடுகளில் ஹோமம் நடத்தியுள்ளனர். 

ஒரு தொழிற் சாலை, வர்த்தக நிறுவனம் திறக்கப்படுறதென்றால் கணபதிஹோமம் நடத்தப்படுகிறது. 

இதற்கு ஆன்மிக காரணங்கள் பல சொல்லப்பட்டாலும், அறிவியல் காரணமே பிரதானம்.

மத்தியப்பிரதேச மாநிலம் போபால் விஷவாயு பிரச்னை யின் போது, ஒரே ஒரு குடும்பம் மட்டும் எவ்வித பாதிப்பும் இல்லாமல் தப்பித்தது. 
இதற்கு காரணம், அந்த குடும்பத்தில் அடிக்கடி ஹோமம் நடத்துவதை வழக்கமாக கொண்டிருந்தது தான். 
இந்த தகவல் அப்போது பரபரப்பாக வெளி வந்தது. 
ஹோமத்தின் போது வெளிப்படும் புகை, காற்றில் பரவியுள்ள நச்சுக்கிருமிகளை முற்றிலும் அழித்து விடும் என்பது சத்தியம்.

யாகத்தில் இடும் நெய், அரிசி ஆகியவற்றால் ஏற்படும் ரசாயன மாற்றத்தால் உண்டாகும் வாயுக்கள் ரத்த அழுத்தம், ஆஸ்துமா, தலைவலி, குடல்புண் போன்ற வியாதிகளைப் போக்கும் சக்தி கொண்டது. 

நரம்பு மண்டலத்தைப் பலப்படுத்தி ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. 

அந்தக் காலத்தில் யாகசாலை பூஜை முடிந்தபிறகு, அந்த இடத்தில் அமர்ந்து மூச்சுப்பயிற்சி, தியானம் செய்யும் வழக்கம் இருந்தது. 
இதன் மூலம் உடல்நலத்தை சிறப்பாகப் பேணினர்."அந்தப் புகை பிடிச்சா தான் உடலுக்கு கேடு. 

ஹோமப்புகை நமக்கு மட்டுமல்ல! சுற்றுப்புறத்துக்கே உலகத்துக்கே நல்லது.

கோயிலில் நடக்கும் ஹோமம், யாக குண்டங்களில் உள்ள சாம்பலை சிலர் வீட்டுக்கு எடுத்துச் செல்கிறார்களே, அதை என்ன செய்வது ?

இவ்வாறு எடுத்துச் செல்லும் சாம்பலை விபூதியோடு கலந்து நெற்றியில்
இட்டுக்கொள்ள வேண்டும். 

உடல்நிலை சரியில்லாதவர்கள் தங்கள் உடம்பினில் பூசிக்கொள்ளலாம். 

கோயிலில் மட்டுமல்ல, நம் வீட்டில் செய்யும் கணபதி ஹோமம், நவகிரஹ ஹோமம்,கருட ஹோமம், சுதர்ஸன ஹோமம் உள்பட அனைத்து மங்களகரமான ஹோமங்களில் உள்ள சாம்பலை தனியாக எடுத்து அதனை நன்றாக சலித்து அதிலிருந்து கிடைக்கும்
விபூதியை தினசரி நெற்றியில் தரித்துக்கொள்வது நல்லது. 

குறிப்பாக இரவினில் உறங்கச் செல்வதற்கு முன்பாகவும், வெளியூர்
பிரயாணத்தின்போதும், முக்கியமான பணிகளுக்காகச் செல்லும்போது இந்த ஹோம பஸ்மத்தை அணிந்துகொள்வது மிகவும் நல்லது.

ஹோம குண்டங்களில் போடப்படும் காசுகளை எடுக்கலாமா..? அப்படி எடுத்துக்கொள்ளும் காசுகளை என்ன செய்ய வேண்டும்?

முதலில் ஹோமத்தின்போது காசுகளை அதில் போடலாமா, கூடாதா என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள் !!

ஹோமங்கள் பலவகைப்படுகின்றன. வைதீக முறை, ஆகம முறை, சாக்த முறை, சாந்தி பரிகார ஹோமங்கள் என்று பல பிரிவுகள் அதில் உள்ளன. 

வேதத்தின் அடிப்படையில் செய்யப்படுகின்ற ஹோமங்கள் வைதீக முறை என்று அழைக்கப்படுகிறது. 

இந்தவகை ஹோமங்களில் இறைவனை அக்னியில் ஆவாஹனம் செய்வதில்லை.

‘அக்னிம் தூதம் வ்ருணீமஹே’ என்கிறது வேதம். 

அக்னி பகவானை தூதுவனாகக் கொண்டு இந்த ஹோமங்கள் நடத்தப்படுகின்றன. 

அதாவது, எந்தக் கடவுளை நினைத்து நாம் ஹோமத்தைச் செய்கிறோமோ, நாம் கொடுக்கும் ஆஹுதியை அவரிடம் சென்று சேர்க்கும் போஸ்ட்மேன் வேலையைத்தான் அக்னி பகவான் செய்கிறார். 

இந்த முறையில் ஒரு சில குறிப்பிட்ட பொருட்களை மட்டுமே ஹோமத்தில் இட வேண்டும்.

பெரும்பாலும் சமித்து, அன்னம், ஆஜ்யம் (நெய்) ஆகியவற்றால் மட்டுமே இந்த வகையான ஹோமங்கள் செய்யப்படுகின்றன. 

ஒரு சில இடங்களில் விசேஷமாக அறுகம்புல், வெள்ளை எள், நெல் முதலானவற்றைக் கொண்டும் ஹோமங்களைச் செய்வார்கள். 

இந்த முறையில் பூர்ணாஹுதி என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கும் பட்டுத் துணியில் கொப்பரை வைத்து மூட்டை கட்டி ஹோமத்திற்குள் இடுவது இல்லை.

அதே நேரத்தில் ஆகம ரீதியாகவும், சக்தி வழிபாடு ஆன சாக்த முறைப்படியும் செய்யப்படும் ஹோமங்களில் அக்னியில் இறைவனை ஆவாஹனம் செய்வார்கள். 

இறைவனே அக்னியின் ரூபத்தில் வந்து நாம் கொடுக்கும் ஆஹுதிகளை ஏற்றுக் கொள்வதாக ஐதீகம்.

இவற்றில் வஸ்திரம், புஷ்பம், பழம் என நைவேத்யப் பொருட்கள் உள்பட அனைத்தையும் ஹோம குண்டத்தில் சமர்ப்பணம் செய்வார்கள்.

இந்த முறையிலான யாகங்களில் இறுதியில் பட்டுத்துணியில் கொப்பரை முதலானவற்றை மூட்டை கட்டி பூர்ணாஹுதியைச் செய்வார்கள். 

இந்த முறையில் ஆபரணம் சமர்ப்பயாமி என்று சொல்லும்போது நம்மால் இயன்றால் தங்கம், வெள்ளி முதலான எளிதில் உருகி பஸ்மமாகும் உலோகங்களை சமர்ப்பிக்கலாம். மாறாக எளிதில் உருகாத இரும்பு, நிக்கல் முதலான உலோகங்களை இடுவது கூடாது.

பூர்ணாஹுதியின்போது மூட்டைக்குள் இரும்பும் நிக்கலும் கலந்த இந்த சில்லரை காசுகளைப் போடுவது என்பது தவறு. 

நாம் எந்த ஒரு பொருளை யாகத்தில் செலுத்தினாலும் அது நன்றாக எரிந்து சாம்பலாக வேண்டும். 

அந்த ஹோம பஸ்மத்தினையே நாம் இறைவனின் பகவத் பிரசாதமாக நெற்றியில் இட்டுக் கொள்ள வேண்டும். 

ஒருமுறை ஆஹுதியாகக் கொடுத்த பொருளை திரும்ப எடுத்துக் கொள்வது என்பது தவறு. 

ஆக, இவ்வாறு ஹோமத்திற்குள் காசு போடுவது என்பது சமீப காலத்தில் உருவான ஒரு பழக்கமே அன்றி சாஸ்திரோக்தமாக ஏற்பட்டது அல்ல.

ஹோமத்தில் போடப்படும் காசுகளை நம் வீட்டினிலும், அலுவலகத்திலும் பணப்பெட்டியில் எடுத்து வைத்துக்கொள்வது அல்லது தரையினில் பள்ளம் வெட்டி அதற்குள் புதைத்து வைப்பது போன்ற செய்கைகள் அனைத்தும் மூட நம்பிக்கையே. 

ஒருமுறை இறைவனுக்கு ஆஹுதியாகக் கொடுத்ததை திரும்ப எடுக்கக்கூடாது என்பதால் ஹோமத்தில் இடப்பட்ட காசுகளை எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. 

இன்னமும் ஒரு படி சரியாகச் சொல்ல வேண்டும் என்றால் ஹோமத்தில் காசுகளைப் போடுவதையே தவிர்ப்பது மிக மிக நல்லது.அப்படி தெரியாமல் போட்டிருந்தாலும் அதனை எடுத்து வைத்துக் கொள்ளக் கூடாது. 

ஏனெனில், இறைவனுக்கு ஆஹுதியாக அக்னியில் அளித்ததை திரும்பவும் எடுத்துக்கொண்டதுபோல் ஆகிவிடும் நம் செயல். 

ஹோமப் பிரசாதம் என்பது அதில் இருந்து நாம் இட்டுக்கொள்ளும் ரக்ஷையும், அந்த சாம்பலுமே ஆகும். 

ஹோமகுண்டத்தில் இருந்து எடுத்து வடிகட்டிய சாம்பலை தினமும் நெற்றியில் இட்டுக்கொள்ளலாம். அதற்கு பல மடங்கு சக்தி உள்ளது.

அதனையே வாயிற்படியிக்கு மேல் மஞ்சள் துணியில் கட்டியும் வைக்கலாம்.

No comments:

Post a Comment

மகாபாரதத்தின் முக்கிய கதாபாத்திரங்கள்

  மகாபாரதம் ஏராளமான கதாபாத்திரங்களைக் கொண்ட ஒரு காவியம் . சில முக்கிய கதாபாத்திரங்கள் இங்கே :   கிருஷ்ணா - பாண்டவ இளவரசர் அர்...