Wednesday, 27 May 2020

ருத்ராட்சத்தின் ஒவ்வொரு முகத்திற்கும் உண்டான பலன்

ருத்ராட்சத்தின் ஒவ்வொரு முகத்திற்கும் உண்டான பலன் மற்றும் ஒவ்வொரு முகத்திற்கும் உள்ள தேவதைகளால் விலகும் பாவங்களும்

ஒரு நாள் ஜமதக்கினி மகரிஷியின் வயலில் ஒரு பசு மேய்ந்து கொண்டிருந்தது. அவர் ஒரு நெற்கதிர் எடுத்து விரட்டினார். அந்தப்பசு இறந்துவிட்டது. இதனால் பாவம் செய்து விட்டோம் என்று கருதி அவர் சுகமகரிஷியிடம் சென்று தன் துன்பத்தை கூறினார். உடனே அவர், ஜமதக்கினி நீ காசிக்கு சென்றால் ஒரு முகம் ருத்ராஷம் கிடைக்கும். அதை நீ அணிந்துக் கொண்டால் உன்னுடைய ‘கோ ஹத்திய தோஷம்’ நீங்கும் என்று கூறினார். ஒவ்வொரு முகத்திற்கும் ஒவ்வொரு தேவதை அதிபதியாக இருப்பார்கள். அவரவர் அந்தந்த பாவங்களை அழித்து விடுவார்கள். இந்த ருத்ராஷம் குடும்பத்தில் உள்ளவர்களின் பாவத்தை அழிக்கும் என்று சொன்னாராம்.  

ஒரு முகம்: 

ஒரு முகம் கொண்ட ருத்திராட்சம் பிரம்ம ஹத்திய தோஷம் அழிக்கும். இது சிவனின் மற்றொரு உருவம் என்று கருதப்படுகிறது. இதை அணிந்தால் சிவனைப் பூஜை செய்த பலன் கிடைக்கும்.  

இரண்டு முகம்: 

இரண்டு முக ருத்ராஷம் அர்த்த நாரிஸ்வர சொரூபம். அனைத்து பாவங்களையும் அழிக்கும். இதை அணிந்தால் சிவனையும், சக்தியையும், பூஜை செய்த பலன் கிடைக்கும்.  

மூன்று முகம்: 

மூன்று முகம் ருத்ராஷத்திற்கு அக்னிதேவன் அதிபதி. இந்த ருத்ராஷம் ஸ்ரீ ஹத்தியா தோஷத்தை நீக்கும். (ஒரு பெண்ணை கொன்றால் வரும் பாவம்). மும்மூர்த்திகளையும் பூஜை செய்த பலன் கிடைக்கும் மூன்று முக ருத்ராஷம் மணமானப் பெண்கள் அவர்களின் தாலிக்கொடியில் அணிந்தால் பூவும், பொட்டும் நிலைத்து மகிழ்ச்சியை அளிக்கும். 

நான்கு முகம்: 

நான்கு முகம் ருத்ராஷத்திற்கு அதிபதி பிரம்மன். ஞாபசக்தியை பெருக்கும் சர்வஹத்தியா தோஷம் நீங்கும்.  

ஐந்து முகம்: 

ஐந்து முகம் ருத்ராஷத்திற்கு அதிபதி காலாக்கினி ருத்திரன். இது அனைத்து பாவங்களையும் அழிக்கும். மனதிற்கு சாந்தி தரும். இரத்த அழுத்தத்தை நீக்கும். அஜீரணத்தைப் போக்கும் மார்பு வலியை நீக்கும். தூக்கம் இல்லாமல் துன்பப்படுபவர்கள் ஒரு ருத்ராஷக்கொட்டை எடுத்து அதை பால்விட்டு இழைத்து அந்த சாந்தை எடுத்து கண்ணின் இமையின் மீது தடவினால் நல்ல உறக்கம் வரும். விஷ பூச்சிகள் தீண்டினால் உடனே ஒரு ருத்ராஷக் கொட்டை எடுத்து எலுமிச்சைப் பழச்சாரில் குழைத்து அந்த சாந்தை எடுத்து தீண்டிய இடத்தில் தடவினால் வலி குறைந்து குணமாகும். காய்ச்சிய நீர் அல்லது காய்ச்சியை பாலில் இரண்டு ருத்ராஷக் கொட்டைப் போட்டு உடன் எடுத்து விட வேண்டும். அப்படி எடுத்த நீர் அல்லது பாலை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் எந்த விஷ பூச்சிகளும் அருகில் நெருங்காது. 32 கொட்டை கொண்ட மாலையை அணிந்தால் விரோதி கூட மரியாதை செலுத்துவான்.  

ஆறு முகம்: 

ஆறு முகம் ருத்ராஷத்திற்கு அதிபதி கார்த்திகேயன் பனிரெண்டு ருத்ராஷ கொட்டை கையில் (மணிக்கட்டில்) அணிந்தால் மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். ஹிஸ்டீரியா போன்ற வியாதிகளை வராமல் காக்கும். மாணவர்கள் அணிந்தால் ஞாபசக்தி பெருகும் கண்திருஷ்டியைப் போக்கும்.  

ஏழு முகம்: 

ஏழு முகம் ருத்ராஷத்திற்கு இதற்கு அணங்கம் என்று பெயர். இதற்கு அதிபதி காமதேவன். ஜாதகம் சரி இல்லாதவர்கள் இதை அணியலாம். இதை அணிந்தால் அகால மரணம் வருவதைத் தடுக்கும்.  

எட்டு முகம்: 

எட்டு முகம் ருத்ராஷத்திற்கு அதிபதி விக்னேஷ்வரன். பஞ்ச மகா பாதகத்தை அழிக்கும். மன தைரியம் உண்டாக்கும். கணேசனை பூஜை செய்த பலன் கிடைக்கும். காய்ச்சியப் பாலில் இதைப்போட்டு எடுத்துவிட்டு அந்தப் பாலை தினமும் காலையில் வெறும் வயிற்றில் அருந்தினால் பக்கவாதம் மூன்று மாதங்களில் குணமாகும்.  

ஒன்பது முகம்: 

ஒன்பது முக ருத்ராஷத்திற்கு அதிபதி பைரவன். இதற்குள் ஒன்பது சக்தி இருக்கிறது. ஒரு கொட்டை அணிவதாக இருந்தால் வலது கையில் அணியலாம். துர்கை பூஜை செய்பவர்களும் இதை அணியலாம். மனிதன் கிரக சாந்திக்காக நவரத்தினங்களை மோதிரமாக அணிகின்றான். நவரத்தின மாலை அணிகின்றான். நவகிரக பூஜையும் செய்கிறான். இவையாவும்; ஒரு ஒன்பது முக ருத்ராஷக் கொட்டை அணிந்தால் கிடைக்கும். 

பத்து முகம்: 

பத்துமுக ருத்ராஷத்திற்கு ஜனார்த்தனம் என்று பெயர். இதற்கு அதிபதி ஸ்ரீ மகா விஷ்ணு அனைத்து கஷ்டத்தையும் அழிக்கும் சக்தி இதற்கு உண்டு. பாம்பு மற்றும் விஷபூச்சிகளில் இருந்து நம்மை காக்கும் சக்தி இதற்கு உண்டு. காய்ச்சியப் பாலில் இந்த ருத்ராஷக் கொட்டையைப் போட்டு எடுத்துவிட்டு அந்தப் பாலை குழந்தைகளுக்கு கொடுத்தால் கக்குவான் வராமல் தடுக்கும். ஒரு முக ருத்ராஷம் எப்படி சிவசொரூபமோ, அதேபோல் தஸமுகி ருத்ராஷம் சம்பூர்ண விஷ்ணு சொரூபம். இது மிகமிக குறைவாக கிடைக்கிறது.  

பதினொன்று முகம்: 

பதினொன்று முக ருத்ராஷம் ஏகாதஸ ருத்ர சொரூபம். இதை அணிந்தால் அசுவமேத யாகப்பலன் கிடைக்கும். முனிவர்களின் பத்தினிகள் கூட இதை அணிந்து கொண்டார்களாம். இதைப் பெண்கள் அணிவதால் இரக்கக்குணம் உண்டாகும்.  

பனிரெண்டு முகம்: 

பனிரெண்டு முகம் ருத்ராஷம் ஆதித்தியம் ஆகும். இதற்கு அதிபதி சூரிய பகவான். இதை காதில் அணிந்தால் சூரியனின் கருணை நமக்கு கிடைக்கும்.  

பதிமூன்று முகம்: 

பதிமூன்று முக ருத்ராஷத்திற்கு அதிபதிகள் கார்த்திகேயன், காமதேவன், இதை அணிந்தால் மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும்.  

பதினான்கு முகம்:

பதினான்கு முக ருத்ராஷம் பரமசிவனுக்கு நிகரானது.  
பதினைந்து முகம்: 

பதினைந்து முக ருத்ராஷம் கடவுளின் மேல் பக்தியை உண்டாக்கும் சக்தி இதற்கு உள்ளது.  

பதினாறு முகம்: 

பதினாறு முக ருத்ராஷம் தந்திரம் செய்பவர்களுக்கு இந்த ருத்ராஷம் பயன் தரும்.  

பதினேழு முகம்: 

பதினேழு முக ருத்ராஷத்திற்கு அதிபதி விஸ்வகர்மா. இதை அணிந்தால் சகல வசதி கிடைக்கும்.  

பதினெட்டு முகம்: 

பதினெட்டு முக ருத்ராஷத்திற்கு அதிபதி பூதேவி.  

பத்தொன்பது முகம்: 

பத்தொன்பது முக ருத்ராஷம் அணிந்தால், ஞானம் பெருகும். சாந்திக் கிடைக்கும்.  

இருபது முகம்: 

இருபது முக ருத்ராஷத்திற்கு அதிபதிகள் பிரம்ம தேவன். சரஸ்வதி இதை அணிந்தால் ஞானம் பெருகும். மனதிற்கு சாந்தி தரும்.  

இருபத்தி ஒன்று முகம்: 

இருபத்தி ஒன்று முக ருத்ராஷத்திற்கு அதிபதி குபேரன். சொத்து சுகம் கிடைக்கும். எல்லா பாவத்தையும் அழிக்கும் சக்தி இதற்கு உண்டு.

ருத்திராஷம் கொட்டையின் உட்பகுதியில் வெற்றிடம் உள்ளது. இதனால் புதிய ருத்திராஷம் தண்ணிரில் மிதக்கும். பயன்படுத்த பயன்படுத்த ருத்திராஷத்திற்கு எடை கூடும். இதனால் ருத்திராஷம் நிரில் முழ்கும். ருத்ராஷக் கொட்டை அணிவதற்கு எவ்வித கட்டுப்பாடும் கிடையாது நாம் எந்த நிலையிலும் ருத்திராஷத்தை பயன்படுத்தலாம். இதனால் எவ்விதத்திலும் ருத்திராஷத்திற்கு சக்தி குறையாது. ஆனால் மனதிற்கு தவறு என்று நினைத்தால் ருத்திராஷத்தை அணிய வேண்டாம்.  

நாக ருத்திராட்சம் 

இந்த ருத்திராட்சம் மிகவும் அரிதான ஒன்று எவருக்கும் எளிதில் கிடைக்காது. அதிலும் உண்மையான நாக ருத்திராட்சமாக இருக்க வேண்டும் மற்றும் பயன்படுத்தும் முறையை தெரிந்து வைத்திருக்க வேண்டும். இது ஒருமுக ருத்திராட்சத்துடன் பாம்பு படம் எடுப்பது போல் ஒட்டியிருக்கும். இது மிகவும் குறைந்த அளவே கிடைக்கும். இதன் பயன்பாட்டை அறிந்து அணிவது நலம். ஒரு ருத்திராட்ச மரத்தில் நாகம் ஏறினால் அந்த மரத்தில் ஒரு ருத்திராட்ச கொட்டையில் மட்டும் நாகம் இருப்பது போல் உருவாகும். பின்பு அம்மரத்தில் ருத்திராட்ச கொட்டை உருவாகாது மேலும் அம்மரத்தை வெட்டி விடுவார்கள்.

27 நட்சத்திரக்காரர்களுக்கும் அதிர்ஷ்டம் தரும் தெய்வங்கள் ,ஆலயங்கள் ,வணங்க வேண்டிய கிரகங்கள்

27 நட்சத்திரக்காரர்களுக்கும் அதிர்ஷ்டம் தரும் தெய்வங்கள் 

அஸ்வினி - ஸ்ரீ சரஸ்வதி தேவி

பரணி - ஸ்ரீ துர்கா தேவி

கார்த்திகை - ஸ்ரீ சரவணபவா 

ரோகிணி – ஸ்ரீ கிருஷ்ணன்

மிருகசீரிடம் - ஸ்ரீ சந்திர சூடேஸ்வர்

திருவாதிரை - ஸ்ரீ சிவபெருமான்

புனர்பூசம் - ஸ்ரீ ராமர்

பூசம் - ஸ்ரீ தட்சிணாமூர்த்தி

ஆயில்யம் - ஸ்ரீ ஆதிசேசன்

மகம் - ஸ்ரீ சூரிய பகவான்

பூரம் - ஸ்ரீ ஆண்டாள்

உத்திரம் - ஸ்ரீ மகாலக்ஷ்மி தேவி

அஸ்தம் - ஸ்ரீ காயத்திரி தேவி

சித்திரை - ஸ்ரீ சக்கரத்தாழ்வார்

சுவாதி - ஸ்ரீ நரசிம்மமூர்த்தி

விசாகம் - ஸ்ரீ முருகப் பெருமான்.

அனுசம் - ஸ்ரீ லக்ஷ்மி நாரயணர்.

கேட்டை - ஸ்ரீ வராஹ பெருமாள்

மூலம் - ஸ்ரீ ஆஞ்சனேயர்

பூராடம் - ஸ்ரீ ஜம்புகேஸ்வரர்

உத்திராடம் - ஸ்ரீ வினாயகப் பெருமான்

திருவோணம் - ஸ்ரீ ஹயக்கிரீவர்

அவிட்டம் - ஸ்ரீ அனந்த சயனப் பெருமாள்

சதயம் - ஸ்ரீ மிருத்யுஞ்ஜேஸ்வரர்

பூரட்டாதி - ஸ்ரீ ஏகபாதர்

உத்திரட்டாதி - ஸ்ரீ மகா ஈஸ்வரர்

ரேவதி - ஸ்ரீ அரங்கநாதன்

27 நட்சத்திரங்களுக்கும் உரிய ஆலயங்கள்

அசுபதி

சனீஸ்வரர், திருநள்ளாறு, காரைக்கால், பாண்டிச்சேரி

பரணி

மகாகாளி, திருவாலங்காடு (அரக்கோணம் அருகில்), வேலூர் மாவட்டம்

கிருத்திகை

ஆதிசேடன், நாகநாதர் கோவில், நாகப்பட்டினம், நாகை மாவட்டம்

ரோகிணி

நாகநாதசுவாமி, திருநாகேஸ்வரம், தஞ்சை மாவட்டம்

மிருகசீரிஷம்

வனதூர்கா தேவி, கதிராமங்கலம், மயிலாடுதுறை, நாகை மாவட்டம்

திருவாதிரை

சனீஸ்வரர், திருகொள்ளிக்காடு, திருவாரூர் மாவட்டம்

புனர்பூசம்

குருபகவான், ஆலங்குடி, திருவாரூர் மாவட்டம்

பூசம்

சனீஸ்வரர், குச்சனுர் (தேனி அருகில்), மதுரை மாவட்டம்

ஆயில்பம்

சனீஸ்வரர், திருப்பரங்குன்றம், மதுரை மாவட்டம்

மகம்

தில்லைக்காளி, சிதம்பரம், கடலூர் மாவட்டம்

பூரம்

உத்வாசநாதர் திருமணஞ்சேரி, (மாயவரம்), நாகை மாவட்டம், (வழி குத்தாளம்)

உத்திரம்

வாஞ்சியம்மன், மூலனூர், ஈரோடு மாவட்டம், (கரூர் வழி)

அஸ்தம்

ராஜதுர்கை, திருவாரூர், திருவாரூர் மாவட்டம்

சித்திரை

ராஜதுர்க்கை, திருவாரூர், திருவாரூர் மாவட்டம்

சுவாதி

சனீஸ்வரர், திருவானைக்கால்,  திருச்சி

விசாகம்

சனீஸ்வரர்,சோழவந்தான், மதுரை மாவட்டம்

அனுஷம்

மூகாம்பிகை, திருவிடைமருதூர், தஞ்சை மாவட்டம்

கேட்டை

அங்காள பரமேஸ்வரி, பல்லடம், (காங்கேயம் அருகில்) கோவை மாவட்டம்

மூலம்

குரு பகவான், மதுரை மீனாட்சி அம்மன் கோவில், மதுரை மாவட்டம்

பூராடம்

குருபகவான், திருநாலூர் (பண்ருட்டி அருகில்), கடலூர் மாவட்டம்

உத்திராடம்

தட்சிணாமூர்த்தி, தருமபுரம்(திருநள்ளாரிலிருந்து 2 கி.மீ), காரைக்கால் மாவட்டம்

திருவோணம்

ராஜகாளியம்மன், தெத்துப்பட்டி (திண்டுக்கல் அருகில்), திண்டுக்கல் மாவட்டம்

அவிட்டம்

சனீஸ்வரன் கொடுமுடி (கரூர் வழி ), ஈரோடு மாவட்டம்

சதயம்

சனீஸ்வரன் மலைக்கோயில், திருச்செங்கோடு, நாமக்கல் மாவட்டம்

பூரட்டாதி

ஆதிசேஷன், காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாவட்டம்

உத்திரட்டாதி

தெட்சிணாமூர்த்தி, திருவையாறு, அரியலூர் மாவட்டம்

ரேவதி

சனீஸ்வரர், ஓமாம்புலியூர், கடலூர் மாவட்டம், (சிதம்பரத்திலிருந்து 22 கி.மீ உள்ள காட்டு மன்னார்குடி சென்று அப்பால் 6 கி.மீ செல்லவும்)

27 நட்சத்திரக்காரர்கள் வணங்க வேண்டிய கிரகங்கள்

 அஸ்வினி - கேது

பரணி - சுக்கிரன்

கார்த்திகை - சூரியன்

ரோகிணி - சந்திரன்

மிருகசீரிஷம் - செவ்வாய்

திருவாதிரை - ராகு

புனர்பூசம் - குரு (வியாழன்)

பூசம் - சனி

ஆயில்யம் - புதன்

மகம் - கேது

பூரம் - சுக்கிரன்

உத்திரம் - சூரியன்

அஸ்தம் - சந்திரன்

சித்திரை - செவ்வாய்

சுவாதி - ராகு

விசாகம் - குரு (வியாழன்)

அனுஷம் - சனி

கேட்டை - புதன்

மூலம் - கேது

பூராடம் - சுக்கிரன்

உத்திராடம் - சூரியன்

திருவோணம் - சந்திரன்

அவிட்டம் - செவ்வாய்

சதயம் - ராகு

பூரட்டாதி - குரு (வியாழன்)

உத்திரட்டாதி - சனி

ரேவதி - புதன்

கடன் பிரச்சனையில் இருந்து விடுபட எளிய பரிகாரம்

குடும்பத்தில் உள்ள யாரேனும் ஒருவர் இந்த பரிகாரத்தை செய்தால் போதும்*

ஒரு செம்பு நிறைய பசும்பால் எடுத்து அதில் சிறிது மஞ்சள் கலந்து பதினோரு ஒரு ரூபாய் நாணயங்களை அதில் போட்டு கிழக்கு நோக்கி அமர்ந்து பால் செம்பில் வலது ஆட்காட்டி விரலால் எனக்கு ருண  விமோசனம் கிடைக்க வேண்டும் என்று பாலில் எழூதி 

பின்பு கிழ்கண்ட மந்திரத்தை 108முறை கூறி பின்பு அந்த பாலை அரசனும் வேம்பும் ஒன்றாக வளர்ந்த மரத்திற்கு ஊற்றி சந்தன பத்தி ஏற்றி வழி பட்டுவர விரைவில் கடன் அடைபடும் வழி கிடைக்கும்

பாலை ஊற்றியபிறகு பதினோரு ஒரு ரூபாய் நாணயங்களை வீட்டிற்க்கு கொண்டு வந்து அடுத்த முறை அந்த நாணயங்களை பயன் படுத்தவும்
பாலின் அளவு உங்கள் வசதியை பொருத்தது
இந்த பரிகாரத்தை எந்த கிழமையிலும் செய்யலாம்
காலையில் செய்வது சிறப்பு

வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை செய்யவும்

இரண்டும் இணைந்த மரம் கிடைக்கவில்லை என்றால்
கடக ராசிகாரர்கள் அரச மரத்திற்க்கும்
மீன ராசிகாரர்கள் வேப்ப மரத்திற்க்கும் இந்த பாலை ஊற்றலாம்
மற்ற ராசிகாரர்கள் இரண்டும் இணைந்த மரத்திற்க்கு ஊற்ற வேண்டும்

மந்திரம்

ஓம் வசி ஜெகவசி தனவசி ருண  நசிநசி ஸ்வாகா.

ஓம்காரம்


முருகப்பெருமான் ப்ரணவத்தின் பொருளை பிரம்மாவிடம் கேட்டபோது, அறியாமல் விழித்தவரை சிறைக்கு அனுப்பி, "என்ன பொருள் என்று உனக்குத் தெரியுமா?" என்று கேட்ட சிவபெருமானுக்கு குருவாய் அமர்ந்து உபதேசித்தார் என்பது நமக்கெல்லாம் தெரியும். 

இந்த மந்திரமானது ஆன்மாவுக்கு உபதேசிக்கப்படும் மந்திரம். ஆகையால், புற உடலுக்கும் உலகிற்கும் கேட்காதவாறு செவிவழிக் காற்று வழியாக ஆன்மாவிற்கு ஒரு குருவால் உபதேசிக்கப்பட வேண்டும்.

ஒலிகளுக்கு அதிர்வு உண்டு என்று ஆராய்ச்சிகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த ஓம்காரம் உச்சரிக்கப்படும் பொழுதும் ஒரு அதிர்வலை உண்டாகிறது. இது மூலமந்திரம். ஆகையால் இந்த அதிர்வலையின் ஆற்றலானது அளப்பரிய ஒரு சக்தியை உச்சரிப்பவர்களுக்கு உண்டாக்குகிறது. இருவர் எதிரெதிரே அமர்ந்து இந்த ஓம்காரத்தை மனது ஒருமித்து பலமுறை ஒரே மாதிரி உச்சரிக்கும் பொழுது, இருவரின் அதிர்வலைகளும் ஒரு நடுப்புள்ளியில் ஒரு அதிர்வுப்புலத்தை உண்டாக்குகிறது. நடுப்புள்ளியில் சந்தித்த அந்த அதிர்வலைகள் திரும்ப உச்சரிப்பவரிடமே வந்து சேரும்பொழுது அவரிடம் ஒரு வித ஆற்றல் வந்து சேருகிறது. அந்த ஆற்றலானது நம்முள்ளிருக்கும் உடலுக்கு மூலாதாரமாக இருக்கக்கூடிய அந்த இயங்கு சக்தியைத்(சூஷ்ம சக்தி) தூண்டிவிடுகிறது. இதுவரை உடலின் சக்தியாக மட்டுமே இயங்கி வந்த அந்த சூஷ்ம சக்தியானது இந்த அதிர்வால் ஆத்மாவுக்கும் உடலுக்கும் ஒரு அளப்பரிய சக்தியை அளிப்பதாக மாறுகிறது. உலகத்தில் உள்ள எல்லா உயிர்களையும் ஒரே நிலையில் பார்க்கக் கூடிய ஒரு பக்குவத்தையும் அவற்றின்பால் எல்லையற்ற அன்பு செலுத்தும் ஒரு மனதையும் இந்த மந்திரமானது நமக்கு அளிக்கும்.

இந்த உலகமே யாராலும் உணர்ந்து கொள்ளவும் முடியாத , காணவும் இயலாத ஒரு சூஷ்மமான அலைவரிசையில்தான் இயங்கி வருகிறது. இந்த ஓம்காரத்தின் மூலம் பிறக்கும் அதிர்வானது உலகத்தின் அதிர்வோடு ஒரு சூஷ்மமான பிணைப்பினை உருவாக்குகிறது. அதாவது நம்முள் உள்ள ஆத்மாவை உலகம் இயங்குவதற்கு ஆதாரமாக உள்ள சூஷ்மமான இயங்கு சக்தியோடு இணைப்பதற்கு இந்த ஓம்காரம் உதவுகிறது. இது ஒருமுறை இணைக்கப்பட்டுவிட்டால் அந்த பிணைப்பானது பல ஜென்மங்களுக்கும் அந்த ஆத்மாவோடு இணைந்து வரும். 

இதனால் நமக்கு எதன் மூலமாகவும் துன்பம் என்பது நேராது. அல்லது துன்பமானது துன்பமாக நமக்குத் தெரியாது. மிகப் பெரும் துன்பமான மரணம் என்பதையும் நம்மால் வேறு விதமாக எடுத்துக் கொள்ள முடியும். அதாவது மரணம் என்பது உடலுக்கே தவிர ஆத்மாவுக்கல்ல என்பது நமக்குத் தெரிய வரும்.

இந்த ஓம்கார மந்திரத்தை ஒரு குழுவாக பல பேர் ஓரிடத்தில் எதிரெதிரே அமர்ந்தும் இதைச் செய்யலாம். அங்கு ஏற்படும் அதிர்வலைகளானது அவ்விடத்தில் அமர்ந்து உச்சரிக்கும் அனைவருக்கும் திரும்பக் கிடைக்கும். இது ஒரே நாளில் கிடைத்து விடாது. தொடர்ந்து பல நாட்கள் இவ்வாறு செய்து வர, அந்த அதிர்வலைகள் அந்த இடம் முழுதும் நிரம்பியிருப்பதை நம்மால் உணர முடியும்.

இங்ஙனம் அதிர்வலைகள் கிடைக்கப் பெற்ற ஒருவர் அந்தக் குழுவிலிருந்து தனியே வேறு ஒரு இடத்திற்குச் சென்றுவிட்டாலும் (உலகத்தின் எந்த மூலைக்குச் சென்றாலும்!) குழுவிலுள்ள மற்றவர்கள் அதை உச்சரிக்கும்பொழுது அந்த அதிர்வலையை அவரால் அங்கு உணர முடியும். நம்முள் உருவான அலைவரிசையானது வேறு ஒரு நபரிடத்திலும் இருந்தால் (அவர் எந்த நாட்டவரானாலும், எந்த மதத்தவரானாலும்!) அவரிடம் ஒருவிதமான ஈடுபாடு உருவாகி விடுகிறது. அதனால் நாம் வெளியில் செல்லும்போது முன்பின் அறியாத யாரோ ஒருவரைக் (ஒரே அலைவரிசை உடையவராக இருந்தால்) காணும் போது அவரை எங்கோ பார்த்தது போலவும் நெடுநாட்கள் நட்பு உள்ளது போலவும் தோன்றும்.

இதை ஒரு குழுவாக அமர்ந்து மனம் ஒருமித்து செய்யும்பொழுது அதுவே பிரார்த்தனை ஆகிறது. இந்தக் கூட்டுப் பிரார்த்தனை சொல்பவர்களுக்கு மட்டுமல்லாமல் அங்கிருக்கும் மற்றவர்களுக்கும், சொல்லப்பட்ட இடத்தின் அருகாமையில் இருப்பவர்களுக்கும் பலன் பல தரும் ஆற்றல் உடையது. வள்ளலார் கூறிய ஆன்மநேய ஒருமைப்பாடு வழிக்கும் இதுதான் மூலம். 

கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் இத்தனையும் எதற்காக கட்டப்பட்டிருக்கின்றன? பல பேர் கூடி மனம் ஒருமித்து ஒரு ஒலியை சத்தமாக ஒரே மாதிரி உச்சரிக்கும் பொழுது அந்த இடத்தில் ஒரு அதிர்வு உண்டாகிறது. இவ்வாறு பல காலமாக உச்சரித்து உச்சரித்து அந்த இடம் முழுவதும் நல்ல அதிர்வு நிறைந்திருக்கும். பாரத்தோடு அந்த இடங்களுக்கு வருபவர்களுக்கு அது ஒரு இனம்புரியாத ஆறுதலை அளிக்கக்கூடிய இடமாக மாறி விடுகிறது. 

கடவுள் பஞ்ச பூதங்களிலும் இருக்கிறார். பஞ்ச பூதங்களால் உருவாக்கப்பட்ட நம்மிலும் இருக்கிறார். கோயிலுக்குச் சென்றால் சாமி சன்னிதியில் முட்டி மோதாமல் கோவிலின் உள்ளேயே ஓரிடத்தில் தனியே அமர்ந்து இந்த ஓம்காரத்தை ஒலித்து வர எல்லோருக்கும் கிட்டாத ஒரு பேரின்பம் நமக்குக் கிடைக்கும் என்பது உறுதி. 

ஓம்கார உச்சரிப்பு பற்றி பதஞ்சலி முனிவர்

ஓ+ம் = ஓம் om
’ஓ’ வின் உச்சரிப்பு குறைவாகவும், ‘ம்’ இன் உச்சரிப்பு நீண்டாதகவும் இருக்க வேண்டும்.
ஓம், ஓம், ஓம்,… என்று தொடர்ந்து உச்சரிக்க வேண்டும். சப்தமாக உச்சரிப்பதைக் காட்டிலும், மனதிலேயே உச்சரித்தல் நலம்.
ஓ என்று தொடங்கும்போது மனதில் தங்களுக்கு ஒரு இஷ்ட தேவதையோ அல்லது வேறு எந்த ஒரு பொருளையோ நினைக்க துவங்கிக் கொண்டால், ’ம்’ இல், அந்த நினைவினை தொடர வேண்டும்.
இதோடு சேர்ந்து நாசிப்பயிற்சியும் செய்தால் மேலும் பயனுண்டு.
மூச்சை உள்ளிழுக்கும் போது, மனதில் ‘ஓ’ வைத் துவக்கிக்கொண்டவாறு, தாங்கள் தேர்வு செய்த பொருளை மனத்தில் இருத்திக்கொள்ள வேண்டும்.
அடுத்து மூச்சை வெளி விட்டவாறு ‘ம்’ மைத் தொடரவேண்டும். எண்ணத்திலும் நிலைநிறுத்திய பொருளை தொடர்ந்தவாறு.
இவ்வாறு தொடர்ந்து பயிற்சி செய்தால், வெகு சீக்கிரமாக தாங்கள் எண்ணத்தில் நிறுத்திய பொருள் அல்லது இஷ்ட தேவதையினை மனதில் ஒருமுகப்படுத்தும் சித்தி கிடைக்கும். வேறு மாற்று சிந்தனைகள் ஏற்பட்டு மனதை அலைக்கழிக்கவிடாமல் நெருங்கிய பொருள் கைக்கிடைக்கும். அந்த நெருங்கிய பொருள் நீங்கள் யாரென்ற தன்னறிவானால், மீளாத் துயர்களில் இருந்து விடுதலை பெறும் பாதையை அறிந்து கொள்ள முடியும்
[தொகு]ஓம் பற்றி உபநிடதங்கள்

ஓம் என்ற மந்திரத்தின் பெருமையை உபநிடதங்கள் கொடி உயர்த்திப் பறை சாற்றுகின்றன. அச்சொல் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பரம்பொருளைக் குறிக்கிறது. அச்சொல்லே பரம்பொருள் தான் என்று கூடச்சொல்லப்படுகிறது. ஓம் என்ற சொல்லில் அ, உ, ம என்ற மூன்று எழுத்துக்கள் பிணைந்திருக்கின்றன.இவைமூன்றும் மனிதனுடைய மூன்று உணர்வு நிலைகளைக் குறிப்பதாகவும், பிரம்மம் என்ற பரம்பொருளாகவே இருக்கும் நிலை இம்மூன்று நிலைகளையும் (அ-து, விழிப்பு நிலை, கனவு நிலை, தூக்கநிலை) தாண்டிய நான்காவது நிலை என்றும், அந்நிலை ஓம் என்ற உச்சரிப்பின் முடிவில் வரும் மவுனநிலை என்றும் மாண்டூக்கிய உபநிடதம் கூறுகின்றது.

காலையில் எந்ததிசையை நோக்கிவிழித்தால் யோகம்


எந்த விஷயமாக இருந்தாலும் அதிர்ஷ்டம் இருக்க வேண்டும் என்று நம்முடைய முன்னோர்கள் சொல்வார்கள். அது உண்மை தான். நாம் என்ன தான் முயற்சி செய்தாலும், அதிர்ஷ்டம் என்று ஒன்று இருந்தால் நமக்கு கிடைத்தே தீரும். 

நம்முடைய வாழ்க்கையில் நல்லதோ? கெட்டதோ? எது நடந்தாலும் நம் நினைவுக்கு வருது, காலையில் எதை பார்த்து விழித்தோம் என்பதுதான். எட்டு திசைகளுக்குமே ஒவ்வொரு யோகம் இருக்கின்றது. காலையில் எந்த திசையில் விழித்தால், என்ன யோகம் கிடைக்கும் என்பதைப் பார்ப்போம்.....!!

 கிழக்கு திசையைப் பார்த்து விழித்தால், ஆயுள் விருத்தி கிடைக்கும்.

தென்கிழக்கு திசையைப் பார்த்து விழித்தால், வெறுப்பு உண்டாகும்.

 தெற்கு திசையைப் பார்த்து விழித்தால், மரண பயம் உண்டாகும். 

 தென்மேற்கு திசையைப் பார்த்து விழித்தால், பாவங்கள் சேரும்.

மேற்கு திசையைப் பார்த்து விழித்தால், நல்ல விஷயங்கள் நடக்கும். 

வடமேற்கு திசையைப் பார்த்து விழித்தால், பருமன் அதிகமாகும்.
வடக்கு திசையைபார்த்து விழித்தால் அதிஷ்டம் அருளும் அன்றைய பொழுது வளமாகும் .
வடகிழக்கு திசையைப் பார்த்து விழித்தால், உடலிலும் - உள்ளத்திலும் சக்தி கிடைக்கும். சிந்தனைகள் தௌிவாக இருக்கும்.                                                                                                    
இந்த மாதிரியான எளிய சாஸ்திரங்களை நம்பிக்கையுடன் கடைபிடித்தால், துன்பங்கள் எல்லாம் மறைந்து, இறைவனின் ஆசிர்வாதத்தால் நன்மைகள் நம்மை தேடி வரும்.

இனி உங்களுக்கு எந்த அதிர்ஷ்டம் வேண்டுமோ, அந்த திசையை நோக்கி விழித்துக் கொள்ளுங்கள்.

Monday, 25 May 2020

உங்கள் வாழ்க்கையில் நல்ல திருப்பம் ஏற்பட வேண்டுமா?

நீங்கள் அவசியம் 
திருசெந்தூர் ஆலயத்தில்  தினமும் அதி காலையில் நடைபெறும் கொடிமர பூசையில் கலந்து கொள்ள வேண்டும்.

அப்படி என்ன திருசெந்தூர் ஆலய கொடிமர பூஜையில் விசேஷம் உள்ளது என யோசிக்கின்றீர்களா?

திருச்செந்தூர் ஆலயத்தில் தினமும்
 மூலவர் நடை திறப்பதற்கு முன்பாக முதன்முதலில் ஆலயத்தின்  கொடிமரத்துக்குத்தான் 
பூஜை நடைபெறும் .

இந்த கொடி மரம் பொதிகை. மலையிலிருந்து வரப்பெற்ற 
சந்தன மரமாகும்

இந்த கொடிமரம் சந்தன கொடிமரம் என்பது பல பேருக்கு தெரியாது.

இந்த கொடிமரம் திருச்செந்தூர் ஆலயத்திற்கு வந்த வரலாற்றை பற்றி தெரிந்து கொள்வோமா?

திருச்செந்தூருக்கு கொடிமரம் வந்த கதை!

முன்னொரு காலத்தில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசி திருவிழா நடைபெறவில்லை. 

காரணம் அங்கு கொடிமரம் இல்லை. ஆகவே திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு கொடிமரம் வைக்க வேண்டுமென்று ஊர் கூடி பேசி முடிவெடுத்தனர். 

உடனே ஆறுமுகம் ஆசாரி என்பவர் தலைமையில் 21 பேர் கொண்ட குழு காக்காச்சி மலைக்கு (மேற்கு தொடர்ச்சி மலை) கொடி மரம் வெட்ட கிளம்பினர். 

திருச்செந்தூர் மந்தை அருகே உள் அம்மன் கோயிலில் அந்தக் குழுவினர் வேண்டச்சென்றனர். 

அம்மன் கோயில் முன்பு மற்றவர்கள் நின்று கொண்டனர். 

அம்மனை வணங்க ஆறுமுகம் ஆசாரி மட்டும் கருவறைக்குள் நுழைந்து அம்மனை வணங்கினார்.

அப்போது அம்மன் கண்களில் இருந்து நீர் வழிந்தது.

பயந்து போய் படபடத்து போன ஆசாரி, அம்மனே! ஏன் இந்த நிலை. தங்கள் கண்களில் நீர் வழிய காரணம் தான் என்ன? என்று கேட்டார். 

அம்மன் ‘மகனே நீங்கள் செய்யும் பணி நல்ல பணி தான். ஆனால் அந்த பணியில் ஈடுபடும் உன்னை தவிர வேறு யாரும் உயிரோடு திரும்ப மாட்டார்கள். 

அதை நினைத்து தான் எனக்கு வருத்தமாக உள்ளது. இதை நீ அவர்களிடம் சொல்லிவிடாதே. 

இது ஆண்டவன் கட்டளை. இந்த நிலை தெரிந்த காரணத்தினால் தான் என கண்களில் கண்ணீர் வந்தது’ என்று கூறினார்.

உடனே அதிர்ந்து போன ஆறுமுகம் ஆசாரி அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தார். 

இதை வெளியே உள்ளவர்களிடமும் சொல்லக்கூடாது. சொன்னால் தெய்வக்குத்தமாகி விடும். 

அதே நேரம் நம்பி நம்மோடு வருபவர்களை காப்பாற்ற வேண்டும். என்ன செய்ய என்று குழம்பினார். 

ஆயினும் கலங்காமல் முருகன் மீது பாரத்தை போட்டு விட்டு களக்காடு அருகே உள்ள ஏர்வாடிக்கு வந்தார். 

அங்கு சின்னதம்பி மரக்காயர் என்ற மந்திரவாதி ஒருவரை சந்தித்தார். அவரிடம் முருகப் பெருமானுக்கு கொடிமரம் வெட்ட வந்த கதையை கூறி உதவிக்கு கூப்பிட்டனர்.

சின்னதம்பி மரக்காயரின் மனைவி பாத்திமாபீவி அவரை தடுத்தார். 

"நான் நேற்று முன்தினம் இரவு பயங்கர கனவு கண்டேன். அதில் உமது உயிருக்கு ஆபத்து உள்ளதாக அறிகுறி காட்டுகிறது. 

எனவே கொடிமரம் வெட்ட நீங்கள் செல்ல வேண்டாம”| என்று கூறினாள். 

ஆனால் சின்னதம்பி மரக்காயர் கேட்கவில்லை. மனைவி உடனே அழுதாள், "நமது குடும்பம் உம்மை நம்பித்தான் உள்ளது. தயவு செய்து செல்ல வேண்டாம்” என்று தடுத்து கூறியும் சின்னதம்பி மரக்காயர் கேட்கவில்லை. 

விதி யாரை விட்டது. 

அவர் ஆறுமுகம் ஆசாரி குழுவினருடன் களக்காட்டு 
மலைக்கு சென்றார்.

அவர்கள் திருச்செந்தூரில் இருந்தே 21 மாட்டு வண்டிகளில் வந்து இருந்தார்கள். 

அந்த வண்டிகள் அணிவகுத்து களக்காடு மலையை நோக்கி சென்றது. 

ஆனால் அவர்களுக்கு தேவையான கொடிமரம் கிடைக்கவில்லை.

அலைந்து திரிந்து பார்த்தார்கள் பக்கத்தில் எந்த இடத்திலும் சரியான மரம் கிடைக்கவில்லை. 

எனவே காக்காச்சி மலை என்று அழைக்கப்படும் மேற்குத் தொடர்ச்சி மலையான பொதிகை மலை உச்சிக்கு சென்றனர். 

அங்கு அற்புதமான நல்ல 
உயரமான சந்தனமரம் 
ஒன்று இருந்தது.

''ஆகா இந்த மரம் தான் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு ஏற்ற கொடிமரம'' என்றார்.ஆறுமுக ஆசாரி. 

அவர், சின்னதம்பி மரக்காயரிடம் இம்மரத்தை பற்றி கேட்கிறார். ரம்மியமான வாசனையுடன் இருக்கும் அந்த அற்புத மரத்தை குறித்து மை போட்டு பார்க்கிறார் மாந்திரிகரான சின்ன தம்பி மரக்காயர். 

அப்போது அந்த மரத்தில் அடி மரத்தில் சுடலைமாடனும், மேல் முனையில் சங்கடகாரனும் உள்பட 21 தேவதைகள் இருந்தது தெரிய வந்தது.

அந்த 21 தேவதைகளையும் விரட்டி விட்டு தான் மரத்தினை வெட்ட வேண்டும் என்பதால் அதற்கான ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்தனர். 

முதலில் மந்திரம் மூலம் தேவதைகளை விரட்ட மை போட்டார் மரக்காயர்.

மற்றவர்களை கோடாரி கொண்டு வெட்ட சொன்னார். 

கோடாரி மூலம் வெட்டப்பட்ட மரம் கோடாரியை திருப்பி விட்டது. 

உடனே அந்த கோடாரி மரத்தை வெட்டிய 20 பேர்களின் கழுத்தில் பட்டது. 

அலறியபடி 20 பேரும் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். அதை தொடர்ந்து அவர்கள் மரணம் அடைந்தனர். 

இதனால் ஆறுமுக ஆசாரி அதிர்ச்சி அடைந்தார்.

ஐயோ நான் என்ன செய்வேன்? என்று மந்திரவாதி சின்னதம்பி மரக்காயரிடம் சென்ற போது அவரும் ரத்தம் கக்கி இறந்து இருந்தார். 

அடுத்த வினாடி ஆறுமுக ஆசாரிக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. 

இதற்கிடையில் அந்த மரத்தில் இருந்த 21 மாட தேவதைகளும் மரத்தை விட்டு கீழே இறங்கி ஆறுமுக ஆசாரியை விரட்டியது. 

உயிருக்கு பயந்த அவர் காக்காச்சி மலையை விட்டு ஓடினார். அடுத்து பொதிகை மலைக்கு வந்தார். 

அந்த இடத்தை விட்டு கீழே இறங்கி ஓட ஆரம்பித்தார்.

இறுதியில் தாமிரபரணி ஆற்றங்கரையில் சொரிமுத்து அய்யனார் கோவிலில் வந்து அய்யனார் காலை பற்றிக் கொண்டு காப்பாற்ற கூறி கத்தினார். 

சொரிமுத்து அய்யனார் 21 மாடதேவதைகளையும் அழைத்து சமாதானம் செய்தார். 

‘முருகன்.. எனது சகோதரன் தான்.. அவன் கோவிலுக்கு தானே கொடிமரம் செல்கிறது. பிறகு ஏன் தடுக்கிறீர்கள்’ என்று கூறினார். 

அதற்கு சுடலைமாடன், சங்கடகாரன் உள்பட 21 மாட தேவதைகளும் நாங்கள் வசிப்பதற்கு இது போன்ற வேறு சந்தன கொடிமரம் இல்லை என்றும்,திருச்செந்தூர் ஆலயத்தில் இந்த கொடிமரம பிரதிஷ்டை செய்யபட்ட பின்பு தங்களை தொடந்து இந்த கொடி மரத்திலேயே வாசம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்றும்,தங்களுக்கு முதல் பூஜை நடத்திய பின்பே மூலவருக்கு பூஜைகள் நடத்த வேண்டும் என்று சொரி முத்தையனாரிடம் வேண்டினர்.

சொரி முத்தையனாரும் அவர்களது வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு சுடலைமாடன், சங்கடகாரன் உள்பட 21 மாட தேவதைகளும் 
அந்த சந்தன மரத்தை அவர்களே வெட்டி  அதை திருச்செந்தூரில் கொண்டு சேர்த்து ஆலயத்தில் பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்றும் அவர்களை அந்த கொடிமரத்திலேயே தொடந்து 
வாசம் செய்து கொள்ளும்படியும்  உத்தரவிட்டார்.

அதன்படி சுடலைமாடன், சங்கடகாரன் உள்பட 21 மாட தேவதைகளும் அந்த சந்தன மரத்தை வெட்டினார்கள். 

பின் 21 மாட்டு வண்டியையும் ஒன்றாக கட்டினர். அந்த சந்தன மரத்தை அப்படியே தூக்கி வைத்து திருச்செந்தூர் நோக்கி கொண்டு சென்றார்கள். 

அம்மரமே தற்போது திருச்செந்தூரில் கொடி மரமாக வைக்கப்பட்டுள்ளது. 

சொரி முத்தையனார் உத்திரவின்படி சுடலைமாடன், சங்கடகாரன் உள்பட 21 மாட தேவதைகளும் இந்த கொடிமரத்தில. வாசம் செய்து வருகின்றனர்.

இப்போதும் திருச்செந்தூர் ஆலய்த்தில் மாசி திருவிழா நடைபெறும் போது ஆடு வெட்டி சுடலை மாடனுக்கும், சங்கடகரகாரனுக்கும் படைத்து விட்டுத்தான் தேர் ஒட வேண்டிய வேலைகளை செய்வார்கள். 

மாசி திருவிழா தேர் ஓடும் போது அதிலேயும் சங்கடகரகாரன் தேர் மேல் ஏறி "சரி போகலாம்" என்று கூறியவுடனேதான் தேர் நகரும்.

மேற்கண்ட தகவலை "கொடி மரக்காவியம்" என்றும் வில்லுப்பாட்டு கதையில் இருந்து தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் அருகில் உள்ள கிளாக்குளம் கிராமத்து வில்லுப்பாட்டு கலைஞர் சண்முக சுந்தரம் கூறியுள்ளார்.

இந்த கதை நெஞ்சை பதற வைப்பது போல் உள்ளது அல்லவா? 

திருச்செந்தூர் ஆலயத்தில் உள்ள கொடிமரம் பிரமாண்டமானது. 

அதை 21 மனிதர்கள் கொண்டு வருவது என்பது இயலாதது. 

ஆனால் சுடலைமாடன், சங்கடகாரன் உள்பட 21 மாட தேவதைகளும் சேர்ந்து அந்த மரத்தினை வெட்டி  
21 மாட்டு வண்டியையும் ஒன்றாக கட்டி அதில் தூக்கி வைத்து வந்த சம்பவம் ஒரு மலைப்பான விசயமாக இருப்பதாலும் இதை நம்பியே தீர வேண்டும்.

ஏன் என்றால் இப்போது போல் முன்பு போக்குவரத்து வசதி எல்லாம் கிடையாது. 

எனவே 21 மாட்டு வண்டி நேராக திருச்செந்தூர் நோக்கி வரும் போது சாலையில் தடை எதுவும் இருந்திருக்காது. 

சொரிமுத்து அய்யனாரின் ஆசியுடன் சுடலைமாடன், சங்கடகாரன் உள்பட 21 மாட தேவதைகளும் இன்றளவும் வாசம் செய்து வரும் பொதிகை மலையில் இருந்து கொண்டு வரப்பட்ட சந்தனமரமே தற்போது திருச்செந்தூரில் கொடிமரமாக இருப்பதால் இந்த கொடி மரத்திற்கு முதலில் பூஜைகள் நடைபெற்ற பின்னரே மூலவருக்கான நடை திறக்கபட்டு நிர்மால்யம், அபிஷேகம் மற்ற பூஜை எல்லாம் நடைபெற்று வருகிறது..

தினமும் காலை ஐந்து மணிக்கு கொடிமரத்துக்கு பூஜைகள் நடைபெறும்போது, இரண்டு பேர் மந்திரத்தை பகிர்ந்து சொல்ல அவர்களுடன் சேர்ந்து மற்றவர்கள் ஒவ்வொரு மந்திரத்தின் முடிவிலும்  நமஸ்காரம் செய்வார்கள். 

இதற்கான அனுமதி இலவசம். 

அதிகாலையில ் நடைபெறும் இந்த கொடிமர பூஜையில் கலந்து கொண்டால் சுடலைமாடன், சங்கடகாரன் உள்பட 21 மாட தேவதைகளின் ஆசிகள் கிடைக்கப்பெற்று உங்கள் வாழ்க்கையில் நல்ல திருப்பம் ஏற்படுவது என்பது உறுதி!

இந்த கொடிமர பூஜையில் நீங்கள் கலந்துகொண்டால் உங்கள் வாழ்க்கையில் நிச்சயமாக நல்ல திருப்பம் உண்டாகும்.

நம்பிக்கையுடன் இந்த கொடிமர பூஜைக்கு போய் தான் பாருங்களேன்..!

வியக்கவைக்கும் 5 மர்ம கோவில்கள் பற்றி தெரியுமா?

1. தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவில்
கி.பி 10 ஆம் நூற்றாண்டில் மாமன்னர் முதலாம் ராஜராஜ சோழனால் தஞ்சையில் கட்டப்பட்டதுதான் பிரகதீஸ்வரர் கோவில். இக்கோவில் 216 அடி உயரம் கொண்டதாகும்.

இக்கோவிலை கட்ட சுமார் ஒரு லட்சத்து முப்பதாயிரம் டன் கிரானைட் கற்களை பயன்படுத்தியுள்ளனர். 
என்றாலும், இக்கோவிலை சுற்றி 70 கிலோ மீட்டர் வரை கிரானைட் கற்களே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இக்கோவிலின் முதன்மை கோபுரத்தின் மீது அமைந்துள்ள கோபுர கவசமானது, 81,000 கிலோ எடையுள்ள ஒரே கல்லினால் ஆனது என்பது ஆச்சரியப்படத்தக்கதாகும். சுமார் 1000 வருடங்களுக்கு முன்பு எந்தவொரு தொழில் நுட்பமும் இல்லாத காலத்தில் வெறும் யானைகளை கொண்டு பிரமாண்ட எடையுள்ள கல்லை 216 அடி உயரத்தில் பொருத்தமுடிந்தது என்பது மர்மமாகவே காணப்படுகிறது.

2. பத்மநாபசுவாமி கோவில் – கேரளா
பத்மாசுவாமி கோவிலானது கேரளாவில் திருவனந்தபுரத்தில் உள்ளது.
இந்த பதமசுவாமி கோவில்தான் உலகிலேயே பணக்கார கோவிலாகும். இக்கோவிலை கட்டப்பட்ட வருடம் இன்றுவரை கேள்விக்குறியாகவே உள்ளது. 

இக்கோவிலில் எ,பி,சி,டி என பெயரிடப்பட்ட 8 பாதாள அறைகள் உள்ளன. அவற்றில் தற்போது 5 மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. 2011 ஆம் ஆண்டு ‘எ’ என்ற பாதாள அறை திறக்கப்பட்ட போது தங்கம் மற்றும் வைர நகைகள், தங்கத்தால் ஆன யானை சிலைகள், வைர கழுத்தணிகள், அரியவகை கற்கள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன. இந்த புதையல்களை வெளியே எடுப்பதற்கே 12 நாட்கள் தேவைப்பட்டது. இக்கோவிலில் உள்ள ‘பி’ எனும் ஏழாவது பாதாள அறை இன்று வரை திறக்கப்படாமல் உள்ளது. இவ்வறையின் கதவு முற்றிலும் இரும்பினாலும் மேல்புறம் இரண்டு நாகப்பாம்பின் சிலையுடனும் திறக்க முடியாதபடி பாதுகாப்பாக அமைக்கப்பட்டுள்ளது. 
இவ்வறையில் என்ன உள்ளது என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது.

3. எல்லோரா கைலாசநாதர் கோவில்
கி.பி 8 ஆம் நூற்றாண்டில் முதலாம் கிருஷ்ணன் மன்னரால் இந்த கைலாசநாதர் கோவில் கட்டப்பட்டது. இக்கோவிலை முழுவதுமாக கட்ட கிட்டத்தட்ட 4,00,000 டன் பாறையை, கோவிலின் மேலிருந்து கீழ் நோக்கி வெட்டி நீக்கியுள்ளனர். 

18 வருடங்களிலேயே இக்கோவில் கட்டி முடிக்கப்பட்டது. இது எந்தவிதமான நவீன தொழில்நுட்ப பயன்பாடும் இன்றி சுமார் 1200 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர்கள் மலைப்பாறைகளை வெட்டி, சாதாரண உளி மற்றும் சுத்தியல் கொண்டு வெறும் 18 வருடத்திலேயே இந்த கோவிலை உருவாக்கினார்கள் என்பதும் மர்மமாகவே உள்ளது.

4. கோனார்க் சூரிய கோவில்
இக்கோவிலானது கி.பி 1255 ஆம் ஆண்டு ஒரிசாவில் உள்ள கோனார்க் எனும் இடத்தில் கட்டப்பட்டது. இந்த சூரிய கோவிலானது 24 சக்கரங்கள் கொண்ட தேரினை, 7 குதிரைகள் இழுத்து செல்வது போன்ற அமைப்புடைய ஒரு அடித்தளத்தின் மீது மிகவும் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள 24 சக்கரமும் 24 மணி நேரத்தையும், 7 குதிரைகள் வாரத்தில் உள்ள ஏழு நாட்களையும் குறிக்கிறது.

இந்த சக்கரத்தில் உள்ள ஆரங்களின் நிழல்களை கொண்டு தற்போதுள்ள நேரத்தினையும் துல்லியமாக கூற முடிகிறது. சக்கரத்தின் நிழல் இன்றய நேரத்தினை காட்டுவது மர்மமாகவே காணப்படுகிறது.
மேலும் இக்கோவிலின் ஒவ்வொரு இரு தூண்களும் ஒரு சிறிய இரும்பு தகட்டினால் இணைக்கப்பட்டுள்ளது ஆச்சரியபட தக்கதாக உள்ளது.

5. வீரபத்ரா கோவில்
கி.பி 1530ஆம் ஆண்டில் ஆந்திராவில் உள்ள அனந்தபூரில் கட்டப்பட்டுள்ள கோவில்தான் வீரபத்ரா கோவில். இந்த கோவிலில் சுமார் 70 மாபெரும் தூண்கள் உள்ளன. 
இந்த தூண்களில் ஒரு தூண் மட்டும் தரையை தொடாமல் அந்தரத்தில் தொங்கி கொண்டிருக்கும். இந்த தூணானது சுமார் 70 அடி உயரம் கொண்டது. அந்தரத்தில் தொங்கும் இந்த தூணை எந்த சக்தி தாங்கி பிடித்து கொண்டிருக்கிறது என்பது மர்மமாகவே காணப்படுகிறது.

1910 ஆம் ஆண்டில் ஆங்கிலேய பொறியாளர் ஒருவர் இம்மர்மத்தை மறைக்க நவீன தொழில்நுட்பத்துடன் இந்த தூணின் அடிப்பாகத்தை தரையுடன் இணைக்க முயற்சித்தார். பின்னர் அந்தரத்தில் தொங்கும் தூணின் ஒரு முனையை தரையு
 விட்டார். 
அப்பொழுது கோவிலின் மேல் தளமானது சேதமடைய தொடங்கியது. அதனால் அந்த ஆங்கிலேய பொறியாளர் இம்முயற்சியை பாதியிலேயே கைவிட்டுவிட்டார்.

மேலும் இக்கோவிலில் 3 அடி நீளம் கொண்ட கால் தடம் ஓன்று இருப்பதும் 
குறிப்பிடத்தக்கதாகும்...

நமது முன்னோர்கள் தமிழ் கலாச்சாரத்தையும் இந்து தர்மத்தையும் பாதுகாத்து உள்ளார்கள்.! 

20 வகை பிரதோஷங்களும். அதன் வழிபாடு பலன்களும்

மொத்தம் 20 வகை பிரதோஷங்கள்

1. தினசரி பிரதோஷம்
2. பட்சப் பிரதோஷம்
3. மாசப் பிரதோஷம்
4. நட்சத்திரப் பிரதோஷம்
5. பூரண பிரதோஷம்
6. திவ்யப் பிரதோஷம்
7. தீபப் பிரதோஷம்
8. அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி பிரதோஷம்
9. மகா பிரதோஷம்
10. உத்தம மகா பிரதோஷம்
11. ஏகாட்சர பிரதோஷம்
12. அர்த்தநாரி பிரதோஷம்
13. திரிகரண பிரதோஷம்
14. பிரம்மப் பிரதோஷம்
15. அட்சரப் பிரதோஷம்
16. கந்தப் பிரதோஷம்
17. சட்ஜ பிரபா பிரதோஷம்
18. அஷ்ட திக் பிரதோஷம்
19. நவக்கிரகப் பிரதோஷம்
20. துத்தப் பிரதோஷம்

*1.தினசரி பிரதோஷம்*

தினமும் பகலும், இரவும் சந்திக்கின்ற சந்தியா காலமாகிய மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை உள்ள காலமாகும். இந்த நேரத்தில் ஈசனைத் தரிசனம் செய்வது உத்தமம் ஆகும். நித்தியப்பிரதோஷத்தை யார் ஒருவர் ஐந்து வருடங்கள் முறையாகச் செய்கிறார்களோ அவர்களுக்கு “முக்தி” நிச்சயம் ஆகும் என்கிறது நமது சாஸ்திரம்.

*2. பட்சப் பிரதோஷம்*

அமாவாசைக்குப் பிறகான, சுக்லபட்சம் என்ற வளர் பிறை காலத்தில் 13-வது திதியாக வரும் “திரயோதசி” திதியே பட்சப் பிரதோஷம் ஆகும். இந்தத்திதியின் மாலை நேரத்தில் பட்சிலிங்க வழிபாடு [பறவையோடு உள்ள அது சம்பந்தப்பட்ட லிங்கம் மைலாப்பூர், மயிலாடு துறை போல்] செய்வது உத்தமம் ஆகும்.

*3. மாசப் பிரதோஷம்*

பவுர்ணமிக்குப் பிறகு வரும் கிருஷ்ணபட்சம் என்ற தேய்பிறை காலத்தில், 13-வது திதியாக வரும் “திரயோதசி” திதியே மாதப் பிரதோஷம் ஆகும். இந்த திதியின் மாலை நேரத்தில் “பாணலிங்க” வழிபாடு [பல்வேறு லிங்க வகைகளில் பான லிங்கம் ஒரு வகை] செய்வது உத்தம பலனைத் தரும்.

*4. நட்சத்திரப் பிரதோஷம்*
பிரதோஷ திதியாகிய “திரயோதசி திதி”யில் வரும் நட்சத்திரத்திற்கு உரிய ஈசனை பிரதோஷ நேரத்தில் வழிபடுவது நட்சத்திர பிரதோஷம் ஆகும்.

*5. பூரண பிரதோஷம்*

திரயோதசி திதியும், சதுர்த்தசி திதியும் சேராத திரயோதசி திதி மட்டும் உள்ள பிரதோஷம் பூரண பிரதோஷம் ஆகும். இந்தப் பிரதோஷத்தின் போது “சுயம்பு லிங்கத்தை”த் தரிசனம் செய்வது உத்தம பலனை தரும். பூரண பிரதோஷ வழிபாடு செய்பவர்கள் இரட்டைப் பலனை அடைவார்கள்.

*6. திவ்யப் பிரதோஷம்*

பிரதோஷ தினத்தன்று துவாதசியும், திரயோதசியும் சேர்ந்து வந்தாலோ அல்லது திரயோதசியும், சதுர்த்தசியும் சேர்ந்து வந்தாலோ அது “திவ்யப் பிரதோஷம்” ஆகும். இந்த நாளன்று மரகத லிங்கேஸ்வரருக்கு அபிஷேக ஆராதனை செய்தால் பூர்வஜென்ம வினை முழுவதும் நீங்கும்.

*7. தீபப் பிரதோஷம்*
பிரதோஷ தினமான திரயோதசி திதியில் தீப தானங்கள் செய்வது, ஈசனுடைய ஆலயங்களைத் தீபங்களால் அலங்கரித்து ஈசனை வழிபட சொந்த வீடு அமையும்.

*8. அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி பிரதோஷம்*

வானத்தில் “வ” வடிவில் தெரியும் நட்சத்திர கூட்டங்களே, “சப்தரிஷி மண்டலம்” ஆகும். இது ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி மாதங்களில் வானில் தெளிவாகத் தெரியும்.

இந்த மாதங்களில் திரயோதசி திதியில் முறையாக பிரதோஷ வழிபாடு செய்து, சப்தரிஷி மண்டலத்தைத் தரிசித்து வழிபடுவதே அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி பிரதோஷம் ஆகும். இந்த வழிபாட்டை செய்பவர்களுக்கும் ஈசன் தரம் பார்க்காது அருள் புரிவான்.

*9. மகா பிரதோஷம்*

ஈசன் விஷம் உண்ட நாள் கார்த்திகை மாதம், சனிக்கிழமை, திரயோதசி திதி ஆகும். எனவே சனிக்கிழமையும், திரயோதசி திதியும் சேர்ந்து வருகின்ற பிரதோஷம் “மகா பிரதோஷம்” ஆகும். இந்த மகா பிரதோஷத்து அன்று எமன் வழிபட்ட சுயம்பு லிங்க தரிசனம் செய்வது மிகவும் உத்தமம் ஆகும்.

குறிப்பாக திருக்கடையூர், சென்னை வேளச்சேரியில் உள்ள, “தண்டீசுவர ஆலயம்”. திருச்சி, மண்ணச்சநல்லூர் அருகே உள்ள “திருப்பைஞ்ஞீலி” சிவ ஆலயம், குடவாசலில் இருந்து நன்னிலம் செல்லும் பாதையில் உள்ள “ஸ்ரீவாஞ்சியம்” சிவ ஆலயம், கும்ப கோணம் முதல் கதிராமங்கலம் சாலையில் உள்ள “திருக்கோடி காவல்” சிவ ஆலயம் ஆகியவை குறிப்பிடத்தக்கனவாகும். மாசி மாதம் வரும் மகா சிவராத்திரிக்கு முன்னால் வரும் பிரதோஷமும், “மகா பிரதோஷம்” எனப்படும்.

*10. உத்தம மகா பிரதோஷம்*

சிவபெருமான் விஷம் அருந்திய தினம் சனிக்கிழமையாகும். அந்தக் கிழமையில் வரும் பிரதோஷம் மிகவும் சிறப்பானதாகும். சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய மாதங்களில் வளர்பிறையில், சனிக்கிழமையில் திரயோதசி திதியன்று வரும் பிரதோஷம் உத்தம மகா பிரதோஷம் ஆகும். இது மிகவும் சிறப்பும் கீர்த்தியும் பெற்ற தினமாகும்.

*11. ஏகாட்சர பிரதோஷம்*

வருடத்தில் ஒரு முறை மட்டுமே வரும் மகா பிரதோஷத்தை `ஏகாட்சர பிரதோஷம்’ என்பர். அன்றைக்கு சிவாலயம் சென்று, `ஓம்’ என்ற பிரணவ மந்திரத்தை எத்தனை முறை ஓத முடியுமோ, அத்தனை முறை ஓதுங்கள். பின், விநாயகரையும் வழிபட்டு, ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் வழங்கினால் பல விதமான நன்மைகள் ஏற்படும்.

*12. அர்த்தநாரி பிரதோஷம்*

வருடத்தில் இரண்டு முறை மகாபிரதோஷம் வந்தால் அதற்கு அர்த்தநாரி பிரதோஷம் என்று பெயர். அந்த நாளில் சிவாலயம் சென்று வழிபட்டால், தடைப்பட்ட திருமணம் நடைபெறும். பிரிந்து வாழும் தம்பதி ஒன்று சேர்வார்கள்.

*13. திரிகரண பிரதோஷம்*

வருடத்துக்கு மூன்று முறை மகாபிரதோஷம் வந்தால் அது திரிகரண பிரதோஷம். இதை முறையாகக் கடைப்பிடித்தால் அஷ்ட லட்சுமிகளின் ஆசியும் அருளும் கிடைக்கும். பிரதோஷ வழிபாடு முடிந்ததும் அஷ்ட லட்சுமிகளுக்கும் பூஜை வழிபாடு செய்வது மிகவும் நல்லது.

*14. பிரம்மப் பிரதோஷம்*

ஒரு வருடத்தில் நான்கு மகா பிரதோஷம் வந்தால், அது பிரம்மப் பிரதோஷம். இந்தப் பிரதோஷ வழிபாட்டை முறையாகச் செய்தால் முன்ஜென்மப் பாவம் நீங்கி, தோஷம் நீங்கி நன்மைகளை அடையலாம்.

*15. அட்சரப் பிரதோஷம்*

வருடத்துக்கு ஐந்து முறை மகா பிரதோஷம் வந்தால் அது அட்சரப் பிரதோஷம். தாருகா வனத்து ரிஷிகள். `நான்’ என்ற அகந்தையில் ஈசனை எதிர்த்தனர். ஈசன், பிட்சாடனர் வேடத்தில் வந்து தாருகா வன ரிஷிகளுக்குப் பாடம் புகட்டினார். தவறை உணர்ந்த ரிஷிகள், இந்தப் பிரதோஷ விரதத்தை அனுஷ்டித்து பாவ விமோசனம் பெற்றனர்.

*16. கந்தப் பிரதோஷம்*

சனிக்கிழமையும், திரயோதசி திதியும், கிருத்திகை நட்சத்திரமும் சேர்ந்து வரும் பிரதோஷம் கந்தப் பிரதோஷம். இது முருகப் பெருமான் சூரசம்ஹாரத்துக்கு முன் வழிபட்ட பிரதோஷ வழிபாடு. இந்தப் பிரதோஷத்தில் முறையாக விரதம் இருந்தால் முருகன் அருள் கிட்டும்.

*17. சட்ஜ பிரபா பிரதோஷம்*

ஒரு வருடத்தில் ஏழு மகா பிரதோஷம் வந்தால் அது, `சட்ஜ பிரபா பிரதோஷம்’. தேவகியும் வசு தேவரும் கம்சனால் சிறையிடப்பட்டனர். ஏழு குழந்தைகளைக் கம்சன் கொன்றான். எனவே, எட்டாவது குழந்தை பிறப்பதற்கு முன்பு ஒரு வருடத்தில் வரும் ஏழு மகா பிரதோஷத்தை முறையாக அவர்கள் அனுஷ்டித்ததால், கிருஷ்ணர் பிறந்தார். நாம் இந்த விரதத்தைக் கடைப்பிடித்தால் முற்பிறவி வினை நீங்கி பிறவிப் பெருங்கடலை எளிதில் கடக்கலாம்.

*18. அஷ்ட திக் பிரதோஷம்*

ஒரு வருடத்தில் எட்டு மகா பிரதோஷ வழிபாட்டை முறையாகக் கடைப்பிடித்தால், அஷ்ட திக்குப் பாலகர்களும் மகிழ்ந்து நீடித்த செல்வம், புகழ், கீர்த்தி ஆகியவற்றைத் தருவார்கள்.

*19. நவக்கிரகப் பிரதோஷம்*

ஒரு வருடத்தில் ஒன்பது மகா பிரதோஷம் வந்தால், அது நவக்கிரகப் பிரதோஷம். இது மிகவும் அரிது. இந்தப் பிரதோஷத்தில் முறையாக விரதம் இருந்தால் சிவனின் அருளோடு நவக் கிரகங்களின் அருளும் கிடைக்கும்.

*20. துத்தப் பிரதோஷம்*

அரிதிலும் அரிது பத்து மகாபிரதோஷம் ஒரு வருடத்தில் வருவது. அந்தப் பிரதோஷ வழிபாட்டைச் செய்தால் பிறவி குறைபாடுகள் கூட சரியாகும்.

சங்கு, சக்கரத்துடன் காட்சிதரும் அபூர்வ ஆஞ்சநேயர்

சாதாரணமாக ஆஞ்சநேயர் இரு கரம் கூப்பியவாரே அனைத்து கோவில்களிலும் காட்சி தருவார், ஆனால் சோளிங்கரில் ஆஞ்சநேயர் கையில் சங்கு சக்கரத்துடன் காட்சி தருவது அபூர்வமாக இருக்கிறது. 

காஞ்சி வரதராஜப்பெருமாள் கோவிலுக்கும், திருப்பதி வெங்கடேசபெருமாள் கோவிலுக்கும் நடுவில் அமைந்திருப்பது சோளிங்கர். 
இங்குள்ள யோக நரசிம்மப்பெருமாளை சில நிமிடங்கள் தரிசனம் செய்த விஸ்வாமித்திரருக்கு `பிரம்ம ரிஷி’ என்னும் பட்டம் கிடைத்தது. 

இதை அறிந்த வாமதேவர், வசிஷ்டர், காஷ்யபர், அத்திரி, ஜமதக்னி, கவுதமர், பரத்வாஜர் ஆகியோர் யோக நரசிம்மரை தரிக்க தவம் இருந்தனர். ஆனால் காலன், கேயன் என்ற அரக்கர்கள் அவர்களுக்கு பல இன்னல்களை அளித்துவந்தனர். 

இந்த அரக்கர்களிடமிருந்து தங்களைக் காக்கும்படி பெருமாளை வேண்டினர் முனிவர்கள். 

பெருமாளும் ஆஞ்சநேயரிடம் அரக்கர்களை அழிக்கும்படி கூறினார்,
பெருமாளிடமிருந்து சங்கு, சக்கரத்தை பெற்ற ஆஞ்சநேரயர், 
காலன் மற்றும் கேயன் ஆகிய அரக்கர்களை வென்று அந்த ரிஷிகளைக் காப்பாற்றினார். 

*இந் நிகழ்வால் இன்றும் சோளிங்கரில் உள்ள ஆஞ்சநேயர் தன் கையில் சங்கு, சக்கரத்துடன் காட்சி தருகிறார்...*

*"ஸ்ரீ ராமபக்த ஆஞ்சநேயர் சுவாமிக்கு ஜெய்"*

பூஜை அறையில் தண்ணீர் வைப்பதால் கிடைக்கும் பலன்கள் என்ன ?

தினமும் நாம் பூஜையின் போது சுவாமிக்கு நெய்வேத்தியம் படைப்பதுண்டு. 
எச்சில் படாத உணவுகள், பழங்கள் ஆகியவற்றை நாம் கடவுளுக்கு வைக்கலாம்.

நம்முடைய பூஜை அறை மண் பானையிலேயோ அல்லது செம்பு பாத்திரத்திலேயோ தண்ணீரை நிரப்பி வைப்பது மிகவும் நல்ல பலனை கொடுக்கும்.

வழிப்பாட்டின் போது தினமும் தியானத்தில் அமர்ந்து நமக்கு பிடித்த தெய்வத்தின் மூல மந்திரத்தை சொல்ல வேண்டும். அவ்வாறு செய்வதால் நீங்கள் சொல்லும் மந்திரத்தின் 
(நேர்மறை ஆற்றல்) அதிர்வலைகள் அந்த தண்ணீரில் இறங்கும். 

இவ்வாறு செய்து அந்த தண்ணீரை அருந்துவதால் நன்மைகள் உண்டாகும்.

பூஜையின்போது தீபாராதனை காட்டி, தெரிந்த தெய்வப் பாடல்களைப் பாடி வழிபடலாம். 
எந்தக் காரணத்தை முன்னிட்டும் இரும்புப் பொருள்களை பூஜைக்குப் பயன்படுத்தக்கூடாது. 

இரும்பு யமனுக்கு உரியது. 
இரும்பினால் நேர்மறை சக்திகளை கிரகிக்க முடியாது. வெள்ளி, தாமிரம், ஈயம் பூசிய பித்தளை, மண்ணால் ஆன பூஜைப் பாத்திரங்களைப் பயன்படுத்தலாம்.

ஒவ்வொரு நாள் பூஜையின்போதும் சிறிய பாத்திரத்தில் தண்ணீர் வைத்து பூஜை செய்ய வேண்டும். 
அடுத்த நாள் அதைக் கூரையில் ஊற்றிவிட வேண்டும். 

இப்படிச் செய்வதால் துர்சக்திகள் நம் வீட்டை அண்டாது.
பூஜையின்போது மணியோசை எழுப்புவதும் கூட துர்சக்திகள் நெருங்காமல் இருப்பதற்குத்தான்.

மணியின் இனிய ஓசையானது 
தீய சக்திகளை விரட்டி, தெய்விக சக்தியை வீட்டில் நிலவச் செய்யும் வல்லமை கொண்டது....

சுந்தரகாண்டம் படிப்பதால் ஏற்படும் கற்பனைக்கும் எட்டாத நன்மைகள்!


1. ஒரே நாளில் சுந்தர காண்டம் முழுவதையும் படிப்பதன் பெருமையை ஆயிரம் நாக்குகள் படைத்த ஆதிசேஷனால் கூட விவரிக்க முடியாது என்று உமாசம்ஹிதையில் பரமேஸ்வரன் கூறியுள்ளார்.

2. காஞ்சி பெரியவர் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சுவாமிகளிடம் ஒரு சமயம் ஒருவர் வயிற்று வலியால் தான் மிகவும் கஷ்டப்படுவதாகவும், எந்த டாக்டராலும் அதை குணப்படுத்த இயலவில்லை என்றார். உடனே காஞ்சி பெரியவர் சுந்தரகாண்டத்தை தினமும் சாப்பிடும் முன் படி என்றார். அதன்படி அந்த நபர் பாராயணம் செய்து வர அவருக்கு வயிற்று வலி பறந்து போய் விட்டது.

3. சுந்தரகாண்டத்தில் உள்ள ஒவ்வொரு சர்க்கமும் மாபெரும் மந்திர சக்திகளுக்கு இணையானது என்று ஆன்மிக பெரியவர்கள் கூறியுள்ளனர்.

4. சுந்தரகாண்டத்தை நாம் எந்த அளவுக்கு படிக்கிறோமோ அந்த அளவுக்கு பகவானை நெருங்குகிறோம் என்று அர்த்தம்.

5. சுந்தரகாண்டத்தை ஆத்மார்த்தமாக படித்து வந்தால் வாழ்க்கையில் உள்ள துக்கங்கள் முடிவுக்கு வந்து விடும்.

6. சுந்தரகாண்டம் வாசித்தால் வாழ்வு வளம் பெறும். கஷ்டங்கள் தொலைந்து போகும்.

7. சுந்தர காண்டத்தை தொடர்ந்து வாசித்து வந்தால், வாசிக்க, வாசிக்க மன வலிமை உண்டாகும்.

8. சுந்தரகாண்டத்தை முறைப்படி வாசித்தால் காலதாமதமான திருமணம் விரைவில் கை கூடும். கவலைகள் மறந்து போய் விடும்.

9. சுந்தரகாண்டம் படித்து அனுமனை வழிபட்டு வந்தால் அறிவு, ஆற்றல், புகழ், குறிக்கோளை எட்டும் திறமை, துணிச்சல், ஆரோக்கியம், விழிப்புணர்வு, வாக்கு சாதூரியம் போன்றவற்றைப் பெறலாம்.

10. சுந்தரகாண்டத்தை மனம் உருகி படித்தால் பாவம் தீரும். முடியாத செயல்கள் முடிந்து விடும்.

11. ஆஞ்சநேயருக்கு வடை வெண்ணை வைத்து நெய்தீபம் ஏற்றி சுந்தரகாண்டம் படித்து வந்தால் குழந்தை பாக்கியம் உண்டாகும்.

12. ராம நவமியன்று விரதம் இருந்து ராமருக்கு துளசி மாலை அணிவித்து சுந்தரகாண்டம் படித்து வந்தால் வாழ்வில் அமைதி பெறலாம்.

13. ராமனுடன் மறுபடியும் வாழ முடியும் என்ற நம்பிக்கையை சீதைக்கு கொடுத்து சுந்தரகாண்டம்தான். எனவேதான் கருவுற்ற தாய்மார்கள் சுந்தரகாண்டம் படிக்க வேண்டும் என்கிறார்கள்.

14. ஏழரை சனி, அஷ்டமத்து சனி திசை நடப்பவர்கள் தினமும் சுந்தரகாண்டம் படித்து வந்தால் துன்பங்களில் இருந்து விடுபடலாம்.

15. சுந்தரகாண்டத்தில் அனுமன் கடலைத் தாண்டுவதற்கு முன்பு சொன்ன ஸ்லோகத்துக்கு “ஜெய பஞ்சகம்” என்று பெயர். இதை சொல்லி வந்தால் வீட்டில் செல்வம் பெருகும்.

16. சுந்தரகாண்டத்தில் அனுமன் சீதையை கண்டுபிடிக்க அசோக வனத்துக்கு செல்லும் முன்பு கூறிய ஸ்லோகத்தை கூறி வந்தால் வெற்றி மீது வெற்றி உண்டாகும்.

17. சுந்தரகாண்டத்தை நீண்ட நாட்களாக பாராயணம் செய்பவர்களை விட்டு நவக்கிரக தோஷங்கள் முற்றிலும் அகலும்.

18. சுந்தரகாண்டம் என்று பெயர் சொல்லுவார். இதை சுகம் தரும் சொர்க்கம் என்பார்கள்.

19. சுந்தர காண்டம் படிப்பதன் மூலம் வேதம் சொல்லிய புண்ணியத்தை பெண்கள் பெற முடியும்.

20. ராமாயணத்தில் மொத்தம் 24 ஆயிரம் சுலோகங்கள் உள்ளன. இதில் 2885 சுலோகங்கள் சுந்தரகாண்டத்தில் இருக்கிறது.

21. சுந்தரகாண்டத்தை எவர் ஒருவர் ஆழமாக படிக்கிறாரோ, அவருக்கு தனது உண்மையான சொரூபத்தை உணரும் ஆற்றல் கிடைக்கும்.

22. சுந்தரகாண்ட பாராயணம் நமது ஊழ்வினையால் ஏற்படும் நிம்மதி சீர்குலைவை சரி செய்து விடும்.

23. சுந்தரகாண்டத்தை நேரம் கிடைக்கும் போதெல்லாம் படித்தால் மனம் லேசாகி விடும்.

24. சுந்தரகாண்டத்தில் 42-ம் சர்க்கத்தில் 33-வது ஸ்லோகம் முதல் 37-வது ஸ்லோகம் வரை உள்ள ஸ்ரீஜெயபஞ்சகம் ஸ்லோகத்தை பாராயணம் செய்வதால் உடனே திருமணம் கைகூடும்.

25. ராமநவமியன்று ராகவேந்திர சுவாமிகள் இயற்றிய சுந்தரகாண்ட சுலோகம் கூறினால் மன தைரியம் உண்டாகும்.

26. ஒரு பெண் கருத்தரித்த நாள் முதல் 9 மாதம் வரை நாள் தவறாமல் சுந்தரகாண்டம் படித்து வந்தால் சுகப் பிரசவம் உண்டாகி குழந்தை ஆரோக்கியத்துடன் பிறக்கும் என்பது ஐதீகம்.

27. கர்ப்பிணிகள் குறைந்த பட்சம் 5-வது மாதத்தில் இருந்து சுந்தரகாண்டம் படித்து வந்தால், பிறக்கும் குழந்தை ஆன்மிக சிந்தனை உள்ள குழந்தையாக பிறக்கும்.

28. சுந்தரகாண்டத்தை ஆத்மார்த்தமாக படித்தால்தான் அதன் முழு பலனும் கிடைக்கும்.

29. சுந்தரகாண்டம் மிகவும் வலிமையானது. அதை வாசிப்பவர்களுக்கும் வலிமை தரக்கூடியது.

30. சுந்தரகாண்டம் படிக்கும் நாட்களில் உறுதியாக அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டும். வீட்டிலும் அசைவ உணவு தயாரிக்கக் கூடாது.

31. சுந்தரகாண்டத்தில் காயத்திரி மந்திரத்தின் அளவற்ற சக்தி உள்ளதாக கருதப்படுகிறது.

32. சுந்தரகாண்டம் படிக்க தொடங்கும் மன்பு முதலில் ராமாயணத்தை ஒரே நாளில் படித்து விட வேண்டும். அதன் பிறகு சுந்தரகாண்டம் படிக்க வேண்டும் என்பது ஐதீகம். (ராமாயணத்தை முழுமையாக படிப்பதா? அதுவும் ஒரே நாளில்… என்று நினைக்கவேண்டாம். அதற்க்கு ஒரு எளிய வழி இருக்கிறது. அடுத்த பதிவில் அது பற்றி சொல்கிறோம்.)

33. பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்து, அந்த அறை முன்பு அமர்ந்து சுந்தரகாண்டம் படிப்பது மிகவும் நல்லது.

34. சுந்தரகாண்டத்தை காலை, மாலை இரு நேரமும் படிக்கலாம்.

35. சுந்தரகாண்டத்தை படிக்கத் தொடங்கினால் ஒருநாள் கூட இடைவெளி விடாமல் படிக்க வேண்டும்.

36. பெண்கள் வீட்டுக்கு தூரமாக இருக்கும் நாட்களில் சுந்தரகாண்டம் படிக்கக் கூடாது.

37. சுந்தரகாண்டத்தின் ஒவ்வொரு சர்க்கத்துக்கும் ஒவ்வொரு பலன் உண்டு. அதை அறிந்து படித்தால் மிக எளிதாக பலன் பெறலாம்.

38. சுந்தரகாண்டத்தை முழுமையாக படித்து முடித்ததும் ஆஞ்சநேயரை வழிபட்டு, ஏழைகளுக்கு உதவி செய்தால் அளவில்லா புண்ணியம் கிடைக்கும்.

39. வசதி, வாய்ப்புள்ளவர்கள் சுந்தர காண்டம் படிக்கும் நாட்களில் ஆஞ்ச நேயருக்கு பிடித்த நைவேத்தியங்களை படைத்து பயன்பெறலாம்.

40. சுந்தரகாண்டம் புத்தகத்தின் பதினோரு பிரதிகள் வாங்கி பதினோரு பேருக்கு படிக்க கொடுத்தால் யாகம் செய்ததற்கான பலன்கள் கிடைக்கும்.
              

உங்கள் வாழ்க்கையில் நல்ல திருப்பம் ஏற்பட வேண்டுமா?

நீங்கள் அவசியம் 
திருசெந்தூர் ஆலயத்தில்  தினமும் அதி காலையில் நடைபெறும் கொடிமர பூசையில் கலந்து கொள்ள வேண்டும்.

அப்படி என்ன திருசெந்தூர் ஆலய கொடிமர பூஜையில் விசேஷம் உள்ளது என யோசிக்கின்றீர்களா?

திருச்செந்தூர் ஆலயத்தில் தினமும்
 மூலவர் நடை திறப்பதற்கு முன்பாக முதன்முதலில் ஆலயத்தின்  கொடிமரத்துக்குத்தான் 
பூஜை நடைபெறும் .

இந்த கொடி மரம் பொதிகை. மலையிலிருந்து வரப்பெற்ற 
சந்தன மரமாகும்

இந்த கொடிமரம் சந்தன கொடிமரம் என்பது பல பேருக்கு தெரியாது.

இந்த கொடிமரம் திருச்செந்தூர் ஆலயத்திற்கு வந்த வரலாற்றை பற்றி தெரிந்து கொள்வோமா?

திருச்செந்தூருக்கு கொடிமரம் வந்த கதை!

முன்னொரு காலத்தில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசி திருவிழா நடைபெறவில்லை. 

காரணம் அங்கு கொடிமரம் இல்லை. ஆகவே திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு கொடிமரம் வைக்க வேண்டுமென்று ஊர் கூடி பேசி முடிவெடுத்தனர். 

உடனே ஆறுமுகம் ஆசாரி என்பவர் தலைமையில் 21 பேர் கொண்ட குழு காக்காச்சி மலைக்கு (மேற்கு தொடர்ச்சி மலை) கொடி மரம் வெட்ட கிளம்பினர். 

திருச்செந்தூர் மந்தை அருகே உள் அம்மன் கோயிலில் அந்தக் குழுவினர் வேண்டச்சென்றனர். 

அம்மன் கோயில் முன்பு மற்றவர்கள் நின்று கொண்டனர். 

அம்மனை வணங்க ஆறுமுகம் ஆசாரி மட்டும் கருவறைக்குள் நுழைந்து அம்மனை வணங்கினார்.

அப்போது அம்மன் கண்களில் இருந்து நீர் வழிந்தது.

பயந்து போய் படபடத்து போன ஆசாரி, அம்மனே! ஏன் இந்த நிலை. தங்கள் கண்களில் நீர் வழிய காரணம் தான் என்ன? என்று கேட்டார். 

அம்மன் ‘மகனே நீங்கள் செய்யும் பணி நல்ல பணி தான். ஆனால் அந்த பணியில் ஈடுபடும் உன்னை தவிர வேறு யாரும் உயிரோடு திரும்ப மாட்டார்கள். 

அதை நினைத்து தான் எனக்கு வருத்தமாக உள்ளது. இதை நீ அவர்களிடம் சொல்லிவிடாதே. 

இது ஆண்டவன் கட்டளை. இந்த நிலை தெரிந்த காரணத்தினால் தான் என கண்களில் கண்ணீர் வந்தது’ என்று கூறினார்.

உடனே அதிர்ந்து போன ஆறுமுகம் ஆசாரி அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தார். 

இதை வெளியே உள்ளவர்களிடமும் சொல்லக்கூடாது. சொன்னால் தெய்வக்குத்தமாகி விடும். 

அதே நேரம் நம்பி நம்மோடு வருபவர்களை காப்பாற்ற வேண்டும். என்ன செய்ய என்று குழம்பினார். 

ஆயினும் கலங்காமல் முருகன் மீது பாரத்தை போட்டு விட்டு களக்காடு அருகே உள்ள ஏர்வாடிக்கு வந்தார். 

அங்கு சின்னதம்பி மரக்காயர் என்ற மந்திரவாதி ஒருவரை சந்தித்தார். அவரிடம் முருகப் பெருமானுக்கு கொடிமரம் வெட்ட வந்த கதையை கூறி உதவிக்கு கூப்பிட்டனர்.

சின்னதம்பி மரக்காயரின் மனைவி பாத்திமாபீவி அவரை தடுத்தார். 

"நான் நேற்று முன்தினம் இரவு பயங்கர கனவு கண்டேன். அதில் உமது உயிருக்கு ஆபத்து உள்ளதாக அறிகுறி காட்டுகிறது. 

எனவே கொடிமரம் வெட்ட நீங்கள் செல்ல வேண்டாம”| என்று கூறினாள். 

ஆனால் சின்னதம்பி மரக்காயர் கேட்கவில்லை. மனைவி உடனே அழுதாள், "நமது குடும்பம் உம்மை நம்பித்தான் உள்ளது. தயவு செய்து செல்ல வேண்டாம்” என்று தடுத்து கூறியும் சின்னதம்பி மரக்காயர் கேட்கவில்லை. 

விதி யாரை விட்டது. 

அவர் ஆறுமுகம் ஆசாரி குழுவினருடன் களக்காட்டு 
மலைக்கு சென்றார்.

அவர்கள் திருச்செந்தூரில் இருந்தே 21 மாட்டு வண்டிகளில் வந்து இருந்தார்கள். 

அந்த வண்டிகள் அணிவகுத்து களக்காடு மலையை நோக்கி சென்றது. 

ஆனால் அவர்களுக்கு தேவையான கொடிமரம் கிடைக்கவில்லை.

அலைந்து திரிந்து பார்த்தார்கள் பக்கத்தில் எந்த இடத்திலும் சரியான மரம் கிடைக்கவில்லை. 

எனவே காக்காச்சி மலை என்று அழைக்கப்படும் மேற்குத் தொடர்ச்சி மலையான பொதிகை மலை உச்சிக்கு சென்றனர். 

அங்கு அற்புதமான நல்ல 
உயரமான சந்தனமரம் 
ஒன்று இருந்தது.

''ஆகா இந்த மரம் தான் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு ஏற்ற கொடிமரம'' என்றார்.ஆறுமுக ஆசாரி. 

அவர், சின்னதம்பி மரக்காயரிடம் இம்மரத்தை பற்றி கேட்கிறார். ரம்மியமான வாசனையுடன் இருக்கும் அந்த அற்புத மரத்தை குறித்து மை போட்டு பார்க்கிறார் மாந்திரிகரான சின்ன தம்பி மரக்காயர். 

அப்போது அந்த மரத்தில் அடி மரத்தில் சுடலைமாடனும், மேல் முனையில் சங்கடகாரனும் உள்பட 21 தேவதைகள் இருந்தது தெரிய வந்தது.

அந்த 21 தேவதைகளையும் விரட்டி விட்டு தான் மரத்தினை வெட்ட வேண்டும் என்பதால் அதற்கான ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்தனர். 

முதலில் மந்திரம் மூலம் தேவதைகளை விரட்ட மை போட்டார் மரக்காயர்.

மற்றவர்களை கோடாரி கொண்டு வெட்ட சொன்னார். 

கோடாரி மூலம் வெட்டப்பட்ட மரம் கோடாரியை திருப்பி விட்டது. 

உடனே அந்த கோடாரி மரத்தை வெட்டிய 20 பேர்களின் கழுத்தில் பட்டது. 

அலறியபடி 20 பேரும் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். அதை தொடர்ந்து அவர்கள் மரணம் அடைந்தனர். 

இதனால் ஆறுமுக ஆசாரி அதிர்ச்சி அடைந்தார்.

ஐயோ நான் என்ன செய்வேன்? என்று மந்திரவாதி சின்னதம்பி மரக்காயரிடம் சென்ற போது அவரும் ரத்தம் கக்கி இறந்து இருந்தார். 

அடுத்த வினாடி ஆறுமுக ஆசாரிக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. 

இதற்கிடையில் அந்த மரத்தில் இருந்த 21 மாட தேவதைகளும் மரத்தை விட்டு கீழே இறங்கி ஆறுமுக ஆசாரியை விரட்டியது. 

உயிருக்கு பயந்த அவர் காக்காச்சி மலையை விட்டு ஓடினார். அடுத்து பொதிகை மலைக்கு வந்தார். 

அந்த இடத்தை விட்டு கீழே இறங்கி ஓட ஆரம்பித்தார்.

இறுதியில் தாமிரபரணி ஆற்றங்கரையில் சொரிமுத்து அய்யனார் கோவிலில் வந்து அய்யனார் காலை பற்றிக் கொண்டு காப்பாற்ற கூறி கத்தினார். 

சொரிமுத்து அய்யனார் 21 மாடதேவதைகளையும் அழைத்து சமாதானம் செய்தார். 

‘முருகன்.. எனது சகோதரன் தான்.. அவன் கோவிலுக்கு தானே கொடிமரம் செல்கிறது. பிறகு ஏன் தடுக்கிறீர்கள்’ என்று கூறினார். 

அதற்கு சுடலைமாடன், சங்கடகாரன் உள்பட 21 மாட தேவதைகளும் நாங்கள் வசிப்பதற்கு இது போன்ற வேறு சந்தன கொடிமரம் இல்லை என்றும்,திருச்செந்தூர் ஆலயத்தில் இந்த கொடிமரம பிரதிஷ்டை செய்யபட்ட பின்பு தங்களை தொடந்து இந்த கொடி மரத்திலேயே வாசம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்றும்,தங்களுக்கு முதல் பூஜை நடத்திய பின்பே மூலவருக்கு பூஜைகள் நடத்த வேண்டும் என்று சொரி முத்தையனாரிடம் வேண்டினர்.

சொரி முத்தையனாரும் அவர்களது வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு சுடலைமாடன், சங்கடகாரன் உள்பட 21 மாட தேவதைகளும் 
அந்த சந்தன மரத்தை அவர்களே வெட்டி  அதை திருச்செந்தூரில் கொண்டு சேர்த்து ஆலயத்தில் பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்றும் அவர்களை அந்த கொடிமரத்திலேயே தொடந்து 
வாசம் செய்து கொள்ளும்படியும்  உத்தரவிட்டார்.

அதன்படி சுடலைமாடன், சங்கடகாரன் உள்பட 21 மாட தேவதைகளும் அந்த சந்தன மரத்தை வெட்டினார்கள். 

பின் 21 மாட்டு வண்டியையும் ஒன்றாக கட்டினர். அந்த சந்தன மரத்தை அப்படியே தூக்கி வைத்து திருச்செந்தூர் நோக்கி கொண்டு சென்றார்கள். 

அம்மரமே தற்போது திருச்செந்தூரில் கொடி மரமாக வைக்கப்பட்டுள்ளது. 

சொரி முத்தையனார் உத்திரவின்படி சுடலைமாடன், சங்கடகாரன் உள்பட 21 மாட தேவதைகளும் இந்த கொடிமரத்தில. வாசம் செய்து வருகின்றனர்.

இப்போதும் திருச்செந்தூர் ஆலய்த்தில் மாசி திருவிழா நடைபெறும் போது ஆடு வெட்டி சுடலை மாடனுக்கும், சங்கடகரகாரனுக்கும் படைத்து விட்டுத்தான் தேர் ஒட வேண்டிய வேலைகளை செய்வார்கள். 

மாசி திருவிழா தேர் ஓடும் போது அதிலேயும் சங்கடகரகாரன் தேர் மேல் ஏறி "சரி போகலாம்" என்று கூறியவுடனேதான் தேர் நகரும்.

மேற்கண்ட தகவலை "கொடி மரக்காவியம்" என்றும் வில்லுப்பாட்டு கதையில் இருந்து தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் அருகில் உள்ள கிளாக்குளம் கிராமத்து வில்லுப்பாட்டு கலைஞர் சண்முக சுந்தரம் கூறியுள்ளார்.

இந்த கதை நெஞ்சை பதற வைப்பது போல் உள்ளது அல்லவா? 

திருச்செந்தூர் ஆலயத்தில் உள்ள கொடிமரம் பிரமாண்டமானது. 

அதை 21 மனிதர்கள் கொண்டு வருவது என்பது இயலாதது. 

ஆனால் சுடலைமாடன், சங்கடகாரன் உள்பட 21 மாட தேவதைகளும் சேர்ந்து அந்த மரத்தினை வெட்டி  
21 மாட்டு வண்டியையும் ஒன்றாக கட்டி அதில் தூக்கி வைத்து வந்த சம்பவம் ஒரு மலைப்பான விசயமாக இருப்பதாலும் இதை நம்பியே தீர வேண்டும்.

ஏன் என்றால் இப்போது போல் முன்பு போக்குவரத்து வசதி எல்லாம் கிடையாது. 

எனவே 21 மாட்டு வண்டி நேராக திருச்செந்தூர் நோக்கி வரும் போது சாலையில் தடை எதுவும் இருந்திருக்காது. 

சொரிமுத்து அய்யனாரின் ஆசியுடன் சுடலைமாடன், சங்கடகாரன் உள்பட 21 மாட தேவதைகளும் இன்றளவும் வாசம் செய்து வரும் பொதிகை மலையில் இருந்து கொண்டு வரப்பட்ட சந்தனமரமே தற்போது திருச்செந்தூரில் கொடிமரமாக இருப்பதால் இந்த கொடி மரத்திற்கு முதலில் பூஜைகள் நடைபெற்ற பின்னரே மூலவருக்கான நடை திறக்கபட்டு நிர்மால்யம், அபிஷேகம் மற்ற பூஜை எல்லாம் நடைபெற்று வருகிறது..

தினமும் காலை ஐந்து மணிக்கு கொடிமரத்துக்கு பூஜைகள் நடைபெறும்போது, இரண்டு பேர் மந்திரத்தை பகிர்ந்து சொல்ல அவர்களுடன் சேர்ந்து மற்றவர்கள் ஒவ்வொரு மந்திரத்தின் முடிவிலும்  நமஸ்காரம் செய்வார்கள். 

இதற்கான அனுமதி இலவசம். 

அதிகாலையில ் நடைபெறும் இந்த கொடிமர பூஜையில் கலந்து கொண்டால் சுடலைமாடன், சங்கடகாரன் உள்பட 21 மாட தேவதைகளின் ஆசிகள் கிடைக்கப்பெற்று உங்கள் வாழ்க்கையில் நல்ல திருப்பம் ஏற்படுவது என்பது உறுதி!

இந்த கொடிமர பூஜையில் நீங்கள் கலந்துகொண்டால் உங்கள் வாழ்க்கையில் நிச்சயமாக நல்ல திருப்பம் உண்டாகும்.

நம்பிக்கையுடன் இந்த கொடிமர பூஜைக்கு போய் தான் பாருங்களேன்..!

உங்களது கர்மாக்களை கழிக்க ஓரு சிறந்த வழி

உங்களது கர்மாக்களை சதவிதகமாக கணக்கில் வையுங்கள். 100 % என எடுத்துக்கொள்வோம் அதை 0% ற்கு எப்படி குறைக்கலாம் என பார்ப்போம். இதை செய்யுங்கள்...

1. பறவைகளுக்கு நீர் வைத்தால் = 2% (-)
     தானியங்கள் வைத்தால் = 5 % (-)
2. நாய்களுக்கு உணவளித்தல் = 32% (-)
3. மீன்களுக்கு உணவளித்தால் = 20% (-)
4. குரங்குகளுக்கு உணவளித்தால் = 36% (-)
5. குதிரைகளுக்கு உணவளித்தால் = 64% (-)
6. யானைகளுக்கு உணவு அளித்தால் = 68% (-)
7. பசுக்களுக்கு உணவளித்தால் = 86% (-)
8. ஆடுகளுக்கு உணவளித்தால் = 62% (-)
9. தாய் தந்தையர் மற்றும் ஆதரவற்ற முதியோர்களுக்கு ஒரு வேளை உணவு கொடுத்தால் = 86% (-) 
10. சகோதர சகோதரிகள் அவர்கள் கஷ்டபடும் போது நாம் அவர்களுக்கு உணவளித்தாலும் = 70% (-)
11. கர்பஸ்திரிகளுக்கு = 78% (-)
12. ஒரு வேளை உணவுக்கே வழி இல்தர்வர்கும் = 70% (-)
13. கணவன் / மனைவி ஒருவருக்கொருவர் = 48% (-)
14. அனாதை / முதியோர் இல்லங்களுக்கு = 75% (-)
15. நோயளிகளுக்கு = 93% (-)
16. மரம், செடி, கொடிகளுக்கு நீர் ஊற்றுதல் = 90% (-)
17. திருமணம் செய்து வைத்தல், ஏழை மாணவர்களுக்கு கல்வி போன்ற பல புன்னிய காரியங்களுக்கு உதவுதல். 

இவைகளுக்கு துன்பம் விளைவித்தால் அப்படியே 3 மடங்கு கர்மா அதிகரிக்கும். 

சரி இனி ஆன்மிக ரீதியாக பார்ப்போம்:-

1. கோயில் மயில்களுக்கு 
2. காகத்திற்கு 
3. கோயில் சேவல்களுக்கு 
4. கோயில் யானைகளுக்கு 
5. கோயில் குளத்தில் உள்ள மீன்களுக்கு 
6. கோயில் பூசாரி 
7. பிராமனர்களுக்கு உணவு 
8. விசேஷ காலங்களில் அக்கம் பக்கத்தினருக்கு 
9. கோயில் அன்னபாலிப்பிற்கு உதவுதல் 
10. அன்னதானத்திற்கு உதவுதல் 
11. கோயில் கட்ட கட்டுமானங்களுக்கு உதவுதல் 
12. கோயில் விளக்கிற்கு எண்ணை கொடுத்தல்
13. கோயில் வாசலில் யாசகம் எடுப்போர்க்கு உணவு
14. இறைவனுக்கு பூ மாலை 
15. முன்னோர்கள் வழிபாடு
16. மறைந்த தாய் தந்தையர்களுக்கு திதி
17. ஏழை மாணவர்கள் படிக்க 
18. தெய்வங்களை பற்றி அறிதல் புரானங்கள் அறிதல் 
மற்றும் கோயில் கும்பாபிசகத்திற்கு உதவுதல் அல்லது விழாவிற்கு சென்று இறையை உணர்தல் போன்ற எந்த ஒரு விசயத்தை செய்தாலும் 99% கர்மாவை கழிக்கலாம். 

இறைசக்தியால் இயங்கும் நம் மூளையை போதை வஸ்துக்களாலும், அதீத கோப படுத்தினாலும், துரோகம், கொலை, கொள்ள, அநீதி, ஏமாற்றுதல், ஏழை பாழைகளின் சொத்தை தமதாக்குதல், பழிக்கு பழி, பிறர் மனைவிகளை தவறாக நினைத்தாலோ, பெண் குழந்தைகளுக்கு துன்பம் விளைத்தாலோ, கர்பஸ்திரிகளுக்கு துன்பம் விளைவித்தாலோ, இறைச்சி போன்ற தவறான உணவு பழக்க வழக்கங்காலோ நமது மனம் எனும் மூளைக்கு அதீக துன்பம் விளைவித்தால் அது 6 மடங்கு கர்மாக்களை அனுபவித்தே தீர வேணும் இதற்கு கர்மா கழித்தல் இல்லை. மேலே குறிப்பிட்டவை அனைத்தும் நீங்கள் முன் ஜென்மத்தில் செய்த கர்மாவை கழிக்கவே. கலியுகத்தில் எந்த துன்பம் செய்தாலும் அது பல மடங்காக நீங்கள் வயோதகத்திலோ அல்லது நடுத்தர வயதிலோ அனுபவித்தல் தான் தண்டனை. அனுதினமும் இறைவனை நினைத்து தர்மகாரியங்களில் அவ்வபோது செய்து கிடைத்த நேரத்தில் இறைவனின் நாமங்கள் நினைத்து நமது முன்னோர்கள் சொன்ன வழியை பின் பற்றி உலகமே ஆனந்தமாக எந்த சண்டை சச்சரவும் இல்லாமல் வாழ்வாங்கு வாழ்தலே மேன்மை🙏💐

அரிச்சந்திரன் முற்பிறவி

உண்மையின் உறைவிடமாக இருந்தவன் அரிச்சந்திரன் ஆனால் அவனை விஸ்வாமித்திர மகரிஷி எண்ணிலடங்கா தொல்லைகளுக்கு உட்படுத்தினார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே ஏன் அப்படி செய்தார் என்பதை இங்கு காண்போம் .

                   காசி நகரை காசிராஜன் என்னும் மன்னன் ஆண்டு வந்தான் காசிவிஸ்வநாதரிடத்தில் மிகுந்த பக்திகொண்டவன் . அவனுடைய மகள்  மதிவானி அழகும் , அறிவும் ஒருங்கே பெற்றவள் . பருவ வயதை அடைந்த மகளுக்கு  சுயம்வரம்  செய்ய முடிவு செய்து மன்னர்களுக்கு சுயம்வர ஓலை அனுப்பினான் . அதனை ஏற்று வந்த மன்னர்களில் மகத நாட்டு மன்னன் திரிலோசனனும் ஒருவன் மிகுந்த அழகும் கம்பீரமும் உடையவன் .

            சுயம்வரநாளும் வந்தது வந்திருந்த அனைவரையும் வரவேற்று தன்னுடைய நிபந்தனையை கூறினான் , கூண்டினுள் அடைக்கப்பட்ட சிங்கத்தைக் காட்டி இதை யார் வெற்றி கொள்வாரோ அவருக்கு என் மகள் மாலையிடுவாள் என்று கூறினான் . அந்த சிங்கத்தின் தோற்றம் பார்ப்பவரை அச்சப்பட வைத்தது யாவரும் யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில் திரிலோசனன் சிறுத்தும் அச்சமின்றி கூண்டுக்குள் சென்றான் காண்பவரையும் திகைக்க செய்யும் அளவுக்கு பலமான சண்டை சிங்கத்துக்கும் அவனுக்கும் நடந்தது முடிவில் சிங்கத்தை வென்றான் திரிலோசனன் .

                அறிவித்தபடி மதிவானி , மங்கள வாத்தியங்கள் ஒலிக்க வேதங்கள் முழங்க ஆன்றோர் ஆசிகளுடன் திரிலோசனனை மணம் புரிந்தாள் . அனைவரும் ஆனந்தத்துடன் இருந்த அதே நாளில் திரிலோசனன் மாலை வேளையில் கங்கையில் நீராடி விசுவநாதரை வழிபட்டு கொண்டிருக்கும் வேளையில் அவன் மீது பொறாமை கொண்ட மன்னன் ஒருவன் பின்புறமாக வந்து வாளால் அவனை வெட்டிக் கொன்று விட்டான் . இந்த துயரத்தைக் கேள்விப்பட்ட மன்னனும் மக்களும் மிகுந்த துக்கத்தில் ஆழ்ந்தனர் , மதிவானி மயக்கம் அடைந்தாள் , மயக்கம் தெளிந்த பின் எழுந்தவள் துக்கம் தாளாது இனியும் நாம் உயிரோடு இருத்தல் ஆகாது என முடிவெடுத்து தன்னை மாய்த்துக் கொள்ள கங்கையில் குதித்தாள்  .

         
                                                 அப்போது அங்கு நீராட வந்த கௌதம முனிவர் நீரில் தத்தளிக்கும் மதிவானியை காப்பாற்றி கரை சேர்த்தார் . மதிவானி முனிவரின் காலில் விழுந்து வணங்கினாள் . கௌதம முனிவர் தீர்க்க சுமங்கலியாக இருப்பாய் என ஆசிர்வதித்தார் . இதைக் கேட்ட மதிவானி முனிவரிடம் நடந்ததைக் கூற அவரும் என் வாக்கு பொய்க்காது மகளே , நடந்ததை மறந்து தவத்தில் ஈடுபடு உன் இந்த பிறவி முடிந்து அடுத்த பிறவியில் இதே மாங்கல்யத்துடன் நீ பிறப்பெடுப்பாய் இந்த மாங்கல்யம் யார் கண்களுக்கும் புலப்படாது . உன் கணவன் திரிலோசனன் அடுத்த பிறவியில் சூரிய குளத்தில் பிறப்பான் , உன் சுயம்வர நேரத்தில் அவன் கட்டிய மாங்கல்யம் அவனுக்கு புலப்படும் . நீங்கள் திருமணம் புரிந்து பல்லாண்டு காலம் வாழ்வீர்கள் என்று அருளாசி செய்தார் .
                  

                                         கௌதம முனிவரின் ஆலோசனையின் படி அவரின் ஆசியோடு அவரின் ஆசிரமத்திலேயே தன தவத்தை மேற்கொண்டாள் . சில காலத்தில் அவளுடைய இந்த பிறவிக்கு முடிவுக்கு வந்தது . அடுத்த பிறவியில் மதிவானி , சந்திரமதியாகவும் , திரிலோசனன் அரிச்சந்திரனாகவும் பிறந்தனர் . சந்திரமதி சுயம்வர நாளில் யார் கண்ணுக்கும் புலப்படாத மாங்கல்யம் அரிச்சந்திரனுக்கு தெரிய அரிச்சந்திரன் சந்திரமதியை மனம் புரிந்தான் . இனிதான இல்லறத்தின் பொருட்டு ஒரு ஆன் மகவை ஈன்றெடுத்தாள் சந்திரமதி அக்குழந்தைக்கு லோகிதாசன் என்று பெயரிட்டு வளர்த்து வந்தார்கள் .

                      இப்படி இருக்கும் பொழுது ஒரு நாள் தேவலோகத்தில் இந்திரன் தன்னுடைய சபையினால் பூமியில் உள்ள மன்னர்களில் யார் சிறந்தவன் என்று கேட்க அங்கு இருந்த வசிஷ்ட முனிவர் , சந்தேகமென்ன என் சிஷ்யன் அரிச்சந்திரன் சிறந்தவன் தன தலையே போனாலும் சத்தியத்தை விடாதவன் அவனே சிறந்தவன் என்றார் . அதை மறுத்த விஸ்வாமித்திரர் , சந்தர்ப்பங்கள் வந்தால் அரிச்சந்திரன் சத்தியத்தை மீறுவான் அதை நான் நடத்திக் காட்டுகிறேன் என்று கூறினார் .

                         கூறியதைப்போல அரிச்சந்திரன் வாழ்க்கையில் பெரும் புயலென துன்பங்களைத் தந்தார்.  அவனுடைய ஆட்சி இழந்து மனைவி , மகனை பிரிந்து மயானத்தில் பிணம் எரிக்கும் நிலைக்கும் சென்றான் அப்படி இருந்த போதிலும் தன்னுடைய சத்தியத்தை அவன் காத்து நின்றான் . மகிழ்ந்த விசுவாமித்திர மகரிஷி அவனுக்கு அருள் செய்து இழந்த அனைத்தையும் அவனுக்கு வழங்கி ஆசி புரிந்தார் . அவனும் நல்லாட்சி புரிந்து நற்கதியை அடைந்தான் . அது சரி எதற்காக தவத்தில் சிறந்த விஸ்வாமித்திரர் அரிச்சந்திரனை இவ்வளவு துன்பத்திற்கு ஆளாக்க வேண்டும் .

முற்பிறவியில் திரிலோசனனான அரிச்சந்திரன் , விசுவாமித்திர மகரிஷியிடம் தனக்கு பிறவா நிலையை அருள வேண்டும் சுவாமி என்று பணிந்து நின்றான் . அதற்கு அவர் , திரிலோசனா ! உன் ஊழ்வினையின்கண் நீ பல பிறப்பெடுக்க வேண்டி உள்ளது அவை அனைத்தையும் ஒரே பிறவியில் நீ அனுபவித்து சத்தியம் தவறாமல் வாழ வேண்டும் முடியுமா ? என்று கேட்டார் சம்மதித்த திரிலோசனன் , அரிச்சந்திரனாக பிறப்பெடுத்து தன்னுடைய வினைகளையெல்லாம் ஒரே பிறவியில் அனுபவித்து பிறவாத பெரும் பேரை அடைந்தான் . அவனை துன்புறுத்த அவனுக்கு சோதனைகள் இல்லை அவன் வினைகளை கழிக்கவே சோதனைகளை தந்தார் விசுவாமித்திர மகரிஷி .

                  
                    அரிச்சந்திரன் அளவுக்கு துன்பபட்டவர் யாரும் இல்லை , அவனும் தன்னுடைய வினையை கழிக்க துன்பத்தை மகிழ்சசியாய் ஏற்று கொண்டதைப்போல நாமும் நம் துன்பங்களை எல்லாம் வினைகளை ஒழிக்க ஈசன் தந்தது என்று மகிழ்வுடன் ஏற்று அவன் பாதமே தஞ்சம் என்று இருந்தால் எந்த துன்பமும் , தீவினையும் நம்பால் அணுகாது சத்தியம் .

ஹோமம் செய்வதால் ஏற்படும் அனைத்து நன்மைகளும் சாம்பிராணி போடுவதின் மூலம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்?


சாம்பிராணி போடுவது என்பது வெறும் வாசனைக்காக மட்டும் அல்ல, அதில் பல்வேறு நன்மைகள் அடங்கியுள்ளது. சாம்பிராணி போடுவது வீட்டில் ஹோமம் செய்வதற்கு நிகரான ஒன்றாகும்.

ஹோமம் செய்வதால் ஏற்படும் அனைத்து நன்மைகளும் சாம்பிராணி போடுவதின் மூலம் கிடைத்து விடும். சாம்பிராணியில் தூபம் போட்டால் கண் திருஷ்டி, பொறாமை ஆகியவை நீங்கி முன்னேற்றம் கிடைக்கும்.

சாம்பிராணியில் அகில் போட்டு தூபமிட குழந்தைபேறு உண்டாகும்.

சாம்பிராணியில் தூதுவளையை போட்டு தூபமிட வீட்டில் தெய்வ அருள் நிலைத்திருக்கும்.

சாம்பிராணியில் சந்தனத்தை போட்டு தூபம் போட லட்சுமி கடாட்சம் கிடைக்கும்.

சாம்பிராணியில் அருகம்புல் பொடியை போட்டு தூபமிட சகல தோஷங்களும் நிவர்த்தி ஆகும்.

சாம்பிராணியில் வெட்டிவேரை போட்டு தூபமிட காரியசித்தி உண்டாகும்.

சாம்பிராணியில் வேப்பிலையை போட்டு தூபமிட சகல நோய்களில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும்.

சாம்பிராணியில் வெண்கடுகை போட்டு தூபமிட பகைமை விலகும்.

சாம்பிராணியில் வெண்குங்கிலிய பொடியை போட்டு தூபமிட துஷ்ட சக்திகள் விலகும்.

சாம்பிராணியில் ஜவ்வாதி போட்டு தூபமிட திடீர் அதிர்ஷ்டம் உருவாகும்.

சாம்பிராணியில் வேப்பம்பட்டையை போட்டு தூபமிட ஏவல் பில்லி சூன்யம் ஆகியவை விலகும்.

சாம்பிராணியில் நாய் கடுகை போட்டு தூபமிட துரோகிகள் நம்மை விட்டு விலகுவார்கள்.

சாம்பிராணியில் காய்ந்த துளசியை போட்டு தூபமிட்டால் காரியத்தடை மற்றும் திருமணத்தடை ஆகியவை விலகும்.

சாம்பிராணியில் கரிசலாங்கண்ணி பொடியை போட்டு தூபமிட மகான்களின் ஆசிகள் கிடைக்கும்.

சாம்பிராணியில் நன்னாரி வேரின் பொடியை போட்டு தூபமிட சகல ஐஸ்வர்யம் கிடைக்கும்.

சாம்பிராணியில் மருதாணி இலை பொடியை போட்டு தூபமிட மகாலட்சுமி வாசம் நிலைக்கும்.

சாம்பிராணி அல்லது தூபம் தரும் பலன்கள்.

சாம்பிராணி காட்டுவது என்பது நம் தொன்று தொட்டு இருக்கும் ஒரு வழக்கம். 
அது எந்தந்த நாட்களில் இறைவனுக்கு காட்டினால் எந்தெந்த பலன்கள் கிடைக்கும்.

ஞாயிறு அன்று சாம்பிராணி அல்லது தூபம் காட்டினால் - ஆத்ம பலம், சகல செல்வாக்கு,புகழ் உயரும், ஈஸ்வர அருள் கிட்டும்.

திங்கள் அன்று சாம்பிராணி அல்லது தூபம் காட்டினால் – தேக,மன ஆரோக்கியம்,மன அமைதி, அம்பாள் அருள் கிடைக்கும்.

செவ்வாய் அன்று சாம்பிராணி அல்லது தூபம் காட்டினால் – எதிரிகளின் போட்டி,பொறாமை மற்றும் தீய-எதிர் மறை எண்ணங்களின் மூலம் உண்டான திருஷ்டி கழிதல், எதிரிகளின் தொல்லை நீங்குதல், முருகனின் அருள் ,கடன் நிவர்த்தி போன்ற பல நல்ல பலன்கள் கிட்டும்.

புதன் அன்று சாம்பிராணி அல்லது தூபம் காட்டினால் – நம்பிக்கை துரோகம், சூழ்ச்சிகளில் இருந்து தப்புதல், நல்ல சிந்தனை வளர்ச்சி, வியாபார வெற்றி, சுதர்சனரின் அருள் கிட்டல் போன்ற பல நல்ல பலன்கள் கிட்டும்.

வியாழன் அன்று சாம்பிராணி அல்லது தூபம் காட்டினால் – சகல சுப பலன்கள், பெரியோர்கள் குருமார்கள் ஆசி கிட்டுதல், அத்துடன் சித்தர்களின் மனம் குளிரும், முன்னேற்றங்கள் தொடரும் கிட்டும்.

வெள்ளி அன்று சாம்பிராணி அல்லது தூபம் காட்டினால் - லட்சுமி கடாட்சம், சகல காரிய சித்தி போன்ற பல நல்ல பலன்கள் கிடைக்கப் பெறும்.

சனி அன்று சாம்பிராணி அல்லது தூபம் காட்டினால் – சோம்பல் நீங்குதல், சகல துன்பங்கள் நீங்கி சனி பகவான், பைரவர் போன்றோரின் அருள் கிட்டும்.

சென்ற பிறவி ரகசியம்

எங்கிருந்து வந்தோம் தெரியாது ?

எங்கே போக போகபோகிறோம் அதுவும் தெரியாது.  இடை பட்ட காலத்தில் இது ஒரு நாடக மேடை. நாம் எல்லாம் நடிகர்கள்.
யார் பெத்த பொண்ணுக்கோ கணவராக,  யாரோ ஒருவருக்கு மனைவியாக,  பிறக்கும் பிள்ளைகளுக்கு தகப்பனாக, பெற்ற தாய் தந்தையருக்கு மகனாக. மாமனாக, மச்சானாக, சகோதரனாக, சகோதரியாக  இப்படி பல வேடங்களை போடுகிறோம்.
நாடகம் முடிந்ததும் போகிறோம்.  இந்த ரகசியம் அறிந்தது பிரம்மா என்கிறார்கள். அந்த ரகசியத்தை முன் பிறவி என்கிறோம்.
முன் பிறவி ரகசியம் என்பதே, அது ஏழு கடல் தாண்டி, ஏழு மலை தாண்டி, அக்கினி நீருற்றை கடந்தது சென்றால்..கிளியின் உடம்புக்குள் இருக்கும் மந்த்திரவாதி உயிர் மாதிரி, பல்வேறு மர்மங்கள் நிறைந்தது முன் பிறவி ரகசியம்.
இதை அகத்தியர் தீர்த்து வைகைக்காமல் இல்லை.  தன் காலத்திலேயே ஓலை சுவடிகளில் இதை பற்றிய குறிப்புகளை தந்திருக்கிறார்.
இப்போது பிறவி எடுத்திருக்கும் மனிதர்களில் யாருக்கு அதை பற்றி தெரிந்து கொள்ளும் பாக்கியம் இருக்கிறதோ, அவர்களுக்கு மட்டுமே ஓலைகளில் எழுத பட்டு இருக்கிறது. 
இது உண்மையே. 
பொதுவாக ஜோதிட சாஸ்த்திரத்தில் கர்ம வினை கிரகம் என்கிற ராகு கேது முக்கியமானவர்கள்.  இதற்கு அடுத்த படியாக  குரு முக்கியமானவர். முதலில் ராகு கேது.
இருப்பது ஒன்பது கிரகங்கள்.  இதில்  ராகு கேது தவிர்த்து,  ஏனைய ஏழு கிரகங்களும் பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திர கிரகங்கள் என்று சொல்லபடுகிறது. 
என்றாலும் இந்த ஏழு கிரகங்களும் தேவர்களே. மீதம் இருக்கும் ராகுவும் கேதுவும் அரக்கர் இனத்தை சேர்ந்தவர்கள்.  இரக்க குணம் குறைந்தவர்கள், துர்சிந்தனை நிறைந்தவர்கள்.
இவர்கள் 1 . 7 இல் இருந்தால் நாக தோஷம் என்றும்,  5 . 9 இல் இருந்தால் பிரம்மகத்தி தோஷம் என்றும் சொல்ல படுகிறது.

அதாவது முன் பிறவியில் பாம்பு புற்றை உடைத்து,  பாம்புகளை அடித்து கொன்ற பாவம் இந்த பிறவியில் நாக தோஷமாக வருகிறது என்பார்கள்.  இந்த நாக தோஷம் என்பது ஜோடி பாம்புகளை கொன்றவர்களுக்கும், ஜோடி பாம்புகளில் ஒன்றை கொன்றவர்களுக்கும் வருகிறது.
அதனால் தான் திருமண வாழ்க்கை அமைய தடை,  மீறி அமையும் வாழ்க்கையில்  குழப்பம், கணவன் மனைவிக்கு இடையே  கருத்து வேறுபாடுகள்,  பிரிவினை, விவகாரத்துகளையும் தந்து விடுகிறது.
அதே சமயம் 5 . 9 இல் இருக்கும் பொது பிரம்மகத்தி தோஷம் என்று சொல்ல பட்டாலும்,  புத்திர சோகத்தை தருகிறது.  காரணம் குட்டி பாம்புகளை கொன்ற குற்றம்.

இப்பிறவில் குழந்தை பிறப்பில் தாமதம், பிறந்த பிள்ளைகளால் கவலை, பெற்றோரை மதிக்காத துர்குணம் கொண்ட பிள்ளைகள்,  பிறந்த பிள்ளைகள் அகால மரணம் என்று புத்திர சோகத்தில் ஆழ்த்துகிறது.
என்னதான் ரேகை கொண்டு சொன்னாலும்,  ஜாதகம் கொண்டுதான் பலன் சொல்லபடுகிறது.   ஜோதிட சாஸ்த்திரத்தில் குருவும், சூரியனும் சிவனை குறிக்கும் கிரகங்கள். 
இந்த சூரியனோடும், குருவோடும் சனியோ,  ராகுவோ, கேதுவோ பிறப்பு ஜாதகத்தில் சேர்ந்து இருந்தால்,  அது ஒரு வகையான பிரம்மகத்தி தோஷம். 
அதாவது... முன் பிறவியில் சிவன் சொத்தை அழித்தவர்கள், சிவனடியார்களை  வதைத்தவர்கள்,  சிவ நிந்தனை செய்தவர்கள் என்று அர்த்தம். அதனால் இந்த பிறவியில் பல துன்பங்களை சந்திக்க வேண்டி வருமாம்.
மேலும் இந்த பிறவி தொடர்பாக ஒரு தகவலும் உண்டு.
உதாரணமாக பரணி  நட்சத்திரத்தில் ஒருவர் பிறப்பதாக வைத்து கொள்வோம்.   அவரின் ஆரம்ப திசை சுக்கிர திசையாக அமையும்.  சுக்கிர திசை என்பது 20 வருடம் கொண்டது. 
ஆனால் அவர் பிறக்கும் போது இருப்பு  திசையாக  5 வருடம் 6 வருடம் அல்லது 10 வருடம்  என்று குறைந்த அளவே தசையாக வருகிறது. 

*காரணம் என்ன ?*
முன் பிறவியில் பெற்ற ஜென்மாவில் அவரின் இறுதி காலத்தில் சுக்கிர திசை நடப்பில் இருந்த போது தான் இறந்து போனார்.  சுக்கிர திசையின் மொத்த வருடமான 20 வருடத்தில்,  இறக்கும் போது இருந்த மீதம் என்னவோ, அதையே  இப்பிறவில் மீதமுள்ள திசையாக கொண்டு பிறந்த்திருப்பார் என்பது ஜோதிட ரகசியம்.
நாடி ஜோதிட பிரகாரம் குரு தான் அந்த ஜாதகரை குறிக்கும் கிரகம்.  இப்போது அவர் ஜாதகத்தில் குரு எந்த வீட்டில் இருக்கிறாரோ, அதற்கு முதல் வீட்டில்  சென்ற பிறவியில் குரு இருந்திருப்பார்.  மற்ற கிரகங்கள் மாறாது.
ஒருவர் சென்ற பிறவியில் எந்த குலத்தில் பிறந்தார் என்பதை,  இப்போதைய சந்திரன் இருக்கும் இடத்திற்கு 5 ம் இடமே சொல்லும்.
ஒருவர் மீன ராசியில் பிறந்தால்,  அவர் ராசி படி 5 ம் இடமாக கடகம் வருகிறது,  அந்த வீட்டற்கு உரிய கிரகம் சந்திரன் வருகிறார். 
சந்திரன்  கடல் கடந்த வாணிபத்தை குறிப்பவர்.   அதாவது வியாபாரம் செய்யும் குடும்பம்.   ஆக ஜாதகர் வைசிய குலத்தில் பிறந்திருப்பார்.
அந்த வகையில் கீழ்காணும் வகையில் அட்டவணை அமையும். இது நாடி ஜோதிட விதி.

நீங்கள் பிறந்த ராசிக்கு 5 ம் இடமாக .......
*மேஷம்,  தனுசு  - சத்திரிய குலம்.*   
அதாவது அரச வம்சம், ஜமீன் பரம்பரை, அரச நிர்வாக அதிகாரிகள் போன்ற குலத்தில் பிறந்தவர்.
*ரிசபம், கடகம், கும்பம், மீனம், வைசிய குலம்.*  
அதாவது... வியாபாரம் செய்யும் குடும்பத்தில் பிறந்தவர்.
*மிதுனம், சிம்மம், விருச்சிகம், மகரம்  பிராமண குலம்.*  
அதாவது கோவில் பூஜை  மற்றும் புரோகிதம் செய்யும் குலத்தில் பிறந்தவர்.
*கன்னி துலாம்  சூத்திர குலம்.*
இங்கே சொல்லப்படும் சூத்திர குலம் என்பது, உழைப்பாளிகள் குடும்பத்தில் பிறந்தவர் என்பதும்.  அவரின் தாய் தந்தையர் உழைப்பையே மூலதனமாக கொண்டு வாழ்க்கை நடத்தியவர்கள் என்பதும் புலனாகிறது.

தாலியின் மகிமையும் அணிவதன் முக்கியத்துவமும்


திருமணம் ஒரு பெண்ணின் வாழ்வை மாற்றுகிறது. தாலி அதை உறுதிப்படுத்துகிறது. அந்த மங்கலநாண் திருமணத்தின் போது பொதுவாக ஒன்பது இழைகளால் .ஆனதாக அணிவிக்கப்படுகிறது. அவை வாழ்கையின் ஒன்பது தாத்பரியங்களை குறிக்கிறது.

அவை-
1. வாழ்க்கையை உள்ளது உள்ளபடி புரிந்து கொள்ளுதல்
2. மேன்மை
3. ஆற்றல்
4. தூய்மை
5. தெய்வீக நோக்கம்
6. உத்தம குணங்கள்
7. விவேகம்
8. தன்னடக்கம்
9. தொண்டு
ஆகியவற்றைபிரதிபலிக்கின்றன.

இவற்றை ஒரு பெண் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற கருத்தில் மாங்கல்யம் அமைக்கப்பட்டதாக காயத்ரி மந்திரம் குறிப்பிடுகிறது. தாலி என்பது திருமணத்தின் போது ஆண் பெண்ணுக்கு கட்டும் ஒருவகை கழுத்து சங்கிலி ஆகும். தாலி அணிந்த பெண் திருமணமானவள் என்பது தாலியின் முக்கிய குறியீடு
.
தாலி கட்டும் வழக்கம் இந்து திராவிட மக்களிடம் காணப்படுகிறது. தாலம் பனை என்ற பனை ஓலையினால் செய்த ஒன்றையே பண்டைக்காலத்தில் மணமகன் மணமகள் கழுத்தில் கட்டி வந்தபடியால் இதற்குத் தாலி என்ற பெயர் வந்தது. தாலமாகிய பனை ஓலையினால் செய்தது என்பது இதன் பொருள். பனை ஓலைத் தாலி அடிக்கடி பழுதுபட்டதால் நிரந்தரமாக இருக்க உலோகத்தால் ஆன தாலி செய்து பயன்படுத்தினர். பின்னாளில் அதனைப் பொன்னால் செய்து பொற்றாலி ஆக்கினர். ஆயின் தாலியின் உண்மையான அடையாளம் பொன்னில் செய்வதால் அல்ல. வெறுமே ஒரு விரலி மஞ்சளை எடுத்துக் கயிற்றால் கட்டி கழுத்தில் முடிச்சுப் போடுவது கூடத் தாலி தான்.

(இயல் மஞ்சளை எடுத்து, வெய்யிலில் காயவைத்து, நீரில்லாமல் வற்றவைத்த மஞ்சளுக்குத் தான் விரலி மஞ்சள் என்று பெயர். விரல் விரலாய் இருக்கும் மஞ்சள் விரலி மஞ்சள். மஞ்சள் கட்டும் கயிற்றுக்கும் மஞ்சள் நிறம் ஏற்றுவார்கள்.) தாலியின் சூழ்க்குமம் “மஞ்சள், கயிறு, கட்டுதல்” ஆகியவற்றில் அடங்கி இருக்கிறதே ஒழிய, பொன், பணம், சங்கிலி என்பதில் இல்லை.இன்னார் மகன், இன்னார் மகளை இன்னார் சம்மதத்துடன் இன்னார் முன்னிலையில் இந்த நேரத்தில் இந்நாளில் கல்யாணம் செய்துகொள்வதாக அனைவரும் கையொப்பமிட அந்த தாளினை கயிற்றில் கோர்த்து மணமகளின் கழுத்தில் மணமகன் கட்டியதாக ஆய்வு சொல்கிறது.

சுத்துரு, சுத்திரி, மாங்களியம், மங்கலியம், மங்கலவணி என சொல்லும் தாலியை – மண அடையாள வில்லையைக் குறிக்கும் தாலி என்பது மஞ்சள் பொருத்திய நாணை முதலில் குறித்திருக்க வேண்டும்;
பின்னால் செல்வம் படைத்தோரால் அந்த மஞ்சள் பொன்னாகி இருக்கிறது. (உடனே பொன் தான்,தாலியின் அடையாளம் என்று நாம் பொருள் கொள்ளக் கூடாது. மஞ்சள் தான் அதன் அடையாளம்.) மற்றும் ‘ஐம்படைத் தாலி, மாமைத் தாலி (ஆமைத் தால]. புலிப்பல் தாலி, புலிநகத் தாலி ,அம்மன் தாலி போன்றவையும் இருந்து இருக்கிறது.

திருப்பதி கோவில் பற்றிய அரிய தகவல்கள்



*திருப்பதி பெருமாளுக்கு* எத்தனை வகை அலங்காரம், ஆடை,ஆபரணம்,பிரசாதம் தெரிந்து கொள்வோம்.....



*தெய்வச் சிலைகள் பொதுவாக கருங்கல்லில் செதுக்கப்பட்டிருக்கும்.* எங்காவது ஒரிடத்திலாவது சிற்பியின் உளி பட்ட இடம் தெரியும். ஆனால், இப்படி எவ்விதமான அடையாளத்தையும் வெங்கடாஜபதி சிலையில் காணமுடியாது. அது மட்டுமல்ல! சிலையில் வடிக்கப் பட்டுள்ள நெற்றிச் சுட்டி, காதணிகள், புருவங்கள், நாகாபரணங்கள் எல்லாம் *பாலீஷ் போட்ட நகைபோல பளபளப்பாக மின்னுகின்றன...*


*திருமலை 3000 அடி உயரத்தில் உள்ள குளிர்பிரதேசம்.* இருந்தாலும், அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீரால் அபிஷேகம் செய்யும் போதும், 

*பெருமாளுக்கு வியர்த்துவிடும்.* பீதாம்பரத்தால் அந்த வியர்வையை ஒற்றி எடுப்பார்கள். 
ஏனெனில், ஏழுமலையான் சிலை எப்போதும் *110 டிகிரி பாரன்ஹுட்* வெப்பத்திலேயே இருக்கும் இது ஒரு அதிசயம் தானே! ஒவ்வொரு வியாழக் கிழமையும், ஏழுமலையானுக்கு அபிஷேகம் செய்வதற்கு முன்னதாக நகைகளைக் களைவர். 

*அப்போது ஏழுமலையானின்* ஆபரணங்கள் சூடாகக் கொதிப்பதை உணர்கின்றனர்.



*இங்குள்ள மடைப்பள்ளி மிகவும் பெரியது.* 
இங்கு லட்டு, பொங்கல், தயிர்சாதம், புளிச்சாதம், வடை, முறுக்கு, ஜிலேபி, அதிரசம், போளி, அப்பம், பாயாசம், தோசை, ரவாகேசரி, பாதாம்கேசரி, முந்திரிப்பருப்பு கேசரி ஆகியவை தினமும் தயாராகின்றன. *இதில் லட்டு புகழ்பெற்ற முதலிடம் பெற்று விளங்குகிறது.*


*ஏழுமலையானுக்கு ஒருபுதிய மண்சட்டியிலேயே பிரசாதம் படைப்பர்.* தயிர்சாதம் தவிர வேறு எந்த நைவேத்யமும், கர்ப்பகிரகத்திற்கு முன்னுள்ளகுலசேகரப்படியைத் தாண்டுவதில்லை. *இந்த மண்சட்டியும், தயிர்சாதமும் பிரசாதமாக கிடைப்பதை வாழ்வில் மிகப்பெரிய பாக்கியமாகப் பக்தர்கள் கருதுகின்றனர்...*


*பெருமாளுக்கு உடுப்பு மிகவும் பிரத்யேகமாகத் தயாரிக்கப்படுகிறது.* 
ஒரு முழம் நீளமும், ஆறு கிலோ எடையும் கொண்ட பட்டுப்புடவை பீதாம்பரமே இவருக்குரிய ஆடையாகத் திகழ்கிறது. இதை பெருமாளுக்கு சாத்த அலுவலகத்தில் 12 ஆயிரத்து 500 ரூபாய் செலுத்த வேண்டும். 


*இந்த ஆடைக்கு மேல்சாத்து வஸ்திரம் என்று பெயர்.* வெள்ளியன்று மட்டுமே இதை அணிவிக்க முடியும். 
பணம் செலுத்தியவர்கள் வஸ்திரம் சாத்த 3 வருடங்கள் காத்திருக்க வேண்டும்.

*உள்சாத்து வஸ்திரம் என்ற ஆடையையும்* பெருமாளுக்கு அணிவிப்பர். 
இதற்குரிய கட்டணம் 20 ஆயிரம் ரூபாய். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 15 வஸ்திரங்கள் சாத்துவதற்கு அனுமதிக்கிறார்கள். 

பணம் செலுத்தியபின் இதை அணிவிக்க 10 வருடங்கள் காத்திருக்கவேண்டும்.

*பக்தர்கள் சமர்ப்பிக்கும்* வஸ்திரங்கள் தவிர, அரசாங்கம் சமர்ப்பிக்கும் வஸ்திரங்களை ஆண்டுக்கு இரண்டு முறை *பெருமாளுக்கு அணிவிக்கின்றனர்.*



*ஏழுமலையானின் அபிஷேகத்திற்கு* *எங்கிருந்து பொருட்கள் வருகிறது* *தெரியுமா ?* 



*ஸ்பெயினில் இருந்து குங்குமப்பூ,*
நேபாளத்தில் இருந்து கஸ்தூரி, 
சீனாவில் இருந்து புனுகு, 
பாரீசில் இருந்து வாசனைத் திரவியங்கள் வருகின்றன. 
ஒரு தங்கத் தாம்பாளத்தில் சந்தனத்தோடு கரைக்கப்பட்டு அபிஷேகம் செய்யப்படும். 51 வட்டில் பால் அபிஷேகம் செய்தபின், கஸ்தூரியும், புனுகும் சாத்துவர்.

*தினமும் காலை 4.30- 5.30 மணிக்குள் அபிஷேகம் நடக்கும்.* அபிஷேகத்திற்கு ஆகும் செலவு ஒரு லட்சம். 
பணம் செலுத்தியவர்கள் 3 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டும்.

*பெருமாளுக்குரிய ரோஜாப்பூக்கள் ஐரோப்பாவில் உள்ள* ஆம்ஸ்டர்டாமில் இருந்து விமானத்தில் கொண்டு வரப்படுகின்றன. 

*ஒரு ரோஜாப்பூவின் விலை ரூ.80. பக்தர்களின் செலவிலேயே இந்தப் பூக்கள் வந்து சேர்கின்றன....*


*சீனாவில் இருந்து கற்பூரம்,* 
*அகில், சந்தனம், அம்பர், தக்கோலம், லவங்கம், குங்குமம், தமாலம்,* நிரியாசம் போன்ற வாசனைப்பொருட்கள் கொண்டு வரப்படுகின்றன.

*ஏழுமலையானின் நகைகளின்* மதிப்பு பல ஆயிரம் கோடி ரூபாய். 
இவருடைய நகைகளை வைத்துக் கொள்ள *இடமும் இல்லை.* 
*சாத்துவதற்கு நேரமும் இல்லை.*

*ஏழுமலையான் சாத்தியிருக்கும்* சாளக்கிராம தங்கமாலை 12 கிலோ எடை கொண்டது. 

*இதை 3 அர்ச்சகர்கள் சேர்ந்து தான்* சாத்தமுடியும். சூரிய கடாரியின் எடை 5 கிலோ. ஒற்றைக்கல் நீலம் மட்டும் 100 கோடி மதிப்பு கொண்டது. 

*உலகிலேயே இதைப்போன்ற நீலக்கல் வேறு கிடையாது.*



*பல்லவர்கள்*, *சோழர்கள்,* *பாண்டியர்கள்*, *விஜயநகர மன்னர்கள்* பெருமாளுக்கு காணிக்கைகளைச் செலுத்தியுள்ளனர். ராஜேந்திரச்சோழன், கிருஷ்ண தேவராயர், அச்சுதராயர் ஆகியோருடைய *திருப்பணிகள் கல்வெட்டு மற்றும் செப்பேடுகளில் பொறிக்கப்பட்டுள்ளன...*

*மராட்டிய மன்னர் ராகோஜி போன்ஸ்லே* மிகப்பெரிய எமரால்ட் பச்சைக்கல்லை பெருமாளுக்கு காணிக்கையாக்கியுள்ளார். 

இப்பதக்கம் இவருடைய பெயரிலேயே அழைக்கப்பட்டு வருகிறது. 
இக்கோயிலில் பலதிருப்பணிகள் செய்த கிருஷ்ணதேவராயர் தனது மனைவியுடன் நிற்கும் சிலை கோயிலில் உள்ளது. கோயிலுக்குள் வரிசையில் செல்லும் போது இதைக் காணலாம்.

அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்வதற்கான வெள்ளி வெங்கடாஜபதி விக்ரகம் *966ம் ஆண்டில் செய்யப்பட்டதாகும்.* 

*பல்லவ மன்னன்* சக்திவிடங்கனின் மனைவி காடவன் பெருந்தேவி இந்த விக்ரகத்திற்குரிய நகைகள் தந்துள்ளார்.

*வெள்ளிக்கிழமைகளிலும்,* 
*மார்கழி மாதத்திலும் பெருமாளுக்கு வில்வார்ச்சனை செய்யப்படுகிறது...*

*மகா சிவராத்திரியில்* ÷க்ஷத்ரபாலிகா என்ற உற்சவம் நடைபெறும். அன்று உற்சவர் வைர விபூதி நெற்றிப்பட்டை அணிந்து திருவீதியுலா எழுந்தருள்வார். தாளப்பாக்கம் அன்னமய்யா ஏழுமலையானையே பரப்பிரம்மமாகவும், சிவாம்சமாகவும், சக்தி அம்சமாகவும் பாடிய பாடல்கள் சிறப்பானவை. 

*அபிஷேகத்தின் போது ஏழுமலையான் தன்னுடைய மூன்றாவது கண்ணைத் திறக்கிறார் என்றொரு ஐதீகம் உள்ளது.*

திருமலை திருப்பதி கோயில் ஸ்தலவிருட்சம் *புளியமரம்.*

சாத்வீக கோலத்தில் இருந்தாலும் தெய்வீக கோலங்களில் ஆயுதம் இடம் பெற்றிருக்கும். ஆனால், திருமலையில் ஏழுமலையான் எவ்விதமான ஆயுதமும் பிடிக்காமல் *நிராயுதபாணியாக சேவை சாதிக்கிறார்.*

*ஆங்கிலேயர்களில்* சர்தாமஸ் மன்றோ, கர்னல் ஜியோ ஸ்டிராட்டன், லெவெல்லியன் என்ற வீரர் ஆகியோர் பெருமாளின் பக்தர்களாக இருந்ததோடு பல நேர்த்திக்கடன்களைச் செலுத்தியுள்ளனர். இதில் இன்று வரை பெருமாளுக்கு மன்றோ தளிகை என்றொரு ஒரு நிவேதனம் ஆங்கிலேயர் பெயரால் அளிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.



*திருப்பதி அலமேல்மங்கைக்குரிய* ஆடைகத்வால் என்னும் ஊரில் பருத்தியில் தயாரிக்கப்படுகிறது. 
செஞ்சு இனத்தைச் சேர்ந்த நெசவாளர்கள் இதை பயபக்தியுடன் நெய்கிறார்கள். தாயாரின் திருமேனியில் படும் இந்த *ஆடையை நெய்யும் போது மூன்றுவேளை குளிப்பதும், மாமிசம் உண்ணாமல் இருப்பதும் ஆகிய* நடைமுறைகளைத் தவறாமல் பின்பற்றுகின்றனர்.

*ஏழுமலையான் அபிஷேக நீர் குழாய் மூலம் இங்குள்ள புஷ்கரணியிலேயே (கோயிலை ஒட்டிய தெப்பக்குளம்) மீண்டும் கலக்கிறது.* ஏழுமலையானின் திருமேனியில் பட்டதால் அந்நீரின் புனிதத்தன்மையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது...

*1180 கல்வெட்டுகள் இங்கு உள்ளன.*
*இதில் 1130 கல்வெட்டுகள் தமிழ்*
மொழியிலும், 
*50 கல்வெட்டுகள் தெலுங்கு*
மற்றும் *கன்னடமொழியிலும்* அமைந்துள்ளன.

இந்த தகவல்கள் திருமலை திருப்பதி கோயில் ஏடுகளில் இருந்து எடுக்கப்பட்டவை.

Saturday, 23 May 2020

சுப்ரபாதம் என்பதன் பொருள் என்ன?


பா எனில் வெளிச்சம். ப்ரபாதம் எனில் காலைப்பொழுது. சுப்ரபாதம் எனில் இனிய காலைப் பொழுது என்று அர்த்தம்.

வடமொழியில் சு எனும் எழுத்து ஒரு சொல்லுக்கு முன்னர் சேர்க்கப்பட்டால் உயர்ந்பொருளை நல்கும்.

 பாக்ஷிதம்-வார்த்தைகள், சுபாக்ஷிதம்-நல்வார்த்தைகள். 
கன்யா-பெண், சுகன்யா-நல்லப் பெண். இதுபோன்று சுப்ரபாதம் என்பது நல்ல இனிய காலைப் பொழுது.

காலையில் கடவுளை இந்துதிகளால் வழிபடுவதன் மூலம் நாம் கடவுளுக்கு காலை வணக்கம் சொல்வதாகவும், இவை கடவுளுக்கு மட்டுமல்லாமல் அனைத்து ஜீவராசிகளையும் எழுப்பும் விதமாகவும் இதனால் நாமும் புத்துணர்ச்சி பெறுவதும் அனுபவ உண்மை.

இவை அனைத்து கடவுளுக்கும் பல மகான்கள் அருளியிருக்கிறார்கள். இவற்றை காலையில் கேட்பதே உயர்ந்தது. எனினும், மற்ற காலங்களில் கடவுளின் நாமாவளிகளின் தொகுப்பு என்ற மட்டில் கேட்கலாம் தவறில்லை. எனினும், விடியற்காலையில் கேட்பதே பொருத்தமானது.

சுப்ரபாத பலன்கள் ..

அதிகாலையில் நம் இல்லங்களில் ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம் ஒலித்தால் வீட்டில் மங்களம் நிறையும். திருமகள் கடாட்சமும் பெருகும். திருவெங்கடமுடையோனின் சன்னதியில் தினந்தோறும் காலை வேலைகளில் நடைபெறுகின்ற வைபவங்களை அழகுறக் கண்முன் நிறுத்துகின்ற ஆனந்த வலிமையும் சுப்ரபாதத்திற்கு உண்டு.

கலியுக தெய்வமாகிய ஸ்ரீ வெங்கநாதனை துதிப்போர் திருமகள் அருள்பெற்று வளமான வாழ்வுதனைப் பெறலாம் என்பதில் சிறிதளவும் சந்தேகமில்லை.

ஓம் நமோ வேங்கடேசாய..!

விநாயகர் பிரம்மச்சாரியா அல்லது திருமணம் ஆனவரா ?



விநாயகர் பிரம்மச்சாரியா அல்லது சித்தி, புத்தியுடன் திருமணம் ஆனவரா?
முருகப்பெருமான் பாலசுப்பிரமணியராக இருக்கும் போது பிரம்மச்சாரியாக உள்ளார். வள்ளி, தேவசேனாவுடன் இருக்கும் போது திருமணமானவர் என்கிறோம். 

அது போலத்தான். பால கணபதி பிரம்மச்சாரி, திருமணமான பிறகு சித்தி, புத்தி சமேத கணபதி என்று போற்றப்படுகிறார். இன்னொரு விஷயம் உலகியல் திருமணங்களோடு இவற்றை ஒப்பிட்டுப் பேசக் கூடாது. தம்மை வழிபடுபவர்களுக்கு வெற்றியைத் தருபவர் என்பதை சித்தி தேவியும், நல்லறிவைத் தருபவர் என்பதை புத்தி தேவியும் குறிக்கிறார்கள்.

விநாயகருக்கு திருமணம் நடந்த கதை

           பிரம்மன் சோர்ந்து விட்டார். படைப்புத் தொழிலில் ஈடுபட்டிருந்த அவருக்கு விரக்தி ஏற்பட்டது. என்ன காரணம்?

எண்ணற்ற உயிரினங்களை ஒவ்வொன்றாகப் படைத்துக்கொண்டே வந்த அவர், அவற்றில் இருந்த சில குறைபாடுகளை உணர ஆரம்பித்தார். பிறவிகளில் குறை இருக்கலாம். ஆனால், அவையும் முற்பிறவி பலாபலன்களை ஒட்டித்தான் அமைய வேண்டும். ஆனால் இப்போது முதல் முதலாக, குறைபாடுகள் அதிகம் தோன்றுவானேன்? எதனால் ஏற்பட்டது அது?

மனதில் கிலேசத்துடன் துயரப்பட்டுக் கொண்டிருந்த அவரை நாரதர் அணுகினார். அவனுடைய வருத்தத்தைத் தெரிந்து கொண்டார். ‘‘எல்லா விவரமும் தெரிந்த பிரம்மனே, நீ கூடவா தவறு செய்வது? எந்தத் தொழிலையும் யாரும் துவங்குமுன் விநாயகரை வேண்டிக் கொண்டுதான் ஆரம்பிக்க வேண்டும் என்ற நியதியை ஏன் மறந்தாய்? போ, அவரிடம் போய் முறையாக அனுமதி பெற்றுக்கொள்” என்று உபதேசித்தார்.

பிரம்மன் தன் தலையில் குட்டிக் கொண்டார். ஏற்கனவே கயிலாயத்திற்குப் போனபோது முருகனை அவமதித்ததால் சிறைப்பட்டதும் அவர் நினைவுக்கு வந்தது. இப்போது விநாயகரையும் மதிக்கத் தவறிவிட்டோமே, இதனால் என்ன அபவாதம் நேருமோ என்று தன்னைத்தானே நொந்து கொண்ட அவர், மனமுருக வேண்டிக்கொண்டார்.

உடனே பிரத்யட்சமானார் வேழமுகத்தோன்.
‘‘ஐயனே, என்னை மன்னித்துவிடுங்கள். முழு முதற் கடவுளாகிய தங்களை துதிக்காமல், என் தொழிலில் ஈடுபடத் துவங்கி விட்டேன். என் சிருஷ்டிகள் அனைத்துமே சிதிலமடைந்தனவாகவே உள்ளன. அருள்கூர்ந்து அவை முழுமையடைய எனக்கு உதவுங்கள்” என்று மன்றாடிக் கேட்டுக் கொண்டார்.
விநாயகர் அவரை அன்புடன் நோக்கினார். ‘‘எந்தச் செயலைச் செய்யத் துவங்கும் முன்னரும் என்னைத் துதிக்க வேண்டும் என்ற நியதி, சம்பிரதாயமல்ல. என்னைத் துதித்தால், செய்யப்போகும் காரியங்களில் மனம் முழுமையாக ஒன்றிவிடும். எந்த மனச் சலனமும் ஏற்படாது. எந்த இடையூறும் தோன்றாது. திண்ணியராக எண்ணம் பெறும் பாக்கியம் கிடைக்கும். வலுவான எண்ணம், சீரான நேர் நோக்கு இவை அமைந்துவிட்டாலேயே போதுமே! எடுக்கும் செயல்கள் எல்லாம் செவ்வனே நிறைவேறுமே” என அறிவுறுத்தி ஆசீர்வதித்தார்.

‘‘ஐயனே, தங்களை நினையாது காரியத்தைத் துவக்கிய என்னைப் பொறுத்தருள வேண்டும். இனி நான் மேற்கொள்ளும் என் தொழிலில் எந்த விக்னமும் நேராதபடி காத்தருளுங்கள்” என்று விநயமாக வேண்டிக்கொண்டார் பிரம்மன்.

விநாயகரும் மனமகிழ்ந்து பிரம்மன் கோரிய வரத்தை அளித்தார். மேலும் தன்னிடம் இருக்கும் ஞானம், கிரியை ஆகிய இரு சக்திகளை தியானித்து தொழிலை மேற்கொள்ளும்படி பிரம்மனுக்கு அறிவுறுத்தினார்.

பிரம்மனும் அவ்வாறே தியானிக்க, அந்த இரு சக்திகளும் சித்தி, புத்தி ஆகிய இரு பெண்களாக அவர் முன் தோன்றினார்கள். அவர்களையும் வணங்கினார் பிரம்மன். ‘‘என் தொழிலுக்கு நீங்கள் இருவரும் உறுதுணையாக இருந்து காத்தருள வேண்டும்” என்று வேண்டிக்கொண்ட அவர், ‘‘கூடவே ஒரு விண்ணப்பம்” என்றார்.
‘‘என்ன?”& இருவரும் கேட்டார்கள்.

‘‘நீங்கள் இருவருமே என் புத்திரிகளாக அவதரிக்க வேண்டும்” என்று வேண்டினார்.
சித்தி, புத்தி இருவரும் அவருடைய வேண்டுகோளுக்கு மனமொப்பினர்.
பிரம்மன் தன் படைப்புத் தொழிலை தொடர்ந்தார். சித்தி, புத்தி அவருடைய மகள்களானார்கள். அடுத்து ஒன்றன்பின் ஒன்றாக அண்டசராசரங்களையும், அவற்றில் சகல ஜீவராசிகளையும் சிருஷ்டித்தார். எந்தக் குறையும் இல்லாமல், தன் பணி செவ்வனே நிறைவேறுவது கண்டு மனமகிழ்ந்தார்.

சித்தி, புத்தியர் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அழகு மேலிட வளர்ந்தார்கள்.  திருமணப் பருவத்தை அவர்கள் அடைந்ததும், இயல்பான கடமை உணர்வோடு பிரம்மன் அவர்களுக்கு மாப்பிள்ளைகளை தேடினார்.
அப்போது நாரதர் அங்கே வந்தார்.

‘‘பிரம்மா, சித்தி&புத்தியர் இரட்டைப் பிறவிகள். அவர்களுக்குத் தனித்தனியாக மாப்பிள்ளை பார்ப்பதைவிட, இருவருக்கும் ஒரே மாப்பிள்ளையாகப் பார்த்துவிடு” என்று யோசனை தெரிவித்தார்.
நாரதர் ஏதோ குட்டையைக் குழப்ப வந்திருக்கிறார் என்பதைப் புரிந்துகொண்டார் பிரம்மன். ‘‘இருவருக்கும் ஒரே கணவனா? அதெப்படி? இருவருக்குள்ளும் பிரச்னைகள் வராதா?” என்று கேட்டார்.

‘‘வராது. அதற்கும் ஒரு வழி இருக்கிறது. ஆனால் அந்த வழியில் தடையேதும் இல்லை என்பதை நான் முதலில் உறுதி செய்து கொண்டு விடுகிறேன். அதற்குப் பிறகு நீ உன் மனதுக்கேற்ற முடிவை எடுக்கலாம்” என்று கூறினார் நாரதர்.

‘‘அப்படியானால் சரி” என்று ஒப்புக் கொண்டார் பிரம்மன்.
நாரதர் நேராகக் கயிலாயம் சென்றார். விநாயகரைக் கண்டு தொழுதார். ‘‘ஐயனே தங்களையே மணந்துகொள்ள வேண்டும் என்ற ஆவலில் சகோதரிகள் இருவர் ஏங்கிக் காத்திருக்கிறார்கள். தங்களது பிரம்மச்சர்யம் அவர்களால்தான் ஒரு முடிவுக்கு வரவேண்டும். அவர்களை மணந்து கொண்டு அனைத்து உலகுக்கும் நன்மைகளை அள்ளித் தந்து, அருள்
பாலிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

‘‘நாரதா, உன்னுடைய கோரிக்கையின் அடிப்படை நோக்கம், அந்தப் பெண்களுக்குத் திருமணம் செய்து வைப்பதுதான் என்பதைவிட என் பிரம்மச்சர்யத்தைக் குலைப்பதுதான் என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும், இல்லையா? சரி, அந்தப் பெண்களை நான் மணக்கிறேன்” என்றார் விநாயகர்.
நாரதருக்கு ஆச்சர்யம். அதெப்படி தன்னுடைய பிரம்மச்சர்ய விரதத்தை இவ்வளவு எளிதில் கைவிட விநாயகர் முன்வந்தார்?

விநாயகர் சிரித்தார். ‘‘உனக்கே விரைவில் புரியும். போய் அந்தப் பெண்களின் குடும்பத்தாரோடு பேசி நிச்சயம் செய்துவிட்டு வா” என்றார்.
நாரதர் பிரம்மனை வந்தடைந்தார். ‘‘ஒரு சந்தோஷமான செய்தி பிரம்மா! விநாயகரே உன் இரு பெண்களையும் மணந்துகொள்ள சம்மதம் தெரிவித்திருக்கிறார்...” என்று உற்சாகமாகச் சொன்னார். ஆனால் பிரம்மன் உற்சாகமாக இல்லை. இரு பெண்களுக்கும் ஒரே கணவரா?
பிறகு நாரதர், சித்தி, புத்தியரைச் சந்தித்தார். பிரம்மனின் மனக்கிலேசம் அவருக்குப் புரிந்திருந்தது. சகோதரிகள் மனம் ஒப்பினால் அதற்கு பிரம்மன் தடையொன்றும் சொல்லப் போவதில்லை. ஆகவே முதலில் சகோதரிகளின் மனதை அறியவும்; அவர்களுக்கு விருப்பம் இல்லாதது போலத் தோன்றினால் அவர்கள் மனதில் விநாயகரைப் பற்றிய நல்லெண்ணத்தை விதைத்து காதலை அறுவடை செய்யவும் தீர்மானித்தார்.

‘‘உங்கள் தந்தையார், உங்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்கும் எண்ணத்தில் இருக்கிறார்...” என்று ஆரம்பித்தார் நாரதர். ‘‘உங்கள் இருவரையும் மணந்துகொள்ள ஒருவர் முன் வந்திருக்கிறார்...”
சகோதரிகள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள். தமக்கு மட்டும் புரியும்படியாக சிரித்துக்கொண்டார்கள். ‘‘நாங்கள் சம்மதிக்கிறோம்” என்று இருவரும் ஒரே குரலில் சொன்னார்கள்.
நாரதருக்கு மேலும் ஆச்சர்யம். அதெப்படி இரு பெண்களும் ஒருவரை மணக்கத் துணிகிறார்கள்?

‘‘உங்களுக்கு விரைவில் இதற்கெல்லாம் காரணம் புரியும்” என்றார்கள் சகோதரிகள்.
இந்தப் பதிலைத்தானே விநாயகரும் சொன்னார்? அப்படியானால் அவர் இந்தப் பெண்களின் மனதை முன்பே ஆக்கிரமித்து விட்டாரா?
நாரதர் மகிழ்ச்சியுடன் பிரம்மனிடம் சென்றார். சகோதரிகளின் விருப்பத்தைத் தெரிவித்தார். பிரம்மனுக்கும் ஆச்சர்யம். எல்லையில்லா உற்சாகமும்கூட.
தவித்தவர் நாரதர் மட்டும்தான். இந்தத் திருமணத்தின் நோக்கம் பின்னால் புரியும் என்று விநாயகரும் சகோதரிகளும் சொன்னார்களே, என்ன ரகசியம் அது?
திருமண நாள் வந்தது. பார்வதி&பரமேஸ்வரர், லட்சுமி&மகாவிஷ்ணு முதல் எல்லா தேவர்களும் குழுமியிருக்க சித்தி, புத்தி விநாயகர் திருமணம் வெகு விமரிசையாக நடந்தேறியது.

நாரதருக்குத் தன்னுடைய சந்தேகம் தீராததால் ஏக்கத்துடனேயே இருந்தார். பிரம்மனும் தன் புத்திரிகள் இந்தத் திருமணத்திற்கு சம்மதித்ததை அதிசயமாக நோக்கினார்.
‘‘சித்தி, புத்தியர் இருவருமே என் அம்சங்கள்தான் என்பதை மறந்துவிட்டாயா பிரம்மா?” விநாயகர்  கேட்டார். ‘‘உன் படைப்புத் தொழிலில் பங்கம் ஏற்பட்டபோது, என்னை நீ துதித்ததும் அப்போது என்னுடைய இரு சக்திகளை உனக்கு வழங்க, அவர்களுடைய ஆசியால் உன் தொழில் விக்னம் இல்லாமல் நடந்ததும், பிறகு இச்சக்திகளே உனக்குப் புத்திரிகளாகப் பிறக்க வேண்டும் என்று நீ வேண்டிக் கொண்டதும் மறந்து விட்டதா உனக்கு?” என்று கேட்டார் விநாயகர்.
பிரம்மன் முகம் தெளிவடைந்தது.

‘‘என்னை விட்டு சிலகாலம் பிரிந்திருந்த என்னுடைய சக்திகள் மீண்டும் என்னிடமே வந்து சேர்ந்து விட்டன. இதற்குதான் திருமணம் என்று ஒரு சம்பிரதாயத்தைக் கடைபிடித்திருக்கிறோம், அவ்வளவுதானே?” என்று முத்தாய்ப்பாக விளக்கம் அளித்தார் வேழமுகத்தான்.

பொதுவாகவே திருமண பந்தம் என்பதெல்லாம் ஏற்கனவே சேர்ந்திருந்து பிறகு பிரிந்து மறுபடி சேரும் ஒரு தெய்வீக விஷயம்தானோ, அதனால்தான் எல்லா திருமணங்களும் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றனவோ! நாரதருக்குப் புரிந்தது. ஆனாலும் தான் விநாயகரின் பிரம்மச்சர்யத்தை சந்தேகப்பட்டுவிட்டதற்காக வருந்தி விநாயகரிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.
அனைவரும் சித்தி, புத்தி விநாயகரை வணங்கி பேறு பெற்றார்கள்.🙏🌹

Friday, 1 May 2020

Evening

மாலைப்பொழுது அந்தி சாயும் நேரத்தின் முக்கியத்துவம்

ஒருசமயம் மாரிசியின் மைந்தரான கஷ்யப முனிவர் பகவானுக்கு யாகத்தை வளர்த்து. நிவேதனங்களை சமர்ப்பித்து. முழு சமாதியில் அமர்ந்திருந்தார்.. அப்பொழுது அவரது மனைவிகள் ஒருத்தியான திதி அவரை அணுகி. தமது விருப்பத்தை எடுத்துரைத்தாள்.. கற்றறிந்த கணவரே .மதங்கொண்ட யானை வாழைக்காயை மிதித்து சீர்குலைப்பது போல மன்மதன் தனது மலர் கணையால் என்னை தொல்லை படுத்துகிறான். எனது எண்ணங்களை புரிந்து கொண்டு செந்தாமரை விழிகளை உடையவரே. துன்புறும் ஒருவன் அது நீங்கும் பொருட்டு உயர்ந்தவரை அணுகினால் அந்த வேண்டுகோள் வீணாகப் போகாது . அதுபோல..எனவே என் சகோதரியை போல எனக்கும் மழலைச் செல்வம் வேண்டும் என விரும்புகிறேன். என்று விருப்பத்தை நிறைவேற்றி ஆசீர்வதிப்பாராக என்று வேண்டினாள்..

தன் மனைவியின் விருப்பத்தை கேட்ட கச்சியப்பர் நீ செய்வதற்கு இவ் வாழ்விலும் மறுபிறவியிலும் நன்றி செலுத்துவது ஈடு செய்வது இயலாத காரியம்.. உனக்கு திருப்பிச் செய்வது எனக்கு எண்ணம் கூட ...குழந்தைப் பேற்றுக்கு உனது விருப்பத்தை நான் உடனே திருப்தி படுத்துவேன்.. எனினும் குறிப்பிட்ட நேரம் ஆனது மிகவும் அமங்கலமானதாக இருப்பதால் சில வினாடிகள் நீ பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று கச்சியப்பர் கூறினார்.

சாயங்காலம் மாலை நேரமானஇந்த நேரம் பூதங்களான பூதகணங்களின் தலைவனான சிவபெருமான் தனது காளை வாகனத்தின் மீது அமர்ந்து வர. அவருடன் .அவரைப் பின்பற்றும் பூதகணங்களும் பேய்களும் பிசாசுகளும் சேர்ந்து வரும் நேரம் ஆகும். இந்த நேரத்தில் .அவர் பேய்களை காலநேரம் என்ற எந்தக் கட்டுப்பாடுமின்றி உடலுறவுகொள்ளும் பெண்களின் கருப்பையில் புகுத்தி விடுவார் ..உனது இளைய சகோதரியின் கணவரான அவருக்கு மூன்று விழிகள் உண்டு. பாலுறவு கொள்வதற்கான தடை செய்யப்பட்ட நேரம் அவரால் கண்காணிக்கப்படுகிறது. சற்று பொறுத்துக் கொள்வாயாக என்று மனைவியிடம் வேண்டினார்...

தன் கணவரின் அறிவுரை கேட்ட பின்பும் திதி தன்னுடைய காமத்தின் எல்லைக்கே சென்றதால் கச்யபர் மிகவும் வருந்தினார். அவள் மன்மதனால் தூண்டப்பட்டதால் வெட்கமும் நாணமும் அற்ற ஒரு விலைமாதுவை போலச் சிறந்த முனிவரின் ஆடைகளைப் பற்றி இழுக்க தொடங்கிவிட்டாள். மனைவியை உள்ளக்கிடக்கை அறிந்து கொண்ட அந்த தவறான நேரத்தில் வெளியே சென்று ஒரு ஒதுக்குப்புறமான இடத்தில். அவளுடைய இச்சையை தணித்துக் கொடுத்தார். வணங்குவதற்கு உரிய விதிக்கு தனது வணக்கத்தை செலுத்திய பின் அவர் இந்த காரியத்தை செய்து கொடுத்தார்..

அதன் பின்னர் நீராடிவிட்டு சமாதி நிலையில் அமர்ந்து பேச்சைக் கட்டுப்படுத்தி காயத்ரி மந்திரத்தை ஜெபித்தபடி தியானத்தில் அமர்ந்தார். திதி தன் தவறை உணர்ந்து முகம் வாடி தலை குனிந்த நிலையில் கணவனிடம். அன்பிற்குரிய அந்தணரே. அனைத்து உயிர்களுக்கும் தலைவரான சிவபெருமான் என் கருவை அளிக்காது இருக்கும்படி தாங்கள் பார்த்துக் கொள்ள வேண்டுகிறேன். அவருக்கு எதிராக மிகப் பெரிய குற்றத்தை நான் புரிந்து விட்டேன்.

ஒரே சமயத்தில் கொடூரமான தேவராகம் உலக ஆசைகள் அனைத்தும் நிறைவேற்றுவதாகவும் விளங்கும் சினம் மிக்க சிவபெருமானுக்கு என் வந்தனங்கள் சமர்ப்பிக்கிறேன். அவர் அனைத்து மங்களங்களையும் உடையவராகவும் மன்னித்து அருளும்குணமாக விளங்குகிறார். ஆயினும் அவரது கொடூரகுணமே உடனே ஒருவரை தண்டிக்க வல்லதாகும்.  கல்வியற்ற வேடர்களும்  மன்னிக்கப்படும் பெண்களிடம் அவர் என்மீது கருணை காட்டுவார்.. என்ற திதி. கணவரிடமும் தவறு செய்துவிட்டோம் என்ற அச்சத்தில் அவளது உடல் நடுங்கிக் கொண்டிருந்தது.....

கச்யபர் வெளிப்படையாக சில உண்மைகளை மனைவியிடம் கூறினார் உனது மனம் மாசடைந்ததாலும் அக் குறிப்பிட்ட நேரம் குறை உடையதாக இருந்தாலும் எனது அறிவுரையைப் புறக்கணிக்த்ததாலும் தேவர்களை அலட்சியம் காட்டியதாலும். இறுமாப்பு உடையவளே. உனக்கு நிந்தனைக்குரியவளே உனது கருப்பையிலிருந்து இரண்டு ஆணவம் மிக்க மைந்தர்கள் பிறப்பார்கள்... அதிர்ஷ்டம் இல்லாதவர்கள் அவர்கள். மூவுலகங்களுக்கும் தொல்லை கொடுப்பவர்களாக தோன்றுவார்கள். அவர்கள் பிறக்கும்போது உலகத்தின் எல்லா அமங்கல செயல்களும் நடக்கும். பெண்களை கொடுமைப்படுத்தும் அவர்கள் மகாத்மாக்களை சினமூட்டுவர் .பின்பு இப்பிரபஞ்சத்தின் நாயகரான பகவான். உயிர்களின் நலத்தை விரும்புவரான முழுமுதற் கடவுள் அவதரிப்பார் . பகவான் கையால் உனது மகன்கள் உயிர் இழப்பார்கள் என்று வெளிப்படையாகக் கூறினார் .அவர்களில் ஒருவன் இரணியாட்சன் மற்றொருவன் இரணியகசிபு.

மகாபாரதத்தின் முக்கிய கதாபாத்திரங்கள்

  மகாபாரதம் ஏராளமான கதாபாத்திரங்களைக் கொண்ட ஒரு காவியம் . சில முக்கிய கதாபாத்திரங்கள் இங்கே :   கிருஷ்ணா - பாண்டவ இளவரசர் அர்...